இயேசுவோடு உயிர்த்தெழுந்து உள்ளோமா?
செலின் ஆரோக்கியராஜ்.
"ஆண்டவரே! தேவரீர் வரும்வரையில் உமது மரணத்தை அறிக்கையிடுகிறோம். உமது உயிர்ப்பையும் நினைவுகூறுகிறோம்." என்று திருப்பலியில் அன்றாடம் செபிக்கிறோம்.
என்னிடம் ஒருவர் கேட்டார் , "நாம் எங்கங்க , ஆண்டவரது மரணத்தை அறிக்கையிடுகிறோம்? நான் போய் எங்கேயும் சொல்லறது இல்லையே? பின் எப்படித் திருப்பலியில் இப்படிச் சொல்கிறோம்? அது பொய் ஆகாதா?" என்றார். அவர் கேட்டக் கேள்வியில் நியாயம் இருந்தது. ஆனால் ஆண்டவரின் திருவார்ததைக் கூறுகிறது, "நீங்கள் இந்த அப்பத்தை உண்டுக் கிண்ணத்திலிருந்து பருகும்போது எல்லாம் ஆண்டவரின் சாவை அவர்வரும் வரை அறிவிக்கிறீர்கள்". ஆகவே இயேசுவின் திருவுடலையும் திரு இரத்தத்தையும் திவ்ய நற்கருணையில் பரிசுத்தமாக உட்கொள்ளும் போதெல்லாம் "அவர் எனக்காக மரித்தார்; எனக்காக உயிர்த்தார்; எனக்காக மீண்டும் வருவார்" என்ற அசையாத நம்பிக்கை நமக்குள் வருகிறது. எனக்காக மரித்த அவர் உயிருள்ளவாராக இந்த நற்கருணையில் இருக்கிறார் என்றும், எனக்காய் பரிந்துப் பேசுவார் என்றும் விசுவசிக்கிறோம். வெறும் வாயால் அறிக்கையிடாமல் அவரை உட்கொள்ளும் நாமும் அவர் வாழ்ந்தவாறு வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். அதுமட்டுமல்ல இயேசு நமக்காகப் பாடுபட்டு இறந்து உயிரோடு எழுப்பட்டதால் நம்முடைய இறப்புக்குப் பிறகு ஒரு வாழ்வு உண்டு.கடைசி நாட்களில் " நாம் அனைவரும் உயிரோடு எழுப்பப்படுவோம் என்பதும் உறுதியாகிறது" (1கொரி 15:20)
ஆகவே இயேசுகிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை இவ்வுலக ஒவ்வொருநாளும் நினைவுகூறும் நமக்கும் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து உயிர்ப்பு உண்டு என்ற நினைவுகூற வேண்டும். இது முதல் நிலை.
இரண்டாம் நிலை என்னவென்றால் நாம் உயிரோடு இருக்கும்போதே பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திட வேண்டும் என்பதை நற்கருணை உடகொள்ளும் போது நினைவில் கொள்ள வேண்டும். நம்முடைய பாவங்கள் எதுவென்று நமக்கு ஆவியானவர் எடுத்துக் காட்டும்போது, நமது உண்மை நிலை வெளியாகிறது. "அவ்வாறு தெளிவாக்கப்படுவது எல்லாம் ஒளிமயமாகிறது. ஆதலால் தூங்குகிறவனே விழித்தெழு, இறந்தவனே உயிர்பெற்றெழு. கிறிஸ்து உன் மீது ஒளிர்ந்துள்ளார்" (எபே 5:11) இங்குக் கிறிஸ்துவின் உயிர்தெழுதலோடு ஒளியின் மக்களின் வாழ்வு ஒப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நாமோ இன்னும் பாவத்தில் தூங்கிக் கொண்டிருப்பவர்களாக இறந்தவர்களாக இருக்கிறோம். "சிலுவையின் மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார்" (1பேதுரு 2:24) என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நாமோ இன்னுமும் புதுப்புதுப் பாவங்களில் உயிர்த்து நீதிக்குச் செத்துக் கொண்டிருக்கிறோம். மனிதர்கள் முன்பாக உயிருடனும் கடவுளின் முன்பாக இறந்தவர்களாகவும் காணப்படுகிறோம்.இங்கு கிறிஸ்துவின் உயிர்தெழுதலோடு ஒளியின் மக்களின் வாழ்வு ஒப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நாமோ இன்னும் பாவத்தில் தூங்கிக் கொண்டிருப்பவர்களாக இறந்தவர்களாக இருக்கிறோம். "சிலுவையின் மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார்" (1பேதுரு 2:24) என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நாமோ இன்னுமும் புதுப்புது பாவங்களில் உயிர்த்து நீதிக்கு செத்துக் கொண்டிருக்கிறோம். மனிதர்கள் முன்பாக உயிருடனும் கடவுளின் முன்பாக இறந்தவர்களாகவும் காணப்படுகிறோம்.
இயேசு என்ற பெயர்க்கு "மீட்பர் என்று பொருள்". இயேசு நம்முடைய பாவங்களைத் தம் இரத்தத்தினால் கழுவி மன்னிப்பது மட்டுமல்ல,தம் சொந்தச் சரீரத்தினால் சிலுவையில் மரித்து நம்மை நம் எல்லாவகையான பாவங்களிலிருந்தும் மீட்டுக் கொள்கிறார். உதாரணமாக: நம் குழந்தைகள் தங்கள் உடைகளை அழுக்காக்கிக் கொண்டு வரும்போதெல்லாம் அதனை நாம் சுத்தப் படுத்துகிறோம். ஆனால் அதே குழந்தைச் சாக்கடையில் விழுந்து விட்டால் தூக்கி எடுக்கிறோம் அல்லவா! ஆகவே அழுக்கான பிள்ளையைச் சுத்தப்படுத்துவது, மன்னிப்பதற்கும் ஒப்புவுவமையானகும். இயேசுவால் நம் பாவங்களிலிருந்து நம்மைத் தூக்கி எடுத்து விடுதலைக் கொடுக்க முடியும் என்றால், நாம் ஏன் பாவத்திலிருந்து விடுதலையாகாமல் அதே சாக்கடையில் மூழ்கிக் கிடக்கிறோம். நாம் சொல்வது இப்படித் தான், "என்னால் இந்தக் கோபத்தை அடக்க முடியலை ; எரிக்கப்பட்டுக் கத்துவதை மாற்ற முடியலை ; சிகரெட்டை நிறுத்தமுடியலை ; குடியை விட முடியலை " என்கிறோம். இயேசுவின் பெயர் மீட்பர் என்பதாலும் "என் பெயரால் எதைக் கேட்டாலும் தந்தை உங்களுக்குக் கொடுப்பார்" (யோவான் 15:11) என்று இயேசு சொன்னார். நாம் விடுதலையடைய வேண்டும் என்ற தாகம் நம்மில் உண்மையாகவே இருக்கிறதா? இதற்காக நாம் கண்ணீர் விட்டு அழுதுச் செபிக்கிறோமா?
ஆகவே இந்த உயிர்தெழுந்த ஞாயிறு அன்றிலிருந்தாவது நம் வாழ்க்கை மாற வேண்டும். நாமும் பாவத்திலிருந்து உயிர்க்க வேண்டும். முதலாவது, நமக்காக மரித்தரை நினைவுக் கூர்ந்து நம் வாழ்க்கை முறை மாறணும்.
இரண்டாவது பாவத்திற்கு நாம் மரித்து நீதிக்காக வாழ இயேசுவை நம்மை நம் பாவங்களிலிருந்து மீட்டெடுக்கக் கெஞ்சுக் கேட்கணும்....
செபம்:- இயேசுவே! மகா பரிசுத்தரே! என் மீட்பரே! உம்முடைய நாமத்தினால் (.............) என்னுடைய இந்தப் பாவப் பழக்கத்திலிருந்து என்னை விடுவித்தருயும். நீரப்படியே செய்யப் பொவதற்காக உமக்கு நன்றி ! ஆமென்