உயிர்ப்பு

திருமதி அருள்சீலி அந்தோணி
Mary at Tomb
விடியலின் கீற்றுகள்
வீறுக் கொண்டு எழுந்தன!
கல்லறை மூடிய கல் தகர்ந்ததே!
பிறந்தது புது யுகம்!

பாவத்திரை கிழித்தே
மாபரன் தோன்றினார்.
பூமியின் முகப்பில்
புதுமலர் பூத்து குலுங்கியது.

உன்னதரின் உயிர்ப்பு அன்று
மகதல மரியாவை  தேடச் செய்தது!
நறமணத்தைலம் நாதமிசைக்க
வேட்கையோடு தேடினாள் மகதல மரியா!

கல்லறைப் புரட்டப்பட்டிருந்ததைக்
கண்டு கலங்கினாள்- தன்
ஆண்டவரின் உடலை காணாது
கதிகலங்கிய போது மின்னல் போன்று

ஒளிவீசும் இரு வானதூதர்கள் தோன்றினார்
அச்சத்தினால் தலை குனிந்த மாதுவை
நோக்கி "உயிரோடு இருப்பவரை கல்லறையில்
தேடுவதேனோ? கலிலேயாவில் காண்பீரரே!

மகதல மரியா பதினோரு சீடருக்கும் பறைச்சாற்ற
பேதுருவின் பாதங்கள் கல்லறையை நோக்கி
ஆண்டவரின் ஆடைகளை கண்டபோது
வியப்பில் ஆழ்ந்து திரும்பியபோது

எம்மாவு சீடர்களுக்கு தோன்றி 
அப்பம் பகிர்ந்தபோது அந்த
சீடர்கள் கண்களுக்கு ஒளியானாரே!
உயிர்த்த ஆண்டவரில் சரணடைவோம்!

உயிர்த்த ஆண்டவர் சீடர்களின் நடுவே
தோன்றி அவர்க்கு  அமைதியை உரித்தாக்கினார்!
அச்சமுற்றவர்களுக்கு அஞ்சாதீர்கள்!
நானே தான்! இதோ என் கைகளையும் கால்களையும்
 
என் விலாவையும் தொட்டுபாருங்கள்!
என்றவர் உண்பதற்கு என்ன இருக்கிறது?
வேக வைத்த மீன் துண்டை உண்டு
"நானே உயிர்த்த ஆண்டவர்" என்று ஆற்றுபடுத்தினார் இயேசு.

the_resurrection_day
 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  ஈஸ்டர் பெருவிழா