மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா ஞாயிறு மறையுரை
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 42:1-4, 6-7 | திருத்தூதர் பணி 10:34-38 | மத்தேயு 3:13-17

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



ஒரு புதுக் கவிதை . குழந்தை ஒன்று காணவில்லை காணாமல் போன நாள் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15. நேரம் இரவு 12 மணி. அது எங்கேயாவது அழுது கொண்டிருந்தால் அழைத்து வாருங்கள். அதன் பெயர் சுதந்திரம். ஆம், நம் நாடு சுதந்திரம் அடைந்து எத்தனையோ ஆண்டுகள் கடந்து பொன்விழாவும் கொண்டாடி விட்டோம். வெளிநாட்டு ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை பெற்றது உண்மை! எனவேதான் இப்புதுக் கவிதை இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இந்நாடு, நோய், பாவம், அநீதி, அக்கிரமம், பகை, பஞ்சம், ஏழ்மை, ஏற்றத்தாழ்வு இவைகளிலிருந்து விடுதலை பெற்றுள்ளதா?

இயேசுவின் திருமுழுக்குப் பெற, தூய ஆவி அவர்மீது புறா வடிவிலே இறங்க, அவர் இந்த உலகத்தைப் புதுப்படைப்பாக மாற்ற வந்த புதிய தலைவர் என்பதை அறிவிக்கிறது. புறா புதியவை அனைத்திற்கும் அடையாளம். புதிய உலகிற்கு அடையாளம்.

ஆண்டவரின் ஆவி என் மேலே, ஏழைகளுக்கு நற்செய்தி, சிறைப்பட்டோருக்கு விடுதலை, ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு, குருடருக்குப் பார்வை, நோயுற்றோருக்கு நலம் என்பதை இயேசு தன் வருகையில் உண்டாகும் என அறிவிக்கின்றார் (லூக். 4:18-20).

குளிரிலே நடுங்கிக் கொண்டிருந்த ஒரு தாத்தா, பாட்டி இருவரும் வீடு இல்லாது தவித்தார்கள். ஒருவன் தன் வீட்டைப் பூட்டிச் சாவியை அந்த முதியவரிடம் கொடுத்து, நீங்கள் என் வீட்டிற்குச் செல்லுங்கள் என விட்டுவிட்டுப் புறப்பட்டான். மனம் போன போக்கிலே நடந்தான். பசியால், பட்டினியால் நடக்க முடியாது ஊரின் வெளியே ஒரு கிராமத்தின் வெளியே அமர்ந்து இருந்தான். ஆனால் ஊரார் அவனைப் பிடித்து இழுத்து வந்து திருடன், கொள்ளைக்காரன் என்றெல்லாம் பட்டம் சூட்டி பஞ்சாயத்தில் குற்றவாளியாக்குகிறார்கள். நான் குற்றமற்றவன் என்றெல்லாம் சொல்லியும் அங்கே அது எடுபடவில்லை. எனவே குற்றமற்றவனின் முகத்தை கருப்புத் துணியால் மூடி, கைகளைக் கட்டி பஞ்சாயத்தார் அனைவரும் ஓர் உயரமான மலை உச்சியிலிருந்து உருட்டிவிட்டு கடலிலே விழ வைத்தார்கள். மலை உச்சி சென்றவனின் முகத்தில் இருந்த திரை அகற்றப்படுகிறது. கட்டப்பட்ட கைகள் விடுதலை அடைகின்றன. மலையிலிருந்து உருட்டி விடப்பட்டு கடலில் விழுந்து தன் உயிரை இழந்தான். அவனது இழப்பில் இருந்து குற்றமற்றவனுக்குப் புது வாழ்வு கிடைத்தது.

ஆம். இயேசுவின் வாழ்க்கைப் படலம் தான் இது. அதுவே இழப்பின் படலம். ஆனால் புது வாழ்வுக்குக் கிடைத்த பரிசு இது. தன் ஆடுகளுக்காக, அவை மிகுதியாகப் பெரும் பொருட்டே வந்தேன் (யோவா. 10:10) என்றாரே. இதை நன்கு உணர்ந்த புனித பவுல் அடிகளார் (பிலி. 3:8-9) கிறிஸ்துவுக்காக இந்த உலகம் முழுவதையும் குப்பையெனக் கருதுகிறேன் என்றார்.
கிறிஸ்து இயேசுவின் திருமுழுக்கு ஏதோ நடந்து முடிந்த ஒரு நிகழ்ச்சி அல்ல. அது நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் பாதிக்கும் ஒரு தொடர் நிகழ்ச்சி. இரண்டாவது, இதைப் பெற்றுக் கொண்ட நாம் வாழ்ந்து காட்ட முன் வர வேண்டும். இயேசுவைப் போல் வாழாத எந்த மனிதரும் புதிய உலகத்தையும் படைக்க முடியாது. புதிய உலகத்தைப் படைக்க முன் வராத எந்த மனிதரும் திருமுழுக்குப் பெற்ற உண்மையான கிறிஸ்தவர் அல்லர்.

ஆண்டவருடைய ஆவி இயேசுவோடு இருந்தது. அவர் சென்ற இடமெல்லாம் விடுதலை கிடைத்தது. எந்த தூய ஆவி இயேசுவின் மீது தங்கி மக்களைக் கட்டியிருக்கும் கட்டுகளை அறுத்தெறிய அவரை மக்கள் நடுவே அழைத்துச் சென்றதோ, அதே தூய ஆவி திருமுழுக்கின்போது நம்மீதும் பொழியப்பட்டது. (யோவா 12:24) கோதுமை மணியானது தரையில் விழுந்து மடிந்தால் ஒழிய அது அப்படியே இருக்கும். மண்ணில் விழுந்து மடிந்தால் தான் அது பலன் தரும். எனவே எந்த நோக்கத்திற்காக இந்த உலகத்திற்கு வந்தாரோ (லூக். 4:16-22) அந்த நோக்கத்தை நூற்றுக்கு நூறு நிறைவேற்றினார் என்பது ஊரறியும், உலகமறியும் உண்மை . அவரது பணியை நாம் தொடர வேண்டும் என்பதற்காக நமக்கும் இயேசு திருமுழுக்குத் தந்துள்ளார். எனவே இது வெறும் சடங்கு அல்ல. மாறாக நம்மை தூய ஆவியால் புதுப் படைப்பாக மாற்றி, நம்மைப் புதிய உலகம் படைக்க அழைக்கும் ஓர் இறை அழைப்பு. புனித எரோணி முஸ் கூறுகிறார், நாம் பிறப்பில் கிறிஸ்தவர்களாக உண்டாக்கப்பட்டவர்கள் அல்ல. மாறாக தூய ஆவியால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதை உணருவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வானகத் தந்தையை மகிழ்ச்சிப்படுத்துவோம்

இயேசு திருமுழுக்குப் பெற்றபோது வானகத் தந்தை, என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் என்றார். வானகத் தந்தையின் அன்புக்குரியவராகவும், அவரை பூரிப்படையச் செய்பவராகவும் இயேசு திகழ்ந்ததற்குப் பல காரணங்கள் உள்ளன.

இயேசு எளியோரை ஏக்கமுடன் பார்த்தார்; பிணியாளர்களைப் பிரியமுடன் தொட்டார்; ஆதரவற்றோரை அன்புடன் அரவணைத்தார்; தவறுகளைத் தட்டிக்கேட்டார்; ஆன்ம பசிக்கு அறுசுவை உணவை அளித்தார்; வயிற்றுப்பசிக்கு வயிறார உணவு கொடுத்தார்; தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்தார்; ஆவியாரின் அற்புத ஆலயமாகத் திகழ்ந்தார்; நீதி தவறா நேர்மையாளராயிருந்தார்; அமைதிக்கு அடித்தளமாய்த் திகழ்ந்தார்; இருளகற்றும் இணையற்ற ஒளியாய் வாழ்ந்தார்; பார்வையற்றோர்க்கு பார்வையைத் தந்தார்; கைதிகளின் தளைகளை அறுத்தார்; சிறைப்பட்டோருக்கு மீட்பை அளித்தார்; சென்ற இடமெல்லாம் நன்மையைச் செய்தார்.

இவை அனைத்திற்கும் இன்றைய முதலிரண்டு வாசகங்களும் சாட்சி சொல்லும்.

இன்று விண்ணகத் தந்தையின் அன்பான மக்களாக, அவரை மகிழ்ச்சிபடுத்தும் பிள்ளைகளாக நாம் வாழவிரும்பினால் இயேசுவின் குணங்கள் அனைத்தையும் நம்முடைய குணங்களாக மாற்றிக் கொள்ளவேண்டும். நாம் இயேசுவைப் போல ஆகமுடியுமா? இந்தக் கேள்விக்கு கதை ஒன்று பதில் சொல்லும்.

ஓர் உப்புச்சிலை! பல நாள்கள், பல மாதங்கள் கடற்கரையில் காத்திருந்தது. கடல் பேசியது : சிலையே, சிலையே உனக்கு என்ன வேண்டும்? சிலை சொன்னது : உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்! எத்தனை பேரை நீ வாழவைக்கின்றாய்? எத்தனை மீன்களுக்கு நீ அடைக்கலம் தருகின்றாய்? உன் அன்பே அன்பு! உன் கருணையே கருணை! உன் முக அழகே அழகு! உன் நிற அழகே அழகு! உன் அலை அழகே அழகு! நீ என்னை மயக்கினாயா? - இல்லை நான் உன்னிடம் மயங்கிப்போனேனா? – எனக்குத் தெரியவில்லை! எனக்குப் பிடித்தமான உன் பெயரை அறிந்துகொள்ள ஆசை! உன் பெயர் என்ன?

கடல் சிரித்துக்கொண்டே சொன்னது:என் பெயரைக் கேட்டுவிட்டு கரையிலேயே நின்றுகொண்டிருந்தால் எப்படி? கீழே இறங்கி வா. உப்புச்சிலை மெல்ல மெல்ல கடலுக்குள் இறங்கியது! கடலுக்குள் முழுவதும் கரைந்தது! கடலோடு சங்கமமாகியது.

கரைந்து போன சிலையை கடல் பார்த்து : நான் யார்? என்றது. சிலையோ : உப்பே உருவான கடல் நீ என்றது. சரி நான் கடல் - நீ யார்? என்றது கடல் சிலையோ : நானும் கடல்தான் என்றது. என்ன நீ கடலா? என்றது கடல்.

ஆம். நானும் உப்பு, நீயும் உப்பு - அப்படியானால் நாம் கடல்தானே என்றது கரைந்த சிலை.

நமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் இயேசுவிடம், நற்கருணை ஆண்டவரிடம் நாம் அர்ப்பணிக்கும்போது, நாம் மறுகிறிஸ்துவாக மாறி அவரைப் போலவே வாழ்வோம் ; வானகத் தந்தையின் அன்பான மக்களாக, அவரை மகிழ்ச்சிப்படுத்தும் மகள்களாக, மகன்களாகத் திகழ்வோம்.


மேலும் அறிவோம் :

மகன்தந்தைக்(கு) ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல் ( குறள் : 70).

பொருள் : தன்னைப் பேணி வளர்த்து ஆளாக்கிய தந்தைக்கு மைந்தன் செய்யும் கைம்மாறு "இவனை மகனாகப் பெறுவதற்கு இவன் தந்தை என்ன தவம் செய்தானோ?” என்று பாராட்டத்தக்க புகழை ஈட்டித் தருவது ஆகும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஆண்டவரின் திருமுழுக்கு

ஒரு சிறுவன் தன் அம்மாவிடம் பலவற்றைக் கேட்டு நச்சரித்தான். அம்மா குச்சியை எடுத்து அவனை அடித்து, - இனிமேல் காக கேப்பியா?" என்று கேட்டதற்கு அவன், "கேட்க மாட்டேன் என்றான். "ஐஸ் கிரீம் கேப்பியா?" என்று கேட்டதற்கு, "கேட்க மாட்டேன்" என்றான். -சொன்ன பேச்சைக் கேப்பியா?" என்று கேட்டதற்கு அதற்கும், கேட்க மாட்டேன்" என்றான்.

பிள்ளைகள் பெற்றோரிடம் பல காரியங்களைக் கேட்டுத் தொந்தரவு செய்கின்றனர்; ஆனால் அவர்கள், சொல்லுவதை மட்டும் கேட்பதில்லை. அதாவது, கீழ்ப்படிவதில்லை. இந்நிலையில் இன்று தமது ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். ஆதாமின் கீழ்ப்படியாமையால் விளைந்த சாபக்கேட்டைக் கிறிஸ்து தமது கீழ்ப்படிதலால் நீக்கினார். எனவேதான் கிறிஸ்து திருமுழுக்குப் பெற்றபோது, "என் அன்பார்ந்த மைத்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படை சிறேன்" (மத் 3:17) என்று கூறி வாளாகத் தந்தை அவருக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.

கிறிஸ்து தந்தைக்குக் கீழ்ப்படித்தார்; "சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படித்தார்" (பிலி 2:8), கிறிஸ்து கடவுளின் அன்பு மகன், ஏனெனில் அவர் கடவுளின் அன்பான வாழியர், அதாவது இறைவாக்கினர் எசாயா முன்னறிவித்த "துன்புறும் இறை மாழியன், இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் கிறிஸ்துவைப் பற்றி "இதோ என் ஊழியர். இவரால் என் நெஞ்சம் பூரிப்படை கிறது (எசா 42:1) பாண்கிறார். துன்புறும் இறை ஊழியரைப் பற்றிய மற்றொரு கவிதையில் கிறிஸ்து, "அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி (செம்மறி)" என்று வர்ணிக்கப்படுகிறார் (எசா 53:7), இயேசு கிறிஸ்துவை "உலகின் பாவம் போக்கும் கடவுளின் செம்மறி" (யோவா 1:29) என்று திருமுழுக்கு யோவான் கட்டிக் காட்டினார்.

கிறிஸ்து யோர்தான் ஆற்றிலே பெற்ற திருமுழுக்கு அவருக்குத் தேவையில்லை. ஏனெனில் அவரிடம் பாவம் ஏதுமில்லை. அவருடைய உண்மையான திருமுழுக்கு அவர் கல்வாரி மலையில் பெற்ற பாடுகளின் திருமுழுக்கு. இதைப் பற்றித்தான் கிறிஸ்து பின்வருமாறு குறிப்பிட்டார். நான் பெறவேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறும் அளவும் தான் மிகவும் மன நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறேன்" (லூக் 12:50), தம்மோடு ஆட்சிபுரிய விரும்பிய யாக்கோபு மற்றும் யோவானிடம் (செபதேயுவின் மக்கள்) கிறிஸ்து, "நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?" (மாற் 10:38) என்று கேட்டார்.

திருமுழுக்கு என்பது தண்ணீருக்குள் போவதும் தண்ணீரிலிருந்து வெளியே வருவதும் இல்லை. மாறாகக் கிறிஸ்துவோடு பாவத்துக்கு இறந்து, கல்லறையில் பழைய மனிதனை (இயல்பை) அடக்கம் செய்துவிட்டு, கிறிஸ்துவோடு புது வாழ்வுக்கு உயிர்த்தெழுதல் ஆகும் (உரோ 8:3-5), திருத்தூதர் பணிகள் எட்டாம் அதிகாரத்தில் காணப்படும் மந்திரவாதி சீமோனைப் பற்றி (திப 8:1924) எருசலேம் ஆயர் சிரில் பின்வருமாறு கூறுகிறார்: "மந்திரவாதி சீமோன் தண்ணீருக்குள் போனான்; ஆனால் அவன் கிறிஸ்துவோடு சாகவில்லை. தண்ணீரிலிருந்து அவன் வெளியே வந்தான்; ஆனால் அவன் கிறிஸ்துவோடு உயிர்க்கவில்லை. திருமுழுக்குப் பெறுவது முக்கியமல்ல; ஆனால் கிறிஸ்துவோடு பாவத்துக்கு இறந்து புது வாழ்வுக்கு உயிர்ப்பதே முக்கியமாகும். சுருக்கமாக, கிறிஸ்துவின் பாஸ்கா மறைபொருளில் பங்கு பெறுவதே திருமுழுக்காகும்.

திருமுழுக்குப் பெற்றதின் விளைவாக நாம் கிறிஸ்துவுக்கு உரியவர்கள். "கிறிஸ்துவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவுணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்து சிலுவையில் அறைந்து விட்டார்கள்" (கலா 5:24) என்று கூறும் திருத்தூதர் பவுல், ஊனியல்பின் செயல்கள் யாவை என்று பட்டியலிட்டுள்ளார். அவை முறையே "பாத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லிசூனியம், பகைமை, சண்டைசச்சரவு, பொறாமை, சீற்றம். கட்சிமனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு. குடிவெறி, களியாட்டம் முதலியவையாகும்" (கலா 5: 19-20), நமது வாழ்வில் ஊனியல்பின் செயல்கள் வெளிப்பட்டால், நாம் கிறிஸ்துவுக்கு உரியவர்களாக இருக்க முடியுமா? தமிழ் ஆசிரியர் மாணவர்களிடம், * ஒரு கோழி 10 முட்டைகளை அடைக்காத்தது; அவற்றில் ஒரு முட்டையிலிருந்து வாத்துக் குஞ்சு வெளிவந்தது. அது எப்படி?" என்று கேட்டார். மாணவர்கள், "சார், அக்கோழி நடத்தை கெட்ட கோழி" என்று கூறினார்கள். கோழி முட்டையிலிருந்து வாத்துக் குஞ்சு வந்ததை அந்த மாணவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அப்படியானால் கிறிஸ்தவர்களின் வாழ்வில் எப்படி ஊனியல்பின் செயல்கள் ஆட்சி செய்ய முடியும்?

திருமுழுக்குப் பெறும்போது நமக்குத் தூய ஆவி அருளப்படுகின்றார். அந்த ஆவியாரால் கடவுளை நாம் "அப்பா தந்தையே" என அழைக்கின்றோம் (உரோ 8:15), கடவுளின் ஆவியைப் பெற்றுக்கொண்ட நம் வாழ்வில் ஆவியின் செயல்களான "அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம்" (கலா 5:22-23) ஆகியவை ஆட்சிபுரிய வேண்டும். ஒரு மரத்தை அதன் கனிகளைக் கொண்டு அறிகிறோம். அவ்வாறே ஒருவரின் செயலைக் கொண்டே அவர் ஊனியல்பில் வாழ்கிறாரா அல்லது ஆவியில் வாழ்கிறாரா என்று அறியலாம்.

இன்ற நாம் நமத திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்துக் கொள்வோம். குறிப்பாக சாதி வெறியை விட்டுவிடுவோம். "சாதிகள் இல்லையடி பாப்பா" என்பதைஅகிலத்துக்க உணர்த்தவோம். தமிழர்களின் தனிப்பெரும் விழாவாகிய பொங்கலை கொண்டாட இருக்கிறோம். பொங்கலில் எல்லாம் பொடலாம். ஆனால் "ஜாதிக்காயை" மட்டும் போடமால் தவிர்ப்போம். அப்போது தான் "மீட்புப் பொங்கல்" தேனாக தித்திக்கும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அழைப்பும் அருப்பணமும்

ஆடு மேய்ப்பதைத் தொழிலாகக் கொண்ட ஆதிவாசி இனத்தவர். மேய்ச்சல் நிலமே சொந்த இடம்போல ஊர் ஊராக ஆடுகளை ஓட்டிச் சென்று ஆங்காங்கே கூடாரமடித்துத் தற்காலிகமாகத் தங்கிக் கொள்வார்கள்.

குறிப்பிட்ட ஓர் ஊருககுள் நுழைந்ததும் பங்குத்தந்தையைப் பார்க்கப் போனார்கள். “நாங்கள் கிறிஸ்தவர்களாக விரும்புகிறோம். ஞானஸ்நானம் கொடுங்கள்” என்று விண்ணப்பம் செய்தார்கள். கேட்டதும் பூரித்துப்போனார் பங்குத்தந்தை - தேடிப்போன செல்வத்தைக் காலடியில் கண்டதுபோல. ஐம்பது பேரல்லவா ஒரே சமயத்தில் திருமுழுக்குக் கேட்கிறார்கள்!

ஓரிரு வாரங்கள் மறைக்கல்வி புகட்டி ஒருநாள் வெளிச்சிறப்போடு ஆடம்பரமாகத் திருமுழுக்குக் கொடுத்தார். திருச்சடங்குகள் முடிந்ததும், 'பாவம் ஏழைகள்' என்ற பரிவுணர்வோடு 'ஆளுக்கு மூன்றுபடி கோதுமை கொடுங்கள்' என்று சமூகப் பணியாளரிடம் சொன்னார். 'உழைப்புக்கு உணவு'த் திட்டம் கொடி கட்டிப் பறந்த காலம் அது! உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தவர்களிடையே சிறு சலசலப்பு. ஒரு முணுமுணுப்பு. “மூணு படி கோதுமைதானா? முந்தைய ஊரில் அந்தச் சாமியார் ஐந்து படி தந்தாரே..."

அதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. இறைவன்கூட எவரையும் நேரடியாக அழைப்பதில்லை. சில சந்தர்ப்பச் சூழ்நிலைகளின் கட்டாயங்களுக்கு உட்படுத்தித்தான் அழைக்கிறார். ஏன், அறிந்து உணர்ந்து தெளிந்து வருகின்றனர் என்பதற்காகவா குழந்தைகளுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறோம்? பெற்றோர், பெரியோர் விசுவாசத்தில் அவர்களது கூட்டுப் பொறுப்பில் திருச்சபை வைத்திருக்கிற நம்பிக்கைதானே குழந்தைத் திருமுழுக்கை அருத்தப்படுத்துகிறது, நியாயப்படுத்துகிறது! குழந்தையின் நலன் கருதிப் பெற்றோர் முடிவெடுப்பது அதன் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். ஒரு குழந்தைக்குப் பெயர் சூட்டுவதிலிருந்து, எந்தப் பள்ளியில் சேர்ப்பது, என்ன படிக்க வைப்பது என்று எல்லாவற்றையும் பெற்றோரே முடிவெடுத்துச் செய்கின்றனர். அப்போது குழந்தையின் சுதந்திரம் பறிக்கப்படவில்லையா? பெற்றோரின் கவனமிக்க வளர்ப்பில்தான் ஒரு குழந்தை வாழ்க்கையின் மதிப்பீடுகளைப் பெறத் தொடங்குகிறது. முற்றாத அறிவு, முதிராத பருவம் என்று சொல்லிக் கடவுளின் அருள்மழைக்கு முட்டுக்கட்டை போடுவது முறையன்று.

"சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். இறையாட்சி இத்தகையோருக்கே உரியது" (லூக். 18:16, மார்க் 10:14, மத். 19:14) என்று இயேசுவே கூறிக் குழந்தைகளை இறையரசில் ஏற்றுக்கொள்ளும்போது அவர்களைத் தடுப்பதற்கு நாம் யார்?

கடவுள் மனிதனுடன் உடன்படிக்கை மூலமே உறவாடுகிறார். இந்த உடன்படிக்கையின் சின்னம் பழைய ஏற்பாட்டில் விருத்தசேதனம். புதிய ஏற்பாட்டில் திருமுழுக்கு. பழைய ஏற்பாட்டில் கடவுள் இந்த உடன்படிக்கையை எட்டுநாள் குழந்தையுடன் செய்து கொள்கிறார் (லூக். 2:21). பிறந்த எட்டாம் நாள் விருத்த சேதனம் என்பது இறைவனே ஆணையிட்டுச் சொன்னது என்றால், பிறந்த எட்டாம் நாள் திருமுழுக்கு என்பது எப்படிப் பொருளற்றுப் போகும்?

“ஆதாமின் பாவ விளைவுகளைக் குழந்தைகள் விவரம் அறியாதபொழுதே பெற முடிந்தால், கிறிஸ்துவில் விளைந்த அருளையும் குழந்தைகள் விவரம் அறியாதபொழுதே பெற முடியாதா?” - தூய அக்குவினா தோமாவின் அறைகூவல் இது!

நாளுக்கு நாள் திருமுழுக்கின் அழைப்பை, அருத்தத்தை, பொறுப்பை, சிறப்பை உணர்ந்து வாழத் தவறினால் நாமும் அந்த ஆடு மேய்த்த ஆதிவாசிகளைப் போல நகைப்புக்குரியவர்களே!

இயேசுவின் திருமுழுக்கு நமது திருமுழுக்கை நினைவுபடுத்த வேண்டும். திருமுழுக்கு வெறும் பெயர் வைக்கும் அல்லது ஒரு சபையில் சேர்க்கும் சடங்கு அன்று; அது ஓர் இலட்சியப் பயணத்திற்காக ஆவியின் ஆற்றலைப் பெறும் தருணம் அன்றோ!

நம்மையும் நம்மைச் சுற்றிலும் உற்று நோக்கினால் திருமுழுக்குப் பெற்ற பிற இனத்தாராகக் கிறிஸ்தவர்கள் நாமும், திருமுழுக்குப் பெறாத கிறிஸ்தவர்களாகப் பிற இனத்தாரும் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காணலாம்.

திருமுழுக்கு என்றால் என்ன? பிறப்புநிலைப் பாவத்தையும் செயல்வழிப் பாவத்தையும் போக்கி நம்மைக் கடவுளின் பிள்ளைகளாகவும் திருஅவையின் உறுப்பினர்களாகவும் ஆக்குகின்ற திருவருள் சாதனம். இவ்வளவுதானா திருமுழுக்கு? எழுத்துச் சொல் உருவில் காணும் நமது நம்பிக்கைக் கோட்பாடு எவ்வளவு குறைபாடுள்ளது என்பதற்கு இந்தத் திருமறைச் சுவடியின் விளக்கமே ஓர் எடுத்துக்காட்டு.

இயேசுவின் திருமுழுக்கை எண்ணிப்பாருங்கள். அவருக்கு எந்தப் பிறப்புநிலைப் பாவம் அகன்றது? எந்தச் செயல்வழிப் பாவம் தீர்ந்தது? இதுவரை இல்லாதது போல இப்போது புதிதாக எந்தக் உடன்படிக்கையை எட்டுநாள் குழந்தையுடன் செய்து கொள்கிறார் (லூக். 2:21). பிறந்த எட்டாம் நாள் விருத்த சேதனம் என்பது இறைவனே ஆணையிட்டுச் சொன்னது என்றால், பிறந்த எட்டாம் நாள் திருமுழுக்கு என்பது எப்படிப் பொருளற்றுப் போகும்?

"ஆதாமின் பாவ விளைவுகளைக் குழந்தைகள் விவரம் அறியாதபொழுதே பெற முடிந்தால், கிறிஸ்துவில் விளைந்த அருளையும் குழந்தைகள் விவரம் அறியாதபொழுதே பெற முடியாதா?" - தூய அக்குவினா தோமாவின் அறைகூவல் இது!

நாளுக்கு நாள் திருமுழுக்கின் அழைப்பை, அருத்தத்தை, பொறுப்பை, சிறப்பை உணர்ந்து வாழத் தவறினால் நாமும் அந்த ஆடு மேய்த்த ஆதிவாசிகளைப் போல நகைப்புக்குரியவர்களே!

இயேசுவின் திருமுழுக்கு நமது திருமுழுக்கை நினைவுபடுத்த வேண்டும். திருமுழுக்கு வெறும் பெயர் வைக்கும் அல்லது ஒரு சபையில் சேர்க்கும் சடங்கு அன்று; அது ஓர் இலட்சியப் பயணத்திற்காக ஆவியின் ஆற்றலைப் பெறும் தருணம் அன்றோ!

நம்மையும் நம்மைச் சுற்றிலும் உற்று நோக்கினால் திருமுழுக்குப் பெற்ற பிற இனத்தாராகக் கிறிஸ்தவர்கள் நாமும், திருமுழுக்குப் பெறாத கிறிஸ்தவர்களாகப் பிற இனத்தாரும் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காணலாம்.

திருமுழுக்கு என்றால் என்ன? பிறப்புநிலைப் பாவத்தையும் செயல்வழிப் பாவத்தையும் போக்கி நம்மைக் கடவுளின் பிள்ளைகளாகவும் திருஅவையின் உறுப்பினர்களாகவும் ஆக்குகின்ற திருவருள் சாதனம். இவ்வளவுதானா திருமுழுக்கு? எழுத்துச் சொல் உருவில் காணும் நமது நம்பிக்கைக் கோட்பாடு எவ்வளவு குறைபாடுள்ளது என்பதற்கு இந்தத் திருமறைச் சுவடியின் விளக்கமே ஓர் எடுத்துக்காட்டு.

இயேசுவின் திருமுழுக்கை எண்ணிப்பாருங்கள். அவருக்கு எந்தப் பிறப்புநிலைப் பாவம் அகன்றது? எந்தச் செயல்வழிப் பாவம் தீர்ந்தது? இதுவரை இல்லாதது போல இப்போது புதிதாக எந்தக் கடவுளுக்கும் திருஅவைக்கும் பிள்ளையானார்? வானம் திறந்தது, குரலோலி கேட்டது, புறா இறங்கியது எல்லாம் அந்த உண்மையின் சில அடையாளங்கள் என்றாலும் திருமுழுக்கு என்பது இயேசுவைப் பொறுத்தவரை திருமறைச் சுவடியின் விளக்கத்துக்கு அப்பால்.

இயேசு தன் திருமுழுக்கில் தன்னுணர்வு பெற்றதுபோலத் தன் பணி வாழ்வுக்கான இலட்சிய முழக்கத்தைக் கேட்டார். கொள்கை விளக்கத்தைக் கண்டார். குறிக்கோளுக்கு ஏற்ற அருப்பணத்தைச் செய்தார். அதற்குத் தேவையான அருளையும் மன உறுதியையும் பெற்றார். எனவே, திருமுழுக்கு என்பது பணி வாழ்வுக்கான அழைப்பு! பலி வாழ்வுக்கான அருப்பணம்; அரங்கேற்றம்! இலட்சிய வாழ்வுக்கான நிலைப்பாடு! யோர்தான் நீரில் தொடங்கிய இந்தப் பந்தயத்தைக் கொல்கொத்தா சிலுவையில் ஓடி முடிப்பார். "நான் பெற வேண்டிய திருமுழுக்கு ஒன்று உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்” (லூக். 12:50).

நீரினால் பெறும் திருமுழுக்கு இரத்தத்தால் பெறும் திருமுழுக்குக்கு இட்டுச் செல்லும். இயேசுவுக்கு மட்டுமல்ல, அவருடைய சீடர்களுக்கும்தான்! "நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?" (மார்க். 10:38). இது சீடருக்கான சவால்!

எனவே திருமுழுக்கு என்பது தண்ணீருக்குள் மூழ்குவதும் தண்ணீரிலிருந்து எழுந்து வெளியே வருவதும் அல்ல. அது பாஸ்கா மறைபொருளில் பங்கேற்பு. கிறிஸ்துவோடு பாவத்துக்கு இறப்பது. பழைய இயல்பைப் புதைப்பது. அருள் வாழ்வுக்கு, புது வாழ்வுக்கு உயிர்ப்பது.

திருமுழுக்கு கிறிஸ்தவனுக்கு கருவறை. அதே வேளையில் கல்லறையும் கூட.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஓடும் நீரில்… ஒடுக்கப்பட்டோர் நடுவில்...

தந்தை மகன் உறவைக் கூறும் பல கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். அவைகளில் என் மனதில் ஆழமாய் பதிந்த ஒரு கதை இது. டீன்ஏஜ் இளைஞன் ஒருவன் தன் தந்தையுடன் வாழ்ந்து வந்தான். இருவருக்கும் மிக ஆழமான, அழகான உறவு இருந்தது. இளைஞன் கால்பந்தாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்டவன். ஆனால், அவன் உடல் அந்த விளையாட்டிற்கு ஏற்றது போல் வலுமிக்கதாய் இல்லை. இருந்தாலும் அவனுக்கிருந்த ஆர்வத்தைக் கண்டு பயிற்சியாளர் கல்லூரி கால்பந்தாட்டக் குழுவில் ஓர் இடம் கொடுத்தார். பல போட்டிகளில் அவன் விளையாடாமல், ஓரத்திலிருந்து தன் குழுவினரை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பான். அவன் களமிறங்கி விளையாடாவிட்டாலும், அவனது குழு விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் அவன் தந்தை வருவார். உற்சாகமாய் கைதட்டி இரசிப்பார்.

ஈராண்டுகள் இப்படியே உருண்டோடின. முக்கியமான ஒரு போட்டி நெருங்கி வந்ததால், குழுவினர் அனைவரும் வெறியுடன் பயிற்சி பெற்று வந்தனர், இந்த இளைஞனையும் சேர்த்து. அந்நேரத்தில் இளைஞனின் தந்தை இறந்து விட்ட செய்தி வந்தது. பயிற்சியாளர் இளைஞனை ஆதரவாய் அணைத்து ஆறுதல் சொல்லி, வீட்டுக்கு அனுப்பி வைத்தார். போட்டியைப் பற்றிக் கவலைப்பட வேண்டாமென்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அடுத்த நாள், முக்கியமான அந்த போட்டி நடைபெற்றது. இளைஞனின் குழு சரிவர விளையாடவில்லை. எனவே, தோற்கும் நிலையில் இருந்தனர். விளையாட்டின் பாதி நேர இடைவேளையின் போது அந்த இளைஞன் திரும்பி வருவதைக் குழுவினர் பார்த்தனர். அதுவும், குழுவின் சீருடை அணிந்து விளையாட வந்திருந்தான் அவன். அவனுக்கு கால்பந்தாட்டத்தின் மீது இருந்த ஆர்வம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனாலும், அதற்காக இப்படியா? தந்தையின் அடக்கம் முடிந்தும் முடியாமல், அவன் விளையாட்டுத் திடலுக்கு வந்தது அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்தது. இவ்வளவுக்கும், அவனுக்கும் அவன் தந்தைக்கும் இருந்த நெருங்கிய உறவை அனைவரும் பார்த்திருந்தனர். எனவே, இந்த அவனது செயலை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

திடலுக்கு வந்தவன் பயிற்சியாளரிடம் சென்று, "சார் இந்த இரண்டாவது பாதியில் தயவு செய்து என்னை விளையாட அனுமதியுங்கள்." என்று கெஞ்சினான். ஏற்கனவே தன் குழு தோற்றுக் கொண்டிருந்த சூழ்நிலையில், இவனை இறக்கினால் நிலைமை இன்னும் மோசமாகுமே என்று பயிற்சியாளர் பயந்தார். எனினும், அந்த இளைஞனின் மனதை உடைக்க விரும்பவில்லை. மேலும் அந்த இளைஞனின் கண்களில் கண்ணீரோடு சேர்ந்து தெரிந்த அந்த ஆர்வத்தால், அனுமதி அளித்தார்.

இரண்டாவது பாதியில் அந்த இளைஞனின் அற்புதமான விளையாட்டால், தோற்கும் நிலையில் இருந்த அவனது குழு வெற்றி அடைந்தது. அவனது குழுவினருக்கு ஆனந்த அதிர்ச்சி; எதிரணிக்கும் அதிர்ச்சி. ஆட்டத்தின் முடிவில் அந்த இளைஞனைத் தோள்களில் சுமந்து ஆரவாரம் செய்தனர். ஆரவாரம் எல்லாம் ஓய்ந்த பின், பயிற்சியாளர் அவனிடம், "தம்பி, என்னால் இதை நம்பவே முடியவில்லை. உனக்கு என்ன ஆயிற்று? எங்கிருந்து வந்தது உன் பலம், திறமை எல்லாம்?" என்று நேரடியாகவே கேட்டார்.

இளைஞன் கண்ணீரோடு பேசினான்: "சார், என் அப்பா இறந்துவிட்டார் என்பது மட்டுமே உங்கள் அனைவருக்கும் தெரியும். அவருக்குப் பார்வையே இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான். குழுவினரும், பயிற்சியாளரும் அதிர்ச்சியில் அவனைப் பார்த்தனர். இளைஞன் தொடர்ந்தான்: "ஆம், என் அப்பாவுக்கு பார்வைத் திறன் கிடையாது. ஆனால், எனது குழுவின் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் தவறாமல் வந்து என்னை உற்சாகப்படுத்தினார். இன்று இந்த ஆட்டத்தைத்தான் முதன் முதலாக அவர் வானிலிருந்து கண்ணாரக் கண்டிருப்பார். அவர் பார்க்கிறார் என்பதற்காக, அவரை மகிழ்விக்க நான் என் முழு திறமையை இன்று வெளிப்படுத்தினேன்." என்று அவன் சொல்லி முடிக்கும் போது, அங்கிருந்தவர் அனைவரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. ஆனந்தக் கண்ணீர்.

புறக் கண்களால் பார்க்கும் திறனற்ற ஒரு தந்தை தன் மகனை அவனது கனவில் அவனது திறமைகளில் வளர்த்த கதை இது. புறக் கண்களால் மனிதர்கள் பார்க்க முடியாத விண்ணகத் தந்தை தன் மகன் இயேசுவின் கனவுகளை ஆரம்பித்து வைத்த ஒரு நிகழ்வை இன்றைய நற்செய்தி நமக்குத் தருகிறது. இயேசு திருமுழுக்கு பெற்றதும், தந்தை அவரை உலகிற்குப் பெருமையுடன் அறிமுகப்படுத்தினார்... “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” (மத்தேயு 3: 17)

உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரினத்திலும் மனிதக் குழந்தை வளர்வதற்கு எடுத்துக் கொள்ளும் காலமே அதிகமான காலம். மற்ற உயிரினங்களின் வளர்ச்சிக்கு இவ்வளவு அதிகமான நேரம் தேவைப்படுவதில்லை. மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுத்தர வேண்டுமா என்பது நம் பேச்சு வழக்கு. மீன் குஞ்சுகள் முட்டையிலிருந்து வந்ததும் நீந்த ஆரம்பிக்கும். யாரும் அவைகளுக்குப் பாடங்கள் சொல்லித் தருவதில்லை. அதேபோல், பிற மிருகக் குட்டிகள், பறவைக் குஞ்சுகள் எல்லாம் குறைவான காலத்திலேயே வளர்ந்துவிட்ட மிருகங்கள், பறவைகள் போல் செயல்பட ஆரம்பித்து விடுகின்றன. மனித குழந்தையின் வளர்ச்சிக்கு பல ஆண்டுகள் ஆகின்றன.

உடலளவில் ஒரு குழந்தையின் வளர்ச்சியை பல்வேறு பருவங்களில் நாம் கொண்டாடுகிறோம். குழந்தை குப்புறப்படுக்கும் போது, குழந்தை தன் முதல் அடியெடுத்து நடக்கும் போது என்று... பல நிலைகளை நாம் கொண்டாடுகிறோம். உடலளவில் குழந்தைகள் வளர்வதைக் கொண்டாடுவது போல், உள்ளத்தளவில், அறிவுத் திறனில் அவர்கள் வளர்வதையும் நாம் பல வழிகளில் கொண்டாடுகிறோம், அங்கீகரிக்கிறோம். ஓர் இளைஞன் அல்லது இளம் பெண் தன்னையே ஆளும் திறமை பெறுவதை பல கலாச்சாரங்கள், பல மதங்கள் சடங்குகள் வழியாகக் கொண்டாடுகின்றன. இனி இந்த இளைஞன் அல்லது இளம் பெண் இந்த உலகைத் தனியே சந்திக்க திறமை பெற்றுள்ளனர் என்று இந்த கொண்டாட்டங்கள் சொல்கின்றன.

நமது மனித வளர்ச்சியின் படிகளை எண்ணிப்பார்க்க இந்த ஞாயிறு நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பைத் தருகிறது. அதிலும், நாம் ஒவ்வொருவரும் நம் சொந்த வாழ்வை நாமே நிர்ணயிக்கும் முக்கிய நிலையை எண்ணிப் பார்க்க இந்த ஞாயிறு ஒரு நல்ல தருணம்.

இயேசு யோர்தான் நதியில் திருமுழுக்கு பெற்றதை இன்று நாம் கொண்டாடுகிறோம். தன் வாழ்வை, தன் பணியை நிர்ணயிக்க, தீர்மானிக்க இயேசு தன் முதல் அடியை எடுத்து வைக்கிறார். அவர் எடுத்து வைத்த முதல் அடியையே தண்ணீரில், அதுவும் ஓடுகின்ற ஆற்று நீரில் எடுத்து வைத்தார். இது நம் சிந்தனைகளைத் தூண்டும் அழகான ஓர் அடையாளம். உறுதியான தரையில் நிற்பதற்கும், ஓடும் நீரில் நிற்பதற்கும் வேறுபாடுகள் அதிகம் உண்டு. தான் மேற்கொள்ளவிருக்கும் பணியும் ஓடும் நீரைப் போல் இருக்கப்போகிறதென்று இயேசு சொல்லாமல் சொன்னாரோ? இனி தொடரும் தன் பணிவாழ்வில் தந்தையாம் இறைவனின் அன்பைத் தவிர வேறு எதுவும் இயேசுவுக்கு உறுதியளிக்காது என்பதை உணர்த்த அவர் தன் பணிவாழ்வின் முதல் அடியை ஓடும் நீரில் எடுத்து வைத்தாரோ?

ஓடும் நீரில் மற்றொரு அழகும் உண்டு... அந்நீரில் உயிர்கள் வளரும். தேங்கி நிற்கும் நீரை விட, ஓடும் நீரில் உயிர்கள் வாழும் வாய்ப்பு அதிகம் உண்டு. இயேசுவும் ஓடும் நீரைப் போல் பலருக்கு வாழ்வளிக்க விரும்பியதால், ஓடும் ஆற்று நீரைத் தன் பணிவாழ்வின் முதல் அடியாகத் தேர்ந்தெடுத்தார்

. அந்த ஆற்றின் நீரில் இயேசு தன் திருமுழுக்கைத் தனியே பெறவில்லை. மக்களோடு, மக்களாய் கலந்து, கரைந்து நின்றார். எந்த மக்களை விடுவிக்க அவர் தீர்மானித்தாரோ, அந்த மக்களில் ஒருவராய் மாறினார். அவர் அப்படி கலந்து, கரைந்து நின்றது திருமுழுக்கு யோவானுக்குச் சங்கடத்தை விளைவித்தது. எனினும், இயேசு தன் முடிவிலிருந்து மாறவில்லை. ஓடும் நீரில் இறங்கியது, மக்களோடு மக்களாய் கரைந்தது என்ற இந்த இரு செயல்கள் வழியாக தன் பணியின் நோக்கத்தை இயேசு உலகறியச் செய்தார். விண்ணகத் தந்தையும் தன் பங்கிற்கு தன் அன்பு மகனை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பொறுப்பான பணியில் இறங்கும் ஒவ்வொருவரும் தாங்கள் செய்ய இருப்பதை திட்டங்களாகச் சொல்வார்கள். முக்கியமாக, மக்களின் தலைவர்களாய் மாறத் துடிப்பவர்கள், தாங்கள் பொறுப்புக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்பதைத் தேவைக்கும் அதிகமாக பறை சாற்றுவார்கள். அந்த ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இல்லாமல், இயேசு தன் பணிவாழ்வை யோர்தான் நதியில் ஆரம்பித்தார். “இவரே என் அன்பார்ந்த மைந்தர்” என்று தந்தை வானத்திலிருந்து முழங்கிய போது, தன் மைந்தனுக்குரிய, தன் பணியைச் செய்யும் ஊழியனுக்குரிய இலக்கணத்தை உலகறியச் செய்தார். அந்த இலக்கணம் இன்றைய முதல் வாசகத்தில் நமக்கு இறைவாக்கினர் எசாயா மூலமாகச் சொல்லப்பட்டுள்ளது.

எசாயா 42: 1-4, 6-7
இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்: நான் தேர்ந்துகொண்டவர் அவர்: அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது: அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்: அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார். அவர் கூக்குரலிடமாட்டார்: தம்குரலை உயர்த்தமாட்டார்: தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார். நெரிந்த நாணலை முறியார்: மங்கி எரியும் திரியை அணையார்: உண்மையாகவே நீதியை நிலை நாட்டுவார். உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்: மனம் தளரமாட்டார்: அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர். விண்ணுலகைப் படைத்து விரித்து, மண்ணுலகைப் பரப்பி உயிரினங்களைத் தோன்றச் செய்து, அதன் மக்களுக்கு உயிர்மூச்சுத் தந்து, அதில் நடமாடுவோர்க்கு ஆவியை அளித்தவருமான இறைவனாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்: உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்: மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன். பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.

இறுதியாக, அன்புள்ளங்களே, இரு சிறப்பான வேண்டுதல்களோடு நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம். கடந்த நவம்பர், மற்றும் டிசம்பர் மாதங்களில் எனக்குத் தெரிந்த பல குரு மாணவர்கள் குருக்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த புது குருக்கள் ஒவ்வொருவரும் எசாயா கூறும் இறை ஊழியர்களாய் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள சிறப்பாக செபிப்போம். குருக்கள் மற்றும் துறவியர் அனைவரும் உண்மையான இறை ஊழியர்களாய் விளங்கவும் செபிப்போம்.

2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பமான அகிலஉலக இளையோர் ஆண்டு இன்னும் தொடர்கிறது. ஒவ்வோர் இளைஞனும், இளம் பெண்ணும் இந்த உலகில் தங்கள் வாழ்வை, பணியை நிர்ணயிக்கும் நிலையில் உள்ளனர். ஓடும் நீரைப் போன்ற உறுதியற்றச் சூழ்நிலைகளில் அவர்கள் நல்ல முடிவுகளை எடுக்கவும், அம்முடிவுகளின் இறுதியில் அவர்கள் கரையேறும் போது, அவர்களை இறைவன் தன் அன்புப் பிள்ளைகள் என்று உலகறிய அறிமுகப்படுத்தவும் வேண்டுமென்று அவர்களுக்காகவும் செபிப்போம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இயேசுவின் திருமுழுக்கு

முதல் வாசகப் பின்னணி (எசா. 42:1-4,6-7)

இறைவாக்கினர் எசாயா ஆண்டவரின் ஊழியனைப் பற்றிய செய்தியை இஸ்ராயேல் மக்களுக்கு முன்னறிவிக்கிறார். இது இஸ்ராயேல் மக்களுக்கு ஆறுதல் மொழியாக அமைகின்றது. யார் இந்தப் பணியாளன், அல்லது ஊழியன்? அரசனா? இல்லை யுதமதக் குருவா? இல்லை ஆண்டவரின் வார்த்தையை முன்னறிவிக்கும் இறைவாக்கினரா? எதுவும் இல்லை இவர் அனைவருக்கும் அப்பாற்ப் பட்டவர், இறைசித்தத்தின்படி வாழ்ந்து, தன் மக்களுக்காய் துன்பப் பட்டுத் தியாகத் தீபமாய் மாறக்கூடியவர்; இதைத் தான் 2-ஆம் எசாயா முன்னறிவிக்கிறார். இந்த இறைவாக்கானது புதிய ஏற்பாட்டில் இயேசுவே மெசியா என்பதில் நிறைவு கொள்கிறது. பாபிலோனிய அடிமைத்தன பின்னணியில் எசாயாவின் ஊழியன் மீட்பின், விடுதலையின் வெளிப்பாடாக அமைகின்றார்.

இரண்டாம் வாசகப் பின்னணி (தி.ப. 10:34-38)

இன்றைய இரண்டாம் வாசகம் தி.ப. 10:34-38 ஆண்டரின் திருமுழுக்கிற்கு ஏற்றக் கருத்தாழம் மிக்க மையப் பொருளாய் அமைகின்றது. கொர்னேலியு இவர் ஒரு யூதனும் இல்லை, கிறிஸ்த வனும் இல்லை. உரோமை அரசு அதிகாரி, பாலஸ்தீனத்தில் வசிக்கும் ஒரு புறவின சகோதரன். "நான் ஒரு தலை சார்பாய் இருப்பவர் அல்ல" என்ற ஆண்டவரின் வார்த்தை தூய பேதுருவுக்கு அருளப்படுகிறது. பேதுரு கொர்னேலியுவின் இல்லத்திற்கு சென்று அவரையும் அவரது குடும்பத்தார் அனைவருக்கும் திருமுழுக்கு கொடுக்கிறார். அனைவரையும் ஆண்டவருக்குள் அழைத்து வருகி- றார். இந்தக் கொர்னேலியுதான், புறவினத்தாராக இருந்து கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட முதல் கிறிஸ்துவர். ஆண்டவர் தம்மைத் தேடும் யாவருக்கும் அருகிலேயே உள்ளார்.

நற்செய்தி வாசகப் பின்னணி (மத்தேயு 3:13-17)

திருமுழுக்கு யோவான், யாருக்காக வழியை ஆயத்தம் செய்து கொண்டிருந்தாரோ அவரிடமே ஆண்டவர் இயேசு வந்தார். எதற்காக வழியை ஆயத்தம் செய்தாரோ அதை உறுதிப்படுத்த யோவானிடம் வருகின்றார். யோர்தானில் திருமுழுக்குப் பெற்று தந்தையால் இந்த உலகிற்கு தன்னை யார் என்று வெளிப்படுத்தவே அங்கு வந்தார். இந்த யோர்தான் நதியைக் கடந்து தான் இஸ்ராயேல் மக்கள் பாலஸ்தீனத்தில் குடியேறினார்கள். இதில் மூழ்கி எழுந்த தினால் நாமான் என்ற தொழுநோயாளி இறைஇரக்கத்தால் குணம் பெற்றார். இங்கிருந்துதான் எலியாஸ் நெருப்பு தேரில் விண்ணகம் சென்றார். புண்ணியம் படைத்த இந்த நீர் ஓட்டத்தில் தெய்வம் தன்னை வெளிப்படுத்துகிறது.

மறையுரை

இன்று அன்னையாம் திருச்சபை ஆண்டவர் இயேசுவின் திரு முழுக்குப் பெருவிழாவினைக் கொண்டாடுகிறது. இன்றைய திருவழி பாடும், இறைவார்த்தை வழிபாடும், நாம் நம் திருமுழுக்கின் வழியாய் புது வாழ்வு தொடங்க, புண்ணிய வாழ்வு வாழ, அதன் வழியாய் ஆண்டவரை மகிமை செய்ய அழைப்பு விடுக்கிறது. புது வாழ்வு தொடங்க... தூய வாழ்வு வாழ... நம்மால் ஆண்டவர் மகிழ்ச்சி அடைய... "ஒவ்வொரு கிறிஸ்தவனும் திரு முழுக்கினால் மட்டுமே கிறிஸ்துவோடு இணைக்கப்படுகிறான். காரணம் கிறிஸ்து கடவுள் தன்மையில் விளங்கினாலும் நெறிகெட் டவர்களோடு ஒன்றாகக் கருதப்பட்டார் என்பதற்கிணங்க, மனிதர் களோடு ஒன்றாகத் தம்மை நிரூபித்துக் காட்டினார்". -திருதந்தை இரண்டாம் ஜான்பால், 1986 ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி இந்தியா வந்தபோது கூறினார்.

ஒவ்வொரு நாளும் மனிதனானவன் புதிய நாளை எதிர்ப்பார்க் கின்றான். புதிய கண்டுபிடிப்புகளைக் காண முனைகின்றான். புதிய வாழ்வு முறைக் கலாச்சாரம், புதிய மொழி நடை, புதிய நண்பர்கள்! இவ்வாறு உலகம் வெளித்தோற்றத்தில் புதிய… புதிய... என்று சென்று கொண்டே இருக்கிறது. இது உலகத்தின் பால் பெருமை யடைய, மகிழ்ச்சியடைய, நிலையற்ற மகிழ்ச்சியை பெற்றுக் கொள்ள உதவும். இந்த மகிழ்ச்சியால் தனிமனிதனுக்கு மகிழ்வு கிடைக்குமே தவிர பிறர் மகிழ மாட்டார்கள். இந்த வாழ்க்கை முறையினால் இறைவன் மகிழ மாட்டார். இவையனைத்தும் இருந்- தால் திருமுழுக்கின் வழியாய் புதிய வாழ்வு வாழும்போது, நமது வாழ்க்கை தூய மாகிறது. இந்தப் புதிய தூய வாழ்க்கை முறையினால் ஆண்டவர் மகிழ்ச்சி அடைகின்றார்.

