அறிவு - வளர்ச்சியா? - வீழ்ச்சியா?
திரு. ஆரோக்கியராஜ்- சென்னை24
கடந்த நூற்றாண்டிலும், இந்த நூற்றாண்டிலும் மானிடரின் அறிவு அதிவேகமாக உள்ளது. நாள்தோறும் எவ்வளவோ மாற்றங்கள். மாற்றம் ஒன்றே மாறமால் நடைப் பெற்றுக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அதி நவீனப் புது ஆராயிச்சிகள், கண்டுபிடிப்புகள், ராக்கெட்கள், ரோபோட்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் என விஞ்ஞான வளர்ச்சி எங்கோ வளர்ந்து கொண்டே போகிறது. மானிடரின் அறிவு வளர்ந்து கொண்டே போகிறது.
ஏசாயா 14:13 “நான் விண்ணுலகிற்கு ஏறிச் செல்வேன்” எனக்கூறியது போல இன்று விஞ்ஞானிகள் வானத்தில் ஏறுவோம் எனப் பல விண்கலங்களை ஏவிச் சிறிது சிறிதாக முன்னோறி, வெற்றியும் பெற்று வருகிறார்கள்.
ஆனால் இவ்வுலகின் அறிவும் வளர்ச்சியும் வீண் என்று திருவிவிலியம் கூறுகிறது.
சபை உரை 1:3 மனிதர் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைக்கின்றனர். ஆனால் அவர்கள் உழைப்பினால் பெறும் பயன் என்ன?
சபை உரை 1:18 அறிவுப் பெருக, கவலைப் பெருகும். துயரம் கிட்டும்.
தானியேல்12:4 அறிவின் வளர்ச்சி எல்லாம் வீண் தான் என்று சொல்கிறது.
ஆம், அரசர் சாலமோன் உலகிலேயே அதிக அறிவு,புத்தி, ஞானமுடையவராய் இருந்தார். அவரைப் போல இனியாரும் பிறப்பதில்லை என்று ஆண்டவர் கூறினார்.
இவ்வாறு அறிவிக்கப்பட்ட சாலமோனின் ஞானமும் அறிவும் அவரை வீழ்ச்சியின் பாதையிலிருந்து காப்பாற்ற வில்லை. அது மட்டும் அவர் கடைசி நாள்களில் தனக்கு ஞானத்தைக் கொடுத்த உண்மை கடவுளை மறந்து, பிறமத தெய்வங்களை வணங்குபவராக மாறிப் போனார்.
ஆம் அறிவு வளர்ச்சி, உலக ஞானம் உண்மைக் கடவுளை அறியவிடாமல் தடுக்கும் தடைகல்லாகிறது.
ஏவாள் ஏதேன் தோட்டத்தில் மரத்தின் பழத்தைத் தொடக்கநூல்3:6 அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும்| கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும்| அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு| பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான்.
அந்தப் பழத்தைப் பற்றிச் சொல்லும் பொழுது அது
கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும்
உண்பதற்குச் சுவையானதாகவும்
அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும்
இருந்தால் ஏவாள் பறித்துச் சாப்பிட்டாள்.
ஆனால் உண்மை என்ன?
தொடக்கநூல்3:7 இவ்வாறு பார்க்கிறோம். “அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன; அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர்.” அவர்கள் அவர்கள் அறிவுப் பெற்ற எதைக் கண்டார்கள்? தங்கள் அவலத்தை| நிர்வாணத்தை| ஆடையின்றி இருப்பதைத் தான் அவர்கள் அறிவு கண்டது.
அவர்கள் அறிவுக் கண்கள்
1. தங்களைப் படைத்த ஆண்டவரைப் பார்க்கவில்லை.
2. அவர் படைத்த அழுகுமிகு ஏதேன் தோட்டத்தின் அழகைக் கண்டு வியக்கவில்லை.
3. பாம்பு எப்படித் தந்திரமாக மனித மொழியில் பேசியது என உணரவில்லை.
4. ஆண்டவரின் கட்டளையை மீறிவிட்டோமே, நம்மைப் படைத்தவரை மதிக்காமல், கீழ்படியாமல் போனோமே என்ற தவற்றை உணர்த்தவில்லை.”
5. அல்லது சாவிலிருந்து தப்பிக்கத் தொநூ3:22,23ல் கூறப்பட்ட “வாழ்வின் மரத்திலிருந்து பறித்து உண்ண அறிவுறுத்தவில்லை.
அப்படிச் சொல்லியிரந்தால் அஃது உண்மையான அறிவு. அதற்குப் பதில் அவர்களின் நிர்வாணத்தைக் காணச் செய்தது.
அதேபோல இன்று நம் அறிவுக் கண்கள் வளர்ச்சியடைந்து, பெரிய தொலைக்காட்சியிலும், திரையரங்குகளில் எல்லா அருவெறுப்பையும், நிர்வாணப் படங்களையும், ஆபாச நடனங்களையும் என்று பார்க்கிறோம். இன்றைய இளைய சமுதாயம் இந்த அருவெறுப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஏனெனில் 1.அது கண்களுக்குக் களிப்பூட்டுகிறது. 2. மனதிற்குச் சுவையும், திருப்தியையும் தருகிறது. 3.உலக அறிவையும் தருகிறது என ஏவாளைப் போல நினைக்கிறோம்.
தொடக்கநூல் 3: நன்மைத் தீமை அறியும் மரத்திலிருந்து கனியை 1. தொடக்கூடாது. 2. உண்ணக்கூடாது. 3. மீறினால் சாவீர்கள் என்று கூறியும் ஏவாள் அதைத் தெரிந்தே கட்டளையை மீறினாள். சாவோம் என்று தெரிந்தே உண்டாள். இதேபோல இன்றைய சமுதாயமும் அதே வழியில் செல்கிறது.
இன்றும் அதே நிலை தான்.
உரோமர் 6:13 "பாவத்தின் சம்பளம் மரணம்” என்று தெரிந்திருந்தாலும், ஏவாளைப் போலவே நாம் கட்டளைக்குக் கீழ்படியாமல், தெய்வபய உணர்வு இல்லாமல் பாவ உணர்ச்சியின்றிப் பாவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
எப்படி ஒரு குடிகாரன் "குடி உயிரைக் குடிக்கும்” என்ற வாசகத்தைப் பார்த்த, படித்தபின்னும் அந்தக் கடைக்குள் சென்று “குடிக் குடியைக் கெடுக்கும்” என்று எழுதியுள்ள புட்டியைத் தெரிந்தே விரும்பியே குடிக்கிறது போல இன்றைய சமுதாயம் பாவத்தின் முடிவு மரணம் என்பதைத் தெரிந்து அறிந்து அதை விட்டு விடடாமல் அதிலேயே அழிந்து கொண்டிருக்கிறது.
இன்றைய நாள்களில் மனிதனின் அறிவு வளர்ச்சி அவனைக் கடவுளை நோக்கி மனமாறத் தடைக்கல்லாக உள்ளது.
எபிரேயர் 3:15 இன்று அவர் குரலைக் கேட்டால் உங்கள் உள்ளத்தைக் கடினப்படுத்ததீர்கள். மாற்கு 1:15 “காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அவர் கூறினார்.
“மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்றார் இயேசு. மனம் மாற நாங்கள் என்ன செய்ய வேண்டும்? எனப் பேதுருவைக் கேட்டார்கள். அதற்கு நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக என்றார். மனம் மாறி அவரிடம் (ஆண்டவரிடம்) திரும்புங்கள் என்கிறார். 2பேதுரு 3:9 சொல்கிறது ஒருவரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாற வேண்டும் விரும்புகிறார்.ஆம் எல்லோரும் மனம் மாறவேண்டும்.
செபம்:-ஆண்டவரே! இந்தத் தவக்காலத்தில் நாங்கள் அழிந்துப் போகமால் மனமாறி உம்மிடம் திரும்பும் வர என் மனத்தை மாற வேணடுமாய் செபிப்போம்.