ஒளியின் நிறை பேருண்மை

1. யோர்தானில் இயேசு திருமுழுக்கு பெறுதல்.

lu-01இறைவாக்கு:
இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். அப்பொழுது, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் " என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.மத். 3:16,17

சிந்தனை
இயேசு யோர்தான் நதியில் திருமுழுக்கு பெற்ற பொழுது வானம் திறந்தது. அப்பாவின் குரல் ஒலித்தது. தூய ஆவியார் புறாவடிவில் அவர் மீது வந்திறங்கினார். இதோ!என் அன்பார்ந்த மகன் என்று தந்தை வெளிப்படையாக அவரை ஏற்றுக் கொள்கின்றார். ஆவியானவர் இயேசுவுக்கு அருள் பொழிவு அளித்து விடுதலைப் பணியை அவரது கரங்களில் ஒப்படைக்கின்றார். நான் பெற்ற திருமுழுக்கின் வழியாக நான் தந்தைக்குகந்த அருள் பெற்றவனாக, நற்செய்தியைப் போதித்து ஏழைகளின ஈடேற்றத்திற்காக உழைக்கின்றேனா?

செபம் :
ஆண்டவரே! நான் பாவத்திற்கு மரித்து, புதுமனிதனாக வாழ்ந்து இயேசுவின் இறைத் தூதுவனாக வாழ வரம் தாரும்.

2. கானவூர்த் திருமண விழாவில் இயேசு

lu-02இறைவாக்கு:
இயேசு அவரிடம், "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே " என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் " என்றார். யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும். யோவா. 2:4-6

சிந்தனை:
இயேசுவின் பிரசன்னத்தால் எல்லாத் திருமணங்களும் சிறப்பு பெறுகின்றன. அன்னை மரியின் பிரசனத்தால் பற்றாக் குறை நீங்குகிறது. மகிழ்ச்சி என்ற புதிய இரசம் பெருகி வழிந்தோடுகின்றது. நமது வாழ்விலும் இயேசுவின் மகிமை வெளிப்பட் வேண்டும். விசுவாசம் நிலை நாட்டபடபட வேண்டும். என் வாழ்வில் பற்றைக்குறை வரும்பொழும் மனம் சோர்ந்து போகாமல், அன்னை மரியாளின் பரிந்துரையை நான் நாடுகின்றேனா? எனது காலியான வாழ்வின் ஜாடிகளும், நிறைவாழ்வென்ற புதிய இரசத்தால் நிரம்பும் என்று விசுவசிக்கின்றேனா?

செபம் :
ஆண்டவரே! உம்மீது அசைக்க முடியாத விசுவாசம் கொண்ட இதயத்தை எனக்குத் தாரும்.

3. இறையரசை அறிவித்து மனந்திரும்ப அழைப்பு விடுகிறார்

lu-03இறைவாக்கு:
யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது: மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் "என்று அவர் கூறினார்.மாற். 1:15-16

சிந்தனை:
இயேசு தனது வாழ்வில் மூன்று முக்கியமான செயல்களைப் புரிந்தார். செபித்தார். போதித்தார். குணமளித்தார். நம்மில் மனமாற்றல் இருந்தால் தான் விண்ணரசின் போதனைகளையும் மதிப்பீடுகளையும் நாம் பெற்று ஆன்மீகத்தில் வளரமுடியும். மனமாற்றம் என்பது ஒரு தொடர்கதை, நிகழ்வு, தனது பணியைப் பகிரங்கமாகத் தொடங்கிய பொழுதுமட்டுமல்ல, தனது வாழ்நாள் இறுதிவரை பல உவமைகளின் வழியாக மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் என்று இயேசு போதித்து வந்தார். நான் ஒவ்வொரு நாளும் நற்செய்தியைப் படித்துத் தியானித்து, மனம் மாறி விண்ணரசின் மதிப்பீடுகளைத் தேடுகின்றேனா?

செபம் :
ஆண்டவரே! நான் தினமும் மனம்மாறி உம்மையே சிக்கெனப் பற்றிக் கொள்ள எனக்கு வரம் தாரும்.

4. 4. இயேசு உருமாற்றம்.

lu-04இறைவாக்கு:
ஆறு நாள்களுக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களைமட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின. அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள். பேதுரு இயேசுவைப் பார்த்து, "ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்றார். தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒரு குரல் ஒலித்தது.. மாற். 9:2-7

சிந்தனை:
இயேசு தாபோர் மலையில் உருமாறியபோது மோசேயும் எலியாவும் அவருக்குத் தோன்றிப் பாடுகளைப் பற்றிப் பேசினர். மோசே, சட்டத்தைக் குறிக்கின்றார். எலியா, தீர்க்கத்தரிசிகளைக் குறிக்கின்றார். கட்டமும் இறைவாக்கும் இவ்வாறு இயேசுவில் நிறைவேறுகின்றன. இயேசுவின் மீது மேகம் நிழலழடுகிறது - தந்தையின் பிரசன்னத்தைக் குறிக்க. மீண்டும் ஒரு முறை தந்தையின் குரல் இயேசுவைத் தனது மகனாக ஏற்று உறுதிப்படுத்துகின்றது. இந்நிகழ்வு வழியாக இயேசு ஒரு நொடிப்பொமுது தனது தெய்வீகப் பண்பை வெளிப்படுத்துகின்றார். நானும் மேகத்தின் நிழலின்கீழ் இறைத்தந்தையின் மகனாக வாழ அழைக்கப்படுகின்றேன்.

செபம் :
ஆண்டவரே! இயேசுவின் உருவில் என்னையும் தூய ஆவியால், மாற்றி நான் உமது பிள்ளை என்பதை உணர எனக்கு வரம் தாரும்.

5.இயேசு திவ்விய நற்கருணையை நிறுவியது

lu-05இறைவாக்கு:
பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, "இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். எனது நினைவாக இவ்வாறு செய்யுங்கள் "என்றார். அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, "இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை" என்றார். லூக். 22:19-20

சிந்தனை:
இராஉணவின்போது இயேசு இம்மனுக்குத்திற்குத் தன் உடலையும் இரத்தத்தையும் தியாக அன்பால் கையளித்தார். குருத்துவத்தை நிறுவினார். அன்பின் கட்டளையை விட்டுச் சென்றார். இன்றும் திருப்பலி வழியாகத் தொடர்ந்து நமக்காக, தன் உடலையும் இரத்தத்தையும் கொடுக்கின்றார். நான் பக்தியோடு திருப்பலியில் பங்கேற்று இயேசுவைப் போல பிறர் வாழ்வு பெறும் பொருட்டு என் வாழ்வைத் தியாக அன்பால் கையளிக்கின்றேனா? ஏழை எளியோர் வாழ்வு பெற எனது பணத்தை நேரத்தை திறமைகளை அன்பை அவர்களோடு பகிர்ந்து கொள்கின்றேனா?

செபம் :
ஆண்டவரே, உமது அதிமிக மகிமைக்காக, மக்களின் நலனுக்காகவே நான் வாழ எனக்கு அருள் தாரும்.

செபமாலை முடிக்கின்ற செபம்
முதன்மை வானதூதரைன அதிதூதரான புனித மிக்கேலே, வானதூதர்களான புனித கபிரியேலே, இரபேலே திருத்தூதர்களான புனித பேதுருவே, பவுலே, யோவானே நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் இப்பொழுது வேண்டிக்கொண்ட இந்த ஐம்பத்து மூன்று மணிச மன்றாட்டையும், எங்கள் புகழுரைகளோடு சேர்த்து, புனித கன்னி மரியாவின் திருப்பாதத்திலே பாத காணிக்கையாக வைக்க உங்களை மன்றாடுகிறோம். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  செபங்கள்