புது வாழ்வு

கடவுள் நமக்கு ஆதரவு தருகிறார். மனிதன் தனது வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இறை ஆதரவை நாடுகின்றான். ஆனால் திருமுழுக்கின் வழியாய் கடவுள் நமக்குத் துணையாய் இருக்கிறார், ஆதரவு தருகிறார். "இதோ என் ஊழியன் அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்” என்ற எசாயாவின் வாக்கு நம்மை பலப்படுத்துவதாக அமைகின்றது. இந்த உறுதியான ஆதரவு திருமுழுக்கு அன்று மட்டுமல்ல நமது இறுதி நாட்கள்வரை நம்மோடு இருக்கிறது. மாபெரும் விவிலியப் பேராசிரியர் அருள்தந்தை லெக்ரான் சொல்லுவார், "நான் பிறந்தநாளைவிட, எனது திருமுழுக்கு நாளைப் பெரிதும் நினைத்து மகிழ்கின்றேன். ஏனெனில் அது எனக்கு புது வாழ்வு தந்தது. அதன் வழியாய் ஆண்டவரின் அருட்கரம், ஆதரவு என்றும் என்னோடு இருக்கிறது".

தூய வாழ்வு

திருமுழுக்கின் வழியாய் நாம் ஆண்டவரின் ஆதரவை மட்டும் பெறுவது அல்ல மாறாகக் கடவுளின் பிள்ளைகள் என்கிற உரிமை- யையும் பெறுகிறோம். "என் அன்பார்ந்த மைந்தர் இவரே" என்று ஆண்டவர் இயேசுவை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த கடவுள் இன்று திருமுழுக்கின் வழியாய் நமது பெயரைச் சொல்லி இந்த உலகிற்கு கடவுளின் மகனாக, மகளாக அறிமுகம் செய்து வைக்கிறார். எபேசியர் 1:5-இல் கூறுவது போல, "நம்மைத் தமது பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன் குறித்து வைத்தார்", நாம் அனைவரும் தூய வாழ்வு வாழ அவரது அன்பினால் முன் குறித்து வைக்கப்பட்டுள்ளோம்.

ஆண்டவர் மகிழ்ச்சி கொள்கிறார். புது வாழ்வினைப் பெற்று, தூய வாழ்வு வாழும்போது நம்மால் ஆண்டவரின் நெஞ்சம் பூரிப் படைகிறது. பல்வேறு தருணங்களில் திருமுழுக்கு வழியாக நாம் பெற்ற அருளை உணர்ந்து கொள்ளாமல் சோதனைவேளையில், இயற்கை சீற்றத்தின் வேளையில், கடவுளை நாம் இகழத் தொடங்கு கிறோம். மற்றும் நமது தேவைகளை அறிக்கையிடும்போது கடவுள் நம்மைத் தனியாகத் தவிக்க விட்டுச் சென்றுவிட்டார் என்று சொல்லி நிறைய வேண்டுதல் செய்கின்றோம். ஆனால், திருமுழுக்கின் வழியாய் நம்மில் இணைந்த கடவுள் நம்மை விட்டுச் செல்வது இல்லை என்று சொல்லி நம்மில் அவரது ஆவியை நிலை கொள்ள செய்கிறார். இந்த உயிருள்ள ஆவியானவர் எல்லா நிலைகளிலும் நம்மைத் தூய வாழ்வுக்கு அழைத்துச் செல்கிறார்.

ஆனால் நாம் எந்த அளவிற்கு திருமுழுக்கினை புது வாழ்வு தருவதாகத் தூய வாழ்வு தருவதாக உணர்ந்திருக்கிறோம். நமது திருமுழுக்கு நிகழ்வுகளில் நமது பெற்றோரும் ஞானப்பெற்றோரும் பங்கு கொள்ள எந்த அளவிற்கு அவர்கள் திருமுழுக்கின் மகத்து வத்தை புரிந்துள்ளனர்.

ஆண்டவரின் திருமுழுக்கு நம் அனைவருக்கும் நாம் பெற்ற புது வாழ்வை, தூய வாழ்வை வாழ உணர்த்தட்டும். அதன் வழியாய் ஆண்டவர் மகிமையடைவார்.

பிற மறையுரைக் கருத்துக்கள்

1. திருமுழுக்கு பெறுபவர்கள் ஜென்ம பாவத்திலிருந்து விடுதலை அடைவதோடு, தீமைகளின் தலைவனாம் அலகையை வெற்றிக் கொள்ளவும், உலகத்தின் மதிப்பீடுகளைக் களைந்து, கிறிஸ்துவின் மதிப்பீடுகளை அணிந்து கொள்ளவும், தூய வாழ்வு வாழவும் வல்லமை பெறுகின்றனர்.
2. திருமுழுக்கு ஒரு மனிதனை கடவுள் வாழும் தூய ஆலயமாக மாற்றுகிறது. அவர்கள் உள்ளங்களில் உண்மையிலும் ஆவியிலும் இடைவிடாமல் இறைவனுக்கு வழிபாடு நடத்தும் வல்லமை தருகிறது. “இயேசுவே என் ஆண்டவர், கடவுள்" என்று விசுவசிக் கவும், அதை அறிக்கைச் செய்யவும் தகுதி பெறுகின்றார்கள்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஆண்டவரின் திருமுழுக்கு

ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழாவோடு கிறிஸ்து பிறப்புக்காலம் முடிந்து, ஆண்டின் பொதுக்காலம் தொடங்கு கின்றது. திருமுழுக்கிலிருந்து நமதாண்டவரின் பணிவாழ்வு, பொது வாழ்வு தொடங்குகின்றது. இன்றைய இறைவார்த்தைகள் இந்த மையப் புள்ளியில் ஒன்றிணைகின்றன. முதல் வாசகத்தில் ஏசாயா இறை ஊழியரைப் பற்றியும், அவரது அழைப்பு மற்றும் பணியைப் பற்றியும் பேசுகின்றார். இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் பணிகள் நூலில், பேதுரு இயேசுவின் மீது 'தூய ஆவியாரின் வல்லமை பொழியப்பட்டதைப் பற்றியும், இயேசு நன்மை செய்துகொண்டே சென்றதையும் அறிவிக்கின்றார். நற்செய்தியில் மத்தேயு இயேசுவின் திருமுழுக்கைப் பற்றியும் இறைமகன் இயேசுவுக்குத் தந்த சாட்சியம் பற்றியும் விவரிக்கின்றார். இந்த நற்செய்தி பற்றிப் பல நிலைகளில் விளக்கலாம் என்றாலும், நமது சிந்தனைக்கு இயேசுவின் ஆளுமைபற்றி, அடையாளம் பற்றி மத்தேயு கூற வருவது என்ன என்பது பற்றியும், கிறிஸ்தவ வாழ்வுக்கு அதுதரும் செய்திகளைப் பற்றியும் மட்டும் இவண் கவனிப்போம்.

உள்கூறுகள்

மேலே குறிப்பிட்டதுபோல இந்த நற்செய்தியில் பல உட்கூறுகள் உள்ளன. இயேசு தன் மறைந்த வாழ்வுக்குப் பிறகு தனது பொதுவாழ்வைத் தொடங்கும்போது இது நிகழ்கின்றது. ஒரு வளர்ந்த மனிதனாக இயேசுவின் ஆளுமையை இது படம் பிடித்துக் காட்டுகின்றது. மேலும் இந்த நிகழ்விலே சில அசாதாரணமானவைகளும் விண்ணிலிருந்து சில வெளிப்பாடு களும், செய்தியும் வழங்கப்படுகின்றன. அவை திருமுழுக்குப் பெரும் இயேசுவின் ஆளுமையைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கு உதவுகின்றன

.

1. கிறிஸ்தியல் செய்தி மேலே கூறப்பட்டவை அனைத்தும் இயேசுயார் என்பதைத் தெளிவுப்படுத்துவதில் குறியாய் உள்ளன. முதலாவது இந்த நிகழ்வின் வழியாக இயேசு உலகுக்கு வெளிப்படுத்தப்படுகிறார். அறிமுகப்படுத்தப்படுகின்றார். இதுமுதல் இயேசு தனது பணி வாழ்வினைத் தொடங்குகின்றார். எனவே வானிலிருந்து ஒரு குரல் இயேசுவின் உண்மையான அடையாளம் என்ன என்பதை வெளிப்படுத்துகிறது. இயேசு இறைத்தந்தையின் “அன்பார்ந்த மைந்தர்” என்பதும் இயேசுவிலே இறைத்தந்தை “பூரிப்படை கின்றார்” (வச 17) என்பதும் இங்குக் கிறிஸ்துவைப் பற்றித் தரப்படும் கிறிஸ்தியல் செய்தியாகும்.

2. திருமுழுக்கு யோவானும் இயேசுவும் இயேசுவின் திருமுழுக்குப் பற்றிய மத்தேயுவின் விவரிப்பு பிற ஒத்தமை நற்செய்திகளிலிருந்து இயேசுவுக்கும் திருமுழுக்கு யோவானுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் (வச 14-15) தனித்து நிற்கின்து. இது நற்செய்தியின் காலத்தில் எழுந்த சிக்கல்களுக்கு விடையளிப்பதாக அமைகின்றது. தொடக்கத் திருஅவையில் இயேசு திருமுழுக்கு யோவானைவிட உயர்ந்தவர் எனக் கிறிஸ்தவர்கள் போதித்துக் கொண்டிருக்க இயேசு ஏன் தன்னைவிட தகுதி குறைந்தவராகிய திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்குப் பெற வேண்டும் எனும் கேள்வி எழுந்திருக்கலாம். அதற்கு விடையாக இந்த உரையாடல் அமைகின்றது. மேலும் திருமுழுக்கு யோவானின் திருமுழுக்கு மனமாற்றம் பாவமன்னிப்பு ஆகிய வற்றோடு தொடர்புடையது. இயேசு "பாவம் செய்யாதவர்” (காண் எபி 4:15) எனில் அவர் திருமுழுக்கு யோவானின் திருமுழுக்கை ஏன் பெற வேண்டும் எனும் வினாவுக்கு விடையளிக் கவும் இந்த உரையாடல் உதவுகின்றது. அதாவது 'கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நிறைவேற்றுவதற்காக" (வச 15) இயேசு இந்தத் திருமுழுக்கைப் பெற்றுக் கொண்டார்.

3. திருமுழுக்கு இயேசுவின் திருமுழுக்கு நமது திருமுழுக்குக்கு முன் மாதிரியாக இருக்கின்றது. இயேசுவின் பணிவாழ்வுக்கு அவரது திருமுழுக்குத் தொடக்கமாக இருந்ததுபோல, நமது கிறிஸ்துவ வாழ்வுக்குத் தொடக்கமாக அமைவது நமது திருமுழுக்கு. இயேசுவின் திருமுழுக்கில் தூய ஆவி இறங்கிவர தந்தை அவரை தன் மகன் என ஏற்று அறிக்கையிட்டதுபோல, நம் திருமுழுக்கின் போதும் நம் மீது தூய ஆவி பொழியப்பட்டு நாம் இறைவனின் சொந்த மக்களாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றோம். இந்தப் புனித வாழ்வுக்கு ஏற்றக் கிறிஸ்தவ வாழ்வு வாழ அழைக்கப்படுகின்றோம்.

4. மூவொரு கடவுளின் வெளிப்பாடு கிறிஸ்தவக் கோட்பாடுபற்றிப் பேசும்போது இந்த நற்செய்தி பகுதி முக்கியத்தும் வாய்ந்ததாக இருக்கின்றது. இங்கு மூவொரு இறைவன் ஒருசேர வெளிப்படுத்தப்படுகின்றார். இரண்டாம் ஆளாகிய மகன் தன் பணி வாழ்வின் தொடக்கமாகத் திருமுழுக்குப் பெறுகின்றார்.கடவுளின் ஆவி புறா இறங்குவதுபோல இயேசுவின் மீது இறங்கி வருகின்றார் (வச 16), தந்தையாம் இறைவன் 'வானம் திறக்கப்படுதல், (வச 16), வானத்திலிருந்து ஒரு குரல் (வச 17) எனத் தன்னை வெளிப்படுத்துகின்றார். மத்தேயு நற்செய்தியில் 'வானம்' என்பது இறைவனை குறிக்கும் இடவாகு பெயர் என்பது நாம் அறிந்ததே. எனவே நமது இறை நம்பிக்கையின் அடிநாதமான மூவொரு இறைவன் இந்நிகழ்வில் நமக்கு வெளிப்படுத்துகிறார்.

நமது திருமுழுக்கில் நமது கிறிஸ்தவ வாழ்வைத் தொடங்கிய நாம், நமது நம்பிக்கையில் ஆழம்பெற்று, இறைவன் ‘பூரிப்படையும்' (வச 17) விதத்தில் நமது கிறிஸ்தவ வாழ்வை வாழ முயல்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஆண்டவரின் திருமுழுக்கு

முதல் வாசகம் : எசா 42 : 1-4 6-7

இரண்டாம் எசாயா எழுதிய ஆறுதல் மொழிகளில் (எசா 40-55) நான்கு முறை “ஆண்டவரின் ஊழியனைப்" பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன (42:1-9, 49: 1-6, 50: 4-11, 52: 13-53 : 12). உரிப்பொருளிலே இவை இஸ்ரயேலையோ வேறொரு நபரையோ (எரேமியா, மோசே முதலியோர்) சுட்டலாம். நிறைவுப் பொருளில் இவை இயேசுவுக்குப் பொருந்தி அமையும். இயேசுவின் திருமுழுக்கு நாளைக் கொண்டாடும் இன்று, முதல் வாசகம் ஏற்றதாய் அமைகிறது.

இயேசுவின்மேல் ஆவியார் தங்குகிறார்

இறைவாக்கினருக்கு அளிக்கப்பட்ட ஆவியார் (112) திருமுழுக்கின்போது இயேசுவின் மேல் இறங்கி வருகிறார் (மத் 3 : 16) "மெசியா”வின் காலம் தொடங்கிவிட்டது என்பதற்கு அறிகுறி இது (யோவே 3: 1-5; திப 2: 16-21). நம்முடைய திருமுழுக்கின் வழி நாமும் ஆவியாரைப் பெற்றுள்ளோம். நாமும் இறைவனுக்குச் சாட்சியம் பகரத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். ஆவியாரைப் பெற்ற இயேசு ஆவியாரின் உந்துதலுக்குக் கீழ்ப்பட்டு வாழ்ந்தது போல நமது வாழ்வும் ஆவியாருக்கு, அவரின் உந்துதல்களுக்கு, மதிப்பீடுகளுக்கு இசைந்த வாழ்வாயமைய வேண்டும்.

இயேசு கடவுளின் ஊழியன்

கடவுளுடைய செயல்களிலே அவர் கண்ணும் கருத்துமாயிருக்கிறார். கடவுள் அவருக்கு அளித்த பணியைச் செய்து முடிப்பதே அவரது உணவாய் இருக்கிறது (யோவா 4: 34). "நீர் எனக்குச் செய்யக் கொடுத்த பணியைச் செய்து முடித்து, நான் உம்மை உலகில் மகிமைப்படுத்தினேன்” (யோவா 17:4). பிறரிடமிருந்து பணி பெறுவது எளிது, ஆனால் பிறருக்குப் பணிபுரிவது மிக அரிது. எனினும் ஊழியனின் கடமை பணிபுரிவதே என்பதை, "மனுமகன் பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவும், பலருடைய மீட்புக்கு விலையாகத் தம் உயிரை அளிக்கவும் வந்தார்" (மாற் 10: 45, யோவா 13:1-16) என்கிறார் இயேசு. நாம் அனைவரும் இயேசுவுக்கும், இயேசுவிலே பிறருக்கும் ஊழியம் புரிய அழைக்கப்பட்டிருக்கிறோம். "நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுங்கள்” (யோவா 13:15, எபே 5:2, பிலிப் 2:5-8) என்னும் இயேசுவின் சொற்கள் நம் அனைவருக்கும் பொருந்தும். நம்மில் பெரியவர்களும் சிறியவர்களும், தலைவர்களும், அவர்களுக்குக் கீழிருப்பவர்களும், எல்லோரும் பின்பற்ற வேண்டிய கடமை ஊழியச் செயல். எனவே பிறருக்கு, சிறப்பாக ஏழை எளியவருக்கும் ஒடுக்கப்பட்டோர் நசுக்கப்பட்டோருக்கும் நாம் செய்யும் சிறிய பணியையும் இறைவனுக்கே செய்யும் பணியாய்க் கருதி (மத் 25 : 31-46) செயல்படுவோமாக.

இயேசு மக்களினத்தாருக்கு ஒளியாயிருக்கிறார்

“இருளிலும் இறப்பின் நிழலிலும் இருப்போருக்கும்" ஒளியாய் (லூக் 1:79) இருக்கிறார். அவருடைய ஒளியிலே பார்வையற்றோர் காண்கின்றனர், கட்டுண்டவர் விடுதலையடைகின்றனர்; அனைவருக்கும் நற்செய்தி அறிவிக்கப்படுகிறது (லூக் 4:18-19, எசா 42:6-7, 1:1-2). அவருடைய முக்கிய பணி "மக்களினங்களுக்கு நீதி வழங்குவது" (42: 1-2). நீதியின் இறைவாக்கினர் இயேசு நம்மையும் "நீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்டோராக" மாற்ற வேண்டிக்கொள்வோம் (மத் 5: 6). மக்களிடையே நீதி செழிக்க, அநீதி ஒழிய வேண்டுவோம். அதற்காக நம்மாலான முயற்சிகளையும் செய்வோம்.

அவர்மேல் நம் ஆவியைத் தங்கச் செய்தோம்.

இரண்டாம் வாசகம் : திப 10:34-38

கொர்னேலியுவின் வீட்டில் குடியிருந்தவர்களுக்கு, பேதுரு கொடுத்த அருளுரை, ஆண்டவரின் திருமுழுக்குத் திருநாளான இன்று வாசகமாயமைகிறது. யோவானிடம் திருமுழுக்குப் பெற்ற இயேசு (மத் 3: 13-17) எம்முறையில் இறைவனின் திட்டத்தை நிறைவேற்றுகிறார் என்பது வாசகத்தின் கருத்து.

தூய ஆவியாரால் இயேசு நிரப்பப்படுகிறார்

"ஆண்டவரின் ஆவி என்மேலே. ஏனெனில் ஆண்டவர் என்னை அருள்பொழிவு செய்துள்ளார்" (எசா 61: 1, மத் 13 : 16). அந்த ஆவியாரே இயேசுவின் நற்செய்திப் பணிக்கு வேண்டிய சக்தியும் வல்லமையும் அளிக்கிறார். அந்த ஆவியாரின் சக்தியாலேதான் இயேசு “ஒடுக்கப் பட்டோருக்கு உரிமை வாழ்வு வழங்க, ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை அறிவிக்க” முடிகிறது (லூக் 4: 18-19). "உன்னதத்திலிருந்து வரும் இவ்வல்லமையை” (லூக் 24: 49, திப 1: 8) நாமும் திருமுழுக்கு வழிப் பெற்றுள்ளோம். இயேசுவை, பவுல் அடியாரை மற்றும் திருத்தூதர்களைத் தம் வல்லமையால் நடத்திய ஆவியார் நம்மில் செயல்பட வேண்டும்.

நாமும் அதே ஆவியாரால் நிரப்பப்பட்டுள்ளோம்

ஏழை எளியவருக்கு, நோய் நோக்காடுகளால் துன்புறுவோருக்கு, நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு நைந்து கொண்டிருப்போருக்கு, அநாதைகளுக்கு, விதவைகளுக்கு, இன்னும் இவர்கள் போன்று வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராடிக்கொண்டிருக்கும் பலருக்கும் வாழ்வளிக்கும் போதுதான் நாம் உண்மையாகவே நமது திருமுழுக்கின் முழுப்பொருளையும் அறிந்தவர்களாவோம்; ஆவியாரின் உந்துதலுக்குச் செவி மடுத்தவர்களாவோம்.

அந்த ஆவியாரால் செயல்படுவோம்

அதே வேளையில், "யான் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்” என்ற முறையிலே நம் திருமுழுக்கு நம்மிலே செயல்பட வேண்டும். சாதி, மதம், குலம் கோத்திரம், பிறப்பு, பணம், தோல் நிறம் ஆகியவற்றின் அடிப்படையிலே இறைவன் செயல்படுவது கிடையாது. "அவர் ஒருதலைச் சார்பாய் இருப்பவரல்லர், கையூட்டு வாங்குபவருமல்லர். அவர் அனாதைப் பிள்ளைக்கும் விதவைக்கும் நீதி நியாயம் வழங்குபவரும், அந்நியரை நேசித்து அவர்களுக்கு உணவும் உடையும் தந்தருள்பவருமாயிருக்கிறார்" (இச 10: 17-18). ஆளைப் பார்த்து அவர் செயலாற்றுவதில்லை (கலா 2: 11). இத்தகைய ஒரு பொதுமைத்தன்மை திருமுழுக்குப் பெற்ற நம்மிடம் முன்னணியில் இருக்க வேண்டும். "ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை சாதியில்" என்பதை உணர்ந்து நற்செய்தி மதிப்பீடு களுக்கேற்ப நம்முடைய நடத்தையைச் சீர்திருத்தி அமைக்க வேண்டும்.

கடவுளுக்குப் பணிந்த வாழ்வு (திப 10 : 2) பிறரைப் பொறுத்தமட்டிலே நீதி வழுவாத வாழ்வு, அன்பு தழுவிய வாழ்வு, உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் ஆழ்ந்த விசுவாச வாழ்வு (திப 15: 9). இவையே நம் திருமுழுக்குக்குப் பொருள் தருவன. இத்தகைய வாழ்வே நம்மைக் கடவுளுக்கு உகந்தவர்களாகவும் மக்களின் மதிப்புக்கு உரியவர்களாகவும் (உரோ 1418) மாற்றக் கூடியது. இயேசுவின் திருமுழுக்கை நினைவுபடுத்தும் நாம், நம்முடைய திருமுழுக்கின் உரிமைகளையும் கடமைகளையும் உணர்ந்து, ஆவியாரின் அருள்பொழிவுக்கு ஏற்ப அன்பு தழுவிய வாழ்வை மேற்கொள்வோம்.

மனிதர்களிடையே கடவுள் வேற்றுமை பாராட்டுவதில்லை.

நற்செய்தி: மத் 3:13-17

நமதாண்டவர் யோவானிடம் திருமுழுக்குப் பெற, கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார். உலகிலே உள்ள புனித நதிகளில் மிகச் சிறந்தது யோர்தான் ஆகும். இஸ்ரயேல் இனம் இதைக் கடந்துதான் பாலஸ்தீனாவில் குடியேறியது; இதில் மூழ்கி எழுந்ததால்தான் அனல் கக்கும் தேரில் எலியா அற்புதமாக விண்ணகம் சென்றார். அனைத்திற்கும் மேலாக இந்த ஆற்றில்தான் தெய்வத் திருமகன் திருமுழுக்குப் பெற்றார். இந்நிகழ்ச்சியே இன்றைய நற்செய்தி.

இயேசு இறைத்திட்டத்திற்குப் பணிந்தார்

ஆற்றிலே மூழ்கித் திருமுழுக்குப் பெற்றுத் தம் பாவங்களைக் கழுவக் காத்துநின்ற பல பாவிகளுடன் இயேசுவும் நின்றார். "என்னில் பாவம் உண்டென உங்களுள் யார் எண்பிக்கக்கூடும்?" (யோவா 8: 46) என்று யூதர்களைப் பார்த்துச் சவால்விட்ட இயேசு, யோவானை அணுகித் திருமுழுக்கு கேட்டார். யோவானோ "நானே உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியிருக்க நீரா என்னிடம் வருவது?" என்று சொல்லி அவரைத் தடுக்கப் பார்த்தார்" (3: 14). யோவானின் திருமுழுக்கை ஆயக்காரர்கள் பெற்றனர். பரிசேயரும் சட்டவல்லுநரும் இது தங்களுக்குத் தேவை இல்லையென எண்ணினர். கடவுளின் திட்டத்தைத் தங்களைப் பொருத்தமட்டில் வீணாக்கியவர்கள் இவர்கள் (லூக் 7: 29-30). இயேசுவோ கடவுளின் திட்டத்திற்குப் பணிந்து திருமுழுக்கு பெற்றார். திருமுழுக்கு யோவானின் பணிவு போற்றுதற்குரியதுதான். ஆனால் இயேசுவின் பணிவும் தாழ்ச்சியும் அளவற்றது. இயேசு தன்னையே பாவிகளின் பட்டியலில் சேர்த்துக் கொண்டார். அனைத்துலக பாவத்தையும் சுமந்து கொண்டு, அவற்றைக் கழுவி நம்மைத் தூய்மையாக்குகிறார். "கிறிஸ்துவுக்குள் நாமும் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகுமாறு, பாவமே அறியாத அவரை நமக்காகப் பாவ உருவாக்கினார்" (2 கொரி 5:21).

"ஆண்டவருடைய ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத் திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப் பற்றிய அச்ச உணர்வு இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்"-
(எசா 11:2)

என்ற எசாயாவின் இறைவாக்கை யோவான் அறிந்திருந்தார். எனவேதான் இத்திருமுழுக்கு யோவான், "தூய ஆவியார் புறாவைப் போல் வானிலிருந்து இறங்கி இவர்மீது இருந்ததைக் கண்டேன். இவர் யார் என்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் 'தூய ஆவியார் இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியாரால் திருமுழுக்குக் கொடுப்பவர்' என்று என்னிடம் சொல்லியிருந்தார். நானும் கண்டேன். இவரே இறைமகன் எனச் சான்று கூறிவருகிறேன்" (யோவா 1:32-34).

ஆவியாரில் நானும் புதுவாழ்வுக்கு அழைக்கப்படுகிறேன்

உலகப் படைப்பில் நீரின் மீது அசைந்தாடிய ஆவி (தொநூ 1:2) ஆண்டவரின் திருமுழுக்கு வேளையில் தோன்றுகிறார். அன்று, முதல் படைப்பு; இன்று புதுப் படைப்பு. புதுயுகத்தின் ஆரம்பம். இன்று இயேசு, மெசியா பணிக்கு கடவுளின் ஊழியராக அருள்பொழிவு செய்யப்படுகிறார். கடவுள் அவருக்கு பரிசுத்த ஆவியாரின் வல்லமையை அளித்து அருள்பொழிவு செய்தார் (திப 10:38). இந்த ஆவியே அவரை அவரது பணியில் வழிநடத்திச் செல்வார் (மத் 4:1; லூக் 4:14-18; 10:21). திருமுழுக்கு வேளையில் இறங்கி வந்த ஆவியார், தண்ணீரைப் புனிதப் படுத்தி, திருவருட்சாதனத்தின் தொடக்கமாக இருந்தாரெனத் திருத்தந்தையர் கூறுகின்றார். திருமுழுக்கிலே நானும் அருள்பொழிவு செய்யப்படுகிறேன்: புதுவாழ்வு தொடங்க வேண்டும். அது புனித வாழ்வாக வேண்டும்.

கடவுளின் ஆவியானவர் புறாவைப் போல் தம்மீது இறங்கி வருவதைக் கண்டார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நம் பணிகளால் கடவுள் பூரிக்கட்டும்

அருள்பணி. K.J. பிரவின் ராஜ்

கிறிஸ்துவ வாழ்வில் திருமுழுக்கு என்பது ஏழு அருள் அடையாளங்களுள் ஒன்று. அதிலும் 3 கிறிஸ்துவப் புகுமுக அருள் அடையாளங்களுள் (திருமுழுக்கு, உறுதிப்பூசுதல், நற்கருணை) முதன்மையானது. கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாது, ஏறத்தாழ எல்லாக் கிறிஸ்துவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. நமது கிறிஸ்தவ வாழ்வைத் தொடங்கி வைக்கும் அருள் அடையாளம். மற்ற எல்லா அருள் அடையாளங்களையும் பெற்றுக் கொள்ள உதவும் கிறிஸ்துவ வாழ்வின் வாசல். கிறிஸ்துவர்களின் வாழ்வில் மட்டுமன்று, கிறிஸ்துவின் வாழ்விலும் திருமுழுக்கு என்பது ஒரு திருப்புமுனையான நேரம். இயேசுவின் திருமுழுக்கின் முக்கியத்துவத்தை நான்கு நிலைகளில் பார்க்கலாம்.

  • 1. இது மூவொரு கடவுள் தம்மை வெளிப்படுத்திய நேரம்: இயேசுவின் திருமுழுக்கில் தந்தை, மகன், தூய ஆவியாராகிய கடவுள் இணைந்து வெளிப்பட்டார்.
  • 2. இது இயேசுவுக்குக் கடவுள் தந்த ஏற்பிசைவின் நேரம்: தன் அன்பார்ந்த மகன் எனக் கடவுளே அறிக்கையிடுகின்றார். தூய ஆவியாரால் நிரப்பப்படுகின்றார்.
  • 3. இது இயேசு மக்களோடு தன்னை ஒன்றிணைத்த நேரம்: யோவான் அறிவித்த திருமுழுக்கு, பாவத்திலிருந்து மனம்மாறுவதன் அடையாளம். எப்பாவமும் இல்லாத இயேசு, பாவமுற்ற மனிதரோடு தன்னை ஒன்றிணைத்து, மனுக்குலத்தின் பாவங்களைத் தன்மீது சுமந்து திருமுழுக்குப் பெறுகின்றார்.
  • 4. இது இயேசுவின் பணிவாழ்வுத் தொடக்க நேரம்: திருமுழுக்கில் இயேசு பெற்றுக் கொண்ட “அப்பா” அனுபவம்தான் அவரது பணிவாழ்வைத் தொடங்க அவர் பெற்றுக்கொண்ட உந்து சக்தி.

“வரலாற்றில் வாழ்ந்த நாசரேத்து இயேசுவின் ஒட்டுமொத்த அடையாளம் அவர் ஓர் இறையாட்சிப் பணியாளர் என்பதே” என்கிறார் இறையிலாளர் ஜோஸ் ஆன்டனி பகோலா. இறையாட்சிப் பணி செய்வதைத் தன் முழுமூச்சாகக் கொண்டிருந்தவர் அவர். எனவேதான், யோவான் கைது செய்யப்பட்டதும், பணி செய்யப் புறப்படுகின்றார் (மாற் 1:14). தன் மனித வாழ்வின் நிறைவை உணர்ந்து, தனக்குப் பின் பணி செய்யச் சீடர்களைத் தேர்வுசெய்கின்றார்.

இயேசுவுக்கு மட்டுமன்று, நமக்கும் திருமுழுக்கு பணிவாழ்வின் தொடக்கமே. திருமுழுக்கின் வழியாக "அப்பா" அனுபவம் பெற்றுள்ள நாமும் பணியாற்றப் புறப்பட வேண்டும். திருமுழுக்கின் வழியாக நாம் மேற்கோள்ளும் பணிகளில் 3 முக்கிய அம்சங்கள் இடம்பெறல் வேண்டும். அவை
1. குணமாக்குதல்,
2. உயர்த்துதல்,
3. விடுவித்தல்.

இப்பணிப் பண்புகளை ஒவ்வொரு கிறிஸ்துவரும் மனம் சுமந்து களம் இறங்கக் கடமைப்பட்டுள்ளனர். மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல “போர்க்களத்தில் நிறுவப்பட்டுள்ள ஒரு மருத்துவமனைபோலத் திரு அவை இயங்க வேண்டும். திரு அவையின் குணப்படுத்தும் பணிக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை மிகப் பெரிது." திருப்பலி முடிவில் 'சென்று வாருங்கள்' என்று அருள்பணியாளர் சொல்கின்ற வார்த்தைகள், நாம் இறையாட்சிப் பணிசெய்ய நமக்குத் தரப்படுகின்ற அழைப்பு” என்கின்றது இரண்டாம் வத்திக்கான் சங்கம். இதனை உணர்ந்து செயல்படும்போதுதான் நாம் பெற்றுக்கொண்ட திருமுழுக்கு பொருள் பெறும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு