மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு
3-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:- எரேமியா 33: 14-16|1 தெசலோனிக்கர் 3: 12-4: 2 |லூக்கா 21: 25-28, 34-36

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


+

மீட்பு நெருங்கி வருகிறது.

நடுக்கடலில் பாய்மரக் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்த போது, திடீர் என்று சூறாவளி... கப்பல் திக்குமுக்காடுகிறது .... திசைமாறுகிறது. இறுதியில் ஒரு பாறை மீது மோதி நொறுங்குகிறது. நம்பிக்கையுள்ள, விழிப்புள்ள ஒருவன் மட்டும் தப்பிப் பிழைக்கிறான். ஒரு மரத்துண்டைப் பற்றிக் கொண்டு நீந்திக் கரையேறுகிறான். ஒரு சிறிய தீவு அவன் கண்ணில் பட்டது. பரவாயில்லை கடவுள் காப்பாத்திட்டார் என்று சந்தோஷப்பட்டான். அவன் கரையேறிய தீவில் எந்த மனிதனும் இல்லை . கிடைத்த இலை தழைகளைக் கொண்டு ஒரு குடிசையை உருவாக்கினான். அங்கே கிடைத்ததை உண்டான். சொந்த இடத்தை அடைவோம் என்ற நம்பிக்கை அவனில் நிலையாக இருந்தது. ஒரு நாள் வெளியே சென்றபோது அந்த குடிசை தீப்பற்றி எரிந்தது. மூங்கில்களின் உராய்வினால் ஏற்பட்ட தீயால் குடிசை சாம்பலானது. சற்று நேரத்தில் நாலைந்து பேர் அங்கே வந்தார்கள். நாங்கள் மீன் பிடிக்க, படகிலே இந்த பக்கமா வந்துகிட்டிருந்தோம். இந்த தீவிலே புகை தெரிந்தது. யாரோ இருக்காங்க, பார்க்கலாம்னு வந்தோம். அப்போது அவன், எனது நம்பிக்கையும், விழிப்பும் வீண் போகவில்லை என்று கடவுளுக்கு நன்றி கூறினான்.

பல்லாண்டு காலமாகக் காத்திருந்த இஸ்ரயேல் மக்களின் கனவு நனவாக தாவீதின் தளிராக இயேசு இம்மண்ணில் உதயமானார். காத்திருத்தல் என்பது கனவு கண்டு கொண்டிருப்பது அல்ல. நம்பிக்கையோடு நமது கடமைகளை, விழிப்போடு நிறைவேற்றிக் கொண்டிருப்பதாகும். மரத்தின் ஆணிவேர் உறுதியாக இருந்தால், அந்த மரம், பல ஆண்டுகள் நிலைத்திருக்கும். எந்த அளவுக்கு நம்பிக்கையோடும், விழிப்போடும், காத்திருக்கிறோமோ, அந்த அளவுக்கு மனுமகனோடு இறையரசில் சேர தகுதி பெறுவோம். நாளும் நேரமும் நமக்குத் தெரியாது (மத். 24:36 - 44). ஆனால் நம்பிக்கையோடு இருப்போர் வரவேற்கப்படும் தகுதியைப் பெறுவார்கள். மனுமகனைத் தரிசிப்பார்கள் (மத். 25:10).

முதல் வாசகத்தில் யூதா விடுதலைப் பெறும், எருசலேம் விடுதலையோடும், பாதுகாப்போடும் வாழும் (எரே. 33:16) என்ற வார்த்தைகள் நம்பிக்கை கொடுத்து, வாழ்வு கொடுத்தது, விடுதலை தந்தது. நம் ஆண்டவர் இயேசு நம் தந்தையாம் கடவுளின் முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக (1 தெச. 3:13) என்று புனித பவுல் வாழ்த்துகிறார். நம்பிக்கையோடும், விழிப்போடும் நிலைத்திருப்பவர்களுக்கு மீட்பு நெருங்கி வருகிறது. இதற்கு இயேசு கூறும் வழிமுறை , உங்கள் உள்ளம் குடிவெறியிலும் களியாட்டத்திலும் மந்தமடையாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள் (லூக். 21:34-35) என்பதே.

ஒரு முனிவர் தனது சீடனிடம் கடவுளின் ஞானம் உன்னிலே மாற்றத்தை தருகிறதா...? என்றார். சீடர், நான் கடவுளைப்போல மாறவில்லை என்றார். முனிவர், நீ ஒரு புனிதனாக மாறியிருக்கிறாயா...? என்று கேட்டார். சீடன், இல்லை , நம்பிக்கையுள்ளவனாக மாற முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன் என்றான். முனிவர், பின் எதற்கு இருக்கிறாய் இங்கு ? சீடன், நான் விழிப்புடன் வாழக் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்றான். விழிப்பு என்பது விழிகளைத் திறந்து வைத்திருப்பது மட்டுமல்ல. ஒரு மனிதனுடைய எண்ணங்கள், சிந்தனைகள், செயல்பாடுகள் எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதே முக்கியம். இன்றையச் சூழலில் மனிதன் சுய சிந்தனையை இழந்து, தீமையைக் கூட நன்மையானது என்று நினைக்கிறான். அவனின் ஆன்மீக வாழ்வும், தேக்க நிலையாகவே உள்ளது. பாவம் பற்றிய பயமும், மனசாட்சியைப் பற்றிய அக்கறையும் இருப்பதில்லை . இப்படிப்பட்ட சூழலில் வாழும் மனிதனை, விழிப்போடு வாழ இன்றைய நாள் வழிபாடு அழைக்கின்றது.

கிறிஸ்து எங்கோ இருக்கிறார் என்று எண்ணி அவரது வருகைக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக நமக்குள்ளே, நம்மோடு நம்மில் ஒருவராக இருக்கிறார் என்பதை உணர்வோம். ஆனால் நாம் தேடும் கிறிஸ்து நம்மில் குடிகொள்ளாமல் போகத் தடையாக இருப்பது குடிவெறி, களியாட்டம். இவைகள் நமக்குள் இருக்கும் கிறிஸ்துவையும், அவரின் சாயலையும் சிதைத்துவிடுகிறது.

சிந்தனைக்கு
வேலைக்காரச் சிறுவனிடம் ஆற்றுக்குச் சென்று இந்தப் பானையில் தண்ணீர் கொண்டு வா , தவறுதலாகக் கீழே போட்டு உடைத்தால், கடுந்தண்டனை கிடைக்கும் என்று சொல்லி அவன் தலையில் ஓங்கி கொட்டினார் முல்லா. இதைக் கண்ட நண்பர் பானையை உடைக்கும் முன்பே ஏன் அடித்தீர் என்று கேட்க பானை உடைந்தப் பின் தண்டித்து என்ன பயன்? பானையும் உடைந்து, தண்ணீரும் வீணாகிப் போன பின், தண்டித்து ஒரு பயனும் இல்லை. முன்னரே தண்டித்தால், பயத்துடன், கவனத்துடன், விழிப்பாக இருந்து பானையை உடைக்காமல் தண்ணீரோடு கொண்டு வந்து சேர்ப்பான் என்றார் முல்லா.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கிறிஸ்து பிறக்கும்போது அவர் நம்மிடம் என்ன கேட்பார்?
இது திருவருகைக் காலம்!
நம்மைத் தேடி வரும் இயேசு நமக்கு அருளைத் தருவாரா?
பொருளைத் தருவாரா?
உடல் நலத்தைத் தருவாரா?
உள்ள அமைதியைத் தருவாரா?
உண்ண உணவைத் தருவாரா?
உடுக்க உடையைத் தருவாரா?
இருக்க இடத்தைத் தருவாரா?
இறைவாக்கினர் எரேமியா போல் நீதியைத் தருவாரா?

அவர் கேட்கப்போகும் கேள்விக்கு நாம் சரியான பதிலைச் சொன்னால் நாம் கேட்பதை அவர் நமக்குத் தருவார்!
பதில்களிலே இரண்டு வகையான பதில்கள் உள்ளன! ஒன்று சரியான பதில் ; மற்றொன்று தவறான பதில்!
ஓர் ஆசிரியர் மாணவனைப் பார்த்து, எத்தனைக் கடவுள் இருக்கின்றார்? என்றார். அந்த மாணவனோ, ஒரே கடவுள் என்றான்.
அவர் எங்கே இருக்கின்றார்? என்றார் ஆசிரியர். மாணவனோ, எங்கும் இருக்கின்றார் என்றான். இன்னொரு கடவுள் இருக்கமுடியாதா? என்றார் ஆசிரியர்.
ஒரு கடவுள்தான் எல்லா இடங்களிலும் இருக்கின்றாரே! இரண்டாவது கடவுள் இருக்க எங்கே இடமிருக்கும்? என அந்த மாணவன் கேட்டான்! ஒரு கேள்விக்கு ஒரு கேள்வியால் அந்த மாணவன் பதில் சொன்னான்.
இது சரியான பதில்!
தவறான பதிலுக்கு ஓர் உதாரணம்!
ஓர் ஆசிரியை!
அவருக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் ஒரு மாணவனைப் பார்த்து, நீ தேறவே மாட்டே என்றார். உங்க கிளாசிலே இருக்கும் வரை நான் எப்படித் தேறுவேன்? என்றான் மாணவன். இது தவறான பதில்!
நாம் இயேசுவுக்குத் தவறான பதிலை அல்ல சரியான பதிலைத் தந்து நாம் கேட்கும் வரங்களை இயேசுவிடமிருந்து பெற்று பெருவாழ்வு வாழலாம்.
கிறிஸ்துமஸ் நாளன்று நம்மைப் பார்த்து இயேசு என்ன கேள்வி கேட்பார்?
இன்று குழந்தை இயேசுவாகிய என்னைத் தொட்டுத் தொட்டு கும்பிடுகின்றீர்களே! மண்ணுக்குள் நான் இருப்பதாக நம்பி தொட்டுக்கும்பிடும் நீங்கள், மண்ணைவிட உயர்ந்த கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களுக்குள் நான் இருக்கின்றேன் என்பதை நம்பி திருவருகைக் காலத்தில் அவர்களைத் தொட்டு வணங்கினீர்களா ? என்று கேட்பார்.
பொழுது விடிந்ததும் மனைவி கணவரே கண்கண்ட தெய்வம் எனச் சொல்லி அவரைத் தொட்டு வணங்கவேண்டும். கணவரோ, மனைவி கொடுக்கின்ற உணவை உண்டு, அவருடைய திருக் கைகளைப் பற்றிப் பிடித்துக்கொண்டு இந்தக் கைகளால்தானே இப்படிப்பட்ட சுவையான உணவைப் படைத்தாய் எனச் சொல்லி அவரது கைகளை முத்தமிட வேண்டும்.
பேரனும், பேத்தியும், போட்டி போட்டுக்கொண்டு, தாத்தா பாட்டியின் கண்ணங்களிலே முத்தமிட வேண்டும்.
இன்றைய இரண்டாவது வாசகத்தில் புனித பவுலடிகளார் கூறுவது போல அன்பு நமது இல்லங்களையும், உள்ளங்களையும் ஆட்சி செலுத்தவேண்டும். நாம் ஒருவரையொருவர் மதிப்போடும், மரியாதையோடும் நடத்த வேண்டும். மனிதனை மனிதனாக மதிக்கவேண்டும். இந்தத் திருவருகைக் காலத்தில் மனிதநேயம் நமக்குள் வளரவேண்டும்.
அண்மையிலே புதுக்கவிதை ஒன்றைப் படித்தேன்.
ரோஜா சொல்கின்றது!
என் செடியிலிருந்த முள்கள் என்னைக் காப்பாற்றும் என நினைத்தேன்!
அவைகளால் என்னைக் காப்பாற்ற முடியவில்லை!
ஆகவே நான் முள்ளாக மாறிவிட்டேன்.
இந்த உலகில் எந்த ரோஜாவும் முள்ளாக மாறக்கூடாது! ஒருவரையொருவர் மதிப்போடும், மரியாதையோடும் நடத்தி, பெற்றோரும், குழந்தைகளும், தலைவர்களும், சீடர்களும், நீங்களும், நானும் ஒருவரையொருவர் போட்டிப் போட்டுக்கொண்டு அன்பு செய்வோம். இன்றைய நற்செய்தி கூறுவதுபோல அன்பு செய்வதில் எல்லாரும் விழிப்பாயிருப்போம்! அப்போது நாம் தேடும் புதுவாழ்வை, புத்துயிரை பிறக்கப் போகும் குழந்தை இயேசு நமக்களித்து நம்மை வாழ்வாங்கு வாழவைப்பார்.
மேலும் அறிவோம் :

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் (குறள் : 91).
பொருள் :

அன்பு கலந்து, வஞ்சகம் எதுவுமின்றி மெய்ப்பொருளாம் அறம் உணர்ந்த பெருமக்கள் வாயிலிருந்து வருவதே இனிய சொல் ஆகும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய முக்காலங்களைப் பற்றி விளக்கியபின் தமிழ் ஆசிரியர் மாணவர்களிடம், "நாளை மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள். இது என்ன காலம்?" என்று கேட்டதற்கு மாணவர்கள், "சார்! இது எங்கள் போதாத காலம்" என்று பதிலுரைத்தனர். உண்மையில் நம்மில் பலருக்குப் போதாத காலம். தனி வாழ்விலும், குடும்ப வாழ்விலும், பொது வாழ்விலும் பல்வேறு பிரச்சினைகள் நம்மைக் கசக்கிப் பிழிந்தெடுக்கின்றன. நிம்மதியாக இருப்பவர் இரண்டே பேர், "ஒருவர் இன்னும் பிறக்கவில்லை ; மற்றவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். " உயிருடன் இருப்பவர்களுக்கெல்லாம் போதாத காலம். மனிதர் மட்டுமல்ல, இயற்கை அனைத்தும் பேறுகால வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது (உரோ 8:22-23).

இப்போதாத காலத்தில் திருச்சபை இன்று திருவருகைக் காலத்தைத் தொடங்குகிறது. திருவருகைக் காலம் எதிர்பார்ப்பின் காலம், நம்பிக்கையின் காலம், திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கக் காலம். கிறிஸ்துவின் பிறப்புப் பெருவிழாவிற்காக நம்மைத் தயாரிக்கும் காலம்.

அன்று இஸ்ரயேல் மக்கள் கிறிஸ்துவின் முதல் வருகைக்காக வழிமேல் விழிவைத்து காத்துக் கொண்டிருந்தனர். மெசியா நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார் என்று ஏங்கினர் (முதல் வாசகம்). தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கினர் (இரண்டாம் வாசகம்).

உலக நாடுகளைச் சமாதானத்தில் ஒன்று சேர்க்க கிறிஸ்து வந்து, தமது சாவினாலும் உயிர்ப்பினாலும் வான்வீட்டின் கதவுகளத் திறந்து விட்டார். அவரது இறுதி வருகையின்போது நமக்கு நிறைவான மீட்பை அளிப்பார். ஆனால், நிகழ்காலத்தில் அருள்வாக்கு அருள் அடையாளங்கள்.

அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் ஆகியவற்றின் வாயிலாக அவர் வந்து கொண்டு இருக்கிறார்.

ஆடி மாதத்தில் ஏன் பலத்த காற்று வீசுகிறது? புதிதாக திருமணம் செய்த தம்பதியர்களை ஆடி மாதத்தில் பிரித்து விடுகின்றனர். இவ்வாறு பிரிக்கப்பட்டவர்கள் ஒருவர் மற்றவரை நினைத்து விடுகின்ற ஏக்கப் பெரு மூச்சு பலத்த காற்றாக வீசுகிறதாம்! அவ்வாறே, மண மகனாம் கிறிஸ்துவைப் பிரிந்த மணமகளாம் திருச்சபையும் அவரது இரண்டாவது வருகையை நினைத்து ஏக்கப் பெரூமூச்சு விடுகிறது. "மாரனாத்தா, ஆண்டவரே வருக" (1 கொரி 16:22): "ஆண்டவராகிய இயேசுவே வாரும்" (தி வெ 22:20) என்று திருச்சபை இயேசு கிறிஸ்துவைக் கூவி அழைக்கிறது. "எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையை மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கின்றோம்” என்று திருவழிபாட்டில் திருச்சபை உருக்கமாக மன்றாடுகிறது.

இயேசுவின் இரண்டாம் வருகை எப்போது நிகழும்? அந்த நாளும் வேளையும் எவருக்கும் தெரியாது (மத் 24:36), காலங்களையும் நேரங்களையும் அறிவது நமக்கு உரியது அல்ல (திப 1:7), இறுதி நாள்களில் இயற்கையில் பல்வேறு குழப்பங்களும் கொந்தளிப்பும் நிகழும் என்பதை முன்னறிவித்து, எப்போதும் விழிப்பாக இருந்து மன்றாடும்படி இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து அறிவுறுத்துகிறார். நாம் தூங்கக் கூடாது; நமக்கு விழிப்புணர்வு தேவை.

ஒரு மாணவன் தேர்வில் தூங்கிக் கொண்டிருந்தான். ஏன் அவன் தூங்குகிறான்? என்று அவனைக் கேட்டதற்கு, "தேர்வில் கேள்விகளுக்குப் பதில் தெரியவில்லை என்றால் முழிச்சிக்கிட்டு இருக்காதே" என்று அவர் அப்பா சொன்னாராம்.

வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாதவர்கள் அவற்றிலிருந்து தப்பி ஓடுகின்றனர். குடிவெறியிலும் களியாட்டத்திலும் ஈடுபடுகின்றனர், குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவர் திருப்பலியில் "அல்லேலூயா" என்று பாடுவதற்குப் பதிலாக, "கள்ளே லூயா, கள்ளேலூயா கள்ளேலூயா. பத்து ரூபாய்க்குக் கள் குடித்தேன். போதை வரவில்லை . மேலும் பத்து ரூபாய்க்குக் கள் குடி என்கிறார் ஆண்டவர்" என்று பாடினாராம்.

ஒரு பாம்பு சிறிது நேரத்திற்கு முன் ஒரு தவளையைப் பிடித்து வாயில் வைத்துக் கொண்டிருக்கிறது. அத்தவளையோ சற்று நேரத்திற்குமுன் ஒரு வண்டைப் பிடித்து தனது வாயில் வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வண்டோ சற்று நேரத்திற்கு முன் ஒரு பூவிலிருந்து சிறிது தேனை உறிஞ்சி வாயில் வைத்துக் கொண்டிருக்கிறது. அத்தவளை தனக்கு வரப்போகிற ஆபத்தை உணராது தனது வாயில் இருக்கும் வண்டைச் சுவைத்து மெய் மறந்த நிலையில் உள்ளது. அவ்வாறே, நாமும் நமக்கு வரவிருக்கிற பேரழிவை உணராது இவ்வுலக இன்பங்களைச் சுவைத்து நினைவிழந்த நிலையில் இருக்கிறோம். தொலைநோக்குடன் வாழ வேண்டியவர்கள் தொலைக் காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்து நமது முகவரியைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இவ்வுலக இன்பங்களைத் துய்ப்போர் அவற்றிலேயே மூழ்கி விடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறார் திருத்தூதர் பவுல் (1 கொரி 7:29-30).

"நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிட மகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும், எப்போதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்" (லூக் 21:36) என்று இன்றைய நற்செய்தியில் அறிவுறுத்துகிறார் நம் ஆண்டவர். நாம் செபிக்க வேண்டும், செபத்திற்கும் வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாம் எப்படி செபிக்கின்றோமோ அப்படியே வாழ்கிறோம். நாம் எப்படி வாழ்கின்றோமோ அப்படியே செபிக்கின்றோம். நன்றாக செபிக்கவில்லை என்றால், நாம் நன்றாக வாழவில்லை. நன்றாக வாழவில்லை என்றால் நாம் நன்றாகச் செபிக்கவில்லை.

ஒரு மருத்துவர் ஒரு நோயாளியை ஆறாவது படுக்கையிலிருந்து நூறாவது படுக்கைக்கு மாற்றினார். ஏன்? என்று கேட்டதற்கு, "ஆறிலும் சாவு, நூறிலும் சாவு" என்றார். ஆம், நாம் எப்போது சாவோம் என்பது நமக்குத் தெரியாது. எனவே நாம் எப்போதும் விழிப்பாக இருந்து செபிப்போம்.

ஆபத்து வருமுன் அதைத் தடுத்து நிறுத்தாதவருடைய வாழ்வு நெருப்பு முன் வைக்கோல் போல் எரிந்து சாம்பலாகவிடும் என்று அறிவுறுத்துகிறார் வள்ளுவர்.

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தாறு பேலக் கெடும் (குறள் 435)

பசித்திரு! தனித்திரு! விழித்திரு! செபித்திரு! இதுவே இத்திருவருகைக் காலம் முழுவதும் நம்மை நெறிப்படுத்தும் தாரக மந்திரமாக அமையட்டும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

காத்திரு

"சித்தார்த்தா” - ஆங்கில நாவல் இது. அதில் இப்படி ஒரு காட்சி. சித்தார்த்தா என்ற அந்த இளைஞன் ஒருத்தியைக் காதலிக்கிறான். அவள் எங்கே சென்றாலும் பின்னாலேயே சுற்றுகிறான். திடீரென்று ஒருநாள் தன்னைச் சுற்றித் திரியும் அவனைப் பார்த்து அவள் கேட்கிறாள்: "என்னைக் காதலிக்க உனக்கு என்ன அருகதை உண்டு?” ஒருகணம் அதிர்கிறான். "என்ன கேள்வி இது? என்றாலும் இதோ பதில்" என்று அவளைக் காதலிக்கத் தனக்கு உள்ள தகுதியைப் பட்டியலிடுகிறான்

. 1. என்னால் உன்னை நேசிக்க முடியும். I can love you. 2. என்னால் உன்னை நினைக்க முடியும். I can think of you,
3. எல்லாவற்றிற்கும் மேலாக என்னால் உனக்காகக் காத்திருக்க முடியும். Above all I can wait for you.
இறைவனை அன்பு செய்கிறேன் என்பதற்கான அடையாளங்களில் ஒன்று அவனுக்காகக் காத்திருத்தல். அன்பு இல்லையென்றால் காத்திருத்தல் எரிச்சலாக இருக்கும். அன்புடன் என்றால் அதில் ஒரு 'த்ரில்' இருக்கும். காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு. காக்க வைப்பதில் சுகம் உண்டு'.

நம் வாழ்வில் பெரும்பகுதி காத்திருக்கிறோம் - பயணத்தில் பஸ்ஸுக்காக, படுக்கையில் உறக்கத்துக்காக, வாசலில் நண்பனுக்காக, வரிசையில் (Q) திரைப்பட நுழைவுச் சீட்டுக்காக... இப்படி ஏதோ ஒன்றுக்காக, யாரோ ஒருவருக்காக.

ஆனால் இறைவனுக்காக எந்த அளவு, எவ்வளவு நேரம் காத்திருக்கிறோம்?

"ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப் போவதில்லை" என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்த (லூக்.2:26),

சிமியோன் எப்படியெல்லாம் இஸ்ராயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலுக்காகக் காத்திருந்தார்! “உமது மீட்பை என் கண்கள் கண்டு கொண்டன” என்ற அவரது உற்சாக வார்த்தைகளில் எத்துணை மகிழ்ச்சி, மன நிறைவு! மீட்பர் அரசியல் தலைவன் அல்ல துன்புறும் ஊழியன் என்ற உண்மையின் வெளிப்பாடு அல்லவா அன்றே அவர் கண்டது!
அன்னை மரியா எப்படியெல்லாம் காத்திருந்தாள்?

- மனிதர் அவளுக்கு வழங்கும் அடை மொழிகள் எத்தனை எத்தனை! விண்ணகத்தின் வாயிலே, விடியற்கால விண்மீனே, நீதியின் கண்ணாடியே, மறைபொருளின் ரோஜா மலரே இப்படியாக.
- கடவுள், தூதன் கபிரியேல் வழியாக வழங்கிய அடைமொழி அருள்மிகப் பெற்றவரே, இறையாசி நிறைந்தவரே என்பது.
- மரியா தனக்குத் தானே வழங்கிக் கொண்ட அடைமொழி: 'இதோ ஆண்டவருடைய அடிமை .
அடிமை என்பவன் யார்?
- தலைவனுக்காகக் காத்திருப்பவன். - தலைவனுக்குத் தன்னையே அர்ப்பணித்தவன். - தலைவனுக்கு அனைத்து வகையிலும், பணிவிடை புரிபவன் - தலைவனுக்குக்காகத் தன்னையே இழப்பவன்.

அடிமை என்ற சொல்லில் காத்திருத்தல் மட்டுமல்ல வெறுமையாக்குதலைப் பார்க்கிறோம்.

மனிதனோடு இணைய இறைவன் தன்னையே வெறுமையாக்கினார். (பிலிப்.2:7) இறைவனோடு இணைய மனிதன் தன்னையே வெறுமையாக்க வேண்டும். வெறுமையாக்குவது இறைவன் தன் அருளை, மீட்பை, நிறைவைப் பெற மிகவும் இன்றியமையாதது.

''உன் பாத்திரம் களிமண்ணால் நிறைந்திருந்தால் இறைவன் மாற்றும் பால் அதில் விழும் போது தெறித்துச் சிதறும். எவ்வளவுக்கு எவ்வளவு அது காலியாக, வெறுமையாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு இறைவன் ஊற்றும் பாலால் நிரம்பும்" என்ற சிலுவை அருளப்பரின் கூற்று திருவருகைக்காலச் சிந்தனைக்கு ஏற்றது.

அயர்லாந்து நாட்டில் ஒரு கிறிஸ்துமஸ் பழக்கம் உண்டு. கிறிஸ்து பிறப்பதற்கு முன்னிரவு வீட்டில் உள்ள கதவுகளையெல்லாம் திறந்து வைப்பார்கள். முன் கதவுக்கருகில் ஒரு மெழுகுதிரியை ஏற்றி வைப்பார்கள். பெத்லகேமில் அன்று இரவு மரியாவும் சூசையும் வீடுதேடி அலைந்ததன் நினைவாக அவர்களை வரவேற்க ஆயத்தமாக இருப்பது போல இப்பழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
திருவருகைக் காலத்தில் மீட்பரின் வருகைக்காக நமது இதயக் கதவு திறந்திருக்கிறதா? அருள்வாழ்வு என்னும் விளக்கு அங்கு ஒளிர்கிறதா? “இதோ நான் கதவருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால் நான் உள்ளே சென்று அவர்களோடு உணவருந்துவேன். அவர்களும் என்னோடு உணவருந்துவார்கள்” (தி.வெ.3:20) என்கிறார் ஆண்டவர்.
வர இருப்பவர் எரேமியா பார்வையில் நீதியின் தளிர். (எரே.33:15)
எசாயா பார்வையில் அமைதியின் ஊற்று. (எசா.9:6)

அந்த நீதியின் தளிர் செழித்து வளர, அந்த அமைதியின் ஊற்று சுரந்து பாய நம் வாழ்வில் “ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்”. (புலம்பல் 3:26)

"கலைமானைக் கண்ணியில் சிக்க வைத்துப் பிடிக்க முடியாது. ஏனெனில் அதற்குக் கூர்மையான பார்வை உண்டு. ஒரு பறவை விழிப்பாய் இருந்தால் வெகு எளிதில் வலையில் சிக்காமல் தப்பித்துக் கொள்ள முடியும். இவ்வாறு மிருகங்களெல்லாம் தங்களையே காத்துக் கொள்ள விழிப்பாய் இருக்கின்றபோது நீ மட்டும் ஏன் விழிப்புடன் இருப்பதில்லை ?" - புனித பசிலியார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

முடிவு தான் ஆரம்பம்

புத்தாண்டு வாழ்த்துக்கள்... இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கும் போதே நான் அவசரப்படுகிறேன் என்று நினைக்கிறீர்களா? திருச்சபை வழிபாட்டில் இந்த ஞாயிறு ஒரு புதிய ஆண்டை ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் திருவருகைக் காலம் ஒரு வழிபாட்டு ஆண்டை ஆரம்பித்து வைக்கிறது. திருவருகைக் காலம்... எதிர்பார்ப்பை உண்டாக்கும் காலம். பெரும்பாலும் ஆனந்தமான எண்ணங்களை உள்ளத்தில் விதைக்கும் காலம். எதிர்பார்ப்பு, தயாரிப்பு, வரவேற்பு என்று பல கோணங்களில் திருவருகைக்கால ஞாயிறு சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இன்றைய சிந்தனைக்கு... எதிர்பார்ப்பு. சின்ன வயதில் கிறிஸ்மஸ் விழாவுக்கு ஏற்பாடு செய்வதில் மிக, மிக ஆனந்தம் அடைந்ததுண்டு. வீட்டைச் சுத்தம் செய்வது, பலகாரம் செய்வது, குடில் ஜோடிப்பது, புத்தாடைகள் தைத்துக்கொள்வது என்று பல வகையிலும் வீட்டுல எல்லாரும் பிஸியாக இருப்பார்கள். இவ்வளவு தயாரிப்பிற்கு பிறகு வரும் கிறிஸ்மஸ் தினம்?... வந்ததும் தெரியாது; போனதும் தெரியாது. தீபாவளி, பொங்கல் என்று எல்லாத் திருவிழாக்களிலும் வீட்டு வைபவங்களிலும் இது போன்ற அனுபவம் எல்லாருக்கும் இருந்திருக்கும். நடக்கப்போகும் நிகழ்வைவிட, அதற்கான ஏற்பாடுகள், எதிர்பார்ப்புகள் எப்படி நம்மை இவ்வளவு தூரம் கவர்கின்றன? நல்லது ஒன்று நடக்கப் போகிறது, நல்லது ஒன்றில் பங்கேற்கப் போகிறோம் என்ற எண்ணம் இந்தத் துடிப்பை, ஆர்வத்தை உண்டாக்குகிறது. அந்த நல்லது நமக்கு நடந்தாலும் சரி, நம்மைச் சுற்றி நடந்தாலும் சரி... ஆனந்தம் ஆர்வம் ஒரே போல் இருக்கும்.

ஆனால் எல்லா எதிர்பார்ப்புகளும் ஆனந்தம், ஆர்வம் இவைகளைத் தருவதில்லையே. வாழ்க்கையில் பல எதிபார்ப்புகள் நம்மை ஆனந்தத்தில் ஆர்வத்தில் மிதக்க வைக்கின்றன. அப்படியே சில எதிர்பார்ப்புகள் நம்மை அச்சத்தில், ஆழ்ந்த துயரத்தில் மூழ்க வைத்து விடுகின்றன. எதிர்பார்ப்புகள் பறக்கவும் வைக்கும் பாதாளத்திலும் தள்ளும்.

நம் குடும்பத்தில் ஒரு குழந்தை பிறக்கப் போகும் நேரம், தேர்வின் முடிவுகளுக்காக காத்திருக்கும் நேரம், வேலைக்கான interview வை முடித்துவிட்டு appointment order கிடைக்குமா என்று காத்திருக்கும் நேரம்... இப்படி பல நேரங்களில் இந்த எதிர்பார்ப்புகளில் அச்சமும், ஆர்வமும் கலந்திருக்கும்.

இன்னும் சில எதிர்பார்ப்புகளில் வேதனைதான் அதிகம் இருக்கும். மருத்துவ பரிசோதனைகள் முடிந்து கேன்சர் என்றும் இன்னும் ஒரு சில மாதங்களே உயிருடன் இருக்க முடியும் என்றும் மருத்துவர் சொல்லும்போது, மீதம் உள்ள அந்த நாட்களில் அந்த நோயுள்ளவருக்கோ, அல்லது அவருக்கு நெருங்கியவர்களுக்கோ இருக்கும் மன நிலை? என்னவித எதிர்பார்ப்பு? மருத்துவ உலகு சொன்னதெல்லாம் பொய்த்து விடாதா என்ற ஒர் எதிர்பார்ப்பு அங்கு இருப்பதில்லையா? ஒரு சில சமயங்களில் மருத்துவ பரிசோதனைகள் ஏன் செய்தோம் என்று வருத்தப் பட்டிருகிறோம், தெரியாமலே இருந்திருக்கலாமே என்று ஏங்கியிருக்கிறோம்... ஒரு சில விஷயங்களில் எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் இருப்பது, ஒரு சில விஷயங்களில் முடிவுகளைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

முடிவுகள் தெரியாமல் நாவல்களைப் படிப்பதில், முடிவுகள் தெரியாமல் திரைப்படங்களைப் பார்ப்பதில் ஒரு தனி ஈடுபாடு வரும். ஆனால், முடிவைத் தெரிந்து கொண்டு நாவல்களைப் படிப்பதில்லையா? திரைப்படங்களைப் பார்ப்பதில்லையா? புகழ் பெற்ற எழுத்தாளர்களின் நாவல்களை மீண்டும் மீண்டும் படிக்கிறோமே, ஒரு சில மிகச் சிறந்த திரைப்படங்களை மீண்டும் மீண்டும் பார்க்கிறோம். அப்போதெல்லாம் முடிவுகளைத் தெரிந்து கொண்டு தானே படிக்கிறோம், பார்க்கிறோம்... அந்த அனுபவமே வித்தியாசமானது தானே.

Erich Segal என்பவர் எழுதி, பின்னர் ஒரு வெற்றித் திரைப்படமாக உருவான Love Story என்ற நாவலின் முதல் காட்சி கல்லறையில் ஆரம்பமாகும். இறந்த தன் இளம் மனைவியின் கல்லறையில் பூவைக்க வரும் அந்த இளைஞனுடன் கதை ஆரம்பமாகும்.

கதையின் ஆரம்பத்திலேயே முடிவு தெரிந்ததால், எந்த வித படபடப்போ, எதிர்பார்ப்போ இல்லாமல் ஒரு கவிதை படித்த அல்லது பார்த்த திருப்தி எனக்கு ஏற்பட்டது. இரு வாரங்களுக்கு முன், ஞாயிறு சிந்தனையின்போது, உலக முடிவுபற்றி மாற்கு நற்செய்தியிலிருந்து ஒரு பகுதியை வாசித்தோம். சிந்தித்தோம். இன்று லூக்கா நற்செய்தியிலிருந்து மீண்டும் உலக முடிவுபற்றி ஒரு வாசகம். திரு வருகைக் காலம் ஆரம்பமாகியிருக்கிறது. இன்றே முடிவைப் பற்றி நமது நற்செய்தி கூறுகிறது. ஆரம்பத்திலேயே, முடிவா? இன்று நற்செய்தியில் சொல்லப்பட்டிருப்பது நம் சொந்த வாழ்வின் முடிவல்ல. இவ்வுலகத்தின் முடிவு. இரு வாரங்களுக்கு முன்னால் நாம் பேசிய 2012 என்ற திரைப்படத்தைப் பற்றி மீண்டும் பேச விழைகிறேன். அந்தப் படத்தில் வரும் கதாநாயகன் தன் குடும்பத்தை உலக அழிவிலிருந்து காப்பாற்ற முயல்கிறான். வீட்டிலிருந்து காரில் கிளம்பி அவன் செல்லும்போது, அழிவு அவனைத் துரத்துகிறது. அவன் செல்லும் சாலை, கட்டடம் எல்லாம் அவனைச் சுற்றி இடிந்து விழுகின்றன. எப்படியோ முயன்று, விமான நிலையத்தை அடைகிறான், ஒரு சிறு விமானத்தில் தன் குடும்பத்துடன் ஏறுகிறான், விமான ஓடு தளம் அவன் பின்னே இடிந்து கொண்டு வரும்போது அவனது விமானம் மேலெழுந்து பறக்கிறது... படத்தின் ட்ரைலெர் மட்டும்தான் பார்த்தேன். அந்த நேரத்தில் என் மனதில் எழுந்த எண்ணம்: ஒரு கேள்வி.... அவன் குடும்பத்தினர் இந்த அழிவிலிருந்து தப்புகிறார்கள்... தப்பி எங்கே போகிறார்கள்? உலகமே அழியும்போது அவர்களால் எங்கே போக முடியும்? அந்த ட்ரைலெர் இன் இறுதியில் வந்த வரிகள் என் சிந்தனையைத் தூண்டியது. THE END என்று வழக்கம்போல் போட்டுவிட்டு உடனே IS JUST THE BEGINNING.... என்று காண்பிக்கப்பட்டது. முடிவுதான் ஆரம்பம் என்ற பொருள்படும் இந்த வரிகள் பல மதங்களில் பலவழிகளில் சொல்லப்பட்டுள்ளன. கிறிஸ்தவ விசுவாசம் சொல்வது: இவ்வுலக வாழ்வு முடிவல்ல, மறுவாழ்வின் ஆரம்பம் என்று. இறந்தோரை அடக்கம் செய்யும் திருப்பலியில் சொல்லப்படும் ஒரு ஜெபத்தில் இவ்வார்த்தைகள் பயன் படுத்தப்படுகின்றன. “ஆண்டவரே, உம் விசுவாசிகளுக்கு வாழ்வு மாறுபடுகிறதேயன்றி, அழிக்கப்படுவதில்லை; இம்மண்ணக வாழ்வின் உறைவிடம் அழிந்ததும் விண்ணகத்தின் கதவுகள் அவர்களுக்குத் திறந்துவிடப்படுகின்றன.” இதே எண்ணங்களை அழகிய ஒர் ஆங்கில வாக்கியத்தில் வாசித்திருக்கிறேன். Christian death is like putting out the candle, since daylight has come.

உலக முடிவுபற்றி இன்றைய நற்செய்தி சொல்வதைக் கேட்போம்:

லூக்கா நற்செய்தி 21: 25-28; 34-36
அக்காலத்தில் மானிட மகன் வருகையைப் பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள்மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.” மேலும் இயேசு, “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப் போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்” என்றார்.

மக்களெல்லாம் குழம்பிப் போவார்கள், கலக்கம் அடைவார்கள். இந்த நற்செய்தியைக் கேட்கும் நம்மை இயேசு அந்த நேரத்தில் என்ன செய்யச் சொல்கிறார்? தப்பித்து ஓடச் சொல்லவில்லை, தலைதெறிக்க பறந்து செல்லச் சொல்லவில்லை... மாறாக, தலை நிமிர்ந்து நிற்கச் சொல்கிறார்.

மலைபோல் எழும் கடல் அலைகளைக் கண்டும், நிலை குலையாமல் நிற்கச் சொல்கிறார். காரணம்? இதன் பெயர் அழிவல்ல, இதுதான் மீட்பு என்பதால். நாம் பார்க்கும் கண்ணோட்டம் நம் செயல்பாடுகளை மாற்றும். அழிவு என்று பார்த்தால், அலறி அடித்து ஓடத்தான் வேண்டும் அந்தத் திரைப்படத்தில் காட்டப்பட்ட ஹீரோ குடும்பத்தைப் போல... மீட்பு என்று பார்த்தால், தலை நிமிர்ந்து நிற்போம் நம் கடவுளைச் சந்திக்க. தப்பிப்பதற்கு பதில், தஞ்சம் அடைவோம் அந்த இறைவனில். கண்ணோட்டம் செயல்பாடுகளை மாற்றும். உலக வரலாற்றில் மனித நம்பிக்கையை முற்றிலும் அழிக்கும் வண்ணம் எழுதப்பட்ட பக்கங்களில் ஹிட்லரின் அராஜகம், அவன் உண்டாக்கிய நாசி வதை முகாம்கள் காணப்படும். இரண்டாம் உலகப் போர் நடந்தபோது, மனித குலத்தின் மீது பலருக்கு அவநம்பிக்கை, வெறுப்பு ஏற்பட்டது. இந்த அவநம்பிக்கையின் உச்சி ஹிட்லர் உருவாக்கிய நாசி வதை முகாம்கள். ஆனால், அந்த முகாம்களில் எத்தனையோ பேர் தலை நிமிர்ந்து நின்றனர். அவர்கள் அம்முகாம்களை நரகங்களாகப் பார்க்க மறுத்து, மீட்பின் நுழைவாயிலாகப் பார்த்தனர். நாசி வதை முகாம்களைப் பற்றி ஆயிரமாயிரம் கதைகள், திரைப்படங்கள் உள்ளன. "வாழ்க்கை அழகானது" (Life is Beautiful) என்ற தலைப்பில் வெளியான படம் நாசி வதை முகாமிற்கு இழுத்து செல்லப்படும் ஒரு சிறு குடும்பத்தைப் பற்றியது. தந்தை, தாய் ஒரு நான்கு வயது சிறுவன். நடப்பது என்ன என்று அறியாமல் இருக்கும் அந்தச் சிறுவனிடம் தந்தை அந்த வதை முகாமில் நடக்கும் ஒவ்வொரு பயங்கரச் செயலுக்கும் வித்தியாசமாக விளக்கம் தருகிறார். அவர்கள் வந்திருப்பது ஒரு விளையாட்டிற்காக, அங்குத் திரும்பவும் வீட்டுக்குப் போக வேண்டுமென அடம் பிடிக்காமல் இருந்தால் 20 புள்ளிகள் பெறலாம், பசிக்கிறதென்று அழாமல் இருந்தால், 10 புள்ளிகள் பெறலாம்... என்று தந்தை தன் நான்கு வயது சிறுவனிடம் பொய் சொல்லி அவனை அந்த முகாமில் தங்க வைப்பது மிக அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்தப் புள்ளிகளெல்லாம் பெற்றால்...? ஒரு டாங்க் பரிசாகக் கிடைக்கும். திரைப்படத்தின் இறுதியில், தந்தை வீரர்களால் பிடிபடுகிறார். ஆனால் அதைப் பார்க்கும் மகனுக்கு முன்னால் வீர நடை போட்டுச் செல்கிறார். ஒரு தெரு முனையில் சுட்டுக் கொல்லப்படுகிறார். தந்தை இறந்ததைக் கூட அறிந்து கொள்ளாமல் அந்தச் சிறுவன் அடுத்த நாள் ஜெர்மனி வீழ்ந்ததால், அமெரிக்கப் படையினரின் டாங்க் அந்த முகாமுக்கு வருவதைப் பார்த்து, உண்மையிலேயே அப்பா சொன்னது போல டாங்க்கை வென்று விட்டதாகக் கதை முடிகிறது. நாசி வதை முகாம்களின் பயங்கரங்கள் அந்தச் சிறுவனின் மனதையோ, வாழ்வையோ கொஞ்சமும் பாதிக்கவில்லை. அந்த முகாமிலிருந்து அச்சிறுவன் வெளியேறும்போது, தலை நிமிர்ந்து செல்கிறான். அவனைப் பொறுத்தவரை அவனுடைய அப்பா சொல்லித் தந்த வாழ்க்கை உண்மையிலேயே அழகானது!

அன்பர்களே, இந்தத் திருவருகைக் காலம் முழுவதும் நம்பிக்கைத் தரும் நல்ல செய்திகளை இன்னும் அதிகமாகப் பரப்ப முயல்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

திருவருகைக்காலம்‌ முதல்‌ ஞாயிறு

முதல்‌ வாசகப்‌ பின்னணி (எரே 33:14-16)

இறைவாக்கினர்‌ எரேமியாவை "Prophet of Doom" அதாவது “அழிவை முன்னறிவிக்கும்‌ இறைவாக்கினர்‌” என்று அழைப்பார்கள்‌. இவ்வாறு கடின உள்ளம்‌ படைத்தவராக இருந்தாலும்‌, பல நேரங்களில்‌ மக்களுக்கு இறைநன்மையை எடூத்துக்கூறியும்‌, இறை நம்பிக்கையை இஸ்ரயேல்‌ மக்கள்‌ மனதில்‌ விதைத்தும்‌ வந்தார்‌. மேலும்‌ கடவுள்‌ தன்னுடைய மீட்புத்திட்டத்தை எதிர்காலத்தில்‌ நிறைவேற்ற வல்லவர்‌ என்றும்‌, அதற்காக நாம்‌ அனைவரும்‌ காத்திருக்க வேண்டும்‌ என்றும்‌ அறிவுறுத்துகிறார்‌. இந்தப்‌ பகுதி எரேமியாவின்‌ சீடர்களால்‌ எழுதப்பட்டிருக்க வேண்டும்‌. காரணம்‌ எரே. 23:5-6 வரை உள்ள வசனங்கள்‌ இங்கேப்‌ பயன்படூத்தப்பட்டு இருக்கின்றன. தாவீதின்‌ குலத்திலிருந்து உருவாகும்‌ தளிர்‌ மக்களுக்கு மீட்பைத்தரும்‌ என்ற நம்பிக்கைச்‌ செய்தி இதில்‌ மேலோங்கி இருக்கிறது.

இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி (1தெச 3:12-14:2)

புனித பவுல்‌ துடியார்‌ தெசலோனிக்கேய மக்களுக்கு, நாம்‌ எவ்வாறு கடவுளின்‌ வருகைக்காகக்‌ காத்திருக்க வேண்டு மென்று அறிவுரைக்‌ கூறுகின்றார்‌. விழித்திருத்தல்‌, செபம்‌ செய்தல்‌, அன்பு செய்தல்‌, நல்லது செய்தல்‌... என்ற அன்றாடச்‌ செயல்களைக்‌ கவனமாய்ச்‌ செய்வதன்‌ வழியாய்‌ நாம்‌ கடவுளின்‌ வருகைக்கு நம்மையேத்‌ தயாரிக்க முடியும்‌ என்கிறார்‌. காரணம்‌, கடவுளின்‌ வருகையை முன்னிட்டு மக்கள்‌ தாங்கள்‌ செய்ய வேண்டிய கடமைகளை மறந்து வாழ்ந்தனர்‌. எனவேதான்‌ தாய பவுலடியார்‌, நம்‌ அன்றாட உணவைச்‌ சம்பாதிப்பதிலும்‌, குடும்பத்தைப்‌ பேணிக்‌ காப்பதிலும்‌, பொறுப்புகளைச்‌ சரிவரச்‌ செய்வதிலும்‌, நாம்‌ கடவுளின்‌ திட்டத்தை நிறைவேற்ற முடியும்‌ என்கிறார்‌.

நற்செய்தி வாசகப்‌ பின்னணி(லூக்கா 21:25-28,34-36)

மறையுரை

“காத்திருப்பவன்‌ கடவுளைக்‌ காண்கின்றான்‌”

“ஓடு மீன்‌ ஓட உறு மீன்‌ வருமளவும்‌, காத்து இருக்குமாம்‌ கொக்கு” - என்கிறது நாலடியார்‌. உண்மைதாள்‌, தன்‌ இரைக்காகக்‌ காலை முதல்‌ மாலை வரை ஒற்றைக்காலில்‌ நிற்கும்‌ கொக்கு, அந்த கொக்கு காத்திருத்தலின்‌ பலனாகத்‌ தன்‌ உணவைக்‌ கொத்தி தின்னும்‌. காத்திருத்தல்‌ ஓர்‌ சுகமானச்‌ சுமை. ஆனால்‌ இன்று நம்மவர்கள்‌ இப்படிப்பட்ட “காத்திருத்தலை' சுகமாகக்‌ கருதாமல்‌ சுமையாகக்‌ கருதுகின்றனர்‌. துதன்‌ பலனாக, ஆறு மாதத்தில்‌ விளைந்துக்‌ கொடுக்க வேண்டிய அரிசியை மூன்றே மாதத்தில்‌ விளைய வைக்கிறோம்‌. ஆறு வருடத்தில்‌ காய்க்கும்‌ தென்னையை மூன்றே வருடத்தில்‌ காய்க்க வைக்கிறோம்‌. இதன்‌ பலனாகத்தான்‌ இன்று நாமும்‌, நம்முடைய செயல்பாடுகளும்‌ அவசர அவசரமாக அமைகின்றன. காத்திருத்தல்‌ இல்லாதக்‌ காரணத்தால்‌, பத்து வயதிலே மனிதன்‌ 40 வயதிற்கு உரிய நாற்காலியைத்‌ தேடுகிறான்‌. 15 வயதிலே 25 வயதுக்‌ கட்டிலைப்‌ பகிர்ந்து கொள்கிறான்‌. 30 வயதிலே 60 வயதுக்கு உரிய முதுமையைச்‌ சுமந்துக்‌ கொள்கிறான்‌. இப்படியாகக்‌ காத்திருத்தல்‌ என்பது இன்றையத்‌ தலைமுறையினருக்கு கசப்பானதாகத்‌ தோன்றுகின்றது.

இன்றைய அனைத்து வாசகங்களும்‌, திருவழிபாடும்‌ நம்மை “காத்திருப்பதற்காக” அழைப்பு விடூக்கின்றன. காதலன்‌ தன்‌ காதலிக்காய்‌ காத்திருப்பது போல்‌, தாய்‌ தன்‌ பிள்ளையின்‌ வருகைக்காய்‌ காத்திருப்பது போல்‌, மாணவன்‌ தன்‌ தேர்வின்‌ முடிவிற்கு காத்திருப்பது போல்‌... நாமும்‌ ஒரு படி மேலாக நம்மைப்‌ படைத்த ஆண்டவர்‌ இயேகவின்‌ வருகைக்காகக்‌ காத்திருக்க அழைக்கிறது நம்‌ திருச்சபை.

எகிப்திலிருந்து மீட்கப்பட்ட இஸ்ராயேல்‌ மக்கள்‌, சீனாய்‌ மலை அடியிலே மோயிசனின்‌ வருகைக்காகக்‌ காத்திருந்தார்கள்‌. இவ்வாறு மோயிசனின்‌ வருகைக்காகக்‌ காத்திருந்தவர்கள்‌ கடவுளின்‌ பத்துக்‌ கட்டளைகளையும்‌, புதியதொரு வாழ்வையும்‌ பெற்றுக்‌ கொண்டார்கள்‌. ஆனால்‌ காத்திருத்தலைச்‌ சுமையாகக்‌ கருதி பொன்கன்றுகளை அமைத்து, வழிபாடூ நடத்தியவர்கள்‌ எல்லாம்‌ வாளுக்கு இரையாகிப்‌ போனார்கள்‌ (வி.ப, 32:27).

இறைவனின்‌ வருகைக்காக மனம்‌ தளராமல்‌, உடல்‌ சோர்ந்து போகாமல்‌, எப்படியும்‌ இறைவனைக்‌ காண வேண்டும்‌ என்று காத்திருந்த இறைவாக்கினர்‌ எலியா, கடவுளை வீசும்‌ தென்றலில கண்டு கொண்டார்‌ (1அர. 19:12), சமுதாயத்தில்‌ பணக்கார வர்க்கத்தைச்‌ சார்ந்தவனாய்‌ இருந்த போதும்‌, ஊரார்‌ என்ன சொல்லுவார்கள்‌, உற்றார்கள்‌ என்ன நினைப்பார்கள்‌ என்றெல்லாம்‌ சிறிதளவும்‌ நினைக்காமல்‌ இயேசுவை எப்படியாவதுக்‌ காண வேண்டும்‌ என்று முசுக்கட்டை மரத்தின்‌ மேல்‌ ஏறி காத்திருந்தச்‌ சக்கேயுவுக்கு மீட்பு பரிசாகக்‌ கிடைத்தது (லூக்கா 19:14).

கடவுளுக்காகவும்‌, கடவுளின்‌ தெய்வீக அரசுக்காகவும்‌, காத்திருந்தவர்கள்‌ ஒரு போதும்‌ வீணாய்ப்‌ போனது இல்லை. இத்தகைய நம்பிக்கையைத்தான்‌ இன்றைய முதல்‌ வாசகம்‌ நமது கண்முன்‌ படைக்கிறது. “இதோ நாட்கள்‌ வருகின்றன, அப்போது இஸ்ராயேல்‌ வீட்டாருக்கும்‌, யூதா வீட்டாருக்கும்‌ நான்‌ கொடூத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவேன்துன்பங்களையும்‌"” (எரே. 33:14-15) என்று ஆண்டவரின்‌ வருகைக்காகக்‌ காத்திருந்த மக்களுக்கு இறைவன்‌ வாக்குறுதி கொடுக்கிறார்‌ இறைவாக்கினர்‌ எரெமியா வழியாக இறைவன்‌. இதைத்தான்‌ சுமார்‌ 150 ஆண்டுகளுக்கு முன்னரே எசாயா இறைவாக்கினர்‌ “தாவீதின்‌ குலத்திலிருந்து ஒரு பெண்‌ கருவுற்று குழந்தை பெற்றெடுப்பார்‌” என்ற வாக்கு உரைக்கிறார்‌ (எசாயா 7:14) அதன்‌ பலனாக, இஸ்ராயேல்‌ மற்றும்‌ யூத மக்களும்‌ இயேசு என்றத்‌ தளிரை முதல்‌ வருகையில்‌ பெற்று கொண்டார்கள்‌.

இவரைக்‌ குறித்துதான்‌ சிமியோன எருசலேம்‌ ஆலயத்தில்‌, குழந்தை இயேசுவைக்‌ கையில்‌ ஏந்தியவராய்‌, “ஆண்டவரே, உமது மீட்பை என்னுடைய கண்கள்‌ கண்டுக்‌ கொண்டன. இம்மீட்பே பிற இனத்தவருக்கு வெளிப்பாடு அருளும்‌ ஒளி” (லூக்கா 2:31-32) என்று போற்றினார்‌.

இயேசுவின்‌ வருகை அன்று ஏழைகளுக்கு நற்செய்தியாகவும்‌, சிறைபட்டோர்‌ விடுதலை அடையவும்‌, பார்வையற்றோர்‌ பார்வை பெறவும்‌, ஒடுக்கப்பட்டோர்‌ விடுதலை வாழ்வு அடையவும்‌, ஆண்டவர்‌ அருள்‌ தரும்‌ ஆண்டை அறிவிக்கும்‌ வண்ணமாக அமைந்தது (லூக்கா 3:18-19). இயேசுவின்‌ வருகை கல்வாரியோடூ முடிந்துவிட்ட கதை அன்று, மாறாக அவர்‌ மீண்டும்‌ நம்மிடையே வருவார்‌ என்ற நோக்கோடுதான்‌ இன்று நாம்‌ எதிர்நோக்கி இருக்கின்றோம்‌. இத்தகைய எதிர்பார்ப்பைத்தான்‌ நாம்‌ தினமும்‌ திருப்பலியில்‌ “இயேசு கிறிஸ்து இறந்தார்‌, உயிர்த்தார்‌, மீண்டும்‌ வருவார்‌” என்று நம்‌ விசுவாசத்தை அறிக்கையிட்டு காத்துக்‌ கிடக்கிறோம்‌.

காத்திருத்தல்‌ என்பது “வெறுமனே' காத்திருத்தல்‌ அல்லது, “சும்மாயிருத்தல்‌” என்பது பொருள்‌ அல்ல. மாறாக நம்‌ காத்திருப்பு பத்துக்‌ கன்னியர்களில்‌, ஐந்து கன்னியர்களைப்‌ போலவும்‌ (லூக்கா 12:35), வீட்டிரிமையாளர்‌ வரும்வரை அவருக்குத்‌ தேவையானதைச்‌ செய்து வைத்து விட்டு தலைவரின்‌ வருகைக்காகக்‌ காத்திருந்த ஊழியனைப்‌ போலவும்‌ (லூக்கா 12:37) தன்னிடம்‌ கொடூக்கப்பட்டத்‌ தாலந்துகளை இரண்டு மடங்காகப்‌ பெருகச்‌ செய்து தங்கள்‌ தலைவரின்‌ மகிழ்வில்‌ பங்குகொண்டப்‌ பணியாளர்களைப்‌ போலவும்‌ (மத்தேயு 25:14) நம்முடையக்‌ காத்திருத்தல்‌ இருக்க வேண்டும்‌. அப்போதுதான்‌ “நன்று, நன்று நல்ல ஊழியனே சிறிய பொறுப்பு: களில்‌ நம்பிக்கைக்குரியவனாய்‌ இருந்தாய்‌, நான்‌ உன்னைப்‌ பெரிய பொறுப்புகளில்‌ அமர்த்துகிறேன்‌'' என்பர்‌. எனவே அத்தகைய நாளுக்காக நாம்‌ காத்திருக்க வேண்டும்‌ என்பதைத்தான்‌ இன்றைய நற்செய்தி வாசகம்‌ கூறுகிறது.

“கதிரவனிலும்‌ நிலவிலும்‌ விண்மீன்களிலும்‌ அடையாளங்கள்‌ தென்படும்‌... உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர்‌ அச்சத்தினால்‌ மயக்கமுறுவர்‌... அப்போது மிகுந்த வல்லமையோடும்‌ மாட்சியோடும்‌ மானிடமகன்‌ மேகங்கள்‌ மீது வருவதை அவர்கள்‌ காண்பார்கள்‌. அப்போது நீங்கள்‌ தலைநிமிர்ந்து நில்லுங்கள்‌” என்கிறார்‌ இயேசு. ஆண்டவரின்‌ இரண்டாம்‌ வருகைப்‌ பற்றி தூய பவுலடியார்‌ “திருடன்‌ இரவில்‌ வருவது போல்‌ ஆண்டவருடைய நாள்‌ வரும்‌” என்கிறார்‌. (1தெச. 5:2) ஆம்‌ அப்போது ஆண்டவரின்‌ லருகை நம்‌ கண்ணீர்‌ அனைத்தையும்‌ துடைத்து விடம்‌, சாவு, துன்பம்‌ எதுவுமே இராது (தி.வெ. 21:4). கிறிஸ்தவர்களாகிய நாம்‌ ஆண்டவரின்‌ வருகைக்காக நம்மையே தயாரித்துக்‌ காத்திருந்தோம்‌ என்றால்‌, அவரின்‌ வருகை நம்மை அழிவிலிருந்து மீட்கும்‌ (தெச. 1:10), நாம்‌ அனைவரும்‌ உயிர்‌ பெறுவோம்‌ (1கொரி. 15:1) என்பதை மனதார நம்புவோம்‌. இன்றைய நவீன உலகத்தில்‌ மனிதன்‌ வாகனங்களுக்காகவோ, சாப்பிடவோ, திருமணத்திற்கோ எதற்கும்‌ காத்திருக்கத்‌ தயாராக இல்லை. இப்படிப்பட்டவர்கள்‌ இன்று இறைவனுக்காகக்‌ காத்தி- ருப்பார்களா? படபடப்பு, பரபரப்பு, பதற்றம்‌, அவசரம்‌... எதுவுமே நம்மில்‌ சாதனையை ஏற்படுத்த முடியாது. கொழுத்த மீன்‌ வரும்‌ வரை கொக்கு காத்திருப்பது போல்‌ ஆண்டவரின்‌ வருகைக்காகக்‌ காத்திருக்க மறந்து விடுகிறோம்‌. காத்திருத்தலை நம்மில்‌ பலர்‌ சுமையாகக்‌ கருதுவதால்தான்‌ இன்று பலர்‌ திருப்பலிக்குத்‌ தாமதமாக வருகிறோம்‌. கடவுளுக்காகக்‌ “காத்திருத்தலை”” நாம்‌ சுமையாகக்‌ கருதாமல்‌ சுகமாகக்‌ கருதுவோம்‌. கடவுளுக்காகக்‌ காத்திருப்பவர்கள்‌ கடவுளைக்‌ காண்கிறார்கள்‌.

பிற மறையுரைக்‌ கருத்துக்கள்‌

  • விழிப்பாய்‌ இருங்கள்‌. இல்லை என்றால்‌ விடியும்‌ காலம்‌ நமக்குத்‌ தெரியாது.
  • இயேசுவைச்‌ சந்திக்க நம்மையேத்‌ தயாரிப்போம்‌.
  • இறைவனின்‌ இரண்டாம்‌ வருகை நம்மில்‌ எத்தகையப்‌ பாதிப்பை ஏற்படுத்தப்‌ போகிறது? அதற்கு நாம்‌ எந்தவிதத்‌ தயாரிப்புகள்‌ மேற்கொள்கிறோம்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

திருவருகைக்‌ காலம்‌ - முதல் ஞாயிறு

மூன்றாம்‌ ஆண்டு

முதல் வாசனம் :எரே 33:14-16

இறைவனின்‌ வருகையை எகிர்நோக்கியிருக்கும்‌ காலம்‌

வரவிருக்கும்‌ மீட்பர்‌ பற்றியும்‌, அவர்‌ வரும்போது நடக்கவிருக்கும்‌ நலன்கள்‌ பற்றியும்‌ இவ்வாசகம்‌ எடுத்துக்‌ கூறுகிறது. இதே வாசகம்‌ எரே 23 : 5-6 பகுதியிலும்‌ காணப்படுவதால்‌, நம்பிக்கை அளிக்கும்‌ இக்கருத்து எவ்வளவு இன்றியமையாததென்று எரேமியா குறிப்பிட விரும்புகிறார்‌ எனலாம்‌.

ஆண்டவர்‌ வாக்குறுக்‌ கர்தால்‌ அகைச்‌ செயல்படுத்துவார்‌

“இறைமகன்‌ இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில்‌ 'ஆம்‌' என்றும்‌ 'இல்லை' என்றும்‌ பேசுபவர்‌ அல்ல. மாறாக, அவர்‌ 'ஆம்‌' என உண்மையே பேசுபவர்‌” என்பார்‌ பவுல்‌ அடியார்‌ ( 2 கொரி 1 : 19). இதுவே இறைத்‌ தந்தைக்கும்‌ பொருந்தியமையும்‌. “இஸ்ரயேல்‌ வீட்டின்‌ அரியணையில்‌ வீற்றிருக்கத்‌ தக்க ஒருவர்‌ தாவீதுக்கு இல்லாமற்‌ போகார்‌'' (எரே 33: 17-18; 2 சாமு 7 :1-13) என்று ஆண்டவர்‌ கொடுத்த வாக்குறுதி இயேசுவில்‌ நிறைவு பெறுகிறது. ஒவ்வோர்‌ ஆண்டும்‌ கிறிஸ்து பிறப்பு விழாவுக்குத்‌ தயார்‌ செய்யும்‌ இத்திருவருகைக்‌ காலத்திலே தம்‌ வாக்குறுதியை இயேசுவில்‌ செயல்‌ படுத்திய இறைவனுக்கு நன்றி கூறுவோம்‌.

நீதிவழி அவர்‌ அரசாள்வார்‌

தாவீது என்னும்‌ பெரு மரத்தின்‌ கிளை (தளிர்‌) இயேசு (செக்‌ 38). “தளிர்‌ என்பது அவர்‌ பெயர்‌” 6 : 12; “இதோ “தளிர்‌” என்னும்‌ பெயரினர்‌ மண்ணுலகில்‌ பிறப்பார்‌. அரச குலத்தில்‌ தோன்றிய அவர்‌ அரசருக்கே உரிய முறையில்‌ நீதியையும்‌ நியாயத்தையும்‌ நிலை நாட்டுவார்‌. “மாறா அன்பர்க்கு மாறா அன்பராகவும்‌ மாசற்றோர்க்கு மாசற்றவராகவும்‌ விளங்குவார்‌... எளியோர்க்கு மீட்பளிப்பார்‌'' (திபா 18 : 25-27); “பூவுலகை நீதியுடன்‌ ஆட்சி செய்வார்‌” (திபா 96 : 13); “நீதியும்‌ நேர்மையும்‌ அவரது அரியணையின்‌ அடித்தளம்‌" (திபா 97: 2); “எளிய மக்களை அவர்‌ காப்பார்‌, கொடியவரை அவர்‌ நொறுக்கிவிடுவார்‌”” (திபா 72 : 4); “கொடுமையினின்றும்‌ துன்பத்தினின்றும்‌ ஏழை எளியவர்களை விடுவிப்பார்‌. அவர்கள்‌ இரத்தம்‌ அவர்‌ முன்னிலையில்‌ விலை மிக்கது' (திபா 72 : 13). இத்தகைய நீதியின்‌ அரசராகிய இயேசுவின்‌ பிறப்புக்குத்‌ தயார்‌ செய்யும்‌ நாம்‌ “நீதியை நிலைநாட்டும்‌ வேட்கை கொண்டோராக”' (மத்‌ 5 : 6) இருக்க வேண்டாமா? நம்முடைய வாழ்விலே, நம்மைச்‌ சூழ்ந்தோர்‌ வாழ்க்கையிலே நீதி நியாயம்‌ தளிர்விடவும்‌, அநீதி அழிந்தொழியவும்‌ என்ன முயற்சிகளைக்‌ கைக்கொள்கிறோம்‌?

பாலமாய்‌ விளங்கும்‌ குரு ஆவார்‌

தாவீதின்‌ “தளிர்‌'' இயேசு-அரசர்‌ மட்டுமன்று; இயேசு-குருவுமாவார்‌. “மெல்கிசெதெக்‌ முறைப்படி என்றென்றும்‌ குருவே” (திபா 110: 4). குரு என்பவர்‌ இடை நிற்பவர்‌. கடவுளுக்கும்‌ மனிதருக்கும்‌ இடையேயிருந்து மக்களுக்காகப்‌ பரிந்து பேசி மீட்பளிப்பவர்‌ “இயேசு - குரு.” மக்களுடைய புகழ்‌ மாலைகளை இறைவனுக்குச்‌ சாத்துபவரும்‌ அவரே. அவர்‌ வழியாக, அவரோடு, அவரில்‌ இறைவனை அணுகுவோம்‌. இறைவனைப்‌ புகழ்வோம்‌. “பூமியில்‌ புகழ்தக்க பொருளே " (அப்பர்‌). அரசரும்‌ குருவுமாக வாவிருக்கும்‌ தாவீதின்‌ “தளிரை” நம்‌ உள்ளங்களிலும்‌ இல்லங்களிலும்‌ வரவேற்போம்‌. இத்திருவருகைக்‌ காலத்திலே நீதியையும்‌ (அரசர்‌) மீட்பையும்‌ (குரு) கொண்டு வரும்‌ இயேசுவுக்கு நாம்‌ கொடுக்கும்‌ வரவேற்பு நம்முடைய அன்றாட வாழ்க்கையிலே நீதிக்காகப்‌ போராடுவதும்‌, பாவிகளுக்காகப்‌ பரிந்து பேசுவதுமாக அமையவேண்டும்‌.

“நீதியின்‌ தளர்‌” ஒன்றை முளைப்பிப்போம்‌... யுதா மீட்கப்படும்‌

(இரண்டாம் வாசகம்:1தெச 3:12-4:2)

தெசலோனிக்கேயக்‌ கிறிஸ்தவர்களுக்காக நன்றி செலுத்தும்‌ பவுல்‌ அடியார்‌, அவர்கள்‌ இறைவனுக்கு உகந்த புனித வாழ்விலே வளரவேண்டும்‌ என்று விரும்புகிறார்‌. திருவருகைக்‌ காலத்திலே நாமனைவரும்‌ புனித வாழ்வு வழியாக இயேசுவின்‌ வருகைக்குத்‌ தயார்‌ செய்ய வேண்டுமென்று இவ்வாசகம்‌ அழைப்பு விடுக்கின்றது.

புனித வாழ்வுக்கு அடிப்படை அன்பு

தெசலோனிக்கேயர்‌ நடுவில்‌ “ஒருவர்‌ ஒருவருக்குக்‌ காட்டும்‌ அன்பு பெருகி வழிகிறது” (2 தெச 1: 3). பவுல்‌ அடியாரோ, “உங்களில்‌ கிறிஸ்து உருவாகும்‌ வரை உங்களுக்காக நான்‌ மீண்டும்‌ பேறுகால வேதனையுறுகிறேன்‌ என்கிறார்‌ (கலா 4 : 19). இந்த அன்பானது கிறிஸ்தவர்களுக்கு மட்டும்‌ காட்டக்கூடிய அன்பாயமையாது, எல்லோருக்கும்‌ செய்யப்படும்‌ அன்பாயிருக்க வேண்டும்‌ என்று ஆசிக்கிறார்‌. “அன்பிற்குமுண்டோ அடைக்கும்‌ தாழ்‌? சாதி, சமயம்‌, குலம்‌, கோத்திரம்‌, கருப்பு, சிவப்பு, சொந்தம்‌, தூரம்‌, பணம்‌, ஏழ்மை, அழகு, அசிங்கம்‌ என்ற வேறுபாடுகளைக்‌ கடந்து நமது அன்பும்‌ கிறிஸ்துவின்‌ அன்பு போல்‌, அகலம்‌ நீளம்‌ ஆழம்‌ உயரம்‌ இவற்றைக்‌ கடந்த நிலையிலே (எபே3 :18) எல்லோருக்கும்‌ கிடைக்க வேண்டும்‌. அன்புப்‌ பிறப்பான இயேசுவை நம்‌ உள்ளங்களில்‌ வரவேற்று மகிழ அன்பு தவிர வேறு வழி யாது?

அன்ப நம்மில் வளர்ப்பது புனிதத் தன்மை

“நாம்‌ அனைவரும்‌ தூயவர்‌ ஆவதே இறைவனின்‌ திருவுளம்‌” (4:3). “மாசில்லாத மணிதிகழ் மேனிமேல்‌ பூசு நீறுபோல்‌ உள்ளம்‌ புனிதர்கள்”‌ (பெரியபுராணம்).

ஆம்‌, “நாம்‌ தூயோராகவும்‌, மாசற்றோராகவும்‌ தம்‌ முன்‌ விளங்கும்படி உலகம்‌ உருவாகு முன்பே இறைவன்‌ நம்மைக்‌ கிறிஸ்து வழியாகத்‌ தேர்ந்துகொண்டார்‌”' (எபே 1: 4). தூயவராய்‌ வாழ்வதென்றால்‌ குற்றங்களைக்‌ களைவது (1 தெச 3 : 13); சிறப்பாக பிறரன்புக்கு விரோதமான பாவங்களை அகற்றி வாழ்வது (4 : 4-5). “கடவுள்‌ நம்மை ஒழுக்கக்‌ கேட்டிற்கு அல்ல; தூய வாழ்வுக்கே அழைத்தார்‌ (4:7). பிறரன்புக்கு எதிரான குற்றங்களை அகற்றி வாழ்பவன்‌, இறைவனுக்கு ஏற்புடைய நல்வாழ்வை வாழ்வது எளிது. எனவேதான்‌ அன்பும்‌ புனிதத்‌ தன்மையும்‌ இணைத்துக்‌ கூறப்படுகின்றன. “தூயவர்‌, தூயவர்‌ '(திவெ 4 : 8; எசா 6: 3) என்ற பண்ணிசைக்கப்படும்‌ இறைவனின்‌ மக்களாகிய நாம்‌ நம் இறைவனுடைய பரிசுத்தத்தை முன்‌ மாதிரியாகக்‌ கொள்வோம்‌ (மத்‌ 5:48). “தூய மக்கள்‌ இனமாய்‌ இருக்க (1 பேது 2 : 9) அழைக்கப்பட்ட நாம்‌, அழைப்பிற்கேற்ற வாழ்வை வாழ முயற்சி செய்வோம்‌. நம்மிடம்‌ தூய்மையின்றி, பரிசுத்தரின்‌ வருகையை நம்மில்‌ எதிர்பார்க்க முடியாது. “பாசக்‌ கடற்குள்ளே வீழாமல்‌ மனதற்ற பரிசுத்த நிலையை அருள்வாய்‌” (தாயுமானவர்)

புனிதத்‌ தன்மையில்‌ நிலைக்த்திருக்கக்‌ கட்டளைகளுக்குப்‌ பண்‌பவோம்‌

புனிதம்‌ நம்மில்‌ வளர இறைவன்‌ கொடுத்துள்ள உதவி அவர்‌ கட்டளைகளை அனுசரிப்பதாகும்‌ (4:2). கட்டளைகள்‌ அனைத்தும்‌ நமக்குச்‌ சுமை அல்ல; நம்மை இறைவனோடு இணைக்கும்‌ சாதனங்கள்‌. எனவே, இறைவனது கட்டளைகளின்படி நடந்து, அன்றாட வாழ்வைப்‌ புனிதப்படுத்துவோம்‌. கட்டளைகளை அனுசரிப்பது என்பது தொடர்ந்து வாழ்நாள்‌ முழுவதும்‌ இ பின்பற்ற வேண்டிய கடமை. கட்டளைகளைக்‌ கடைப்பிடிப்பதில்‌ ஒய்வு ர்‌ கிடையாது. தொடர்ந்து அவற்றைப்‌ பின்பற்றுவதன்‌ மூலம்தான்‌ நாம்‌ புனித வாழ்க்கையில்‌ முன்னேற்றம்‌ காண முடியும்‌. இக்கட்டளைகள்‌ கடவுளால்‌ தரப்பட்டவை (1 தெச 2 : 13; 4: 2) இவற்றைப்‌ பின்பற்றுவதற்கு வேண்டிய சக்தியை இறைவனே தருவார்‌. எனவே நம்பிக்கையோடு வேண்டுவோம்‌. இறைக்‌ கட்டளைகளில்‌ நாம்‌ அடிக்கடி தவறும்‌ கட்டளை அல்லது கட்டளைகள்‌ யாவை? இத்திருவருகைக்‌ காலத்தில்‌ இந்தத்‌ தவறுதல்களைத்‌ திருத்த முயல்வோமா?

( ஆண்டவர்‌ உங்களை அன்பில்‌ வளர்ந்தோங்கச்‌ செய்வாராக. )

நற்செய்தி லூக்கா 21:25-28,34-36

எருசலேமின்‌ அழிவும்‌ (கி.பி.70) இயேசுவின்‌ இறுதி வருகையும்‌ இணைத்துக்‌ கூறப்படும்‌ இப்பகுதி; திருவருகைக்‌ காலத்தில்‌ இயேசுவை நம்‌ உள்ளங்களில்‌ வரவேற்கத்‌ தூண்டும்‌ வாசகமாக அமைகிறது. அன்றாடம்‌ நடக்கும்‌ அறிகுறிகள்‌ வழி இயேசு என்றும்‌ நம்மிடை வந்துகொண்டே யிருக்கிறார்‌. ஆனால்‌ நாம்‌ விழிப்புடனிருந்து இயேசுவின்‌ அழைப்புக்குச்‌ செவிமடுக்கிறோமா?

கால அறிகுறிகளில்‌ கடவுளைச்‌ காண்போம்‌

'இயேசுவின்‌ இறுதி வருகையின்போது இயற்கை நிகழ்ச்சிகள்‌ மாறுபட்டு நிகழும்‌. இவை யாவும்‌ அவருடைய வருகையின்‌ அறிகுறிகள்‌, முன்‌ 'அறிவிப்புகள்‌. அறிகுறிகள்‌ வழி மனிதர்கள்‌ இறைவனிடம்‌ மனம்‌ திரும்பி வரவேண்டும்‌. அச்சம்‌ தரும்‌ இவ்வறிகுறிகள்‌ மீட்பின்‌ எதிரொலிகள்‌ ஆகும்‌. “மனுமகன்‌ (இவற்றிடையே) மிகுந்த வல்லமையோடும்‌ மாட்சிமையோடும்‌ மேகத்தின்‌ மேல்‌ வருவார்‌” (21: 27).

அன்றாட வாழ்விலே அறிகுறிகளுக்குப்‌ பஞ்சமில்லை. எதிர்பாராத நிகழ்ச்சிகளான போர்‌, திடீர்‌ விபத்துகள்‌, ஆபத்துகள்‌, கடுமழை, பெருவெள்ளம்‌, பயிர்ச்சேதம்‌, உயிரழிவுகள்‌ ஏன்‌ இவையன்றி, சாதாரண நிகழ்ச்சிகள்‌ வழியும்‌ இறைவன்‌ நமக்கு எதிர்ப்பட்டுக்கொண்டிருக்கிறார்‌ என்பதை மறுக்க இயலாது. காலத்தின்‌ அறிகுறிகளில்‌ கடவுளை அறிந்து "கொள்ள முயல்கின்றோமா? மீட்பு என்பது வாழ்வின்‌ இறுதிக்‌ கட்டத்தில்‌ இறைவனோடு நாம்‌ ஏற்படுத்திக்கொள்ள விழையும்‌ சமாதான உடன்‌ படிக்கையா? அல்லது, வாழ்வின்‌ ஒவ்வொரு மணித்துளியும்‌, நிகழும்‌ ஒவ்வொரு நிகழ்ச்சியும்‌ இறைவனோடு நமக்குள்ள உறவை வலுப்படுத்தும்‌ பாலமாக அமைகிறதா? வாழ்வின்‌ ஒவ்வொரு கட்டத்திலும்‌ “தலைநிமிர்ந்து நில்லுங்கள்‌. உங்கள்‌ மீட்பு நெருங்கி வருகிறது” (21: 28) என்ற சொற்கள்‌ நம்‌ செவியில்‌ ஒலிக்கவேண்டும்‌. திருவருகைக்‌ காலம்‌ நம்மைத்‌ தலை நிமிர்ந்து நிற்க வைக்கும்‌ காலமாக அமையுமா? அல்லது தலை குனியவைக்கும்‌ காலமாக நாம்‌ அதனை மாற்றிவிடுவோமா?

இடைவிடாது மன்றாடுவோம்‌

இயேசுவின்‌ வருகைக்கு நம்மைத்‌ தயார்‌ செய்யச்‌ சிறந்த முக்கிய வழி செபம்‌. இயேசுவே கெத்சமனித்‌ தோட்டத்தில்‌ தம்‌ தந்தையைச்‌ சந்தித்தது செபம்‌ வழியாக (மத்‌ 26 : 36-46). எனவேதான்‌, “இங்கே தங்கி என்னுடன்‌ விழித்திருங்கள்‌ '(26:4) என்கிறார்‌. இன்றைய நற்செய்தியிலும்‌ “எந்நேரமும்‌ செபித்து விழிப்பாயிருங்கள்‌ ” (லூக்‌ 21: 36) என்கிறார்‌.

புனித பவுலடியாரும்‌ “இடைவிடாது செபியுங்கள்‌'' (1 தெச 5:19) என்று கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறுகிறார்‌. ஆம்‌, இயேசுவோடு நாம்‌ செபிக்க வேண்டும்‌; இயேசுவின்‌ வழி செபிக்க வேண்டும்‌. எந்நேரமும்‌ செபிக்க வேண்டும்‌. இடைவிடாது செபிக்க வேண்டும்‌. பாவத்தின்‌ மேல்‌ வெற்றி கொள்ளச்‌ செபிக்க வேண்டும்‌. செபமே வாழ்வாக, வாழ்வே செபமாக அமைய வேண்டும்‌. அப்போதுதான்‌ ““மனுமகன்‌ முன்‌ நிற்க வல்லவராய்‌ இருப்போம்‌” (21: 36). திருவருகைக்‌ காலம்‌ சிறப்பான முறையிலே நமக்குச்‌ செபக்காலமாய்‌ அமையவேண்டும்‌. இறைவன்‌ இயேசு நாம்‌ நல்வாழ்வு வாழ உதவுமாறு செபிப்போம்‌. இறைவன்‌ இயேசு நம்‌ உள்ளங்களிலும்‌ இல்லங்களிலும்‌ முதலிடம்‌ பெற்று நம்‌ வாழ்வின்‌ நடு நாயகமாக விளங்குமாறு செபிப்போம்‌. அன்பும்‌ நீதியும்‌, அமைதியும்‌, ஊரிலும்‌ உலகிலும்‌ தழைக்கச்‌ செபிப்போம்‌.

( தலைநிமிர்ந்து நில்லுங்கள்‌. உங்கள்‌ மீட்பு நெருங்கி வருகிறது. எந்நேரமும்‌ செபித்து விழிப்பாயிருங்கள்‌.)

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

உம்மை நோக்கி என் உள்ளம்

இன்று திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு. புதிய திருவழிபாட்டு ஆண்டின் முதல் நாள். இன்றைய நாளை இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை, ‘கம்யூனியோ ஞாயிறு’ எனக் கொண்டாடுகிறது. ‘இறைவேண்டல், ஒன்றிப்பு, பணி’ என்னும் இலக்கு வாக்கியத்தோடு இயங்கும் ‘கம்யூனியோ’ இயக்கம் திருஅவையின் பணிகளுக்குத் துணை நிற்கிறது. ‘என் கையும் உன் கையும் சேர்ந்தால் நமக்கு வலிமை’ என ஒருவர் மற்றவர் நோக்கிக் கரம் நீட்ட நம்மை அழைக்கிறது இன்றைய நாள் கொண்டாட்டம்.

‘ஆண்டவரே, உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்’ (காண். திபா 25, பதிலுரைப்பாடல்) என்று கடவுளை நோக்கிப் பார்க்கிறார் தாவீது. கிறிஸ்து பிறப்பு பெருவிழாக் கொண்டாட்டத்துக்கான தயாரிப்புக் காலமாக அமைகிற திருவருகைக்காலத்தில் நம் உள்ளம் ஆண்டவரை நோக்கி உயர்வதாக!

இன்று நாம் ஏற்றும் முதல் மெழுகுதிரி ‘எதிர்நோக்கு’ என்னும் மதிப்பீட்டைக் குறிக்கிறது. ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என நாம் விரைவில் தொடங்கவிருக்கும் யூபிலி கி.பி. 2025-ஆம் ஆண்டுக்கான முன்னோட்டமாக இந்நாள் அமைவதாக.

திருவருகைக்காலத்தில் ஆண்டவரை நோக்கி நம் உள்ளம் மூன்று நிலைகளில் உயர்ந்து நிற்கின்றது: (அ) அவரது முதல் வருகையின் நினைவுகூர்தலை நோக்கி நெஞ்சம் நிறை நன்றியோடும், மகிழ்ச்சியோடும், (ஆ) அவரது இரண்டாம் வருகையை எதிர்பார்த்து கண்கள் நிறை விழிப்போடும், கவனத்தோடும், (இ) அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளிலும், நபர்களிலும் வரும் அவரின் உடனிருப்பு நோக்கி பரிவோடும், பகிர்வோடும்.

இறைவாக்கு நூல்களில் எரேமியா மட்டுமே அழிவு மற்றும் ஆறுதலின் செய்திகளை இணைத்துத் தருகின்றார். ‘தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன்’ என்று ஆண்டவராகிய கடவுள் எரேமியா வழியாக ஆறுதல் தருகின்றார் (காண். எரே 33:14-16, முதல் வாசகம்). நாட்டில் அவர் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டி, யூதாவுக்கு விடுதலை தரும் நாளில், ‘யாவே சித்கேனூ’ (‘ஆண்டவரே நமது நீதி’) என்று எருசலேம் புதிய பெயரைப் பெறும். ‘தளிர்’ என்பது மெசியாவுக்கான உருவகம் (காண். செக் 3:8). யூதாவை ‘செதேக்கியா’ (‘ஆண்டவர் நீதியானவர்,’ ‘ஆண்டவரே நீதி’) மன்னன் ஆண்டபோது இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். ஆண்டவரின் முதல் நீதி (செதேக்கியா அரசர்) எருசலேமுக்கு தண்டனையைக் கொணர்ந்தது. இரண்டாம் நீதி (சித்கேனூ) இரக்கத்தைக் கொண்டு வருகிறது. தங்கள் அரசரை நோக்கி உயர்ந்த இஸ்ரயேல் மக்களின் உள்ளம் தண்டனை பெற்றது. ஆண்டவரை நோக்கி உயர்கின்ற உள்ளம் இரக்கம் பெறுகின்றது. ‘நம் கிறிஸ்தவப் புரிதலின்படி, ‘தாவீதின் நீதியின் தளிர்’ இயேசுவைக் குறிக்கிறது. அவரில் கடவுளின் நீதி இரக்கமாகக் கனிந்தது. சக்கேயு, பாவியான பெண், நோயுற்றோர், பேய்பிடித்தோர், பசியால் வாடிய மக்கள் போன்றோரை இயேசு எதிர்கொள்ளும் நிகழ்வுகளில் எல்லாம் நீதி பரிவாகக் கனிகிறது’ என்பது திருஅவைத் தந்தையர்களின் விளக்கம்.

புனித பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது இரண்டாம் வாசகம் (காண். 1 தெச 3:12-4:2). தெசலோனிக்கா நகரில் பவுல் மூன்றே முறைதான் (மூன்று ஓய்வுநாள்கள்) நற்செய்தி அறிவிக்கிறார் (காண். திப 17:1). அந்த மூன்று நாள்களிலேயே நிறையப்பேரைக் கிறிஸ்துவை நோக்கித் திருப்புகின்றார். அவர்கள் மீண்டும் தங்கள் பழைய வாழ்க்கைக்குத் திரும்பாவண்ணம் அவர்களை மீண்டும் சந்திக்கவும், அவர்களுக்கு கடிதங்கள் (இரண்டு) எழுதவும் செய்கின்றார். இக்கடிதங்களில் மேலோங்கி நிற்கும் கருத்துரு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை. பவுலும், அன்றைய திருச்சபையாரும் கிறிஸ்துவின் வருகை மிக அருகில் இருப்பதாகவும், அது தங்கள் காலத்திலேயே நடந்தேறும் என்று நம்பினர். இந்தப் பின்புலத்தில்தான், அவரின் வருகைக்கான தயாரிப்பை அறிவுரையாகத் தருகின்றார் பவுல்: ‘… நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு, அவர்கள் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!’ உள்ளங்களை உறுதிப்படுத்தும் ஆண்டவர், ‘அவர்கள் ஒருவர் மற்றவருக்காகக் கொண்டுள்ள அன்பை வளர்த்துப் பெருகச் செய்வாராக!’ என்றும் பவுல் வாழ்த்துகின்றார்.

நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 21:25-28, 34-36), மானிட மகனின் வருகையின்போது கதிரவனிலும், நிலவிலும், விண்மீன்களிலும், வான்வெளிக் கோள்களிலும் நிகழும் மாற்றங்களை திருவெளிப்பாட்டு நடையில் பட்டியலிடும் இயேசு, ‘உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது’ என்ற அவசரமான ஆறுதலைத் தந்து, ‘உங்கள் உள்ளங்கள் குடிவெடி, களியாட்டம், இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினால் மந்தம் அடையாதவாறு காத்துக்கொள்ளவும்,’ ‘அந்நாள் திடீரென ஒரு கண்ணியைப் போல் சிக்க வைக்காதவாறு எச்சரிக்கையாக இருக்கவும்,’ ‘மானிட மகன்முன் நிற்க வல்லவராவதற்கு எப்போதும் விழிப்பாயிருந்து மன்றாடவும்’ அறிவுறுத்துகின்றார். ‘இப்பொழுதே இன்பம்’ என்று ‘குடிவெறி’, ‘இனி ஒன்றும் இல்லை’ என்று ‘களியாட்டம்,’ ‘நேற்று இப்படி ஆகிவிட்டதே’ என்று ‘கவலை’ நம்மை மந்த நிலைக்கும் தேக்கநிலைக்கும் இட்டுச் செல்கின்றன. ‘கண்ணி’ என்பது விவிலியத்தில் எதிரி அல்லது பகைவரின் சூழ்ச்சியின் உருவகம். ‘இறைவேண்டல்’ என்பது லூக்கா நற்செய்தியில் இறையுறவுக்கான முக்கியமான கூறு. ஒருவர் கொண்டிருக்கிற விழிப்புநிலையில்தான் அது சாத்தியமாகிறது. இறைவேண்டலில் நம் உள்ளம் ஆண்டவரை நோக்கி எழுகின்றது.

ஆக, ஆண்டவர் தருகின்ற நீதியை நோக்கி எருசலேமும், அன்பை நோக்கி தெசலோனிக்கத் திருஅவையும், மீட்பை நோக்கி நாமும் நம் உள்ளங்களும் உயர வேண்டும்.

திருவருகைக்காலம் முதல் வாரத்தில், ‘உம்மை நோக்கி என் உள்ளம்’ என்னும் கருத்துரு நமக்கு எதை உணர்த்துகிறது? ஆண்டவரின் இரண்டாம் வருகை பற்றியும், உலக முடிவு பற்றியும் இன்று எண்ணற்ற விவாதங்களும், பரப்புரைகளும், அச்சுறுத்தல்களும் நம்மைச் சுற்றி நடக்கின்றன. தொடங்கியது அனைத்தும் நிறைவுறும் என்பது எதார்த்தம். நம் இயக்கத்தின் இலக்கான இயேசுவில் அனைத்தும் நிறைவுபெறும் என்பது நம் எதிர்நோக்கு. வருகின்ற ஒன்றுக்காகக் காத்திருப்பது என்பது, இருக்கின்ற ஒன்றில் மூழ்கிவிடாமல் இருக்க எச்சரிக்கிறது. மேலும், ‘மானிட மகன் முன் வல்லவராக நிற்பதற்கு’ தகுதிப்படுத்தும் செயல்களை மட்டும் செய்யுமாறு நம் இலக்குகளைக் கூர்மைப்படுத்துதல் அவசியம்.

‘உம்மை நோக்கி என் உள்ளம்’ என்று நாம் எதிர்நோக்கத் தடையாக இருப்பவை எவை?

(அ) ஆன்மிக மந்தநிலை. ‘குளிர்ச்சி அல்லது சூடு நலமாக இருந்திருக்கும்’ எனச் சொல்கின்ற ஆண்டவர், ‘வெதுவெதுப்பாய் இருப்பதை’ கடிந்துகொள்கின்றார் (காண். திவெ 3:16). வழிபாடுகள், வெளிப்புறக் கொண்டாட்டங்கள் ஆகியவற்றைத் தாண்டிய ஆன்மிகத்தை நம்மால் கற்பனை செய்ய முடியவில்லை. கடவுளுக்கும் நமக்கும், நமக்கும் நமக்கும், நமக்கும் பிறருக்கமான உறவுநிலைகளில் நாம் வெட்கம், பயம், குற்றவுணர்வு ஆகியவற்றை விட்டு விலகி நின்றால் அதுவே சிறந்த ஆன்மிகம். கடவுளில் வேரூன்றிய உறவுநிலை ஒருவர் மற்றவர் நோக்கி நம்மை நகர்த்துவதாக!

(ஆ) கவனச் சிதறல்கள். இணையதளங்களும் சமூக ஊடகங்களும் நம் இன்றைய குடிவெறியாகவும், களியாட்டமாகவும், கவலையாகவும் – ஏனெனில், எவ்வளவு நுகர்ந்தாலும் இன்னும் அதிகம் நுகரவே விரும்புகிறோம், மெய்நிகர் உணர்வே உண்மை என நினைக்கிறோம், பிறர் பார்க்கவும் விரும்பவும் இல்லையே என்று கவலை கொள்கிறோம் – மாறிவிட்டன. இவற்றிலிருந்து நம் கண்கள் உயர்ந்தால்தான் நம் உள்ளம் இறைவனை நோக்கி உயரும்.

(இ) அநீதியால் வரும் சோர்வு. நம் சமூக, அரசியல், பொருளாதர, சமயம், மற்றும் பணித்தளச் சூழல்களில் நாம் எதிர்கொள்ளும் அநீதி நமக்கு மனச்சோர்வையும் விரக்தியையும் தருவதால், நம்மால் நிமிர்ந்துகூடப் பார்க்க இயலாத அளவுக்குச் சோர்ந்து போகின்றோம். ‘ஆண்டவரே நமது நீதி!’ என்பது வெறும் எதிர்நோக்காகவே இருந்துவிடுமோ என அச்சப்படுகின்றோம். ஆண்டவர் தன் வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை நம் சோர்வை அகற்றும்.

இறுதியாக, புதிய திருவழிபாட்டு ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கும் நாம் இன்று ஏற்றும் முதல் திரியான ‘எதிர்நோக்கு’ அணையாமல் ஒளிவீசுவதாக! ‘உம்மை நோக்கி என் உள்ளம்’ என்னும் சரணாகதியும் காத்திருப்பும்தான் ‘எதிர்நோக்கு.’

இன்று ஆண்டின் இறுதி மாதத்தின் முதல் நாள். திருவருகைக்காலத்தின் 24 நாள்களும் நம் உள்ளத்தை ஏதோ ஒரு வகையில் – இறைவேண்டல், தன்மறுப்பு, தியாகம், பிறரன்புச் செயல் வழியாக – கடவுளை நோக்கி உயர்த்துவோம்! அவரே நம் எதிர்நோக்கு!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

உள்ளங்களை உறுதிப்படுத்தி காத்திருப்போமா!

நாம் எல்லாரும் இன்று திருவருகைக் காலத்தில் அடி எடுத்து வைக்கிறோம். திருவருகைக் காலம் நம்மை இரு முக்கிய நிகழ்வுக்கு தயார் செய்ய அழைக்கிறது. முதலாவதாக கிறிஸ்து இயேசு மீட்பராய் இம்மண்ணில் பிறந்து நம்மோடு ஒன்றாய் ஆன நிகழ்வை நினைவு கூர்ந்து மகிழ்ந்து கொண்டாட நம்மை தயாரிக்கும் காலமாக இருக்கிறது.

இரண்டாவதாக விண்ணகம் சென்று தந்தையின் வலப்பக்கம் அமர்ந்திருக்கும் இயேசு ,மீண்டுமாய் மண்ணகத்திற்கு வந்து நீதித் தீர்ப்பு வழங்கும் நாளிற்காய் நம்மைத் தயாரிக்கும் காலமாகவும் இருக்கிறது. அக்காலம் நாம் வாழும் இக்காலமாகக்கூட இருக்கலாம்.

திருவருகைக்காலத்தின் முதல்வாரமானது "எதிர்நோக்கோடு காத்திருத்தல் " என்ற சிந்தனையை நமக்கு தருகிறது. நமது திருத்தந்தை நமக்கெல்லாம் கொடுத்துள்ள அறைகூவல் இதுதான் "எதிர்நோக்கின் திருப்பயணிகளாக " .எதிர்நோக்கு என்பது என்ன? அது நம்பிக்கையின் மற்றொரு பரிமாணம். பலவிதமான குழப்பமான சூழல்கள் சவால்கள் மற்றும் துன்பங்கள் மத்தியிலும் நாம் விரும்புகிறவை நிறைவேறும் என்று நம்பிக்கையோடு காத்திருப்பதே இந்த எதிர்நோக்கு என்னும் நற்பண்பு.

பல்வேறு விதமான அரசியல், பொருளாதார, சமூக, பாவ அடிமைத்தளத்தில் மூழ்கி கிடந்த இஸ்ரயேலர்கள் தங்களை மீட்க மெசியா வருவார் என்று எதிர்நோக்கி காத்திருந்த அதே மனநிலையை நமதாக்கி நாமும் நம் இயேசு ஆண்டவரின் வருகைக்காய் காத்திருக்க அழைக்கப்படுகிறோம்.

இன்றைய வாசகங்களும் இத்தகைய எதிர்நோக்கை நமக்கு அளிக்கின்றன. தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன் என்ற ஆண்டவரின் வாக்குறுதி அவர் தரும் மீட்புக்காய் நம்மையே நாம் தயாரிக்க அழைக்கிறது. இயற்கையிலும் மனித வாழ்விலும் குழப்பம் தரும் அறிகுறிகள் தென்படும் போது மீட்பு நெருங்கி வருகிறது என தலைநிமிர்ந்து நில்லுங்கள் என்ற இயேசுவின் கூற்று நமது எதிர்நோக்கிற்கு உரமூட்டுகிறது. கடவுளுக்கு உகர்ந்தவர்களாய் வாழவும் அதில் நாளுக்கு நாள் முன்னேறவும் வேண்டுமென்ற பவுலடியாரின் அழைப்பு நம்மையே நாம் தயாரித்துக்கொள்ளவேண்டிய தருணத்தில் இருக்கிறோம் என்ற தேவையை உணர்த்துகிறது.

இச்சிந்தனைகளையெல்லாம் நம் உள்ளத்தின் ஆழத்தில் ஏற்றுக்கொண்டு நம்மையே நாம் கிறிஸ்துவின் வருகைக்காய் தயாரிப்போம். இக்காலம் நமக்கு அருளின் காலமாகத் திகழட்டும்.

இறைவேண்டல்

இயேசுவே எங்கள் மீட்பரே!
எதிர்நோக்கோடு உமக்காய் காத்திருக்கும் எங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவீராக. ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு ser