புனித மகதலா மரியா

சகோ. ஜோவிட்டா, தூய சிலுவை மடம்‌, திருச்சி

புனித மகதலா மரியா இறைவன்‌ மீது அன்புகொண்டு, இறை அருளால்‌ ஈர்க்கப்பட்டு, செபத்தின்‌ மூலம்‌ இறைவனின்‌ அருளை உலகம்‌ அறிந்திடச்‌ செய்தவர்களே புனிதர்கள்‌. இவர்கள்‌ தம்‌ வாழ்வில்‌ சந்திக்கும்‌ துன்பங்களைக்‌ கண்டு அஞ்சாது துணிவுடன்‌ “ஆண்டவரைத்‌ தவிர வேறு யாரையும்‌ வணங்கமாட்டேன்‌” (எஸ்தர்‌ 8:17) என்ற உறுதியோடு “என்‌ தாய்‌ வயிற்றில்‌ நான்‌ உருவாகுமுன்பே என்னை அறிந்திருந்த கடவுள்‌” (எரே 1:5); “கருவிலிருந்தே என்னை மிக்கக்‌ கவனமுடன்‌ சுமந்து” (எசா 46:3); என்னைக்‌ கைபிடித்து நடக்கப்‌ பழகின கடவுளின்‌ (ஓசே 11:3) அன்பை மக்கள்‌ புரிந்து, அவரின்‌ பாதையில்‌ நடந்து, “உண்டாலும்‌, குடித்தாலும்‌, எதைச்‌ செய்தாலும்‌ கடவுளின்‌ மகிமைக்காகவே” செய்து (1கொரி10:81), இறை அன்பில்‌ உலகம்‌ வளர்ந்திட சாட்சியாக வழிகாட்டிகளாய்‌ வாழ்ந்த இவர்கள்தாம்‌ புனிதர்கள்‌! அவர்கள்‌ “உன்னைப்‌ படைத்த கடவுளை உன்‌ இளமைப்‌ பருவத்தில்‌ மறவாதே” (ச.உ.12:1) என்ற இறைவாக்கை இதயத்தில்‌ ஏற்று, தியாகச்‌ செயல்கள்‌ பல செய்து, உடலை ஒறுத்து, உலக நாட்டங்களில்‌ ஈடுபடாது “வழியும்‌, உண்மையும்‌, வாழ்வும்‌ நானே” (யோவா 14:6); “என்‌ வழியாய்‌ அன்றி எவரும்‌ தந்தையிடம்‌ வருவதில்லை” என்ற இறைவாக்‌கின்படி வாழ்ந்து மக்களுக்கு ஒரு முன்மாதிரியாய்‌ (Role Model) வாழ்ந்தவர்கள்‌. எவரும்‌ தந்தையிடம்‌ வருவதில்லை” என்ற இறைவாக்‌கின்படி வாழ்ந்து மக்களுக்கு ஒரு முன்மாதிரியாய்‌ (Role Model) வாழ்ந்தவர்கள்‌.

புனித மகதலா மரியா, இவர் பெண்ணாக இருந்தும்‌ துணிவுடன்‌ இறைப்பணி செய்தவர்கள்‌. இவர்‌ நோயிலும்‌ இறைவனை அன்பு செய்து வாழ்ந்த புனிதை ஆனவர்‌. “ஆண்டவரே எனக்குத்‌ துணை; நான்‌ அஞ்சமாட்டேன்‌. மனிதர்‌ எனக்கெதிராய்‌ என்ன செய்ய முடியும்‌?” (எபி 13:6 ) என்று துணிச்சலுடன்‌ செயலாற்றியவர்கள்‌. “பாவி” என்று பட்டம்‌ சூட்டி உலகத்தினர்‌ பார்வையில்‌ ஓரம்‌ கட்டப்பட்டவர்‌ மகதலா மரியா. இவ்வாறு மனிதரால்‌ இகழப்பட்டவர்‌ இவர்‌. இயேசு சாகும்‌ போது சிலுவை அடியில்‌ நின்றவர்களுள்‌ ஒருவர்‌. இவருக்கே இயேசு மரித்து, உயிர்த்த போது முதலில்‌ காட்சியானார்‌. எனவே இயேசுவின்‌ உயிர்ப்பை சீடர்களுக்கு அறிவித்து பயத்தைப்‌ போக்கி, “கடவுளை புகழ்ந்து பாடி அவரது பெயரைப்‌ போற்றுங்கள்‌” (திபா 68:4) என்று சீடர்களுக்குத்‌ துணிவு அளித்தார்‌.

எனவே இந்த இருவரின்‌ வாழ்வும்‌ நாம்‌ விசுவாசத்தில்‌ வளர ஒளிச்சுடராய்‌ “என்‌ உயிரே ஆண்டவரைப்‌ போற்றிடு” (திபா 101:1) என்று இறைவனை நாம்‌ போற்றி மகிழ வழிகாட்டிகளாய்‌ வாழ்ந்தவர்கள்‌.

மகதலா என்பது அவர்‌ ஊரின்‌ பெயர்‌. அதை அடைமொழியாய்‌ கொண்டு மகதலா மரியா என்று அழைக்கப்படுகிறார்‌. இயேசுவைப்‌ பின்‌ தொடர்ந்து வாழ்ந்தவர்களுள்‌ இவர்‌ சற்று வேறுபட்டவர்‌. “மரியா” என்று உயிர்த்த ஆண்டவர்‌ அழைத்தபோது மரியா திரும்பிப்‌ பார்த்து “ரபூனி” என்றார்‌ (யோவா 20:16).

சமுதாயத்தில்‌ ஒதுக்கப்பட்டு பாவி, பேய்‌ பிடித்தவள்‌ என்ற பட்டம்‌ சூட்டப்பட்டவர்‌. இவர்‌ தன்‌ வாழ்க்கையை மாற்றி அமைக்க விரும்பினார்‌. எப்படியாவது இயேசுவைக்‌ கண்டு, பாவமன்னிப்புப்‌ பெற்று புது வாழ்வு அடைவதே இவரின்‌ நோக்கம்‌. டைபாஸ்‌ தீவை அடுத்த கலிலி எனும்‌ பகுதியில்‌ உள்ள மகதலா என்பது இவரின்‌ சொந்த ஊர்‌. அங்குள்ளோரின்‌ தொழில்‌ மீன்‌ பிடித்தலாகும்‌. இத்தகு தொழில்‌ செய்வோர்‌ கல்வி அறிவற்றவர்கள்‌. எனவே அவர்களது வாழ்வும்‌ நாகரீகமற்றதாகும்‌.

ஆனால்‌ புனித மகதலா மரியாவின்‌ உள்ளத்தை அறிந்தவர்‌ ஆண்டவர்‌ இயேசு. பரிசேயரைப்‌ போல்‌ ஆண்டவர்‌ அவரைத்‌ தீர்ப்பிடவில்லை. பரிசேயர்‌ வீட்டில்‌ இயேசு உணவருந்த வந்தார்‌. அதைக்‌ கேள்விப்பட்ட மகதலா மரியா நறுமணத்‌ தைலம்‌ கொண்ட படிகச்‌ சிமிழைக்‌ கொண்டு வந்தார்‌. இயேசுவுக்குப்‌ பின்னால்‌ கால்மாட்டில்‌ வந்து அவர்‌ அழுதுகொண்டே நின்றார்‌. அவருடைய காலடிகளைத்‌ தன்‌ கண்ணீரால்‌ நனைத்து, தன்‌ கூந்தலால்‌ துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில்‌ நறுமணத்‌ தைலம்‌ பூசினார்‌ (லூக்‌ 7:3). இதைக்‌ கண்ட பரிசேயர்‌ கோபம்‌ கொண்டு “இவள்‌ பாவியாயிற்றே” என்று தமக்குள்ளே சொல்லிக்‌ கொண்டனர்‌ (லூக்‌ 7:39). அவர்களின்‌ உள்ளக்‌ கருத்தினை அறிந்த இயேசு “அவரைத்‌ தடுக்க வேண்டாம்‌. ஏனெனில்‌ ஏழைகள்‌ என்றும்‌ உங்களோடு இருக்கிறார்கள்‌. ஆனால்‌ நான்‌ எப்போதும்‌ உங்களோடு இருக்கப்‌ போவதில்லை. இவர்‌ தம்மால்‌ இயன்றவற்றைச்‌ செய்‌தார்‌. என்‌ அடக்கத்திற்காக இவர்‌ முன்னதாகவே என்‌ உடலுக்குத்‌ தைலம்‌ பூசிவிட்டார்‌. உலகம்‌ முழுவதும்‌ எங்கெல்லாம்‌ நற்செய்தி அறிவிக்கப்‌படுமோ அங்கெல்லாம்‌ இவர்‌ செய்ததும்‌ எடுத்துக்கூறப்படும்‌. இவரும்‌ நினைவு கூறப்‌படுவார்‌ என உறுதியாக உங்களுக்குச்‌ சொல்கிறேன்‌” என்றார்‌ (மாற்‌ 14:8-9).

இவ்வாறு மனம்‌ மாறிய மரியாவின்‌ உள்ளத்தை அறிந்த இயேசு அவரின்‌ செயலையும்‌ பாராட்டுகிறார்‌. தாவீது தன்‌ தவறை உணர்ந்து மனம்‌ மாறி கூறியதைப்‌ போல்‌, “கடவளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்‌ . என்‌ தீவினை முற்றிலும்‌ நீங்கும்படி என்னைக்‌ கழுவியருளும்‌” (திபா 51:1-2) என்ற இறைவாக்கின்படி மரிய மகதலா இயேசுவின்‌ பாதத்தில்‌ அமர்ந்து கண்ணீர்‌ வடிக்கும்‌ அவரின்‌ வேண்டுதல்‌ கேட்டு அப்பெண்ணைப்‌ பார்த்து “உம்‌ பாவங்கள்‌ மன்னிக்கப்பட்டன” என்றார்‌ (லூக்‌ 7:48).

எனவே, எப்படிப்பட்ட பாவியாயினும்‌ மனம்‌ வருந்தி ஆண்டவரிடம்‌ வேண்டும்போது மகதலா மரியாவைப்போல்‌ புனிதையாகி, நற்செய்தியின்‌ தூதுவராகி புனிதப்‌ பட்டம்‌ பெறமுடியும்‌ என்பது உறுதி. எனவே திருச்சபை ஜூலை 22 ஆம்‌ நாள்‌ இவரது திருவிழாவைக்‌ கொண்டாடுகிறது. பாவத்தில்‌ வாழ்ந்த மகதலா மரியா, இறை அன்பைச்‌ சுவைத்து வாழ, ஆழ்ந்த தியானம்‌ செய்பவர்களுக்குப்‌ பாதுகாப்பு அளித்து இறை வழியில்‌ நடக்கப்‌ பெரும்‌ துணைப்பு‌ரிகிறார்‌.

ஆண்டவரைப்‌ பிரிந்து வாழ்வது மகதலா மரியாவுக்கு வெறுமையாகத்‌ தோன்றியது. ஆதலால்‌ இயேசு அடக்கம்‌ செய்யப்பட்ட கல்லறைக்குச்‌ சென்று அவரைத்‌ தேடினார்‌. அவரது அன்பான தேடலை அறிந்து, வாரத்தின்‌ முதல்‌ நாள்‌ காலையில்‌ இயேசு உயிர்த்தெழுந்த பின்பு முதலில்‌ மகதலா மரியாவுக்குத்‌ தோன்றினார்‌. “அவரிடமிருந்துதான்‌ அவர்‌ ஏழு பேய்களை ஓட்டியிருந்தார்‌. மகதலா மரியா புறப்பட்டுச்‌ சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம்‌ இதை அறிவித்தார்‌” (மாற்‌ 16:9). இவர்‌ வழியாக இயேசுவின்‌ உயிர்ப்பு அறிவிக்கப்பட்டதால்‌ மகதலா மரியா நற்செய்தி அறிவிக்கும்‌ பணியில்‌ ஈடுபட்டு, சீடர்களுக்கு நம்பிக்கை எனும்‌ மகிழ்ச்சி அறிவித்தலை சிறப்பாகச்‌ செய்து வந்தமையாலும்‌, பழைய தீச்செயல்களை விரட்டி விட்டு இயேசுவைப்‌ பின்பற்றி நடந்ததாலும்‌ புனித நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளார்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது