அன்னை மரியா என்னும் ஏதேன் தோட்டம்

திருமதி.அருள்சீலி அந்தோணி

மரியாவை நாம் கண்டுணர வேண்டுமாகில் சற்று பின்னோக்கி செல்வோம். மரியாளே நவீன ஆதாம் வசித்த உண்மையான சிங்கார தோப்பு என்பதை நாம் உணர்ந்திடல் வேண்டும். ஆதாம் வாழ்ந்து பின்னர் விரட்டப்பட்ட சிங்காரத் தோப்பு, மரியாவை குறிக்கும் ஓர் முன் அடையாளமாகும். விவரிக்க இயலாச் செல்வங்களும், வளமும், இனிமையும் அனைத்தும் அடங்கிய விண்ணகம் மரியாள்தான்!

mother mary இயேசு எனும் நவீன ஆதாம் உறைந்திருந்த மரியம்மையின் கருவறையான சிம்மாசனம் தெய்வீக ஞானத்தையும், தூய ஆவியாரின் அருள்மாரியையும் பொழிந்தது. அனைத்து தெய்வீக செல்வங்களோடு மரியன்னை எனும் சிங்காரத் தோட்டத்திலிருந்து அருள் வரங்கள் வாரியெடுத்துக்கொண்டு வையகம் எனும் புவியிரங்கி மானிடரை வென்றெடுக்கும் பேறுபெற்றார். இயேசு

மாமரி இயேசு எனும் கனியினைத் தந்த சீவிய மரமே மரியா! ஞானம் நிறைந்த கனியே மாமரி! மிகவும் செளந்தர்யமுள்ள இப்பூங்காவில் பல விதமான வண்ணமயமான வானதுதர்களையும் நறுமணம் வீசும் நறுமண மலர்களையும் இச்சிங்காரத் தோப்பில் காணலாம். இங்கே வல்லமையின் கோபுரங்களும், நம்பிக்கையின் நட்சத்திரங்களும், அடக்கமும், அமைதியும் அடங்கிய மாளிகைகளும் ஓங்கி நிற்பதை காணலாம்.

இங்கு வீசும் தென்றல் தூய்மையானது. பரிசுத்தமானது என்றும் ஒளி எங்கும் ஒளி பரிசுத்தம் வாசம் செய்யும் பகற்பொழுது தெய்வீக சூரிய ஒளி பயனற்ற உலோகங்களையும் தம் ஒளியினால் தங்கமாக மாற்றும் தெய்வீகஒளி. தாழ்ச்சி எனும் தூய்மையான ஊற்று தலையான புண்ணியங்களின் அடையாளமாக நான்கு வாய்க்கால்கள் பிரிந்து அப்பூஞ்சோலையை முற்றிலும் புண்ணிய நதிகளாக மாற்றுகிறது.

madonnaநித்தியகுரு இயேசு கீழ்த்திசை வாசலின் வழியாக இவ்வுலகிற்கு வந்தாரென்றும், அந்த வாசல்தான் இந்த சிங்கார தோப்பு மரியா என்றும் பரிசுத்த பிதாபிதாக்கள் நமக்கு முன்னறிவித்தார்கள்.

ஒருமுறைவந்த அவர் மீண்டும் அதே வழியாக மீண்டும் வருவார். தூய ஆவி மரியாளை குறித்து, இன்னும் கூறுகிறார், அவளே இறைவனின் சிம்மாசனம்! தமத்திருத்துவம் தங்குமிடம்! கடவுளின் திருநகர், கடவுளின் ஆலயம், உலகமே மரியாவின் தாயகம்! விண்ணகத்தின் வாசல் விடியற்காலத்தின் நட்சத்திரம்!

ஏதேன் எனும் நவீன நந்தவனத்திற்கு இறைமகன் தன் சிம்மாசனமாக தெரிந்துகொள்ளப்பட்ட மரியன்னையின் கருவறையும் ஒருவருக்கு கிடைக்குமேயானால் எவ்வளவு ஆசீர். எத்தகைய பாக்கியம்? எத்தகைய ஆனந்தம்! பேரானந்தம்


 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு மரியாளின் பக்கங்கள்