தொடர்ந்துச் செபியுங்கள்

prayer

செபத்தைப் பற்றி காலங்காலமாக திருச்சபைக்குள்ளும், வெளியிலும் திறனாய்வு செய்பவர்களும், மாறுபட்ட கருத்துடையவர்களும் பலர் உள்ளனர். இருப்பினும் பிரச்சனை இதுதான். ஒரு சிலர் செபத்தின் தேவையைப் பற்றி சிறிதே அறிந்தவர்களாகவோ அல்லது மனித வாழ்வில் அடிக்கடியும், மீண்டும் மீண்டும் செபிப்பதன் அவசியத்தை உணராதவர்களாகவோ இருப்பது தான். அவர்களது விவாதம் மாறுபட்டவை, பலதரப்பட்டவை. அவர்கள் போன்றே மக்களைப் பற்றி எண்ணும்போது கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

குருவும் அவரது சீடரும்

ஒரு குருவும் அவரது சீடரும் தங்கள் கிராமத்தின் வழியே ஓடும் ஆற்றின் கரை ஓரமாக பேசிக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தார்கள். சீடன் திடீரென்று குருவிடம் ஒரு கேள்வியை எழுப்பினான்.குருவே, கடவுள் நம்மைப் பற்றியும் நமது தேவைகளைப் பற்றியும் நன்றாக அறிந்திருக்கிறார் என்று சொல்கிறீர்கள், அப்படியிருக்க நாம் ஏன் நமது தேவைகளை அவரிடம் கேட்டு செபிக்க வேண்டும்? என்று கேட்டான்.

நீ சிறுவனாக இருந்தபோது உன் பெற்றோர் உன் மீது அக்கறையுடைவர்களாய் உனது எல்லாத் தேவைகளையும் நீ கேட்பதற்கு முன்பாகவே அறிந்து நிறைவு செய்தனர். ஆனால் நீ வளர்ந்த பிறகோ, உனது தேவைகளை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்... அல்லவா? என்று சீடனிடம் கேட்டார் குரு. சீடனோ, குருவே நாம் ஏன் அடிக்கடியும், திரும்பத் திரும்பவும் செபித்துக் கொண்டே இருக்க வேண்டும்? என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே வந்தான். இம்முறை குரு பதிலேதும் கூறாமல் அவனை அப்படியே பிடித்து ஆற்றில் தள்ளி விட்டார். சீடன் நீரில் மூழ்கினான். மூச்சு திணறியது. காப்பற்றும் குருவே,காப்பற்றும்,காப்பற்றும் என்று கூச்சலிட்டுக் கத்தினான். சற்று நேரம் கழித்து குரு தன் கையை நீட்டி சீடனை ஆற்றுக்கு வெளியே இழுத்தார். உன்னை நான் ஆற்றில் ழுழ்க விடமாட்டேன் என்பது உனக்குத் தெரியுமே...,பின் ஏன் நீ அவ்வாறு மீண்டும் மீண்டும் உதவிக் கேட்டு அலறினாய்? என்று கேட்டார் குரு. நெருக்கடியும், அச்சமும் நிறைந்த அத்தருணத்தில் என்னால் கூச்சல் போடாமல் இருக்க முடியவில்லை குருவே எனறு கூறினான் சீடன்.

தொடர்ந்துச் செபியுங்கள்

உதவியற்ற நிலை மனிதனில் இயற்கையாகவே உள்ளது என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம். நாம் கடவுளை சார்ந்திருப்பது தொடர்ச்சியற்ற ஒன்று அல்ல. மாறக உறுதியானதும், நிலையானதும் ஆகும். பெரும்பாலான நேரங்களில் நாம் நம்முடைய வாழ்க்கையை நாமே நிர்வகித்துக் கொள்ளலாம். நமக்கு எப்போதாவது கடவுள்தான் தேவை என்ற எண்ணத்தில் வாழ்கிறோம். இங்கு தான் நாம் தவறு செய்கிறோம். உண்மையாகவே நாம் எப்போதும் அவர் கரங்களில் தான் இருக்கிறோம். இல்லையென்றால் நம் வாழ்வு என்றோ முடிந்திருக்கும். ஏனவே நாம் இயேசு செபம் செய்தது போலவும், தம் சீடருக்கு செபிக்கக் கற்பித்தது போலவும் தொடர்ந்து மீண்டும் மீண்டும் செபிக்க வேண்டும் (லூக் 6:12 9:28 18:1-5: மார்க்; 26:41) இயேசு தன் தந்தையின் விடுப்பத்தை ஆழ்ந்து உணர்ந்தவராய் அவரது திட்டத்தை தன் வாழ்வில் நிறைவேற்ற தேவையான எல்லா ஆற்றலையும் செபத்தின் வழியாகவே தந்தையிடமிருந்து பெற்றார்.

அன்னையின் பரிந்துரை

செபமாலை செபிப்பதன் வழியாக நம் தாய் மரியாள் நமக்குக் காட்டிய இயேசுவோடு ஒன்றிணையும் ஆழ்ந்த உணர்வினைப் பெறுவதுடன், தந்தை நமக்கென வைத்திருக்கும் இறை திட்டத்தை நிறைவேற்ற தேவையான ஆற்றலையும் அன்னையின் பரிந்துரை மூலம் பெற்றுக் கொள்வோம்..


மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  செபங்கள்