புனிதர்களின்‌ தோழமை உறவு

அருள்சகோதரி ஜோவிட்டா - தூய சிலுவை மடம்

இவர்களே புனிதர்கள் :

மனிதனின் மாண்பு அவரின் பிறப்பால் அல்ல, மாறாக அவரவரின் செயலே மனிதனை மாண்புடன் வாழத் துணைபுரிகிறது. மனிதமும், புனிதமும் இணையும்போது ஒருவன் மாட்சி பெறுகிறான். மனிதனாகப் படைக்கப்பட்ட எல்லோரும் கடவுளை போற்றிப் புகழ்ந்து அவரின் சித்தப்படி வாழவே படைக்கப் பட்டிருக்கிறோம். புனிதர்கள் என்று போற்றப்படும் மனிதர்கள் இறையன்பைச் சுவைத்தவர்கள். எப்பொழுதும் இறைவனோடு இணைந்து அவரின் சித்தப்படி வாழ்ந்து தியாகத்திலும், செபத்திலும் தங்கள் வாழ்வின் பெரும் பகுதியைச் செலவிட்டு இயேசுவின் அன்பிற்குச் சாட்சிகளாய் வாழ்ந்தார்கள். "நீங்கள் என்னுள்ளும், என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்” (யோவா 15:7). "நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன். நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்" (யோவா 4:14-15) என்று இயேசு கூறியதை தமது வாழ்வாக்கி இறையன்பு - பிறரன்பு மிகுந்து வாழ்ந்த இவர்கள் பிறருக்காக இயேசுவிடம் பரிந்து பேசினால் அவர்கள் மன்றாட்டு கேட்கப்படும்.

புனிதர்களின் செபத்தால் அதிசயம், அற்புதம் நடந்து நாம் விசுவாசத்தில் வளர பெரும் துணை புரிகிறது. இயேசுவின் பிறப்பு உலகில் சமாதானத்தை அளித்தது (லூக் 2:13). அதேபோல் புனிதர்கள் பிறப்பால் இறையன்பு பூமியில் அதிகரித்தது. பரிசுத்தமாய் வாழ்ந்து பாவத்தை வெறுத்து வாழ்ந்ததால் இவர்கள் புனிதரானார்கள். "பாவம் செய்வதைவிட சாவதே மேல்" என்றார் புனித டோமினிக் சாவியோ. "ஒருவர் உலகம் முழுவதையும் தனதாக்கிக் கொண்டாலும், தன் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன ?" (மாற் 8:36) என்ற இயேசுவின் வாக்கின்படி உலக இன்பத்தை வெறுத்து தனது ஆத்மாவை புனிதமாகக் காத்துக்கொண்டு பரிசுத்தமாய் வாழ்ந்த இவர்களே புனிதர்கள்.

குடும்பம் குட்டித் திருச்சபை:

இயேசு-மரி - சூசை வாழ்ந்த குடும்பம் திருக்குடும்பம். அங்கு அன்பு, அமைதி, செபம், உறவு மிகுதியாகக் காணப்பட்டன. 'நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்ற வார்த்தை உண்மையிலே அந்தக் குடும்பத்தில் காணப்பட்டது. எனவே, இயேசு பணிவோடு, பாசத்தோடு கீழ்ப்படிந்து வாழ்ந்தார். அன்பிற்கு ஆணிவேராய் அமைவது பெற்றோரே. எங்கு அன்பு உண்டோ அங்கு அமைதியும் அடக்கமும் உண்டு. எனவே, பெற்றோர் பிள்ளைகளை புனிதத்தில் வளர்க்க முடியும். தவறு நிகழும்போது செபத்தால் திருத்த முடியும். மகன் மனம் மாற செபித்த மோனிக்காவின் செபம் கேட்கப்பட்டு தனது மகனை புனிதராகக் கண்டார் புனித மோனிக்கா. மம்மா மார்கிரேட் தனது மகனை பரிசுத்தமாய் வளர்த்ததால் ஜான் போஸ்கோ புனிதரானார். புனித அருளானந்தர் தன் நாட்டை விட்டு இந்தியா வந்து வேதசாட்சியாய் மரித்தார். தன் மகன் இறந்தார் என்ற செய்தி கேட்ட அவரின் தாய் அழாது பட்டாடை அணிந்து மகிழ்ந்தார். தன் தாய்மை நிலையில் பாசம் இருந்தாலும் இயேசுவின் சாட்சியாய் வாழ தன் மகனுக்கு துணிவைக் கொடுத்த தாயுள்ளம் தன் மகன் இறையன்பிற்கும், உண்மைக்கும், நீதி நேர்மைக்கும் சாட்சியாய் வாழ்ந்து உண்மைக்காக இரத்தம் சிந்தி மரித்ததால் மகிழ்ந்தது. தன் ஏழு பிள்ளைகளும் விசுவாசத்திற்காய் போராடி மரித்ததை பெசிலிட்டி எனும் தாய் கண்டு அழாது அவர்களை ஊக்குவித்தாள். இவ்வாறு பல பெண்கள் தங்கள் மனதை மாற்றி தம் பிள்ளைகளையும் புனிதராக்கிய புனிதைகள் பலர் உண்டு. புனித ஹெலினேர் தன் மகனுக்கு தாழ்ச்சியைக்‌ கற்றுக்கொடுத்து சிலுவையின்‌ மகத்துவத்தை உலகு அறியச்‌ செய்தவர்‌. இவர்களுக்கெல்லாம்‌ முன்னோடியாக புனித அன்னாள்‌-சுவக்கீன்‌. இவர்களின்‌ புனித உறவால்‌ உதித்தவர்‌ அன்னை மரியா. தன்னை ஈன்ற பெற்‌றோரின்‌ பாசம்‌, பக்தி. தியாகம்‌, செபம்‌ இவையே மாதாவை தியாகத்தின்‌ தாயாக, தாழ்ச்சியின்‌ சிகரமாக மாற்றியது. எல்லாவற்றிற்கும்‌ மேலாக “பெண்களுக்குள்‌ பேறுபெற்ற மரியே' என்று - உலகம்‌ போற்றுமளவுக்கு 'பரிசுத்த ஆவியால்‌ நிரப்பப்பட்டவரே, நீர்‌ ஆசி பெற்றவர்‌: என்று எலிசபெத்‌ மரியாவைப்‌ போற்றி மகிழும்‌ அத்தகு பெருமையுடைய மகளை பெற்று வளர்த்த அன்னாள்‌- சுவக்கின்‌ இவர்களின்‌ இல்லற வாழ்வு சிறப்புடையது. எனவேதான்‌ உலகிற்கே தாயாக, அனைவரின்‌ அன்னையாக மரியா போற்றப்படுகிறார்‌. இத்தகு புனிதர்கள்‌ இல்லறத்தில்‌ இருந்து கொண்டே இறை சித்தத்தை ஏற்று, என்றும்‌ எதிலும்‌ இறைவனைப்‌ போற்றி மகிழ்ந்த புனிதப்‌ பெண்கள்‌ ஆவர்‌.

கன்னிப்‌ பெண்களுள்‌ புனிதர்‌ பலருண்டு. அழகு, அந்தஸ்து, பட்டம்‌, பதவி, சொத்து சுகம்‌ அனைத்தையும்‌ துறந்து ஆண்டவருக்காய்‌ தன்‌ வாழ்வை முழுமையாய்‌ அர்ப்பணித்து இல்லற வாழ்வில்‌ ஈடுபடாது வாழ்ந்து இறைவனுக்காய்‌ வாழ்ந்தவர்களே புனித கன்னிப்‌ பெண்கள்‌. இசை வளம்‌ மிக்க செசிலியா அழகு மிக்கவராய்‌ இருந்ததால்‌ பல பாடுகள்‌ பட்ட போதிலும்‌ தன்‌ விசுவாச வாழ்வில்‌ நிலைத்து இரத்தம்‌ சிந்தி புனிதையானார்‌. இவ்வாறே ஆகத்தா, அனஸ்தாசியா, மரிய கொரற்றி, லீமாரோஸ்‌, கேத்தரீன்‌, மார்கிரேட்‌, -கிளாரா... மேலும்‌ ஸ்பெயின்‌ நாட்டைச்‌ சேர்ந்த ஜஸ்டா-ரூபினா என்ற இரு வாலிபப்‌ பெண்களும்‌ . சிலைகளை வணங்க மறுத்ததால்‌ கொடூர "மரணத்திற்கு உள்ளானார்கள்‌. ஸ்பெயின்‌ நாடே போற்றுமளவுக்கு விசுவாசத்தில்‌ உறுதியாய்‌ இருந்து உண்மையான கடவுளையே வழிபட்டு இரத்தம்‌ சிந்தி மரித்தனர்‌. அது மட்டுமல்லாது இந்திய மண்ணில்‌ பிறந்து தனிமை நோயால்‌ பீடிக்கப்பட்டாலும்‌ இறைப்பற்றுடைய புனித அல்போன்சா துறவியாகி கன்னிப்‌ பெண்ணாக மரித்தார்‌. இராணி மரியா மக்கள்‌ நலனுக்காகப்‌ பாடுபட்டு பிறரின்‌ வாழ்வு சிறக்க தன்னுயிரை மாய்த்து இரத்தம்‌ சிந்தி மரித்தார்‌. இவர்களெல்‌லாம்‌ கற்பில்‌ சிறந்து, கடவுளை நேசித்து உண்‌மைக்கும்‌, நீதிக்கும்‌ சாட்சியாய்‌ இரத்தம்‌ சிந்தி மரித்த புனிதப்‌ பெண்கள்‌.

வேதசாட்சிகளாய்‌ மரித்த ஆண்கள்‌:

ஆண்‌- பெண்‌ என்று பாராது எல்லோரும்‌ மீட்படைய இரத்தம்‌ சிந்தினார்‌ இயேசு. இயேசுவின்‌ அன்பு விவரிக்க முடியாதது, விலைமதிப்பற்றது. அந்த இயேசுவின்‌ அன்பைச்‌ சுவைத்து அவரின்‌ போதனையை தமது வாழ்வாக்கி இயேசுவைப்‌ போலவே இரத்தம்‌ சிந்தி மரித்தார்கள்‌ பன்னிரு அப்போஸ்தலர்கள்‌. புனித இராயப்பர்‌ தலைகீழாக சிலுவையில்‌ அறையப்பட்டு மரித்தார்‌. புனித மத்தியாஸ்‌ கற்‌களால்‌ எறியப்பட்டு தலை வெட்டப்பட்டு வேத சாட்சியானார்‌. புனித யாகப்பர்‌ தடியால்‌ அடித்தே கொல்லப்பட்டார்‌, புனித ஆன்ட்ரு எக்ஸ்‌ வடிவிலான சிலுவையில்‌ துன்புறுத்தப்பட்டு இரத்தம்‌ சிந்தி மரித்தார்‌. புனித ததேயு அம்புகளால்‌ தாக்கப்‌பட்டு வேதசாட்சியாய்‌ மரித்தார்‌. புனித யாகப்பர்‌ தலை துண்டிக்கப்பட்டு வேதசாட்சியானார்‌. பாத்தலோமியோ சாட்டையால்‌ அடித்துக்‌ கொல்லப்‌பட்டார்‌. முதல்‌ வேத்சாட்சியாய்‌ மரித்த முடியப்பர்‌ கற்களால்‌ எறிந்து கொல்லப்பட்டார்‌. புனித பிவிப்பு சிலுவையில்‌ அறையப்பட்டு மரித்தார்‌. சைமன்‌, யூதா-ததேயு இழுத்துச்‌ செல்லப்பட்டு இரத்தம்‌ சிந்தி மரித்தார்கள்‌. யோவான்‌ மட்டும்‌ அமைதியான முறையில்‌ மரித்தார்‌. இந்தியா வந்து உண்மைக்கும்‌. நீதிக்கும்‌ போராடிய தோமையார்‌ ஈட்டியால்‌ குத்தப்பட்டு இரத்தச்‌ சாட்சியானார்‌.'

பன்னிரு சீடர்களும்‌ பல பாடுகள்‌ பட்டே மரித்‌தார்கள்‌. நற்செய்தி அறிவித்த மத்தேயு வாளினால்‌ வெட்டப்பட்டும்‌, புனித லூக்கா தூக்கிலிடப்பட்டும்‌, புனித மாற்கு, புனித ஜான்‌ (யோவான்‌) விசுவாசத்‌ தோடு வாழ்ந்து இறைவார்த்தையைப்‌ போதித்து பரிசுத்த உள்ளத்தோடுமரித்தார்கள்‌. “என்‌ அன்பில்‌ நிலைத்திருங்கள்‌” (யோவா 15:9) என்ற வார்த்‌ தையின்படி இயேசுவின்‌ அன்பில்‌ நிலைத்திருந்து அவருக்காக மரித்த இவர்கள்‌ புனிதர்‌ என்று போற்றப்படுகிறார்கள்‌.

இயேசுவின்‌ பணி என்றும்‌ தொடர்ந்திட...

கல்விப்பணி, மருத்துவப்பணி, ஆற்றுப்படுத்தல்‌, சிறை சந்திப்பு இவற்றின்‌ மூலமாகவும்‌, முதியோர்‌ ' விடுதி, அனாதை இல்லம்‌ என்று பல்வேறு பணிகள்‌ மூலமும்‌ இயேசுவின்‌ அன்பை எல்லோரும்‌ சுவைத்‌திட பல சபைகளை உருவாக்கி மரித்த புனிதர்கள்‌ பலர்‌ உண்டு. இயேசு சபையை உருவாக்கி கல்வி, இறை ஞானம்‌ பெற்றிட உழைத்த புனித இஞ்ஞாசியாரின்‌ வழியைப்‌ பின்பற்றி எண்ணற்றவர்‌ புனிதரானார்கள்‌. இந்தியா வந்து கோவா, ஜப்பானில்‌ போதித்து மரித்த சவேரியார்‌ இஞ்ஞாசியாரின்‌ வழித்தோன்றலே. ஏழை எளிய்வர்‌, முதியவர்‌ நலன்‌ பெற வின்சென்ட்‌ தே பால்‌ சபையை தோற்றுவித்தார்‌ ஓசானாம்‌. இறைவார்த்தையை வாழ்‌வாக்கி மரியாவின்‌ பக்தியை உலகறியச்‌ செய்த இரட்‌சகர்‌ சபையை தோற்றுவித்தார்‌ புனித விகோரி, இயற்கையில்‌ இறை அன்பு, இறை பராமரிப்பு உண்டு என்பதை உணர்ந்து, எளிமையே இறைவனின்‌ சிறந்த பண்பு என்று பணிவுடன்‌ வாழ கப்புச்சின்‌ சபையை தோற்றுவித்தார்‌ பிரான்சிஸ்‌ அசிசியார்‌. பாதை தடுமாறி திரியும்‌ இளையோரை ஆற்றுப்படுத்தி அன்பு காட்டி, தந்தைபோல்‌ அர வணைத்து, இறையன்பை இளையோர்‌ பெற்றிட புனித ஜான்‌ போஸ்கோ சலேசிய சபையை உருவாக்கினார்‌.

அன்றும்‌ இன்றும்‌ நிறுவனப்‌ பொறுப்பேற்று நடத்துவது பெரும்‌ போராட்டமே. பணப்‌ பிரச்சனைகள்‌, மருத்துவ ரீதியாகத்‌ துன்பங்கள்‌ பல இருந்தபோதும்‌ இறைவனையே நம்பி பல சேவைகள்‌ செய்தார்கள்‌. “நீங்கள்‌ இறைவனிடம்‌ வேண்‌டும்போது நம்பிக்கையுடன்‌ கேட்பதை எல்லாம்‌. - பெற்றுக்கொள்வீர்கள்‌” (மத்‌ 21:22) என்று இடைவிடாது செபத்தில்‌ ஒன்றித்து, சபைகளை உருவாக்கி, அப்பணி தொடர அல்லும்‌ பகலும்‌ தியாகத்‌தோடு உழைத்து மரித்த புனிதர்களாகிய இவர்கள்‌ பெருமைக்குரியவர்கள்‌. “உன்னைக்‌ காக்கும்படி நான்‌ உன்னுடன்‌ இருக்கிறேன்‌” (எரே 18) என்ற இறைவாக்கின்படி சபைகளின்‌ வழியாக இறைப்‌பணி ஆற்றிய இவர்களும்‌ புனிதர்களே.

இல்லறத்தில்‌ இணைந்தும்‌ புனிதரான பெண்கள்‌:

அன்னை மரியாவே பொறுமை, தாழ்ச்சியின்‌ சிகரமாக, கடின உழைப்பால்‌ இறை திட்டத்தை ஏற்று செபத்தில்‌ அதிகம்‌ ஈடுபட்டு பல பெண்களுக்கு மாதிரியாக வாழ்ந்த புனிதப்‌ பெண்‌, நம்‌ எல்லோரின்‌ தாய்‌. புனிதமாய்‌ வாழ்ந்த மரியா எலிசபெத்திற்கு உதவிட தியாகத்தோடு சென்று எலிசபெத்தைச்‌ சந்தித்தார்‌. மரியாவின்‌ வாழ்த்‌ தொலி கேட்டு எலிசபெத்‌ வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால்‌ துள்ளிற்று. எலிசபெத்தும்‌ தூய ஆவியால்‌ ஆட்கொள்ளப்பட்டு "பெண்களுக்குள்‌ நீர்‌ ஆசி பெற்றவர்‌, உம்‌ வயிற்றில்‌ வளரும்‌ குழந்தையும்‌ ஆசி பெற்றதே: என்று மரியாவை வாழ்த்தினார்‌. எனவே, இவர்களின்‌ குழந்தைகள்‌ தூய ஆவியின்‌ அருள்‌ பெற்று புனிதமாய்‌ வாழ்ந்து, இறை சித்தப்படி வாழ்ந்து பிறரை புனிதப்‌ பாதையில்‌ நடத்தி புனிதராய்‌ வாழ வழிகாட்டிய உன்னத குழந்தைகள்‌ ஆனார்கள்‌. தாயின்‌ வளர்ப்பே இதற்குக்‌ காரணம்‌. இந்தப்‌ புனித தாய்மார்களைப்‌ போன்று புனிதமாய்‌ வாழ்ந்து தம்‌ பிள்ளைகளை புனிதப்‌ பாதையில்‌ வளர்த்த புனிதப்‌ பெண்கள்‌ பலர்‌ உண்டு. அவர்‌ களில்‌ சிலர்‌ அரசர்களை மணந்தும்‌ ஆடம்பரத்தில்‌ ஈடுபடாது தம்‌ கணவர்களின்‌ மனதையும்‌ மாற்றி புனிதமாய்‌ வாழ்ந்து, பிறர்நலனில்‌ அக்கறை காட்டி வாழ்ந்து, மரித்தவர்கள்‌ புனித எலிசபெத்‌ ஹங்கேரி, மார்கிரேட்‌ ஸ்காட்லாந்து, புனித எட்விச்‌ ஆகியோர்‌. புனித மோனிக்கா தன்‌ மகன்‌ மனம்‌ மாறிட இடைவிடாது செபத்தில்‌ ஈடுபட்டு மகனையும்‌ புனித . ராக்கினார்‌. புனித ரீட்டா, புனித பிரிஜிட்‌, கேத்தரின்‌ ஜெனிவா இவர்கள்‌ கணவரால்‌ பல பாடுகள்‌ பட்டா லும்‌ மனம்‌ சோர்ந்து போகாது பல நற்செயல்கள்‌ மூலம்‌ புனிதையானார்கள்‌. புனித ரீட்டா கணவரால்‌ பல பாடுகள்‌ பட்டபோதும்‌ அவரின்‌ குழந்தை கள்‌ ஆதரவு கொடுத்து விசுவாசத்தைக்‌ காத்தனர்‌. - நோய்பட்ட கணவரை நன்கு கவனித்து அவரின்‌ மர ணத்திற்குப்‌ பின்‌ பிளேக்‌ நோயால்‌ பாதிக்கப்பட்டோ க்கு உதவி இறையன்பில்‌ இணைந்தார்‌ புனித ரீட்டா. இல்லறமே இறையன்பிற்கு சாட்சி, புனிதத்‌ திற்கு முதற்படி என்பதற்கு இவர்களே சாட்சிகள்‌.

இளமையில்‌ புனிதரான ஆண்களில்‌ சிலர்‌:

புனித பங்கிராஸ்‌, புனித லாரன்ஸ்‌, புனித டாமினிக்‌ சாவியோ, புனித ஸ்தனிஸ்லாஸ்‌ போன்றோர்‌ உலகம்‌ முழுவதையும்‌ தனதாக்கிக்‌ கொண்டு தன்‌ ஆத்மாவையே இழப்பாரெனில்‌ அவருக்குக்‌ கிடைக்‌ கும்‌ பயன்‌ என்ன என்ற இறைவார்த்தையின்படி உலகத்தை வெறுத்து, ஆத்மா பரிசுத்தமாய்‌ இருக்க பாடுபட்டு, பல இளைஞர்களை நல்வழியில்‌ நடத்தி இரத்தம்‌ சிந்தி மரித்து புனிதரானார்கள்‌. புனித வியான்னி கல்வியறிவு குறைந்தவராயினும்‌ பல ஆத்மாக்கள்‌ பரிசுத்தமாய்‌ வாழ பாவசங்கீர்த்தனம்‌ மூலம்‌ ஆற்றுப்படுத்தி புனிதர்‌ ஆனார்‌. இவர்கள்‌ எல்லாம்‌ தன்னலத்தை துறந்து பிறர்‌ நலனில்‌ அக்‌ கறை காட்டி இறைவனிடம்‌ இடைவிடாது செபித்‌ தார்கள்‌. 'கேளுங்கள்‌ கொடுக்கப்படும்‌! என்பதன்படி இறைவனிடம்‌ வேண்டி நமது துன்பங்களில்‌ துணை நின்று நமக்காய்‌ பரிந்து பேசுவார்கள்‌. எனவே, புனிதர்களின்‌ வழியாய்‌ நம்‌ செபம்‌ கேட்‌ கப்பட்டு நாமும்‌ விசுவாசத்தில்‌ வளர வழிகாட்டிய புனிதர்களை தாய்‌ திருச்சபை பெருமையுடன்‌, மகிழ்வுடன்‌ போற்றி நவம்பர்‌ 1 இல்‌ சகல புனிதர்‌ களின்‌ திருவிழாவை சிறப்பாகக்‌ கொண்டாடுகிறது. புனிதர்களின்‌ உறவால்‌ நாமும்‌ புனிதராகி நம்‌ திருச்சபையும்‌ புனிதமாய்‌ இருக்க இறையன்பில்‌ வளர்ந்திட புனிதர்களின்‌ தோழமையில்‌ குடும்ப உறவை வளர்ப்போம்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு