நம்மை உயர்த்தி ஆசீர்வதிப்பார்.

திருமதி ஜெயமேரி(செல்வி)

நமக்குப் பல ஆசீர்வாதங்கள் வாழ்க்கைக்குத் தேவை.அதில் முதலில் ஆண்டவரின் ஆசீர்வாதம். அது நமக்கு இருந்தால் நம் வாழ்க்கைப் பாதை வெற்றிகரமாக அமையும் என்பது உண்மை.

“இன்று முதல் உங்களுக்கு நான் ஆசி வழங்குவேன் (ஆகாய் 2:19)” ஆண்டவருடைய ஒவ்வொரு ஆசீர்வாதமும் ஒரு நிபந்தனையோடு தான் இருக்கும். ஆபிரகாமை நோக்கி உன் நாட்டையும் இனத்தரையும் தந்தையின் வீட்டையும் விட்டு வெளியே வா! (ஆதி. 12:1,2,3) உன்னைப் பெரிய இனமாக்குவேன், உன்னை ஆசீர்வதிப்பேன். உனக்கு ஆசிக்கூறுவோருக்கு ஆசி வழங்குவேன். எப்பொழுது? ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படியும் போதுதான்..

இன்று நீங்களும் நானும் கண்ணுக்குத் தெரிந்து இருக்கின்ற தாய் தந்தையருக்குக் கீழ்ப்படிவதில்லை. எங்கே காணாத கடவுளுக்குக் கீழ்ப்படியப் போகிறோம்? கீழ்ப்படியும் போது ஆசீர்வாதத்தைக் கண்டிப்பாகக் காண்போம். (எண்ணிக்கை 6:24,25,26) ஆண்டவர் ஆசீர்வதித்துக் காப்பாராக! ஆசீர்வாதத்தால் மட்டும் போதாதது என்றும் நம்மைக் கண்ணின் மணிபோலக் காக்கின்றவர், அவர் திருமுகத்தை நம் மீது திருப்பி நமக்கு அமைதி அருள்வாராக! ஆண்டவர் தரும் அமைதி மிக முக்கியமானது.

நமது வாழ்க்கையில் அமைதி மட்டும் இருந்தால் நோய், வெறுப்பு, கோபம் எனப் பல பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். ஆண்டவர் தரும் அமைதிப் பெறத் தயாராக வேண்டுமெனில், நோய் குணமாக மருத்துவர் தரும் மருந்துகள், உணவு கட்டுப்பாடுகள் என ஒரு பெரிய பட்டியல் உண்டு. அதை உடனே கடைப்பிடிப்போம்.. ஏனெனில் நோய் தீரவேண்டுமே! ஆனால் உயிர்மூச்சைக் கொடுத்து, ஆசீர்வாதங்களைக் கொடுக்கின்ற ஆண்டவர் சொல்வதைக் கடைப்பிடிக்கத் தவறி விடுகிறோம். அதனால் தான் ஆசீர்வாதங்களை இழந்துவிடுகிறோம். ஆனாலும் மன்னித்து ஆண்டவர் நம்மை மீண்டும் ஆசீர்வாதிப்பார், அவருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுக்கும் பொழுது!

புது வருடம் புது நாளில் ஆண்டவரின் ஆசீர்வாதத்தைப் பெற நினைக்கும் நாம் பத்தில் ஒரு பங்கை ஆண்டவருக்குக் கொடுப்போம். ஏழு மடங்காய் பெற்றக் கொள்வோம். நம் சாபங்களை ஆசீர்வாதமாக மாற்றுவார். (நெகேமியா 13:2)பிறரைச் சபிக்காமல் சபிப்பவர்களுக்காய் செபிக்கும் வேண்டும் ஆண்டவரைத் தேடாதவர்கள் வசதியாகச் சுகபோக வாழ்க்கை வாழ்பவர் போல நாம் ஏன் ஏப்படி வாழகூடாது? என்று நினைக்கக்கூடாது. அது நமக்கு உகந்தது அல்ல.

(இணைச் சட்டம் 28: 1-14) நம் ஆண்டவரின் கரங்கள் “வா”என்றோ “போ” என்றோ சொல்லாமல் ஆசீர்வதிக்கவே உயர்ந்தக் கரங்கள். அவருக்குக் கீழ்படிந்தால், அதில் கூறிய அனைத்தும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ளலாம். (1பேதுரு 5:6) நம்மை ஆண்டவருக்குளே தாழ்த்தினால் அவர் நம்மை உயர்த்தி ஆசீர்வதிப்பார். ஆசீர்வதிக்கவே வந்தேன் என்ற சொன்ன நம் ஆண்டவர் சொன்னச் சொல் தவறமாட்டார்.(சீராக் 47:22)

எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவர் தேவையான அனைத்தையும் தருவார். நமக்கு இந்த வருடத்தில் புதிய அதிக ஆசீர்வாதங்களைப் பொழியக் காத்திருக்கிறார். பெற்றுக் கொள்வோம். ஆண்டவர் உங்களை ஆயிரம் மடங்கு ஆசீர்வாதமாக இருக்க வைப்பாராக! ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது