நல் ஆசிரியர் இயேசு

ரீனாரவி -அருள்வாழ்வு

பலமுறை பலவழி வகைகளில் முக்காலத்தில் இறைவாக்கினர்கள் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள் (எபி 1:1) இன்றும் மனிதர்களாகிய நம்மோடு தொடர்ந்து பேசுகின்றார்.

வாழிவின் வழியை எடுத்துச் சொல்லும் மேலானப் பொறுப்பில் உள்ளவர்கள் ஆசிரியப் பெருமக்கள். காட்டற்று வெள்ளம் போன்ற மாணவனையும் தெளிந்த நீரோடையாக்கி, பலன் அளிக்க வைத்திடும் வல்லமை இவர்களுக்கு உண்டு. ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியரையும் பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியரையும் போட வேண்டும் என்ற சட்டம் வந்த புதிதில் படித்த நிகழ்வு ஒன்று ஞாபகத்தில் நிழலாடுகிறது.

பேருந்தில் அருகருகே இருவர் பயணம் செய்து கொண்டு இருந்தனர். செய்தித்தாள் ஒன்றில் வந்த இந்த நிகழ்வினை சத்தம் போட்டு படிக்கின்றார். இதனை கெட்ட மற்றவர் என்ன சொன்னார் தெரியுமா? மேரி டீச்சர் மட்டும் என்னை வழி நடத்தாமல் இருந்விருந்தால் நான் இருந்த இடம் ஏதுவுமே தெரியாமல் போயிருக்கும்" என்ற வேதனையின் பெருமூச்சி சொல்லும் பாடம் தான் என்ன?

அந்த மனிதர் என்ன செய்தார் என்று தெரியாது. மேரி டீச்சர் யரென்றும் தெரியாது. காலம் கடந்தும் தன் நிகழ்கால வேதனையின் தீர்வாக அந்த ஆசிரியை பெருடைப்படுத்திடும் அம்மனிதரின் மனமாற்றத்தின் காரணம் ஒரு நல்ல ஆசிரியர். ஆசிரியப்பணி மாபெரும் தியாக பணி வாழ்வின் வசந்தத்தை மக்களுக்கு விதைத்து அன்பு நிறைந்த சமூகத்தை, தீமை அகன்ற சமூகத்தை உருவாக்கிட வேண்டிய மாபெரும் பொறுப்பு ஆசிரியர்களின் கரங்களில் பொதிந்து உள்ளது.

jesus teacher இயேசுவும் சிறந்த ஆசிரியப் பணி ஆற்றினார். சமூக அநீதிகள் மலிந்து கிடந்த சமூகத்தின் சாக்கடை அகற்றிடும் மகாத்தான பனியில் சிறந்து விளங்கினார். மூன்று வருடங்களில் அவரது சமூக சேவை மூவுலகினையும் இணைத்திடும் பாதையாக மலர்ந்தது. பகட்டு பரிதவிப்பு பக்குவமில்லா நிலை குவிந்து கிடந்தது அச்சமூகத்தில் இயேசவின் பகுத்தறிவான வாக்கு அவரை இறைவனாக உயர்த்தியது. அச்சமூகத்தின் துயர் துடைக்க உதவியது, பேதுரு கோழி கூவும் முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் என்று அறிந்திருந்த நல்லாசான் பேதுரு என்னும் பாறை மேல் தனது திருச்சபையை கட்டுகின்றார்.

மாதா பிதா குரு தெய்வம்.. நல்ல ஆசிரியர் தெய்வத்திற்கு முன் நிற்கின்றார். சிலசமயங்களில் தெய்வமாகவும் வழிநடத்துகிறார். வகுப்பில் ஆயிரம் மாணவர்களை பெயர் சொல்லி அழைப்பது மட்டுமல்ல ஐம்பது வருடங்கள் கடந்த நிலையிலும் தன் மாணவனை பெயர் சொல்லி அழைக்கும் பேறு பெற்றவர்கள் ஆசிரியர்களே!

தாயின் வயிற்றில் உருவாகும் முன்னரே பெயர் சொல்ல அழைத்து உள்ளங்கையில் பொறித்து வைத்து கண்ணின் இமை போன்று நம்மை காக்கும் வல்லவரின் வழி நடத்தலால் பாவ வாழ்வை வென்றிடுவோம். இறைமண்ணில் மலரும் ரோஜாவாய் மணம் வீசிடுவோம்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது