மீண்டும் பாடசாலைக்கு செல்வோமா....

செல்லமே!.........செல்லமாய்!...


பஸ் கோடை விடுமுறை முடிந்துப் பள்ளிக்கு மீண்டும் திரும்பும் நாள் வந்து விட்டது. விடுமுறையில்விரும்பிய நேரம் தூங்கி, விரும்பியபடி விளையாடி, தொலைக்காட்சிப் பெட்டியின் முன் மணிக்கணக்காய் அமர்ந்துப் பொழுதை மகிழ்த்து உறவினர் வீடு, விளையாட்டு எனப் பொன்னான மகிழ்வான நேரங்கள் எல்லாம் இனி நிறைவில் மட்டுமே என வருந்தும் செல்லக் குட்டீஸ்களுக்குச் செல்லமே! செல்லமாய்! ஒரு செய்தி...

பஸ் பள்ளிக்குச் செல்லப் புதிய பை, தண்ணீர் பாட்டில், புதிய நோட்டுக்கள், எழுதுப் பொருட்கள், புதிய சீருடை என எல்லாம் பார்த்துப் பார்த்துப் புதிதாய் தயார் நிலையில் சந்தோஷம் கொடுத்தாலும், மனதில் ஓரத்தில் ஒரு வருத்தம், பயம், இனி சந்தோஷங்கள் எல்லாம் அவ்வளவு தானா? என்ற ஏக்கம் எல்லாம் மனதில் எழுவது இயல்பு தானே....

செல்லக்குட்டி, பள்ளியும் உனக்கு ஒரு சந்தோஷக் களமே. எப்படி எனக் கேட்கிறாயா?

கண்ணை மூடிக் கொள். நீ தான் Super boy/Super girl என நினைத்துக் கொள். பள்ளிக்குள் நுழைகிறாய். புதிய வகுப்புச் செல்கிறாய், புதிய நண்பர்களைப் பார்க்கிறாய். புதிய ஆசிரியர் வருகிறார். எல்லாம் புதிது எங்கும். எதிலும் புதிது. புதியவை Bஅச்க் டொ ச்ஷோல்பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறதா? கண்ணை மூடிக் கொண்டு இந்தக் கல்வி ஆண்டில் நான் தான் Super boy/Super girl என எண்ணிக் கொள். இந்த ஆண்டுக் கல்வியாலும் உனக்குரிய தனித் திறமையிலும் நீ என்ன சாதிக்கப் போகிறாய்? அனைவரிலும் நீ எப்படிச் சிறந்து விளங்கப் போகிறாய்? எனத் திட்டம் இடு.  கனவுத் திட்டமே இவ்வளவு சந்தோஷம் என்றால் நீ சாதித்து உயர்ந்தால் எவ்வளவு சந்தோஷம் தரும் எண்ணிப்பார்.

பஸ்
உன் திட்டத்தைத் தினமும் நீ பார்க்கும் படி எழுதி வை. இறைவனின் அருள் வேண்டி உன் திட்டத்தை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொள். உன் குறிக்கோளில் இருந்து எச்சூழலிலும் தவறி விடக் கூடாது. சரியாச் செல்லமே? ஆண்டு முடிவில் பார். நீ தான் Super boy/Super girl ஆகச் சிறந்து உயர்ந்து நிற்பாய்.


பள்ளிக்குத் திரும்புவோம்
புதியாய் பிறப்போம்
சிறப்பாய் சாதிப்போம்.

வாழ்த்துக்களுடன் ஆண்டி அமலி-மதுரை.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது