புனித ஜெரோம் எமிலனி

திரு சந்தியாகு

இவர்‌ இத்தாலி நாட்டில்‌ ஓர்‌ உயர்‌ குடும்பத்தில்‌ பிறந்தவர்‌. தன்‌ தந்தை. இறந்தபின்‌ 'இராணுவத்தில்‌ சேர்ந்தார்‌. ஒரு போரில்‌ கைதியாக்கப்பட்டு விலங்கிடப்பட்டார்‌. சிறையில்‌ அடைந்த இன்னல்களை மிகுந்த பொறுமையுடன்‌ ஏற்றுக்கொண்டார்‌.

இவர்‌ தேவதாயின்மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார்‌. சிறையில்‌ நாட்களை செபதியானத்தில்‌ செலவழித்தார்‌. இதுவரை உலக நோக்குடன்‌ வாழ்ந்தவர்‌ தம்‌ வாழ்வைத்‌ திருத்தி அமைப்பதாக தேவதாய்க்கு வாக்களித்தார்‌. அற்புதமான முறையில்‌ சிறையிலிருந்து, தப்பினார்‌.‌

பத்து ஆண்டுகள்‌ படித்து குருப்பட்டம்‌ பெற்றார்‌. அக்காலத்தில்‌ ஏற்பட்ட கொள்ளை நோய்களால்‌ வருந்துவோரைச்‌ சந்தித்து தம்மால்‌ இயன்ற உதவி அனைத்தையும்‌ அளித்தார்‌.

கொள்ளை நோயினாலும்‌, பஞ்சத்தினாலும்‌ பெற்றோரை இழந்த ஆதரவற்ற பிள்ளைகளைச்‌ சேர்த்து அவர்களுக்குத்‌ தொண்டு புரிந்தார்‌. அவர்களைப்‌ பேணுவதற்காகவே 1537 ஆம்‌ ஆண்டு ஒரு துறவற சபையை நிறுவினார்‌.

பல நகரங்களிலும்‌ இருந்த கைவிடப்பட்ட ஆதரவற்ற பிள்ளைகளை ஒன்றுசேர்த்துப்‌ பேணி வருவது இந்தச்‌ சபையினரின்‌ முதன்மையானக்‌ குறிக்கோளாக இருந்தது.

பின்னர்‌ இச்சபையைச்‌ சேர்ந்த துறவிகள்‌ சிறுவர்களுக்கு கல்வி கற்பிக்கத்‌ தொடங்கினர்‌. வழிதவறிய பெண்களுக்கென்று இப்புனிதர்‌ ஒரு நிறுவனத்தை அமைத்தார்‌.

1537 ஆம்‌ ஆண்டு ஒருமுறை புனிதர்‌ தொற்று நோயாளருக்குப்‌ பணிவிடை செய்து வருகையில்‌ தாமும்‌ அதே நோயால்‌ தாக்கப்பட்டு இறந்தார்‌.

9 ஆம்‌ பத்திநாதர்‌ இவரை ஆதரவற்ற ஏழைகளுக்குப்‌ பாதுகாவலராக அறிவித்தார்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது