இந்த நால்வரில் நாம் யார்?
சிந்தனைச் செல்வர். பேராசிரியர் -அ.குழந்தைராஜ் காரைக்குடி
விவிலியத்தில் இயேசுவின் நேரடி சீடர்களாக இருந்த 12 நபர்களில் அந்திரேயா, பிலிப்பு, தோமா, மறைமுகமாக சீடராக பணியாற்றிய நிக்கதேம் என்ற இந்த நால்வரைப் பற்றிய குறிப்புகள் புதிய ஏற்பாட்டில் மூன்றே மூன்று இடங்களில் மட்டும் குறிப்பிடப்படுகிறது. இதுவும் பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடே. (நற்செய்தி எழுதியவர்கள் வேண்டுமென்றே மூனறு தடவை மட்டும் எழுதுவோம் என்று எழுதியது அல்ல. மறைநூல் கடவுளின் தூண்டுதலால் எழுதப்பட்டதற்கு இதுவும் ஒரு சாட்சியமாகும்). அந்த நால்வரும் என்ன சொன்னார்கள் என்ன செய்தார்கள் என்பதைப் பார்ப்போம்.
1 அந்திரேயா
1.இயேசுவை முதன்முதலில் பார்த்து தம்மைச் சீடராக்கிக் கொண்டு, தன் அண்ணன் பேதுருவை இயேசுவிடம் அழைத்து வந்தவர். தம் பெற்ற சீடத்துவ அனுபவத்தை பிறரோடு பகிர்ந்து கொள்ளும் மனப்பாங்குடையவர். அவர் கூறிய முதல் வார்த்தையே “மெசியாவை கண்டோம்.” என்பது தான் (யோவான் 1:40) சமாரியப்பெண் இயேசுவைப் படிப்படியாக “நீர்”(யோவான் 4:9) "ஐயா" (யோவான் 4:11,15)இறைவாக்கினர் (யோவான்4:19 ) அவர் மெசியா(யோவான்4:29 ) உலகின் மீட்பர் ” (யோவான்4:42) என்று கீழிலிருந்து துவங்கி மேல் நிலை வரைசெல்கிறார். ஆனால் அந்திரேயா எடுத்த எடுப்பிலேயே இயேசுவை மெசியா என உணர்ந்தார்.
2.இரண்டாவதாக பெருந்திரளான மக்கள் இயேசுவின் போதனையைக் கேட்க வந்ததால் மூன்று நாட்களாக பசியோடு இருந்தவர்களுக்கு அப்பம் பகிரச் செய்து கொடுத்த நிகழ்ச்சியில் (யோவான் 6:9 ) பிலிப்புவிடம் கேட்டதற்கு அவர் “நம்மைப்போல”தட்டிக் கழிக்கும் பேர்வழியாக இருந்து “இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே” எனக் கூறியபோது, அந்திரேயா “இங்கே சிறுவனிடம் ஐந்து கோதுமை அப்பங்களும், இரண்டு மீன்களும் உள்ளன” என இயேசுவுக்கு அறிவித்து, மக்களின் பசியைப் போக்க இயேசு வல்லவர் என்பதை உணர்ந்தவராய் “செயல்பாட்டிலே” இறங்குகிறார். (இன்னும் நாம் கூட திருச்சபைக் காரியங்களை பிலிப்பு போல தட்டிக் கழிக்கப் பார்க்கிறோமே தவிர அந்திரேயாவைப் போல நம்மால் முடிந்ததைச் செய்வோம்” என்ற மனப்பான்மை வேண்டும்).
3. வழிபாட்டிற்கு வந்திருந்த பிற இனத்தவராகிய கிரேக்கர்கள் இயேசுவைக் காண வந்திருந்தார்கள். பிலிப்பு அந்திரேயாவிடம் சொல்ல அந்திரேயா இயேசுவிடம் அவர்களை அழைத்து வந்தார்.(யோவான் 12:22). இந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் அந்திரேயா பிறரை இயேசுவிடம் கொண்டு வந்து சேர்க்கிறார். ஏன்பதை அறியலாம் (நாம் பிறரை இயேசுவிடம் அழைத்து வருகிறோமா?)
2.தோமா
1.இலாசர் இறந்த செய்தியோடு இயேசு “வாருங்கள் யூதேயாவிற்குப் போவோம்” என்ற போது மற்ற சீடர்கள் “ரபி இப்போதுதானே நம்மேல் கல்லெறிய முயன்றார்கள். மீண்டும் அங்கு போகிறீரா” எனத் தடுத்தனர்(யோ11:8) இயேசு “அவனிடம் போவோம் வாருங்கள்” என்றார். உடனே தோமோ இயேசுவினால் இலாசரை உயிர்ப்பிக்கமுடியம் என்று நினைக்காமல் இயேசுவின் கருத்துகளை உணராதவராய் தமக்குள் தடுமாறி “என்ன ஆனாலும் சரி“ என்ற விரக்தி நிலையில் “நாமும் வெல்வோம் அவரோடு இறப்போம்.” என்று (யோவான் 11:18) கூறுகிறார். இயேசு அங்கு சென்றால் கல்லெறிந்து சாகப்போகிறார் என்ற எதழர்மறையான சிந்தனை தோமாவுக்குத் தோன்றியிருந்தது.
2. இயேசு “நான்போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன்” என்றபோது தோமா” ஆண்டவரே நீh எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிலுக்க நீர்போகுமிடத்துக்கான வுழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்” (யோவான் 14:5) என ஐயம் கொள்கிறார். ஆனால் ஐயம் நீக்க இயேசு “நானே வழியும் உண்மையும் வாழ்வும்” எனக்கூறுகியார்.
3. உயிர்த்த இயேசு தோமா இல்லாதபோது வந்தார். பிற சீடர்கள் “நாங்கள் ஆண்டவரைக் கண்டோம்” என்கிறார்கள். ஆனால் தோமா “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து அதில் என் விரலை விட்டு அவர் விலாவில் என்கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்று கூறியபோது உயிர்த்த இயேசு அங்கு தோன்றியதும் தோமா தம் ஐயம் நீங்கி “நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்” என அறிக்கையிடுகிறார். (யோவான் 20:28) இயேசு மறுமொழியாக காணாமல் நம்புவோர் பேறு பெற்றோர்” எனக்கூற வைத்தவர் தோமா. (நமக்கும் உள்ள சந்தேகத்தை தோமா போக்குகிறார்.
3.பிலிப்பு
1 கலிலேயாவுக்கு இயேசு செல்லவிரும்பியபோது பிலிப்பைக் கண்டு "என்னைப் பின் தொடர்ந்து வா" என்று இயேசுவால் அழைக்கப்பட்டவர். இவர் அந்திரேயா, பேதுரு ஊரைச் சார்ந்தவர். பிலிப்பு நத்தனியேலை (பர்த்தலமேயுவை) இயேசுவிடம் அழைத்து வந்தவர்.
2. இவர் முதலில் (யோவான் 6:7)ல் பேசியது 5000 பேருக்கு உணவளிக்க இயேசு நினைக்கும்போது, அவர் பொறுப்பின்மையின் உதாரணமாகத் திகழ்ந்தார். தட்டிக் கழிக்க நினைக்கும் எண்ணமுடையவர்.
3.மூன்றாவது பிலிப்பு இயேசுவிடம் (யோ14:8) 'ஆண்டவரே தந்தையை எங்களுக்குக் காட்டும் அதுவே போதும்" என்கிறார். இயேசு மறுமொழியாக ' பிலிப்பே இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்து கொள்ளவில்லையா... நான் சொல்வதை நம்பாவிட்டாலும் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள்." என்றும் 'மற்றொரு துணையாளரைத் தருவேன்" என்ற இயேசு பதில் சொல்லியதன் மூலம் நமக்கும் இன்றுள்ள சந்தேகத்தைப் (நான் கடவுளைக் காண்பேனா? என்ற நம்முடைய சந்தேகத்தை) போக்குகிறார்.
4.நிக்கதேம்
1. இவர் யூதர்களுக்கு அஞ்சி மறைவாக இயேசுவின் சீடராக இருந்தவர். அதனால் தான் ஓர் இரவில் இயேசுவைச் சந்திக்கிறார். (யோவான் 3:1-12) 'மறுபடியும் ஒருவன் பிறக்கவேண்டும்" என்று இயேசு கூறியபோது நிக்கதேம் 'தாயின் வயிற்றில் புகுந்து பிறக்கமுடியுமோ?" என்ற சிறுப்பிள்ளைத்தனமாக கேட்கிறார். இதற்குப் பதிலாக இயேசு ' தம் மகன் மீது நம்பிக்கை. கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்" எனும் தம் பிறப்பின் திட்டத்தை அறிவிக்க நிக்கதேம் காரணமாகிறார்.
2. இயேசுவை பிடித்து கொண்டு வராத காவலர்களைப் பார்த்து தலைமைக் குருக்கள் 'நீங்களும் (இயேசுவின்) பேச்சில் ஏமாந்து போனீர்களோ" என்ற பகுதியில்; (யோவான்7:5) நிக்கதேம் 'ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது அவர் என்ன செய்தார் என்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?" எனக் கேட்டு தலைமைக் குருக்களின் வாயை அடைத்து விடுகிறார். (இயேசுக்குப் பின்னணியாக இருந்து அவரைக் காப்பாற்ற எண்ணுகிறார்.)
3. இறுதியாக (யோவான் 19:39) நிக்கதேம் இயேசுவின் உடலை நறுமணப்பொருட்களால் சுற்றிக் கட்ட வெள்ளைப் போளம் சந்தனத்தூள் சுமார் 30 கிலோ கிராம் கொண்டு வந்து இயேசுவின் உடலை அடக்கம் செய்ய உதவிய இவர் ஒரு மறைமுகமான சீடர்.
இப்படியாக நால்வரும் விவிலியத்தின் மூன்று இடங்களில் மட்டுமே தோன்றி அவர்களின் எதார்த்த மனநிலையையும் இயேசுவின் இறைத்திட்டத்தையும் நமக்கு அறிவிக்க உறுதுணையாக இருக்கிறார்கள். இந்த நால்வரில் நாம் யார்? எந்தப் பணியைச் செய்கிறோம். நாம் அந்திரேயாவா? பிலிப்புவா? தோமாவா? அல்லது நிக்கதேமுவா? நம்மை நாமே உணர்வோம். நம் கடமைகளைத் தட்டிக் கழிக்காமல் காரியங்களைச் செய்ய காரணிகளைத் தேடுவோம். காரியங்களைச் செய்யாமலிருக்க என்ன காரணங்களைத் தேடுவோம் என்று வாய்பொத்தி மௌனியாக இருக்காமலிருக்க இறையருளை வேண்டுவோம்.