புனித லூர்து அன்னை (பிப்ரவரி 11)-மறையுரை
உயிரும் மெய்யும் கலந்தது தான் “அம்மா” என்ற உயரிய வார்த்தை - அவன். ஒரு உயிருக்கு உருவத்தைத் தந்து - அந்த உயிரை இவ்வுலகத்தில் உலக விடுபவள் அந்தத் தாய்மை இல்லை என்றால் - இன்றைக்கு இந்தத் தலைமுறையே இல்லை. ஆம், அந்தத் தாயை விட - மேலான தாய் நம் விண்ணகத்தாய் "புனித லூர்துஅன்னை”. அத்தாயினுடையே திருவிழாவை இன்று கொண்டாடுகிறோம்.
"மசபியேல்" என்னும் குகையிலே தோன்றி - மானுடம் தழைக்க "நாமே அமல உற்பவம்" என்று சொல்லித் தனது தாய்மையின் தூய்மையினை அங்கு வெளிப்படுத்தினார் - ஆம் அந்த அன்னைக்கு இன்று விழா எடுக்கின்றோம்.
விழாவின் பின்னணி
1858-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் நாளும் பின்பு அதே வருடத்தில் ஜூலை 16-ஆம் நாளும் நமது அன்னை மரியாள் 18 முறை, 14 வயது நிரம்பிய மேரி பெர்னெதத்துக்கு, மசபியேல் என்னும் குகையிலே தோன்றி காட்சி தந்தார். மசபியேல் என்னும் குகை தெற்கு பிரான்ஸில் லூர்து நகருக்கு அருகில் உள்ளது. இன்று லூர்து நகரிலே உடல் நோயாலும் மன நோயாலும் வருபவர்கள் இங்கு குணம் பெற்றுச் செல்கின்றனர். இந்த லூர்து மாநகர் இப்போது உலகப் புகழ்பெற்ற திருத்தலமாக விளங்குகிறது.
அன்னை மரியாள் பெர்னெதத்துக்கு காட்சி கொடுத்தப்போது தனது ஒரு கெபியைக் கட்டும்படி பணித்தார். அன்னை வேண்டுதலுக்கு இணங்கி அந்த மலைக்கு மேல் ஒரு கெபி கட்டப்பட்டது. இதோடு ஜெபமாலைக்கு என்று ஒரு சிறியகோவில் கட்டப்பட்டது. 1907-ஆம் ஆண்டு 10-ஆம் பத்திநாதர் பிப்ரவரி 11- ஆம் தேதி அன்னையின் திருவிழாவாக் கொண்டாட வேண்டும் எனப் பணித்தார். 13-ஆம், லியோ என்ற திருத்தந்தை அதனை நடைமுறைப்படுத்தினார்.
ஆயிரக்கணக்கான மக்கள் இப்புனிதத் தலத்திற்கு அன்றாடம் வந்து செல்கின்றனர். முன்னர் 25,000 திருப்பணிகள் நாள் ஒன்றுக்கு வந்து சென்றனர். ஆனால் இபோது ஒரு வருடத்திற்குப் பத்து லட்சம் மக்கள் வந்து செல்கின்றனர். உடல நோயாலும் மனநோயாலும் கஷ்டப்படுபவர்கள் இங்கு வந்து குணம் பெற்றுச் செல்கின்றனர். இவற்றினை பிரான்ஸ் நாட்டு ஆயர் பேரவையும் பரிசோதிதது உண்மை தான் என்றும் சான்றளித்திருக்கின்றனர். காசநோய், இரத்தப் புற்று, புற்றுநோய், கண் பார்வை இல்லாதவர்கள், செவிடர்கள் போன்ற நோயால் வருடக் கணக்கில் கஷ்டப்படுபவர்கள் இஙகு பேராலயத்திற்கு வந்து அன்னையின் பரிந்து பேசுதலால் குணம் பெற்றுச் செல்கின்றனர்.
நடக்க முடியாதவர்கள், கை, கால்கள் ஊனம் போன்ற நோயாளிகள் ஒருசில சமூக நலத தொண்டர்கள் அந்த நோயாளிகளைத் தள்ள வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு வருபவர்கள், வந்தவுடன நோயாளிகள் அனைவரும் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு மிகச் சப்தமாக செபமாலைச் சொல்வார்கள். அந்தக் கேபியிலே தினமும் தேவ நற்கருணை ஆராதனை நடக்கும். நற்கருணைய அந்த நோயாளிகள் இருக்கும் இடத்தில் கொண்டு வரும்பொழுது நோயாளிகள் அற்புதமாகக் குணம் அடைவார்கள். பின்பு மக்களனைவரும் அந்த நோயாளிகளுக்கு மன்றாடுவார்கள். பின்பு எல்லோரும் சப்தமாக, தேவ நற்கருணையைப் பார்த்து, "இயேசுவே தாவீதின் மகனே! எங்கள் ஆண்டவரே, மகிமையின் மன்னரே எங்கள்மேல் இரக்கமாயிரும். இயேசுவே நான் கண்பார்வை பெறுவேனாக, என் காதுகள் கேட்கின்ற வரத்தைத் தருவீராக. ஓ பரிசுத்த தேவனை நான் எழுந்து நடப்பேன்" என்று சொல்லி ஒவ்வொருவரும் வேண்டிக் கொள்வார்கள். இறுதியில் தேவ நற்கருணை ஆசிர்வாதத்தை பெறுவார்கள். இன்று கோடானு கோடி மக்கள் இத்திருத்தலத்திற்கு வருகின்றார்கள் என்றால் அன்னையின் பரிந்துரையால் தான். எனவே நாமும் அன்னையின் மீது நம்பிக்கை கொண்டு நமக்காகப் பரிந்து பேச வேண்டிக் கொள்ள வேண்டும்.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஏசாயா "ஆறுபோல நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்" என்று குறிப்பிடுகிறார். இன்று கோடானு கோடி மக்கள் தாயிடம் வருகிறார்கள் என்றால், அந்தத தாயின் அளவிலாத பரிந்து பேசும் தன்மையினால் தான். அவரை நாடி வந்தவர்கள் வெறுங்கையோடு செல்வதில்லை, எல்லோரும் மனநிறைபோடுதான் சென்றார்கள். மேலும் எளிய இறைவாக்கினர் இஸ்ராயேல் மக்களைப் பார்த்து, "தாய் தன் பிள்ளையைத் தேற்றுவது போல நான் உங்களுக்குத் தேற்றுவேன்" என்று குறிப்பிடுகின்றார். அந்தத் தாய்க்கு மேலான தாய் தேவதாய். இவ்வுலகத்தாய் பிள்ளைக்கு ஏதாவது ஒரு பிணி வந்து விட்டால் துடிதுடித்து விடுவாள். தன்னையே மறந்து, கஷ்டங்களை மறந்து, தன் பிள்ளையை தன்னையே தியாகம் செய்பவள் இவ்வுலகத்தாய். ஆனால் நம் தேவதாய் பிறருக்காகத் தன் வாழ்வை ஈந்தவர்
பிறர் நலனில் அக்கறை கொண்டவர்
பிறரின் பிணியை - பிணக்குகளை நீக்குபவர்
பிறர் நலனுக்காகத் தன் மகனையோ ஈந்தவர்
அத்தனை அமைமொழிக்கும் சொந்தக்காரர் அவர்.
இதற்குச் சாட்சி - வேளை நகரில், லூர்து நகரில் கூடுகிற மக்களின் அந்தாட்சி.
இன்றைய இரண்டாம் வாசகத்தில், நீதித்தலைவர்கள் புத்தகத்தில், வானதூதர் மங்கள வார்த்தை கூறியவுடனே "ஆம் அப்படியே ஆகட்டும்" என்று சொல்லித் தம்மை ஆண்டவருக்கு அர்ப்பணித்தவர். மரபியேல் என்னும் குகையிலே தான் மாசற்றவள் என்று கூறி, தனது தாய்மையின் தூய்மையினை வெளிப்படுத்தியவர் - நம் தாய். ஆம் அந்தகையத் தாயின் அன்புக்கு நம் பிரதி அன்பு என்ன?
இன்றைய நற்செய்தி வாசகத்தில், நம் அன்னை துன்ப நேரங்களில் தோள் கொடுப்பவராக இருப்பதை நாம் பார்த்திருக்கின்றோம். ஆம் அந்தக் கானவூர் திருமணத்தில் திராட்சை ரசம் தீர்ந்து விட்டது. இதைத் தம்முடைய மகனிடம் எடுத்துச் சொல்லி அங்கு அம்மக்களின் துன்பங்களைப் போக்கினார். அங்கு மக்கள், தாயின் பரிந்து பேசுதலை தங்கள் வாழ்வில் கண்டனர்.
அவர் பரிந்து பேசுதலில் பக்குவமானவர். இன்னலை நீக்கும் பன்முகத்தாய் - நம் தேவதாய், ஆம் அந்தத் தாயின் அன்பினை இந்தத் திருமண நிகழ்ச்சியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
நம் வாழ்க்கையில்
1. அந்தத் தேவதாய், “இதோ ஆண்டவனுடைய அடிமை” என்று சொல்லித் தன்னை அந்த இறைவனுக்கு முழுவதுமாக ஒப்புக்கொடுத்தார். நம்முடைய வாழ்க்கையில் பணிகள், துயரங்கள் வந்து விட்டால் நாம் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கின்கிறோமா? இல்லை முணுமுணுக்கிறோமா? நம்மிடம் அந்தத் தாழ்ச்சி என்ற புண்ணியம் இருக்கிறதா? அப்படி இல்லை என்றால் தாழ்ச்சி என்ற புண்ணியம் நமக்குக் கிடைக்க அத்தாயிடம் வேண்டுவோம்.
2. இன்று எத்தனையோ மக்கள் லூர்து நகரிலும், வேளை நகரிலும் கூடுகின்றனர். அதற்குக் காரணம் அந்தத் தாயின் பரிந்துரை பேசுவத்தான். ஆம் அந்தத் தாயும் நமக்காகப் பரிந்து பேசு பிணிகள் பலவற்றையும் நீக்குவார் என்று அவரில் நம்பிகைக் கொண்டிருக்கிறோமா?
3. பெர்னதெடுத்துக்கு தாய் கூறியது, “மனமாற்றும், மனமாற்றும்”. ஆம் நம்முடைய வாழ்க்கையில் மனமாற்றும் உள்ளதா? பலவித பாவத்தால் நம்முடைய வாழ்க்கை குழப்பமாக உள்ளது. இந்தப் பாவங்களிலிருந்து வெளியேற வேண்டும் என்று, என்றாவது நாம் நினைத்த்துண்டா? அப்படி இல்லை என்றால் அந்தத் தாய் நமக்கு மனமாற்றத்தை ஏற்படுத்தும்படி வேண்டுவோம்.
4. தூய்மையின் லீலி மலர்தான் நம் அன்னை. அவரது வாழ்க்கை சிந்தனையில், சொல்லில், செயலில் தூய்மை எனத்தன்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றிலும் தூய்மையைக் கடைபிடித்து வாழ்ந்தவர். நம்முடைய வாழ்க்கையில் அத்தனையத் தூய்மை உள்ளதா? நம்முடைய சொல்லில் தூய்மை உள்ளதா? இன்று எத்தனையோ மக்கள் சொல்லிலும், வாழ்க்கையிலும் தூய்மை இல்லை, இங்கொன்றும், அங்கொன்றுமாக எனப்பேசி இரட்டை நாவு கொண்டவர்களாக இருக்கிறார்கள். நாம் எவ்வாறு இருக்கிறோம்? மற்றும் நம்முடைய பணியில் தூய்மை மற்றும் நேர்மை உள்ளதா? அப்படி இல்லை எனில் அத்தாயிடம் அக்குணங்களுக்காக மன்றாடுவோம்.
5. எலிசெபத் கருவுற்றிருப்பதைக் கண்டு, அவருக்கு ஓடோடிச் சென்று உதவி கரம் நீட்டினார் நம் அன்னை. நம்முடைய வாழ்க்கையில் அத்தையை உதவி செய்யவும் மனப்பான்மை மனப்பக்குவம் உள்ளதா?
வாழ்க்கையில் நலிவுற்ற வாழ்க்கையே துன்பமாக கருதுகிறவர்களுக்கு ஏழ்மையில் வாழ்கின்றவர்களுக்கு வாழ்க்கையில் நசுக்கப்பட்ட மக்களுக்கு இத்தகைய பலதரப்பட்ட மக்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றமடைய, நாம் என்றாவது உதவி செய்து இருக்கின்றோமா? அப்படி இல்லை எனில் அத்தகைய உதவி செய்யும் மனப்பான்மையை தந்திட அத்தாயிடம் மன்றாடுவோம்.


