லூர்து நகரில் அன்னை மரியா காட்சிகள்

தந்தை தம்புராஜ் சே.சு.

Feb-MARYபிப்ரவரி மாதம் என்றாலே நமக்கு முதற்கண் ஞாபகம் வருவது லூர்து நகரில் அன்னை மரியா காட்சி கொடுத்த நிகழ்வாகும். 2017 ஆம் ஆண்டு கொச்சி நகருக்கு அருகே இருக்கும் தூய அம்புரோசியார் ஆலயத்தில் அன்னை மரியா நவம்பர் மாதம் 21 ஆம் தேதி பள்ளி மாணவிகளுக்குக் காட்சிக் கொடுத்துத் தனது பணி இன்னும் தொடர்கிறது என்று நிரூபித்துள்ளார்கள்.

காதிலே நோயிருந்த ஒரு பள்ளி மாணவிக்குச் சுகம் கொடுத்தார்கள் அன்னை மரியா. இந்தப் பள்ளிச் சிறுமிகள் அதிக அளவில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். கோவிலின் பீடத்தின் கீழ் அன்னை மரியா பள்ளிப் பிள்ளைகளுக்குத் தோன்றிய போது, கோவிலெங்கும் மல்லிகைப் பூ மணமும் பரவியது. தனது செய்தியில் மக்கள் மனம் மாறவேண்டுமென்றும், அந்தப் பிள்ளைகளைப் பராமரித்துப் பாதுகாத்து, படிப்பில் நல்ல முன்னேற்றம் தந்து, ஒரு நாள் அவர்களை விண்ணகத் திற்குக் கூட்டிச் செல்வதாகவும் அன்னை மரியா உறுதிமொழி தந்துள்ளார்கள்.

இரண்டு முறை அன்னை மரியா இந்தப் பள்ளி மாணவிகளுக்குக் காட்சித் தந்துள்ளார்கள். வயதில் பெரியவர்கள் அன்னை -- மரியாவின், காட்சியைக் காண முடியாதிருந்தாலும், கோவிலில் பீடத்தின் அடியிலிருந்து புறப்பட்ட மல்லிகைப் பூவின் மணத்தை நுகர்ந்திருக்கின்றார்கள். விண்ணகத்தில் - ஆகாயத்தில் இயேசு கசையடி பெறுவது போல ஒரு காட்சியையும் கண்டிருக்கிறார்கள். ஆம், அன்பார்ந்தவர்களே லூர்து நகரில் சிறுமிக்குக் காட்சி கொடுத்த அதே அன்னையின் நற்செய்திப் பணி இன்னும் ஓயவில்லை என்பதை நாம் உணர முடிகின்றது.

அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நபர்களோடு அன்னை மரியாவின் மகிமையைப் பற்றி புகழ்ந்து, பகிர்ந்து கொள்வோம்.

தாயில்லாப் பிள்ளைகளைப் போல், அன்னை மரியாவின் பக்திக்கு எதிராகப் பேசுபவர்களின் மனமாற்றத்திற்காக மன்றாடுவோம். ஒரு நாள் வரும், அவர்களும் அன்னை மரியாவை இறைவனின் தாய் என்று ஏற்றுக்கொள்வார்கள். அவர்களுடைய குடும்பங்கள் நலமாக, வளமாக இருக்கும். கட்டாயம் அன்னை மரியா தனது மகனிடம் பரிந்து பேசுவார்கள். "

ஒவ்வொரு நாளும் நமது வாழ்க்கை, புதுமை நிறைந்த வாழ்க்கையாக இருக்க வேண்டுமென்று மன்றாடுவோம்.

இயேசுவுக்கே புகழ்! - மரியே வாழ்க! - இறையாசீர் என்றும் உங்களோடு!

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு மரியாளின் பக்கங்கள்