விண்ணரசின் கதவே தாழ் திறவாய்...
அ. அல்போன்ஸ், திருச்சி
நற்செய்தியை இரண்டு விதமாகப் பார்க்கலாம்.
முதலில் ஓவ்வொரு பகுதியையும் நேரடியாகவே நமது வாழ்க்கையின் எண்ணங்களுடன் இணைந்து வாசிப்பது இரண்டாவதாக முற்றிலும் முழுமையாக வாசிப்பது. நற்செய்தியில் முக்கியமான இடங்களை, சொற்களை முழுமையாக உள்வாங்கி மனதினில் விரித்தெடுத்து அவற்றில் ஒன்றிப்பாதாகும்.
இயேசு மலைப்பொழிவில் கூறிய ஒரு செய்தியைப் பார்ப்போம் இயேசு கிறிஸ்து தமது சீடர்களிடம் அளித்த முக்கியமான போதனைகளில் ஒன்று — “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் தேடுங்கள், அப்பொழுது நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்” என்றார். (மத் 7:7). இந்த வசனம் வாழ்க்கையின் ஆன்மீகப் பயணத்திற்கும், நம்பிக்கையின் வலிமைக்கும் ஆழமான விளக்கமாக இருக்கிறது.
கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள். இங்கே மூன்று வெவ்வேறு புலன்கள் பரிசீலிக்கப்படுவதைக் கவனியுங்கள். கேட்பது வாய்மொழி.; கிறிஸ்தவர்கள் தங்கள் தேவைகளுக்காகவும் ஆசைகளுக்காகவும் தங்கள் வாய்மொழியால் கடவுளிடம் மன்றாடுகிறோம்.
மேலும் விசுவாசிகள் தங்கள் மனதால் முயற்சியுடன் தேட வேண்டும் — இதுகேட்பதை விட அதிகம்;அது முன்னுரிமைகளை நிர்ணயிப்பதும், இதயத்தை ஒருமுகப்படுத்துவதுமான. முயற்சி தட்டுவது என்பது உடல் இயக்கத்தை உள்ளடக்கியது.
நம் நடவடிக்கையில் ஒன்று.கேட்பதும் தேடுவதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும், தட்டாமல் அவை முழுமையடையாது. கிறிஸ்தவர்கள் வார்த்தையால் மட்டுமல்ல, செயல்களாலும் அன்பு காட்ட வேண்டும் என்று அப்போஸ்தலர் யோவான் கூறினார் (1 யோவான் 3:18).
நம்பிக்கையின் மூன்று படிகள்.
இயேசு தனது அழைப்பில், கேட்பது, தேடுவது, தட்டுவது போன்ற எளிய ஆனால் ஆழமான படிகள்மூலம் கடவுளுடன் ஒரு சுறுசுறுப்பான, நம்பிக்கை நிறைந்த உறவுக்கு நம்மை அழைக்கிறார்
1. கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்! கடவுள் சாலமோனிடம், “நான் உனக்கு என்ன கொடுக்க விரும்புகிறாயோ அதைக் கேள்” என்றார். அவர் கடவுளிடம் ஒரு பகுத்தறியும் இதயத்தைக் கேட்டார்! பின்னர் கடவுள், தம்முடைய கருணை மிகுதியால் சாலமோனிடம், “நான் அதை உனக்குத் தருவேன்” ஆனால் “நீ கேட்காததை - செல்வத்தையும் மரியாதையையும் - நான் உனக்குத் தருவேன்” என்றார். வெளிப்படையாக, கடவுள் சாலமோனைக் கேட்க விரும்பினார், பின்னர் அவர் கேட்டதை விட அதிகமாகக் கொடுத்தார்.
எலியா பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு சற்று முன்பு, அவர் எலிசாவிடம், அவர் கேட்டதுபோல் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் (2 இராஜாக்கள் 2: 9). பார்த்திமேயு குருடன் (மாற்கு 10:46–52) – அவர் இயேசுவிடம் அவன் கேட்டதுபோல் பார்வை பெற்றான். அவனது விசுவாசம் நிறைந்த வேண்டுகோள் குணமடைய வழிவகுத்தது. அன்னாள் (1 சாமுவேல் 1:9–20) – அவள் ஒரு குழந்தைக்காக் கண்ணீருடன்க ஜெபித்தாள், கடவுள் அவளுக்குச் சாமுவேலைக் கொடுத்து அவளுடைய ஜெபத்திற்கு பதிலளித்தார். விதவை, தொடர்ச்சியான (லூக்கா 18:1–8) – நீதி கிடைக்கும் வரை அவள் நீதிபதியிடம் கேட்டுக்கொண்டே இருந்தாள். நாம் "எப்போதும் ஜெபிக்க வேண்டும், விட்டுவிடக் கூடாது" என்பதைக் காட்ட இயேசு இதைக் கற்பித்தார். கேட்டு நீதியான பதிலைப் பெற்றாள். நல்ல திருடன் சிலுவையில் இயேசுவிடம் கேட்டான்.
ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரகதியில் இருப்பாய் என்றார்.
குழந்தை தன் தந்தையிடம் கேட்பது போல, விசுவாசி தன் பரலோகத் தந்தையிடம் கேட்க வேண்டும். கேட்பதில் தாழ்மையும் நம்பிக்கையும் இருக்க வேண்டும்.
தேவன் தருகிறவர் — ஆனால் அவர் கேட்பவரின் உள்ளத்தின் சத்தியத்தையும் நம்பிக்கையையும் பார்ப்பார்.
2. தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள்
தேடுதல் என்பது கேட்பதை விட ஆழமானது — அது செயலில் பின்தொடர்வதைக் குறிக்கிறது.
நம்பிக்கையுடன் இளையமகன் தந்தையைத்தேடி வீடு திரும்பினான். தந்தை ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்தான்
கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் (மத்தேயு 2:1–12) – அவர்கள் புதிதாகப் பிறந்த ராஜாவைத் தீவிரமாகத் தேடி, அவரைக் கண்டுபிடிக்கும் வரை நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்தனர். பயணம், விடாமுயற்சி மற்றும் பகுத்தறிவு தேவைப்பட்டது.
கல்லறையில் மகதலேனா மரியாள் (யோவான் 20:1–18) – அவள் தன் துக்கத்திலும் இயேசுவைத் தேடினாள், அவர் உயிர்த்தெழுந்த ஆண்டவராக அவளுக்குத் தன்னை வெளிப்படுத்தினார்.
மறைக்கப்பட்ட புதையல் மற்றும் விலைமதிப்பற்ற முத்து (மத்தேயு 13:44–46) – தேடுபவர் புதையலைப் பெற எல்லாவற்றையும் விற்கிறார், இது கடவுளின் ராஜ்யத்தின் மதிப்பைக் குறிக்கிறது
சக்கேயு (லூக் 19:1–10) — இயேசுவை காணத் தேடினார்; இரட்சிப்பு பெற்றார்.
மிக விலைமதிப்பான முத்து (மத் 13:45–46) — தீவிரமாகத் தேடி, தனக்கூண்டான யாவற்றையும் விற்று முத்தை அடைந்தான்.
3. தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்
"தட்டுங்கள், அது உங்களுக்குத் திறக்கப்படும்" என்று இயேசு கூறியது அவரது ஆன்மீக போதனைகளைப் பிரதிபலிக்கிறது, அங்கு அவர் உள் விழிப்புணர்வு முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.
இயேசு குறிப்பிடும் "கதவு" என்பது உங்கள் சொந்த ஆன்மீக விழிப்புணர்வு, தெய்வீகத்துடனான உங்கள் தொடர்பு அல்லது ஞான நிலைக்கான கதவு. தட்டுதல் என்பது விடாமுயற்சி மற்றும் தேவனுடைய சந்நிதியில் நுழைய விரும்புதல். "திறக்கப்படும்" என்ற சொற்றொடர், ஜெபத்தின் மூலம் விடாப்பிடியாகத் தேடுபவர்களுக்கு கடவுள் பதிலளிப்பார் என்பதைக் குறிக்கிறது.
வேதாகமத்தில் தட்டுவதற்கான இரண்டு காட்சிகளைப் பார்க்கலாம்.
முதலாவது அப்போஸ்தலர் 12: 11 – 16 இல் பேதுரு அற்புதமாகச் சிறையிலிருந்து தப்பித்து யோவானின் தாயார் மரியாளின் வீட்டிற்குச் சென்றார். அனுமதி பெற அவர் தட்டினார். வேலைக்காரப் பெண் முதலில் கதவைத் திறக்காதபோது, அவர் திறக்கும்வரை வரை தட்டிக் கொண்டே இருந்தார். அவர் விடாப்பிடியாக இருந்தார்.
இரண்டாவதாக, தன் நண்பனிடம் ரொட்டி கேட்ட மனிதன் தன் நள்ளிரவு நண்பனின் கதவைத் தட்டுகிறான். தட்டி, விடாப்பிடியாக அழைக்கும்போது கதவு திறந்தது.
மத்தேயு 7:7-ல் இயேசு நம்மைத் தட்ட. நாம் தைரியமாகவும் விடாப்பிடியாகவும் தட்டும்போது கதவு திறந்து நாம் தட்டியதைப் பெறுவோம்.
இந்த மூன்று படிகளும் — கேட்குதல், தேடுதல், தட்டுதல் — விசுவாசியின் வாழ்க்கையின் வளர்ச்சிக் கட்டங்கள் ஆகும். கேட்பவன் தேவனிடம் கையை நீட்டுகிறான்; தேடுபவன் தனது இதயத்தை வெளிப்படுத்துகிறான்; தட்டுபவன் முழு நம்பிக்கையோடு கதவைத் திறக்க வற்புறுத்துகிறான்.
முதலாவது வசனத்தில், இயேசு தாமே வாசல் என்று நமக்குச் சொல்கிறார். இரண்டாவது வசனத்தில், இயேசு கேட்க, தேட, தட்டுங்கள், கதவு திறக்கப்படும் என்று சொல்கிறார். ஐந்து கன்னியர்கள் (மத் 25:1–13) — தாமதமாகத் தட்டினால் கதவு திறக்காது என்பதையும் பார்க்கிறோம்.
இது விசுவாச வளர்ச்சியின் படிகள்: நம்பிக்கை பயணத்தின் பாதை. கேட்போம். தேடுவோம். தட்டுவோம். விழிகளின் அருகில் விண்ணரசைக் காண்போம்