இன்றைய கோபம் நாளைய உறவுகளைப் பாதிக்கலாமா?

செ. பிரதாப். சென்னை-34

"கோபம்" மனித உணர்ச்சிகளில் ஒன்று. உணர்ச்சியின் அளவைப் பொறுத்துக் கோபத்தின் தாக்கமும் அமையலாம். குறிப்பாகக் கோபம் அன்பின் வெளிப்பாடக அமையும் போது அவற்றின் தாக்கம் குறைவாகத் தான் இருக்கும். அதேபோல் ஆணவத்தின் வெளிப்பாடாக அமைந்தால் அவற்றின் தாக்கமும் அதன் விளைவுகளும் சற்று அதிகமாகவே அமைந்து விடுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு தாய் தன் குழந்தைப் படிப்பில் சரியாகப் படிக்கவில்லையென்றாலோ அல்லது தான் சொன்னதைச் சரியாகச் செய்யவில்லை என்றாலோ! அவள் தன் கோபத்தின் காரணமாக அடிக்கவோ, திட்டவோ செய்கிறாள். இஃது அன்பின் விளைவாக அமைகிறது.

அதேபோல் கணவன், மனைவி இடையே சில நேரங்களில் கோபம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கணவன் மனைவியைக் கோபத்தினால் திட்டினாலோ அல்லது சண்டைப் போட்டாலோ தன் கணவர் அன்பினால் தான் கோபப்படுகிறார் என்று மனைவி எடுத்துக் கொண்டால், அவர்களின் உறவுகளில் எந்த விதச் சிக்கலும் ஏற்படுவதில்லை. அதேபோல் மனைவி அதை என் கணவன் எப்படித் திட்டலாம்? சண்டைப் போடலாம்? ஏன்ற ஒர் ஆணவத்தில் நோக்கினால் எடுத்துக்கொண்டால் உறவுகளில் சிக்கல் ஏற்படுகிறது. அவள் அதை அன்பின் நோக்கத்தோடு பார்க்காமல் ஆணவத்தின் நோக்கத்தோடு பார்த்தால் தான் இந்த நிலை. எனவே தான் இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பல உறவுகள் "பிரிந்துப் போக வேண்டிய நிலை" உருவாகிறது.

கணவன் அன்பினால் தீட்டும் போது அதை மனைவி ஆணவத்தின் கோபத்தால் நோக்கும் போது, உறவுகளில் பாதிப்பு ஏற்பப்பட்டு விடுகிறது. இதேபோல் தான் அண்ணன் - தம்பி, அக்கா - தங்கை, நண்பர்கள் தங்கள் ஆணவத்தின் கோபத்தில் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஏன் உறவுகளில் விளைவுகள் ஏற்படுகின்றன என்று சற்றுச் சிந்தித்துப் பார்த்தால் அன்பு இல்லையென்றே சொல்லலாம். இதைத் தான் பவுல் அடிகளார் –கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தில் அன்பைப் பற்றி அழகாகக் குறிப்பிடுகின்றார்.

“அன்பு தன்னலம் நாடாது. சினம் கொள்ளாது.”

அன்பு நம் மனத்தில் இருந்தால் நாம் எதையும் ஆணவத்தின் நோக்கத்தோடு பார்க்க மாட்டோம். அன்புக் குறையும்போது அங்கு ஆணவம் மேலோங்கி நிற்கிறது. அன்பு வளரும் போது “தான், தன்” என்ற நிலைமாறி “நாம்” என்ற நிலை வரும். ஆனால் ஆணவம் வளரும் போது “நாம், நம்மில்” என்ற நிலை மாறி “தான்” மட்டும் என்ற நிலை வரும். தான் என்ற நிலை வரும்போது “பிரிதல்” என்ற சூழ்நிலை உருவாகிறது.

இன்றைய சூழ்நிலையில் கிறிஸ்தவர்களாகிய நாம் கோபத்தினால் நாளைய உறவுகளில் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொள்கிறோமா? இல்லை, அந்தக் கோபத்தை அன்பின் வெளிப்பாடாக எடுத்துக் கொண்டு உறவை வளர்த்துக் கொண்டிருக்கிறோமா! என்பதை நாம் சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது