கல்லேரியில் மலர்ந்த ஆன்மிக மலர்கள்.

திருமதி அருள்சீலி அந்தோணி - ஆலந்தூர் - சென்னை

cadlourdusamyAmalorpavadass புதுவை மாநகரமே நீ பேறு பெற்றவள் ஏனெனில்
 புனித லூர்துஅன்னையின் தவப்புதல்வர்களாய் 
 மலர்ந்த கர்தினால் லூர்துசாமி ஆண்டகை
 சுவாமி அமலோரானந்தா தமிழக திருச்சபையின்
 
 ஆன்மீக தென்றலாய் மணம் வீசிடும் வேளை
 புதுவை - கடலூர் மறைமாவட்டத்தில் அருள்பொழிவு
 செய்யப்பட்டு பெங்களூர் துணை ஆயராகவும் 
 பேராயராகவும் ஆற்றிய பணியின் உச்சகட்டமே!

 உரோமை மறைபரப்பு பேராயத்தின் செயலர்
 கர்தினாலக உயர்த்தப்பட்டு கீழைத்திருச்சபையின்
 தலைவராக வீசிய ஆன்மீக தென்றலே!
 நின் இறைபணி எத்திசையும் மணம் பரப்பும்.

 வேளை -விண்ணிலும் 02.06.2014 அன்று
 இறைமகனின் மலர்வனத்தில் மலர்ந்து மணம் 
 பரப்பிட இறைவன் தன்வசம் அழைத்த
 விந்தை தான் உமது மண்ணக விடுதலை
 
 இந்திய தலத்திருச்சபை மட்டுமன்று, அகில
 தலத்திருச்சபையம் நும் விண்ணகம் வாழ்வின்
 ஆற்றல் மண்ணக மாந்தர் மகிழ்ந்திட
 இறைமகனோடு உம் இருப்பை எண்ணி மகிழ்கின்றோம்

 தவப்புதல்வன் சுவாமி அமலோர் இந்திய மண் 
 வாசனையின் மரபு மாறாமல் சங்கம் வழங்கிய 
 மறுமலர்ச்சி கூறுகளை தலத்திருச்சபையில்
 சுவாசித்து ருசித்து வாழ்ந்த மானிடர் வளம்
 
 காண பெங்களூர் தேசிய நடுநிலையம் -சுவாமி
 அமலோரானந்தா அறக்கட்டளை அளுந்தூர்
 அகத்திற்குள் உறைந்துள்ள இறைவனை நாளும்
 தரிசித்து இறையருளில் வாழ்ந்திட மைசூர்

 அஞ்சலி ஆசிரம்! பொது திருச்சபையும்
 தலத்திருச்சபையும் இறையரசின் விழுமியங்களை
 வாழ்வாக்கிட அனைவரும் எல்லாம் பெற்று
 இன்புறவே இன்று மண்ணின் மாந்தரை
 
 இருகரம் கூப்பி வருக வருகவென்று 
 வரவேற்கும் இன்ப தேனூற்றுக்கி சென்ற
 சாதி - சமயம் - இனம் - மொழி கடந்த இறைமகனின்
 ஆன்மீக தாகத்தை தனித்திட அழைப்பு விடுக்கின்றது.

 ஒருகொடியில் இருமலர்கள் மலர்ந்ததம்மா
 அண்ணன் தம்பி உறவுமுறை மானிடரை
 இறைமகனின் இறையரசில் இணைத்திட
 இறைவன் தேர்ந்து கொண்ட கனிகளே
 
 விண்ணுக்கும் மண்ணுக்கும் வீசும் ஆன்மீக
 மணம் மானிடரை இறறு மனித  உறவில்
 ஊன்றி ஆவியின் ஆற்றலில் அகிலம்
 மாண்புற இறைவன் தேர்ந்த மலர்களே!
 
 "ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் 
 குறைவில்லை" என்ற வரிகளை தாயின்
 கருவறையிலேயே சுவைத்த இருமலர்கள்
 இன்று வீசும் மணம் அகிலம் சுவைக்கின்றது.
  
 புதுவையில் மலர்ந்த இருமலர்களில் ஒன்று 
 தலத்திருச்சபையின் ஆணி வேராகவும்  வேரூன்றி
 இன்று இறைவனடியில் மலர்ந்து மணம் வீசும்
 வேளை இறைமக்கள் யாம் பெற்ற பாக்கியமே!
 
 தந்தை அமலோர் பொதுதிருச்சபையை கட்டி
 பொது நிலையினர் சங்கத்தின் சாரத்தை உறிஞ்சி
 இறைவார்த்தையின் ஒளியில் மணம் வீசிட
 பெங்களூர் தேசிய நடுநிலையம் சான்றாகுமே.
 
 கல்லேரி மாநகர் ஆன்மீகத்தின் தென்றலாகும்
 என்பதை அவரவர் மனதில் பதிவு செய்து
 இறையரசை கட்டி எழுப்பிட விரைந்திடுவோம்
 விட்டு சென்ற பணியை தொடர்வோம்!
 
 இருவரும் தனியாகவும் - குழுவாகவும்
 இறையனுபவம் - இயேசுஅனுபவம் -தூயஆவி
 அனுபவத்தில் இயங்கினார்கள் என்பதே உண்மை
 இவர்கள் விட்டுச் சென்ற அடிசுவட்டினை தொடர்வோம்.
 
 மண்ணில் விட்டுச் சென்ற பணிகளை 
 இறைவனில் இணைந்து அவர்களின் ஆசிரோடு
 இகமதிலும் வறியோர் இன்புற உழைப்போம்
 மூவொரு இறைவனில் மகிழ்ந்து செபித்திடுவோம்.
 
 விண்ணில் மலர்ந்த மலர்கள் மூவொரு இறைவனில்
 இணைந்து இன்னிசை முழங்கி விண்ணவரோடு
 மனுகுலம் மீட்படைய அவர்களின் நீங்கா
 தொண்டு நம்மில் ஒளிர்ந்திட வேண்டுகின்றேன்.
   
 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது