இயேசுவின்‌ அன்பு!

அருள்சகோதரி ஜோவிட்டா, தூய சிலுவை மடம், திருச்சி

தியாகம்‌ தூய்மை மிக்கது, தன்னலமற்றது. இயேசு நம்மீது கொண்ட அன்‌பால்‌ தம்மையே தாழ்த்தினார்‌. விண்‌ணில்‌ அரியணையில்‌ இருந்து ஆட்ச‌ி செலுத்த உரிமை இருந்தும்‌ ஒரு மனிதனாக மாட்டுத்‌ தொழுவத்தில்‌ பிறந்து தம்மையே தாழ்த்திக்‌ கொண்டது அன்பின்‌ உச்சக்கட்டத்தை உலகறியச்‌ செய்கிறது. "கடவுள்‌ வடிவில்‌ விளங்கிய அவர்‌... அடிமையின்‌ வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்‌? (பிலி 2-7)

"குழந்தையும்‌ தெய்வமும்‌ குணத்‌தால்‌ ஒன்று: குற்றங்களை மறந்து விடும்‌ மனத்தால்‌ ஒன்று!” என்பதை இயேசுவின்‌ இதயம்‌ எடுத்துக்காட்டுகிறது. நம்‌ குற்றங்களை மன்னித்து தம்மை அன்பு செய்யும்‌ இதயம்‌ இயேசுவின்‌ திரு இருதயம்‌. அந்த அன்புமிகு திரு இருதயத்தை நாடிச்சென்று நம்‌ சுமைகளை இறக்கி வைக்கும்போது நம்‌ இதயத்தில்‌ அன்பு கிடைக்கிறது.

“சுமை சமந்து சோர்ந்திருப்போரே, எல்லாரும்‌ என்னிடம்‌ வாருங்கள்‌ நான்‌ உங்களுக்கு இளைப்பாறுதல்‌ தருவேன்‌. நான்‌ கனிவும்‌, மனத்தாழ்‌மையும்‌ உடையவன்‌” (மத்‌ 11:28-29) என்பதால்‌ இயேசுவின்‌ இருதயத்‌தில்‌ கனிவு உண்டு, தாழ்மையில்‌ இருப்போரைத்‌ தேற்றி துணிவு கொடுக்கும்‌ நம்பிக்கை, நம்‌ துன்பங்‌களைத்‌ தாமே சுமந்து நமக்கு விடுதலை நல்கிடும்‌ நல்ல இதயமே இருதய ஆண்டவரின்‌ திரு இதயம்‌ என்‌பதை நாம்‌ உணர முடிகிறது. குழந்‌தையைப்‌ போல்‌ கள்ளமில்லா நெஞ்சத்தோடு திரு இருதயத்தை நோக்குவோம்.

திரு இருதய அன்பு மண்ணில்‌ மலர

அயலானை மன்னித்து அவனை அன்பு செய்ய வேண்டும்‌. இயேசுவின்‌ இறையாட்சியை இம்மண்ணில்‌ கட்டி எழுப்பிட இயேசுவால்‌ தலைவராக நியமிக்கப்பட்ட பேதுரு “ஆண்டவரே, என்‌ சகோதர சகோதரிகளுள்‌ ஒருவர்‌ எனக்கு எதிராகப்‌ பாவம்‌ செய்தால்‌ நான்‌ எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்‌?” என்று இயேசுவிடம்‌ கேட்க, “ஏழு முறை, மட்டுமல்ல, எழுபது தடவை ஏழுமுறை என நான்‌ உனக்‌குச்‌ சொல்கிறேன்‌" (மத்‌ 35,23-22) என்று அன்பு வளர 'வேண்டுமாபின்‌ மன்னிப்பு மிகத்‌ தேவை என்பதை இயேசு தெளிவாகக்‌ கூறுகின்றார்‌.

எந்தக்‌ குடும்பத்தில்‌ பகை உண்டோ அங்கு பிரிவினை, வெறுப்பு உண்டு. மாறாக மன்னித்து விட்டுக்‌ கொடுத்து வாழும்போது அங்கு அன்பு பெருக்கெடுத்து ஓடும்‌. லூக்கா நற்செய்தி 15 ஆம்‌ அதிகாரம்‌ செய்தால்‌ அன்பு உறவு உடைடபட்டுவிடும்‌. மனம்‌ திருந்தி மன்னிப்பு கேட்டு மகன்‌ வரும்போது அன்பு மேலிட்டால்‌ அங்கு. பெரும்விழாக்‌ கோலம்‌. மனம்‌ திருந்திய மகனை அரவணைத்து கட்டித்‌ தழுவி அப்பா முத்தமிட்டார்‌. “காணாமல்‌ போமிருந்தான்‌, மீண்டும்‌ கிடைத்துள்ளான்‌" என்றார்‌. அவர்கள்‌ மகிழ்ந்து விருந்து கொண்டாடத்‌ தொடங்கினார்கள்‌ (லூக்‌ 15:24). எனவே, இருதய ஆண்டவரின்‌. ஆட்சி, அவரது அன்பு நம்‌ குடும்பங்களில்‌ மலர வேண்டும்‌. பெற்றோர்‌ பிள்ளைகளின்‌ குறைகளை, தவறுகளை மன்னித்து அன்பு செலுத்தும்போது பிள்ளைகள்‌. பெற்றோரின்‌ பாசத்தைப்‌ பெற்று சகோதரத்துவம்‌ மலர்ந்து அன்பு அமைதிமிகு குடும்பமாக நம்‌ இல்லம்‌ அமைந்திட திரு இருதயத்தைப்‌ போல்‌ அன்பைப்‌ பொழிவோம்‌. அருள்‌ பெற்று மகிழ்வோம்‌.

ஆண்டவரின்‌ திரு இருதயம்‌ உறவின்‌ பாலம்‌.

தவறு செய்யும்‌ ஒரு குழந்தையை பெற்‌றோர்‌ எளிதாக ஏற்பதில்லை. ஆனால்‌ இயேசுவோ தம்மிடம்‌ திரும்பி வருவோருக்காக இருகரம்‌ விரித்துக்‌ காத்திருக்கிறார்‌. அன்பும்‌, நட்பும்‌ எங்குள்ளதோ அங்கே இறைவன்‌ இருக்கின்றார்‌. அன்பிற்காக எங்கும்‌ அநேக உள்ளங்களுக்கு அன்பராக, தோழராக இயேசு தம்மையே கையளிக்கின்றார்‌. எனவேதான்‌ இயேசு “சிறுபிள்ளைகளை என்னிடம்‌ வர விடுங்கள்‌. அவர்களைத்‌, தடுக்காதீர்கள்‌, ஏனெனில்‌ விண்ணாக இத்தகையோர்க்கே உரியது” (மத்‌ 19:14) என்றார்‌ அத்தகு அரவணைக்கும்‌ அன்பு இதயம்‌ பாவிகளையும்‌ மன்னித்து அரவணைக்கக்‌ காத்திருக்‌கிறது. மனம்‌ திருந்தி, வருந்தி அன்பிற்காக ஏங்கும்‌ ஒரு பாவியை நினைத்து மகிழும்‌ இதயம்‌ தான்‌ ஆண்டவரின்‌ இதயம்‌. "மனம்‌ மாறிய ஒரு பாவியைக குறித்துக்‌ கடவுளின்‌ தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும்‌” (லூக்‌ 15:10).

காயின்‌ தன்‌ சகோதரனை வெறுத்து கொலை செய்தான்‌. ஆனால்‌ நம்‌ ஆண்டவரின்‌ இதயத்தில்‌ இரக்கமும்‌, மன்னிப்பும்‌ உண்டு. எனவே, பாவிகளாய்‌ இருந்த நம்மை மீட்கும்‌ பொருட்டு. ஆண்டவர்‌ இயேசுவை உலகிற்கு அனுப்பினார்‌. பரம தந்தையின்‌ அன்பால்‌ அகில உலகிற்கும்‌ மீட்பு கிடைத்தது. “அப்பா தந்தாய்‌' என்று அழைக்கும்‌ உரிமை கிடைத்தது. எனவே, பெற்ற அன்பைப்‌ பேணிக்காத்து நாமும்‌ ஒருவர்‌ மற்றவர்மீது அன்பு செய்து அன்பு உறவை வளர்ப்போம்‌. சகோதர, சகோதரிகளிடையே சொத்தில்‌ வெறுப்பைக்‌ காட்டாது, பாசமிகு இயேசுவின்‌ இதய அன்பால்‌ இல்லறத்தில்‌ நம் குடும்பங்களில்‌ அன்பு பெருகட்டும்‌.

தூய இதயத்தின்‌ பண்புகள்

1கொரி 13 முழுவதும்‌ அன்பு பற்றிய செய்‌தியை எடுத்துக்கூறி “அன்பு அனைத்தையும்‌. பொறுத்துக்கொள்ளும்‌ என்று கூறுகிறது “நான்‌ குழந்தையாய்‌ இருந்தபோது குழந்தையைப்போலப்‌ பேசினேன்‌" என்று பவுலடியார்‌ கூறுகிறார்‌. குழந்தையின்‌ இதயத்தில்‌ தீயது. எதுவும்‌ கிடையாது. மாறாக குழந்தையின்‌ புன்‌சிரிப்பு மகிழ்ச்சி அளித்து மனக்கவலையைப்‌ போக்குகிறது. அத்தகு தூய இதயமே இயேசுவின்‌ திரு இதயம்‌. எனவே, அந்த அன்புத்‌ தீ நம்மில்‌ பற்றி எரிந்து, அகிலத்தில்‌ அன்பு பொங்கி ஓங்கிட திரு இருதயப்‌ பக்தி கொண்டாடப்‌படுகிறது.

முதல்‌ வெள்ளிக்கிழமைகளில்‌ இடைக்காட்‌டூர்‌ என்னும்‌ சிறிய கிராமத்தில்‌ இருதய ஆண்டவரின்‌ பக்தி வணக்கம்‌ சிறப்பாகக்‌ கொண்டாடப்‌படுகிறது. இப்பக்தி முயற்சி முதலில்‌ இடைக்‌காட்டூரில்‌ தோன்றினாலும்‌ இன்று பல்வேறு பங்குத்தளங்களில்‌ இப்பக்தி முயற்சி சிறப்பாகக்‌ கொண்டாடப்படுகிறது. தற்போது திரு இருதய ஆண்டவர்‌ கோவில்‌ என்றழைக்கப்படும்‌ பாண்டிச்சேரியில்‌ திரு இருதயப்‌ பக்தி சிறப்பாகக்‌ கொண்டாடப்படுகிறது.

மக்கள்‌ மனதில்‌ திரு இருதய ஆண்டவர்‌ குடிகொண்டு அன்பையும்‌, அருளையும்‌ அள்ளிக்கொடுத்து, துன்பத்தால்‌ துவண்டு போகின்ற மக்களை ஆற்றி தேற்றி ஆசிர்வதிக்‌கிறது. ஆண்டவருக்காகக்‌ காத்திருக்கின்றவர்‌களே புதுப்பெலன்‌ அடைந்து கழுகுகளைப்‌, போல செட்டைகளை அடித்து எழும்புவார்கள்‌. அவர்கள்‌ ஓடினாலும்‌ களைப்படையார்‌. நடந்தாலும்‌ சோர்ந்து போகமாட்டார்கள்‌. (எசா 40:51) என்ற வார்த்தையினை வாழ்வாக்கி மகிழ்ந்து வாழ திரு இருதயப்‌ பக்தி வணக்கம்‌ பல வழிகளில்‌ துணை செய்து காத்து வருகிறது.

“ஒரு தாய்‌ தேற்றுவதுபோல்‌ நான்‌ உங்க ளைத்‌ தேற்றுவேன்‌” என்று ஆற்றித்‌ தேற்றும்‌ திரு இருதய ஆண்டவரிடம்‌ அண்டி வந்து அவரைப்‌ போற்றிப்‌ புகழ்ந்து அவரின்‌ தூய இருதயத்திலிருந்து வழிந்தோடும்‌ அன்பு மழையால்‌ நம்மை நிரப்பி, கனிவும்‌, கருணையும்‌ மிக்கவர்‌களாய்‌ வாழ்வோம்‌. திரு இருதய அன்பால்‌, பாவத்திலிருந்து விடுதலை பெற்று அன்பு மக்களாய்‌ அனைவரும்‌ மகிழ்ந்து செயலில்‌ ஈடுபடுவோம்‌.

தூய திரு இரத்தம்‌.

நமக்காக இரத்தம்‌ சிந்தி தம்‌ இறுதித்‌ துளி. இரத்தத்தையும்‌ தியாகப்‌ பலியாக்கி தம்‌ உயிரை தம்‌ தந்தை‌யின்‌ கையில்‌ ஒப்படைத்தார்‌ இயேசு. இயேசு இறந்துவிட்டார்‌ என்று கண்டதும்‌ அவருடைய கால்களை முறிக்கவில்லை. படைவீரருள்‌ ஒருவர்‌ இயேசுவின்‌ விலாவை ஈட்டியால்‌ குத்தினார்‌. உடனே, இரத்தமும்‌, தண்ணீரும்‌ வடிந்தன. (யோவான் 19:35), ஆம்‌ இயேசுவின்‌ அன்பு தியாகம்‌ மிக்கது. தன்னலமற்றது என்பதற்கு அவரின்‌. உடலின்‌ ஒரு துளி இரத்தமோ, தண்ணீரோ தங்கவில்லை.

“எல்லாம்‌ உமக்காக இயேசுவே உமக்காக' என்று பாடுகிறோம்‌. ஆம்‌, நமக்காகவே இறுதி இரத்தத்தையும்‌, தண்ணீரையும்‌ சிந்திய ஆண்டவரின்‌ அன்பு அளவிட முடியாதது. இரத்தம்‌ நமக்கு உயிர்‌ கொடுக்கிறது. தண்ணி நம்மை தூய்மையாக்கி உடலைப்‌ பாதுகாக்கின்றது. தம்‌ உயிரை நமக்காகப்‌ பலியாக்கிய நம்‌ ஆண்டவரின்‌ திரு இரத்தம்‌ நம்மில்‌ ஓடி நம்மைத்‌ திடப்படுத்திட ஆண்டவரின்‌ திருவுடல்‌ திருஇரத்தப்‌ பெருவிழாவை திருச்சபை சிறப்பாகக்‌ கொண்டாடுகிறது. எனவே, ஆண்டவரின்‌ அன்புத்‌ தீ நம்‌ இதயத்தில்‌ பற்றி எரிந்து அவரின்‌ திரு இரத்தம்‌ நம்மைத்‌ தூய்மையாக்கி இயேசு வின்‌ அன்புப்‌ பிள்ளைகளாய்‌ இறையாட்சி இம்‌ மண்ணில்‌ மலர குடும்ப ஆண்டைக்‌ கொண்டாடும்‌ இந்த ஆண்டில்‌ நம்‌ குடும்பங்களில்‌ திரு. இருதயப்‌ படத்தை நிறுவி பக்தி வணக்கத்‌தோடு திரு இருதய ஆண்டவரைப்‌ போற்றிப்‌ புகழ்வோம்‌.

“என்‌ அன்பில்‌ நிலைத்திருங்கள்‌” என்ற ஆண்டவர்‌ இயேசுவின்‌ வாக்கை வாழ்வாக்குவோம்‌. புனித மார்கரேட்‌ மரியாவுக்கு தம்‌ இருதய அன்பை வெளிப்படுத்திய ஆண்டவர்‌ “எனது. சதையை உண்டு, என்‌ இரத்தத்தைக்‌ குடிப்பவர்‌ நிலைவாழ்வைக்‌ கொண்டுள்ளார்‌” (யோவா 8:54) என்றார்‌. "என்னை உண்போரும்‌ என்‌னால்‌ வாழ்வர்‌” என்ற ஆண்டவரின்‌ வார்த்தையால்‌ நாம்‌ அவரை உண்டு, அவரின்‌ இரத்தத்தைப்‌ பருகும்போது இயேசுவின்‌ அன்புறவால்‌ பலப்படுத்தப்படுகிறோம்‌. நம்‌ உள்ளம்‌ (இதயம்‌) இளைப்பாறுதல்‌ அடைய கனிவும்‌, மனத்‌தாழ்ச்சியும்‌ உடைய திரு இருதயத்திடம்‌ நம் கவலைகள்‌, கண்ணீரை ஒப்படைத்து திரு இருதயப்‌ பக்தியில்‌ சிறந்து, திருப்பலியில்‌ ஆண்டவரின்‌ உடலினை உண்டு, இரத்தத்தைப்‌ பருகி பரிசுத்தமாய்‌ வாழக்‌ கற்றுக்கொள்வோம்‌.

குடும்பம்‌ குட்டித்‌ திருச்சபை. அன்பின்‌ பிறப்பிடம்‌. நாம்‌ குடும்ப உறவை வளர்த்து இயேசுவின்‌ திருஇருதய அன்பால்‌ நம்‌ குடும்பத்தைக்‌ கட்டிக்‌ காத்து வாழ்வுக்கும்‌, புனிதத்துக்கும்‌ ஊற்றாகிய இயேசுவின்‌ திரு இருதயத்திடம்‌ நம்‌ குடும்‌பங்களை ஒப்புக்கொடுப்போம்‌.

இயேசுவின்‌ இருதயமே என்றும்‌ எரிந்திடும்‌ அருள்‌ மழையே. உந்தன்‌ ஆசீரும்‌ அருளும்‌ சேர்ந்து வந்தால்‌ எந்தன்‌ ஆனந்தம்‌ பெருகிடுமே' என்று பாடி கடவுளின் ஆசி, அருள்‌, அன்பு ஆனந்தம்‌ அமைதி நம்மில்‌ நிலவி, நாம்‌ குறுகி அவர்‌ வளர்ந்திட, அவரின்‌ திருஇருதய அன்புத்‌ தீ தீமையை சுட்டெரித்து. அன்பு மழை பொழிந்து உலகை அன்பால்‌ காத்திட நம்மை, நாட்டை, வீட்டை, திருச்சபையை அவர்‌ பாதம்‌ ஒப்படைப்போம்‌. இயேசுவின்‌ திரு இருதயம்‌ திரு இரத்தம்‌ நம்மை மீட்டது.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது