புத்தாண்டில் அஞ்சாதே, திகையாதே, கலங்காதே....!

எல். இரபேல்

🕀 "என் செல்லப் பிள்ளையே, உனக்கு என்னை தெரியாமல் இருக்கலாம். ஆனால், உன்னைப் பற்றி நான் ஒவ்வொன்றையும் அறிவேன். நீ அமர்வதையும், எழுவதையும், உன் அனைத்து வழிகளையும் நான் அறிவேன்" (திபா 139:1-3).
🕀 "உன் தலையில் உள்ள முடிகளின் எண்ணிக்கை கூட எனக்குத் தெரியும்" (மத் 10:30).
🕀 "ஏனெனில் என் உருவில் நான் உன்னை படைத்தேன்" (தொநூ 1:27).
🕀 "என்னைச் சார்ந்துதான் வாழ்கின்றாய். இயங்குகின்றாய், இருக்கின்றாய், நீ என் குழந்தை” (திப 17:28).
🕀 "உன் தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கும் முன்பே அறிந்திருந்தேன்" (எரே 1:5).
🕀 "உலகம் தோன்றுவதற்கு முன்பே உன்னை நான் தேர்ந்தெடுத்தேன்" (எபே 1:4).
🕀 "நீ பிறந்தது தற்செயலாக அல்ல. உன் வாழ்நாள் எவ்வளவு என்று என் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது" (திபா 151:16).
🕀 "நீ பிறக்க வேண்டிய காலத்தையும், நீ வாழ வேண்டிய இடத்தையும் முன்குறித்து வைத்தேன்" (திப 17:26).
🕀 "அஞ்சத்தகு முறையில், வியத்தகு முறையில் நான் உன்னைப் படைத்தேன்" (திபா 139:14).
🕀 "உன் தாயின் கருவில் உன் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நானே” (திபா 139:13).
🕀 "உன் தாயின் வயிற்றிலிருந்து நான்தான் உன்னைப் பிரித்தெடுத்தேன்" (திபா 71:6).
🕀 "என்னை அறியாதவர்கள் என்னைப் பற்றி தவறாகக் கூறுகின்றார்கள்" (யோவா 8:41-44).
🕀 "அதைப் பற்றி நான் கோபப்பட்டதுமில்லை, வெகுதொலைவில் ஓடிப்போவதுமில்லை. காரணம், நான் அன்பாய் இருக்கிறேன்" (1யோவா 4:16).
🕀 "உன்மீது என் அன்பை பொழிவதே என் விருப்பம், காரணம் நீ என் பிள்ளை. நான் உன் தந்தை" (1யோவா 3:1).
🕀 "உலகத்தில் உள்ள உன் அப்பாவைவிட நான் அளவுக்கு அதிகமாய் வழங்குவேன்" (மத் 7:11).
🕀 "ஏனெனில் நான் நிறைவு உள்ளவராய் இருக்கிறேன்" (மத் 5:48).
🕀 "நீ பெறும் எல்லா கொடைகளும், நன்மைகளும் என்னிடமிருந்தே வருகின்றன” (யாக் 1:17).
🕀 "உனக்கு வளமான எதிர்காலத்தையும், நம்பிக்கை அளிக்கும் நல்வாழ்வுக்கான திட்டங்களையும் நான் வைத்திருக்கிறேன்” (எரே 29:11). 🕀 "ஏனெனில் உன்மீது நான் முடிவில்லாத அன்பைப் பொழிந்து, எனது பேரன்பால் உன்னை ஈர்த்துள்ளேன்” (எரே 31:3).
🕀 "உன்னைப் பற்றிய என் எண்ணங்கள் கடல் மணலின் எண்ணிக்கையைவிட அதிகம்" (திபா 139:17-18).
🕀 "உன்னைப் பற்றி எண்ணி நான் மகிழ்ந்து களிகூறுகின்றேன்" (செப் 3:17).
🕀 "உனக்கு நன்மை செய்ய நான் தவறமாட்டேன்" (எரே 32:40).
🕀 "நீயே என் தனிச்சொத்து" (விப 19:5).
🕀 "என் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும் உனக்கு நன்மை புரிவதில் நான் மகிழ்ச்சி அடைவேன்" (எரே 32:41).
🕀 "நீ அறிந்திராத மாபெரும் செயல்களையும், மறைபொருள்களையும் உனக்கு விளக்கு வேன்" (எரே 33:3).
🕀 "உன் முழு இதயத்தோடும், உள்ளத்தோடும் என்னைத் தேடினால் நீ என்னைக் காண்பாய்" (இச 4:29).
🕀 "என்னிலே மகிழ்ச்சிக்கொள், உன் உள்ளத்து விருப்பங்களை நான் நிறைவேற்றுவேன்" (திபா 37:4).
🕀 "நானே உன்னில் செயலாற்றுகிறேன். என் திருவுளப்படி நீ செயல்படுவதற்கான விருப்பத்தையும், ஆற்றலையும் தருவேன்" (பிலி 2:13).
🕀 "உனது வேண்டுதலுக்கும். நீ நினைப்பதற்கும் மேலாக அனைத்தையும் செய்ய வல்லவர் நான்" (எபே 3:20).
🕀 "உனது உள்ளத்திற்கு ஊக்கமளித்து நல்லதையே சொல்லவும், செய்யவும் உன்னை உறுதிப்படுத்துவேன்" (2தெச 2:16-17).
🕀 "உன் இன்னல்கள் அனைத்திலும் உனக்கு ஆறுதல் அளிக்கும் இரக்கம் நிறைந்த உன் தந்தை நான்" (2கொரி 1:3-4).
🕀 "உன் உள்ளம் உடையும்போது உன் அருகிலேயே இருக்கின்றேன்" (திபா 34:18).
🕀 "ஓர் ஆயன் தன் ஆட்டுக்குட்டியை தன் தோள் மீது சுமப்பதுபோல உன்னை என் தோளில் சுமந்து வருகிறேன்" (எசா 40:17).
🕀 "ஒருநாள் உன் கண்ணீர் அனைத்தையும் நான் துடைத்து விடுவேன்" (திவெ 24:3-4).
🕀 "நான் உனது தந்தை. என் மகன் இயேசுவை நான் அன்பு செய்வதுபோல உன்னையும் அன்பு செய்கிறேன்" (யோவா 17:23).
🕀 "ஏனெனில் இயேசுவில் உனக்கு என் அன்பை வெளிப்படுத்தினேன்" (யோவா 17:26).
🕀 "அவரே என் இயல்பின் அச்சும், பதிவுமாக விளங்குகின்றார்" (எபி 1:3).
🕀 "நான் உனக்காகவே இருக்கின்றேன். உனக்கு எதிராக அல்ல என்று காண்பிக்கவே அவரை ஒப்புவித்தேன்" (உரோ 8:31).
🕀 "உன் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கிறிஸ்து வழியாக உன்னை என்னோடு ஒப்புரவாக்கினேன்" (2கொரி 5:18-19).
🕀 "நான் உன்மீது எவ்வளவு அன்பு கொண்டுள்ளேன் என்றால் எனது மகன் இயேசுவையே சாவுக்குக் கையளித்தேன்" (1யோவா 4:10).
🕀 "உன் அன்பைப் பெறுவதற்காக நான் அன்பு செய்த அனைத்தையும் இழந்தேன்" (உரோ 8:31-32).
🕀 "நீ என் மகன் இயேசுவை ஏற்றுக்கொண்டால் என்னையும் நீ ஏற்றுக்கொள்வாய்" (1யோவா 2:23).
🕀 "எனது அன்பிலிருந்து உன்னை எதுவும் பிரிக்க முடியாது" (உரோ 8:39).
🕀 "என் வீட்டுக்கு வா, விண்ணகமே அறிந்திராத அளவுக்கு ஒரு விருந்தை ஏற்பாடு செய்துள்ளேன்" (லூக் 15:6).
🕀 "எப்பொழுதும் உன் தந்தையாகவே இருந்திருக்கின்றேன். எப்போதும் உன் தந்தையாகவே இருப்பேன்" (எபேசி 3:14-15).
🕀 "என்னை நம்பி, என்னை ஏற்றுக்கொண்டு என் பிள்ளையாவாயா?" (யோவா 1:12-13).
🕀 "நான் உனக்காகவே காத்திருக்கின்றேன்” (லூக் 15:11-32).

உன் அன்புள்ள அப்பா
எல்லாம் வல்ல இறைவன்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது