சிலுவை வெற்றியின் சின்னம்

டி.அற்புதசாமி

திருச்சிலுவையை மகிமைப்படுத்த நாம்‌ இரண்டு திருவிழாக்களைக்‌ கொண்டாடுகிறோம்‌. முதலாவது தவக்காலத்தில்‌ புனித வெள்ளிக்‌ கிழமை அன்று. மற்றொன்று செப்டம்பர்‌ 14-ஆம்‌ நாள்‌ அவமானத்தின்‌ தண்டனையாக இருந்த சிலுவையை, இயேசு தான்‌ சிலுவையில்‌ மரித்து புனித வெள்ளியன்று ஆசீர்வாத சின்னமாக மாற்றியிருக்கிறார்‌.

கி.பி.312-ஆம்‌ ஆண்டு உரோம்‌ கான்ஸ்டைன்‌ மன்னர்‌ ஒரு சிறிய படையோடு பெரும்படையுள்ள பகைவரோடு போரிட நேர்ந்தது. போருக்குப்‌ புறப்படும்‌ முன்பு ஒரு சிலுவை அடையாளத்தை வானில்‌ கண்டார்‌. இந்தச்‌ சிலுவை அடையாளத்தினால்‌ நீ வெற்றியும்‌ பெறுவாய்‌ என்ற குரல்‌ ஒலியும்‌ வானிலிருந்து வந்ததையும்‌ கேட்டார்‌. உடனே கான்ஸ்டைன்‌ மன்னர்‌ தனது போர்க்கொடியிலும்‌ போர்க்‌ கருவிகளிலும்‌ சிலுவை அடையாளத்தை வரையும்படி கட்டளையிட்டுப்‌ போருக்குப்‌ புறப்பட்டார்‌. போரில்‌ சிறிய படையை வைத்து பெரிய படையைக்‌ கொண்ட எதிரி பகை மன்னரைத்‌ தோற்கடித்து வெற்றி பெற்றார்‌.

cross இந்த வெற்றிக்கு நன்றியாக கான்ஸ்டைன்‌ மன்னர்‌ தனது தாய்‌ புனித ஹெலனை இஸ்ரயேல்‌ நாட்டிற்கு புதைக்கப்பட்ட இயேசுவின்‌ பாடுபட்ட சிலுவையை மண்ணில்‌ தோண்டிக்‌ கண்டுபிடிப்பதற்கு அனுப்பிவைத்தார்‌. புனித ஹெலன்‌ இயேசு சிலுவையில்‌ அறையப்பட்ட சிலுவையைக்‌ கண்டுபிடிக்கத்‌ தோண்டியபோது மூன்று சிலுவைகளையும்‌ கண்டுபிடித்துவிட்டார்‌. இம்மூன்று சிலுவைகளிலும்‌ இயேசு உயிர்நீத்த சிலுவையே மிகவும்‌ பெரியது. அந்தச்‌ சிலுவை 8 அடி உயரமும்‌ 5 அடி . அகலமும்‌ 250 கிலோ எடையும்‌ கொண்டது. இரு கள்வர்களின்‌ சிலுவைகள்‌ 7 அடி உயரம்‌ உடையவை. புனித ஹெலன்‌ தான்‌ கண்டெடுத்த திருச்சிலுவையைக்‌ கல்வாரி மலையில்‌ இயேசு உயிர்‌ நீத்த இடத்தில்‌ நட்டு வைத்தார்‌. அங்கே அந்தச்‌ திருச்சிலுவை வழியே பல புதுமைகள்‌ நடக்கின்றதைக்‌ கேள்விப்பட்ட பாரசீக மன்னர்‌ பகால்‌ பிராக்கிலின்‌ திருச்சிலுவையைத்‌ தனது நாட்டு மக்கள்‌ நன்மை பெறத் திருடிக்‌ கொண்டு சென்றார்‌.

கி.பி. 627-ஆம்‌ ஆண்டு பேரரசர்‌ கிராக்கிலியஸ்‌ பாரசீக மன்னரோடு. சமாதான பேச்சுவார்த்தை நடத்தி திருச்சிலுவையை மீட்டு ஜெருசலேம்‌ கொண்டு வந்தார்‌. கிராக்‌கிலியஸ்‌ மன்னர்‌ அரச உடையோடு பொற்கிரீடமும்‌ அணிந்து திருச்சிலுவையை சுமந்து கல்வாரி மலையில்‌ மீண்டும்‌ நட்டுவைப்பதற்குப்‌ புறப்பட்டார்‌. அந்த மன்னரால்‌ திருச்சிலுவையை அசைக்கக்கூட முடியாமல்‌ போய்விட்டது. அப்போது ஜெருசலேம்‌ ஆயராக இருந்த ஆயர்‌ சக்கரியாவிடம்‌ சென்று சிலுவையைச்‌ சுமந்து கல்வாரி மலையில்‌ நட்டு வைப்பதற்கு கிராக்லியஸ்‌ மன்னர்‌ ஆலோசனை கேட்டார்‌. ஆயரின்‌ ஆலோசனையின்படி மன்னர்‌ அரச உடைகளைக்‌ களைந்துவிட்டு இயேசு சிலுவை சுமந்து போகும்போது அணிந்திருந்த சிவப்பு அங்கி அணிந்து திருச்சிலுவை சுமந்து கல்வாரி மலையில்‌ நட்டுவைத்தார்‌.

இறுதியில்‌ கான்ஸ்டைன்‌ மன்னர்‌ ஜெருசலேம்‌ வந்து திருச்சிலுவையை உரோம்‌ கொண்டு சேர்த்தார்‌. இன்று இந்தத்‌ திருச்சிலுவை வத்திகான்‌ அருங்காட்சியகத்‌ தில்‌ பாதுகாப்போடு உள்ளது. திருச்சிலுவையின்‌ ஒரு சிறிய பகுதி உரோம்‌ மேரிமேஜர்‌ ஆலயத்திலும்‌ மணப்பாடு சிலுவைநாதர்‌ மலைக்குன்று ஆலயத்திலும்‌ பாதுகாப்போடு உள்ளன.

நன்றி-திருஇருதயத் தூதன்
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு