anbinmadal

தந்தையின் இரக்கம்

திரு.சார்லஸ் சென்னை-24

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்புத் தனிமனிதனாக உலகில் சாதாரணக் குடும்பத்தில் மகனாகப் பிறந்து வாழ்ந்த மரித்து உயிர்த்த அதன் உடனிருப்பை தன்னுடன் இருந்த தன் அன்பை நண்பர்களுக்கு விட்டுச் சென்ற அன்பின் செயல்கள் தான் இன்று இறை இரக்கமாக மாற்றம் பெறுகின்றன.

”உங்கள் வானகத்தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவராய் இருங்கள்” லூக்கா 6:36 என்னும் நற்செய்தி வார்த்தைகள் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன.

தந்தையின் இரக்கம் ஊதாரி மைந்தன் தன் வாழ்வில் தந்தையின் அன்பிலிருந்து விலகிச் சென்று ஒரு சில நாட்கள் மட்டுமே அவன் மகிழ்ச்சியில் திளைத்திருந்தான். காரணம் இவ்வுலகச் செல்வம், இவ்வுலக மனிதர்கள், ஆகிய இரண்டுமே நிலையற்றவை என்பதனை என்பிக்கின்றன. எப்போது தன் தந்தையின் அன்பிலிருந்து விலகி வாழ்ந்தானோ, அதனால் சிந்திக்கக் கூடிய ஆற்றலையும் சுயஅறிவையும் இழநது உறவுகளிலிருந்து விலகித் தனிமைப்படுத்தப்பட்டவனாக வாழ்ந்ததைப் பார்க்கின்றோம். எனவே அவன் என்று தன் தந்தையை நினைத்து அவரின் அளவில்லாத அன்பைப் பெறவேண்டும் என்ற முடிவெடுத்தானோ அன்றே அவன் ஒரு புதிய மனுவுருப் பெற்றவனாகிறான்.

prodigalஇறை அன்பு அளவிட முடியாதது. எனவே தான் கடவுள் மனிதனை எவ்வளாக அன்பு செய்தார் என்று சொன்னால் தன் உயிரையும் தற்கையளிப்புச் செய்யும் அளவிற்குத் தன் மகனை இவ்வுலகிற்கு அனுப்பினார். புனித தாமஸ் அக்குவினாஸின் வார்த்தைகள். “கடவுளின் இரக்கம் அவரது பேராற்றலைக் காட்டுகிறது.“ இக்காரணத்தால் தான் திருவழிப்பாட்டின் தொன்மை வாய்ந்தச் சபை மன்றாட்டுக்களில் ஒன்றில் நாம் இவ்வாறு செபிக்கின்றோம். எல்லாம் வல்லக் கடவுளே எல்லாவற்றுக்கும் மேலாக உமது இரக்கத்திலும், மன்னிப்பிலும், உமது ஆற்றலை வெளிப்படுத்துபவரே மானுட வரலாறு முழுவதும் கடவுள் உடனிருப்பாளராக, நெருக்கமானவராக, அருள்பவராக, தூயவராக, எப்பொழுதும் இருந்து வருகின்றார்

பழைய ஏற்பாட்டில் தந்தையாம் கடவுளின் இறை இரக்கம் மிகுதியாகக் காணப்படுகின்றது. மீட்பின் வரலாறுத் தொடக்க முதல் மனிதன் ஆபிரகாம் தன் மகன். ஈசாக்கைப் பெற்றெடுத்ததும், இறை இரக்கத்தினால் தான். மீண்டும் தன் மகனைப் பலியாக ஒப்புக்கொடுக்கத் துணிந்தபோதும் பலிக் கொடுக்காமல் தடுத்த ஆட்கொள்ளப்பட்டதும் தந்தையின் இறை இரக்கத்தினால் தான்.. மனிதன் பாவத்தில் வீழ்ந்தபோதும் அவனை மீட்டெடுப்பதற்காக மீண்டும் அவனுக்குப் புத்துயிர் அளிப்பதும் இறைத்தந்தையின் இரக்கத்தினால் தான்.

விவிலிய மேற்கோள்கள் பின்வருமாறு
திருப்பாடல் 103:3-4
3அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
4அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார்.
திருப்பாடல் 146:7-9
7ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார்.
8ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.
9ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்; அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார்.
திருப்பாடல் 147:3-6
3உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்; அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார்.
4விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி, அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றார்.
5நம் தலைவர் மாண்புமிக்கவர்; மிகுந்த வல்லமையுள்ளவர்; அவர்தம் நுண்ணறிவு அளவிடற்கு அரியது.
6ஆண்டவர் எளியோர்க்கு ஆதரவளிக்கின்றார்; பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார்.




sunday homily



A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com