ஆறாம் தலம்![]() |
இயேசுநாதருடைய திருமுகத்தை ஒரு பெண் துடைக்கிறார்.திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர். திவ்விய இயேசுவே! வெரோணிக்கம்மாள் உம்முடைய திருமுகத்தைத் துடைத்ததைத் தியானித்து, உம்மை ஆராதிக்கிறோம். நாங்கள் ஆள் பார்த்துச் செயல்படாமல் புண்ணிய நெறியில் உறுதியாய் நடக்க உதவியருளும் சுவாமி. ஒரு பர., அருள்., திரி. எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி . எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி . இறந்த விசுவாசிகள் இறைவனுடைய இரக்கத்தினால் அமைதியில் இளைப்பாறுவார்களாக! ஆமென். அடுத்தது |
