இளைஞனே! இருத்தலா? இயக்கமா?

திருமதி அருள்சீலி அந்தோனி.

நண்பா!..........
ஒரு நிமிடம்----
இளைஞனே! இருத்தலா? இயக்கமா? என்ன என்பதும் உன்னைப் பொறுத்ததே. இருத்தலில் இருக்கும் எந்தவொரு பொருளும் இயங்கவில்லை என்றால் வாழ்வு என்பது சாத்தயமாகாது! அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்கள் கூட ஓர் இடம் விட்டு மற்றொரு இடம் மாறினால் மட்டுமே மனிதர்களுக்கு பயன்படும். இல்லையேல் சங்கடமானதாகி விடும். இருத்தலும் இயக்கமும் நம்முடைய எண்ணத்தின் வெளிப்பாட்டிலிருந்தே உதயமாகின்றது.

இளைஞனே! உன் எண்ணத்தை தூய தாக்கு!
இலக்கை கூர்மையாக்கு!
நடையை விரைவாக்கு!
சொல்லை செயலாக்கு!
வாடி விடும் மலர் கூட இதழ் விரித்து சிரிக்கின்றது!
வாழப் பிறந்த உனக்கேன் அழுகை பிறக்கிறது?
இமைகளை பூட்டி விழிகளை சிறை வைக்காதே
பூட்டை உடைத்தெறி! நம்பிக்கை ஒளிகீற்று
உன் நரம்பெல்லாம் ஊடுருவட்டும்.
மூட்டைப்பூச்சிக் கூட முடங்கி இருப்பதில்லை
மூளை கொண்ட மனிதனே ----- இன்னும்மா அச்சம்?
நீ சும்மா இருந்தால் சுகமே உன் சுமையாகும்
இன்று வந்த காற்று நிரந்தரமல்ல. நாளை
வரும் என்று உறுதி இல்லை- எனவே
இன்று வரும் தென்றலில் அசைந்தாடு
நாளைய சூறாவளியில் எதிர்நீச்சல் போடு
விரைவாக உன் சிறகை விரி! வானில் தடையேதுமில்லை!
இனி உன் முயற்சிக்கு, வானம் தான் எல்லை!
தூங்கிய தூக்கம் போதும், தூக்கத்தை தூக்கி ஏறிந்து புறப்படு!
தூங்கும் உன் சுற்றத்தாரை நீ தூண்டியெழுப்ப புறப்படு!
உன்க்குள்ளே உன்க்குள்ளே ஒராயிரம் ஒளி கீற்றுகள்
உள்ளடக்கி உள்ளதென உணர்ந்து நீ புறப்படு! உன்
இருவிழிப் பார்வைகளின் இமைகளை நீ திறந்து பார்
இருளானது நின் விழியைக் கண்டதும் மறைந்துவிடும்
சிந்தித்துப் பார்...............
குடிசையில் வாழ்ந்தவர் தான் -முன்னாள் குடியரசு தலைவர்
குடிமகனே முயன்றால் -நீ நாளைய குடியரசு தலைவர்...
அழுது பிறந்தாய், இறந்தாலும் அழுவார்
நண்பா-முதலும் முடிவும் அழுகை மட்டும்தான் மிச்சம் என்பதை
புரிந்துகொள்!

நண்பா!
எழு, விழித்திடு, இலக்கு அடையும் வரை நிற்காதே !
வாழ்வின் ஓட்டத்தில் தடைகள் வந்தாலும் தகர்த்தெறி!
மீண்டும் எழுந்து ஒளி வீச- வாழ- வளர வாழ்த்துரை ஏற்க-
வரலாறு படைக்க வீறுக் கொண்டெழு!
எண்ணத்தை படைப்பாக்க!
சமுதாயத்தை செம்மையாக்க!
மனிதத்தை வளமாக்க வாராய்!
இளைஞனே.........................

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது