இசை வழியாக இறைப்பணியாற்றுவோம்

நன்றி - வத்திக்கான் ஒலிபரப்பு

வத்திக்கான் செய்திகள் நேர்காணல் - திருமதி. விமலா ஆல்பர்ட்



கடந்த 35 வருடங்களாக இறை இசைப்பணி ஆற்றி வரும் திருமதி. விமலா ஆல்பர்ட் அவர்களுக்கு பாராட்டும் வகையில் வத்திக்கான் வானொலி தொகுப்பாளர் Rev. Sr. Merina அவர்கள், இறை இசைப்பணி குறித்து திருமதி. விமலா ஆல்பர்ட் மேற்கொண்ட நேர்காணல் 16/05/2025 ஒலிபரப்பாகி உள்ளது.

"இசைவழி இறைப்பணி" என்னும் அளப்பரிய பணியை, கத்தோலிக்க திரு அவைக்கு, 20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இருந்தே ஆற்றி வந்த தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு முத்தமிழ் வித்தகர் புலவர் பெருமான் திருமிகு. அய்யாத்துரை பாகவதர் அவர்களின் வழி வந்த நான்காவது தலைமுறையைச் சார்ந்தவர் சென்னையில் வசிக்கும் திருமதி. விமலா ஆல்பர்ட்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  யூபிலி25