கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் * Merry Christmas * நத்தார் வாழ்த்துக்கள்

அவர் எங்கே பிறந்துள்ளார்?

திரு. அ.அல்போன்ஸ்

மிக அற்புதமான கேள்வியுடன் தொடங்குகிறது மத்தேயுவின் நற்செய்தி.
குழந்தை இயேசுவின் பிறப்பு……………
கீழ்திசை ஞானியர்கள் “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? ?” (மத் 2:3)
இந்த கேள்வியோடு தான் புதிய ஏற்பாடு தொடங்குகிறது
ஆழம் வாய்ந்த……. பொருள் நிறைந்த……. கேள்வி
அது ஏரோதை பார்த்து மட்டும் கேட்ட கேள்வி அல்ல
மையசரமான கேள்வி
விவிலியம் தொடங்கிவைத்த கேள்விக்கான விடைகளை நாம் தேடவே இல்லை என்பதே பலமுறைகளாக தொடரும் கேள்வி

மத்தேயு இந்த இடத்தில் காட்டுவது
சொல்வளமும் பொருள் வளமும் நிறைந்த காட்சி……….
ஞானியர் அவர் எங்கே என்று கேட்தும் ஏரோது கலங்கினான் எருசலேம் கலங்கியது (மத் 2:3)
ஏரோது கலங்கினான்
3 kingsஏரோது கலக்கத்திற்கு காரணம் இருந்தது
ஏரோதுமட்டுமல்ல தனக்கு போட்டியாக ஒருவன் பிறந்தான் என்றதும் எல்லா மன்னனுக்கும் வரும் கலக்கம்தான்
ஆனால் எருசலேம் கலங்கியது
ஏன் கலங்க வேண்டும்? மீட்பர் வருகிறார் என்று மகிழ்வு அல்லவா
கொள்ள வேண்டும்
கலக்கத்திற்கு காரணம் ஒன்று இருக்கவேண்டுமே…..
மீண்டும் தொடர் வாசிப்பில்……… மத்தேயு கூறுவார்

இயேசு கழுதையின் மீது ஊர்வலமாய் எருசலேமிற்குள் நுழைகிறார். கூட்டமாக முன்னே சென்றவர்களும் பின்னே வந்தவர்களும் தாவீதின் மகனுக்கு ஓசன்னா என்று ஆர்ப்பரித்தனர்
ஆரவாரமாய் கொண்டாட்டம்
அடுத்தவரியில் மத்தேயு எழுதுவார் “எருசலேமுக்குள் சென்றபோது நகரம் முழுவதும் பரபரப்புற்றது (மத் 21:9-11)
இவர் யார்? என்றது.
மக்கள் சரியாகத்தான் சொன்னார்கள் இயேசு இறைவாக்கினர் என்று.

இரண்டாம் அதிகாரத்தில் எருசலேமில் இயேசுவின் பிறப்பை கேட்ட மாத்திரத்தில் கலங்கியது
இருபத்து ஒன்றாம் அதிகாரத்தில் அவர் இறைவாக்கினராக எருசலேமிற்குள் நுழையும்போது பரபரப்புற்றது
ஏன் என்ன காரணம்?
தொடர்ந்து வாசிப்போம்……….

இதற்கு பதிலாக
இருபத்து மூன்றாம் அதிகாரத்தில் இயேசு கூறுவார்
“எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே, உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே. ……… "(மத் 23)
ஆம் தன்னிடம் வருபவரை கொல்லபோகிறோமே என்று அது கலங்கியது தன் எல்லைக்குள் வந்ததும் பரபரப்புற்றது
நாடும் நகரமும் இயற்கையும் இறக்கை கட்டிக்கொண்டு நற்செய்தி முழுவதும் கதாபத்திரங்களுடனும் கதையின் உணர்ச்சிகளுடனும் பின்னி பிணைந்து வருகிறது. நற்செய்தியில் கூர்ந்து வாசித்து உய்த்து உணர்ந்து இணைந்து காண பல அம்சங்கள் உள்ளன

where is the KING?ஞானியர் கேள்வி இருவரிடம் சென்றது.
ஏரோது கலங்கினான் - எருசலேம் கலங்கியது.
ஏரோதுக்குள் கொதித்து கொப்பளித்த உணர்ச்சிகள் வார்த்தைகளில் வழிய தொடங்கியது.
வீரர்கள் மழலைகளை கொன்று குவித்தார்கள்.
இங்கு அதர்மம் தெரிந்தது. தர்மம் கண்ணில்படவே இல்லை.
ஒட்டு மொத்த மனிதகுலமும் குலுங்கிபோயிற்று.
கலங்கிய ஏரோதுவிடமிருந்து தப்பிக்க இயேசுவை தூக்கிக் கொண்டு ஓடின மரியாள் எங்கு நின்றாள் தெரியுமா?
இயேசுவை அறைந்த சிலுவையடியில்!
ஏரோதிடம் தப்பித்த இயேசு தானே வந்து எருசலேமிற்குள் வந்தார்.
எருசலேம் தன் நோக்கத்தை இறைவாக்கினர் கொல்லும் வேலையை செய்தது. இந்த முறை கல்லால் எறிந்து கொல்லாமல் சிலுவை மரணத்தை தந்தது
ஏரோது கலங்கியது – கொல்லவேண்டும் என்பதற்காக.
எருசலேம் கலங்கியது - கொல்லவேண்டிய தருணம் தனக்கு வருகின்றதே என்று
புதிய கோணத்துடன் தொடர்ந்து வாசிப்போம்.


A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com