விசுவாசத்தின் ஊற்றுக்கள்

பேராசிரியர் அ.குழந்தை ராஜ் - காரைக்குடி.

நமக்கு விசுவாசம் ஊட்டியவர்கள் நமது பெற்றோர்கள். திருமுழுக்கு தொடங்கி, தினசரி சாப்பிடும் போதும் படிக்கும்போதும் வேலை பார்க்கும் போதும் நமமோடு உறவாடி, அந்தந்த சமயங்களில் நமக்கு விசுவாசம் ஊட்டியிருக்கின்றார்கள். (தீமோத்தேயுவுக்கு அவர் பாட்டி லோவி மற்றும் தாய் ஜனிக்கே போல) வாரம்தோறும் திருப்பலிக்கு அழைத்துச் சென்று, இறைத்தந்தை, இயேசுகிறிஸ்து, தூய ஆவியானவர், திருச்சபை, புனிதர்கள் என்றவாறு , நமக்கு விசுவாச உணவை ஊட்டியிருக்கிறார்கள். நம் கிறிஸ்தவப் பள்ளிகளில் மறைக்கல்வி வகுப்பு வாயிலாகவும், அறிந்திருக்கிறோம். மறைக்கல்வி கற்பிக்கப்படாத இடங்களில், ஞாயிறு திருப்பலிக்கு முன்னர் அல்லது பின்னர் மறைக்கல்வி, விவிலியம் போன்றவை கற்பிக்கப்படுவதன் மூலமும் நமது விசுவாசம் வளருகிறது.

கிராமங்களில் 'ஆத்திர அவசரத்திற்கு' கோயில் பிள்ளைகள் நம் விசுவாசத்தை வளர்த்திருக்கிறார்ககள். புனித சவேரியார், ஜான் பிரிட்டோ, ராபர்ட் தே நோபிலி, வீரமாமுனிவா போன்றோர்கள் தாங்கள் செல்லுமிடங்களிலெல்லாம் "உபதேசிமார்களை" நியமித்து அவர்களை அவ்வப்பொழுது சந்தித்து ஊக்கம் ஊட்டி மக்களை விசுவாசத்தில் வளர்த்திருக்கிறார்கள். சில இடங்களில் பணிக்குழுக்கள், உதாரணமாக நற்செய்திபணி, மரியாயின் சேனை, வின்சென்ட் தே பவுல் சபை கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழு, விவிலியப்பணிக்குழு போன்றவைகளும் விசுவாசத்தை வளர்த்திருக்கின்றன.

1.பெற்றோர்கள், குருக்கள்

துறவிகளின் வாழ்க்கை பிறருக்கு விசுவாசத்தை உறுதிப்படுத்தியிருக்கிறது. இவைகளையெல்லாம் கடந்து வேறு சிலரும் விசுவாசத்தை நமக்கு தந்து கொண்டிருக்கிறார்கள். 1 விவிலிய வளக்க உரைகள் எழுதும் ஆசிரியர்கள் நம் விசுவாசத்தை ஆழப்படுத்தியிருக்கிறார்கள். புதிய ஏற்பாட்டு விவிலிய உரை (william Barclay 1907-1983) வில்லியம் பார்க்ளே எழுதியது ஒர் உன்னத விளக்க உரை. புனித தாமஸ் அக்குவினாஸ் அவர்களின் 'Summa Thelogica' என்னும் நூல் இதொகுப்பு காலமெல்லாம் படிக்கத்தூண்டும் அரிய பொக்கிஷம்.

Fr.Rumble & Carty என்ற இருவரின் "வானொலி கேள்விப்பதில்" உலக பிரசித்தி பெற்றது. தமிழில் தந்தை பீட்டர் அபீர் (தற்போது ஆயரரக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்) எழுதிய புத்தகங்களும், தந்தை அல்போன்சு அவர்களின் இறையியல் கருத்துக்களும் நம் சிந்தனையைத் தூண்டுபவை. திருத்தந்தையர்களின் சுற்றுமடல்கள், இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள். திருச்சபைச்சட்டம், போப் பெனடிக்டின் "Verbum Dei" போப் பிரான்சியின் "Evangelium gudiam" இவைகள் விசுவாசத்தை உறுதிப்படுத்துகின்றன.

2. விசுவாசத்தைக் காக்கும் சிற்பிகள், ஓவியர்கள்:

வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தின் நுலைவாயிலில் வலதுபக்கம் உள்ள Pieta என்னும் சிற்பம், மாதா தன் மகனை மடியில் கிடத்தியுள்ள நிலை - பார்ப்போரை கண் கலங்கச் செய்யும். பெர்ன்னி, லியோர்னாடோ டாவின்சியின் Last Supper. மைக்கேல் ஆஞ்சலோவின் சிஸ்டைன் சிற்றாலயத்தில் உள்ள "ஆதாம் முதல் ...." போன்ற ஓவியங்கள் மக்களின் மனதில் பசுமரத்தாணிபோல பதிய வைக்கிறது. பல மோட்ச, நரக ஓவியங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி விசுவாத்தை பலப்படுத்துகிறது.

3. பாடகர் குழு

தமிழ்நாட்டில் புறவினத்தாருக்கு இயேசுவை அறிமுகம் செய்தது RC,TELC,CSI போன்ற சபைகளோ, அல்லது காளான்கள் போல முளைத்துள்ள சபைகளோ இல்லை "எல்லாம் இயேசுவே எனக்கொல்லாம்" என்ற பாடலை எல்லாரையும் பாடவைத்தவர் ஜிக்கி என்னும் ஜி.கிருஷ்ணவேணி(AM ராஜாவின் மனைவி). ஆலயங்களில் உள்ள பாடகர்குழுவிற்கு விசுவாசத்தில் பங்கு உண்டு 'அமைதி, அமைதி எங்கும் அமைதி" என்னும் பாடல் "எல்லாவரமும் நிரம்பித்ததும்பும்" என்னும் பழைய பாடல் "மாசில்லா கன்னிகை" "ஆவியானவரே அன்பின் ஆவியானவரே" என்பன போன்ற பாடல்களும் Mary's Boy Child Jesus Christ மறும் 'Holy Night Silent Night' என்ற பாடல்களும் உலகம் முழுவதும் விசுவாசத்தைத் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறது.

4.எழுத்தாளர்கள்:

ஜான் மிலட்டன் எழுதிய Paradise Lost and Paradise Regained (இழந்த விண்ணகம், மீட்கப்பட்ட விண்ணகம்) என்ற நூல்களை, தனது பார்வையை முற்றிலும் இழந்த நிலையில் அவர் சொல்லச்சொல்ல அவர் மகள் பொறுமையாக எழுதினார். பாவத்தில் விழுந்த, கீழ்ப்படியாத வானதூதர்களின் அட்டகாசத்தை அட்டகாசமாக எழுதி படிப்பவர்கள் மத்தியில் விசுவாசத்தைப் பரப்பியுள்ளார். John Banyan என்பவரின் Pilrim's Progress (இரட்சண்ய யாத்திரீகம் - கிருட்டிணப்பிள்ளை )படிப்போரின் மனதை உருகவைக்கும். Willaim Barclay யின் புதிய ஏற்பாடு விளக்கங்கள் (Commentaries - 18 Volumes) உலக புகழ் பெற்றவை. இதைத்தவிர Congor போன்ற இறையியலார்களின் புத்தகங்கள் விசுவாசத்திற்கு உரமிடுபவை.

5.கோயில்பிள்ளைகள்:

பங்குத்தளத்தில் பங்குப்பணியாளர் இருந்தாலும் கிராமங்களில் "ஆத்திர அவசரத்திற்கு" பயம், பேய், கவலை, பிரசவம், பில்லிசூனியம் போன்ற மூடப்பழக்க வழக்கங்கள் நோய்கள் போன்றவற்றிக்கு உள்ளுர் கோயில் பிள்ளை உபதேசியார்களின் "மந்திரித்தல்" வெகுவாக வேலை செய்கிறது. ஏனெனில் கிராம மக்களுக்கு உபதேசியாரின் மந்திரித்தல் மீது விசுவசாம் உண்டு.

6. சிலைகள், சிற்பங்கள்

அர்ஜென்டினாவில் உள்ள இயேசுவின் உருவம், வத்திக்கான் Pieta( மாதா மடியில் இறந்த இயேசு,) சகாயமாதா ஒவியம், போலந்து நாட்டில் இரக்கத்தின் ஆண்டவர் ஒவியம், லூர்துநகரில் உள்ள மாதாவின் சுருபம் பார்ப்பவர்களின் மனதை உருக்கம்.

7. வார, மாத இதழ்கள்

நூற்றாண்டைக் கடந்து வெளிவரும் "சர்பவியாபி" தோழன், சலேசியன் செய்திமலர், Petrus, எம்மாவுஸ், நந்தவன நாதம், கங்கை தூது, நம் வாழ்வு, விசுவாசக்குரல், Streeams போன்ற எண்ணற்ற பத்திரிக்கைகள், மக்களோடு உடன் இருந்து விசுவாசத்தை மிகைப்படுத்தும் ஊடகங்கள்.

8. திருவருட்கருவிகள்.

திருவருட்சாதனங்கள் வேற, திருவருட்கருவிகள் வேறு. திருமுழுக்கு, ஒப்பரவு, நற்கருணை, உறுதிபூசுதல், திருமணம், குருத்துவம், நோயில் பூசுதல் என்ற ஏழும் திருவருடசாதனங்கள். செபமாலை, உத்தரியம், மெழுகுவர்த்தி,பாடுப்பட்ட சுருபம், திருப்புகழ் மாலை, தீர்த்தம், படங்கள் போன்ற ஏழும் கருவிகள். ஒரு கத்தோலிக்கன் கையில் தற்காலத்தில் தவழுவது மதுபாட்டில், சிகரசெட், துப்பாக்கி, கத்தி போன்றவை. ஆனால் அவன் கைகளில் இருக்கவேண்டியது விவிலிய நூலும், செபமாலையும். "செபமாலை செபித்து வீழ்ந்தவர் இல்லை, செபமாலை செபிக்காதவன் ஜெயித்ததும் இல்லை". கைகளில் பையில் செபமாலை இருந்தால் நமக்கு ஒரு தெம்பு, தைரியம், நிம்மதி, அமைதி வரும். ஆயுதங்கள் ஏற்தியிருந்தால் அது நமக்கே ஆபத்தாக முடியும். தனிமையில் உள்ளபோது திருவருட்கருவிகள் நமக்கு விசுவாசத்தை அதிகப்படுத்தும், பல கிராமங்களில் புனிதருக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கி ஆறுதல் பெறுகிறார்கள். திருப்பலி கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளமுடியாத ராணுவ வீரர்கள் கப்பல், விமான பணயிகள், நோயாளிகள், முதியோருக்கு திருவருட்கருவிகளே விசுவாசத்தை ஊட்டி வளர்க்கின்றன.

9. சகமனிதர்கள்

ஒரு நல்ல கத்தோலிக்களின் சாட்சிய வாழ்வு பிற மக்களுக்கு அசையா விசுவாசத்தை தருகின்றது. விவிலியத்தை தூக்கிவரும் நற்செய்திப் பணியாளர்களில், ஒரு சிலரின் வாழ்வு, பிறருக்கு நம்பிக்கையைத் தருகிறது. எனவே திருப்பலி தவிர மேற்கூறப்பட்டவைகளும் நம்மோடு உடனிருந்து விசுவாசத்தை ஊட்டுகின்றன. எனவே இவைகளை நாம் தாராளமாகப் பயன் படுத்திக் கொள்வோம்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது