ஆன்மா அழிவற்றது.

திருமதி அருள்சீலி அந்தோணி


மானிடா-
எந்த இடத்திற்கு சென்றால் மனிதர்கள் மீண்டும் நம் பூமிக்கு திரும்புவதில்லையோ அது தான் எனது உயர்ந்த இடம் என்கிறார் இறைவன். எனது அம்சமனது மூவுலகில் இருந்து கொண்டு மனிதர்களின் சுக துக்கங்களில் ஈடுபடச் செய்கின்றது.

நற்மணம் மலரில் இருந்து காற்று எடுத்தக் கொள்வது போல் ஆன்மா உடலில் இருக்கும் போதும் சரி உடலை விட்டு பிரியும் போதும் சரி. அந்த உயிரை மூடர்கள் அறிய முடியாது.

அது ஞானிக்கே நன்கு தெரியும் அறிவும், அழிவும் என்னிடமிருந்தே வருகின்றன. அறிந்தவனும் நான் தான்! பிறர் அறியபடுகிற பொருளும் நான் தான்!

எனவே அறிவார் உயிர்கள் அழிய கூடியது. ஆனால் ஆத்மா அழிவற்றது. இந்த இரண்டிலும் வேறுபட்டு நிற்பவன் பரமாத்மா அவனே பரம்பொருள்.

ஆன்மா எங்கிருந்து வந்ததோ இதே இடத்திற்கு மீண்டும் பயணிக்கின்றது. அழிவற்றது. அதற்கு அழிவே கிடையாது என்பதை உணர்ந்திடுவாய்
மானிடா!


மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு