கெத்சமெனி துன்ப இரவு ஒரு மணி நேரம் என்னோடு

திருமதி.அருள்சீலி அந்தோனி - சென்னை

மானிடா!
இறைமகன் இயேசுவின் மண்ணக வருகை ... எத்தகையது அறிவாயா!
மழலை இயேசுவை தாங்கிய கருவறை கன்னிமைக் கேடாத தூய்மைமிகு நற்கருணை பேழை என்பதை சற்று சிந்திப்பாயா?

இறைவன் வடிவம் எடுத்து மாட்டுத்தொழுவத்தில் --காட்சிப் பொருளானது வறியோர் வாழ்ந்து வளம் பெற - இடையர்கள் முதல் கடை எல்லை வரை ஏழை எளியோர் --- காரணம் யூதகுலம் உணர்ந்தோர் என்றும் மற்றவர்கள் அடிமைகள் என்ற அகங்கார ஆட்சியினால் மானுடம் சரிந்தது.p>

சரிந்த மனுகுலத்தைச் சீர்த்தூக்கிப் பார்க்கவே மழலை இயேசு 12வயது வரை பெற்றோரின் அரவணைப்பில் 30 வயது வரை சமூகப் பகுப்பாய்வினில் தரணியைக் கழுவிட 3 ஆண்டுப் போதனைகள்! யோவானிடம் திருமுழுக்கு "இவரே என் அன்பார்ந்த மகன். இவரில் பூரிப்படைகிறேன்!" தந்தையின் ஆற்றல் மிக்க வெளிப்பாடு.

சிறப்பாகச் செயல்பட 40 நாட்கள் பாலைவன நோன்பு . நோன்பை நிறைவுச் செய்யும் வேளை!
சாத்தானில் சோதனைகள் மூன்றும் மனிதரையும் பற்றிக் கொள்ளும் என்பதற்கே இச்சான்று.

பணிவாழ்வின் முத்தான மூன்ற வருடம் அழைப்புப் பெற்ற சீடர்கள் - சந்தித்தவர்கள் பிணிபோக்கால் - புதுமைகள் - உயிர்பெற்றவர்கள் போதனைகள் இதன் உச்சக் கட்டமே பாடுகள்.

மரணம் - உயிர்ப்பு

மானிடா!
நான் நாளை கள்வர்களின் கையில் சரணடைகின்றேன். காரணம் எனது வருமை அவர்களின் அகங்கார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி!
இந்த இரவு வாழ்வின் ஒரு மறக்க முடியாத இரவு!
கலங்குகின்றேன்! தன்னிலை உணர்த்தும் இந்த இரவு உலக வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய இரவு!
மானிட மலை அனுபவம் எனக்கு தன்னிலை உணர்த்தும் அனுபவமாக அமைகிறது. எனது வாழ்வில் மலையனுபவம். என் தந்தை உறையும் இடமாக, அருளின் ஊற்றாகவும், செபிக்கும் மனமாக எனது மண்ணக வாழ்வில் முக்கிய நிலைகளாக உருமாற்றம்- தன்னிலை உணர்த்தும் தலமாகவும் உள்ளது இன்று--
ஓலிவ மலை எனது இறுதி வேண்டுதலை உணர்த்தும் தலமாக உள்ளது. விடிந்தால் நான் கயவர்களின் அடி-உதை- காரி உமிழ்தல், சாட்டையடி, முள்முடிப் போன்றவை எனக்காகக் காத்திருக்கிறது. மானிடரின் தவறைத் தட்டிக் கேட்டதினால் தரணியர் வழங்கும் தர்ம அடிகளை நினைத்தும் பார்க்கின்றேன்.
என் கண்ணில் கண்ணீரும் என் உடல் செந்நீரும் வியர்வையாய் வியர்த்து ஓடுவதைக் காண்பீர். என் சீடர்கள் மட்டுமல்ல -- என் அன்புப் பிள்ளைகளே கொஞ்சம் என்னோடு விழித்திருந்து உரையாட வருவீர்களா!


மானிடன்: சாமி நாங்களும் உம்மோடு உரையாட உம் சன்னிதானத்திற்கு வந்து விட்டோம்.ஆனால் ----
இயேசு: என்ன! குழந்தாய் -ஆனால்---
மானிடன்:சாமி உறக்கம் தான் கொஞ்சம் வருது!
இயேசு: மகனே! மகளே! அன்று சீடர்களிடம் கேட்டேன். என்னோடு விழித்திருந்து இறைவனிடம் செபிக்கக் கூடாதா -----இதே கேள்வியைத் தான் உங்களுக்கும் -----
மானிடன்:சாமி ! நாங்க உங்க வேதனையை உணர்ந்துவிட்டோம்.சாமி...
இயேசு: மானிடா இன்ற ஒருநாள் மட்டும் செபித்துவிட்டு ......மற்ற நாட்ககள் உன் விருப்படி வாழ்வது அல்ல வாழ்க்கை!
மானிடன்:சாமி! உங்க போதனைகள் - பாடுகள் எங்கள் வாழ்வை மாற்றிவிடும் அருமருந்து என்பதை உணர்ந்து விட்டோம் சாமி!
இயேசு: குழந்தாய்! கரடு முரடான சிலுவை மரத்தை என் தோளில் சுமத்த போகின்றார்கள். நான் யூதர்களின் அரசன் என்றதினால் எனக்குப் பெரிய காட்டு முள்ளைக் கொண்டு எனக்கு ராஜக்கீரிடம் செய்து என் தலையிலே வச்சி அறைய போறாங்கோ! அதான் நினைச்சிக் கெத்செமனித் தோட்டத்திலே இரத்த வியர்வையோடு கலங்குகிறேன் மகனே மகளே
மானிடன்: இயேசு சாமி எங்களை மன்னிச்சிடுங்க! நாங்க இந்த உல்லாச வாழ்வை நிஜமுன்னு வாழ்ந்ததால் தான் இப்ப உங்கவேதனைப் புரியுதுச் சாமி -இனிலே நாங்க மனம் வருந்தித் திருந்திட்டோம் சாமி!
இயேசு: எனது சிலுவைப்பாதைச் சுவடுகள் ஒவ்வொரு நிலையும் என்னை நிலைக் குலை வைத்து விட்டதே! அறிவாயா!
மானிடன்: சாமி வருடத்தில் வரும் ஒரு சடங்காக அல்லாமல் ஒவ்வொரு நாளும் என் வாழ்வில் மாற்றம் கொண்டு வரும் வெற்றிச் சிலுவையாக நான் உணர்ந்து வாழும் நிலைக்கு உமது பிறப்பு - போதனைகள் - பாடுகள் - இறப்பு - உயிர்ப்பு என் வாழ்வின் தொடர்ச் சுவாசமாகிட வரம் வேண்டி இந்தக் கெத்செமனித் துயரம் என்னை உருவாக்கியுள்ளதை உணர்கிறேன் என் பிரபுவே!
இயேசு: என் அன்புச் செல்வங்களே! உமது உடனிருத்தலை உணர்ந்து அனுபவித்த இந்த நாள். உங்கள் வாழ்விலும் வசந்தத்தை வீசடும் நாளாக அமையும் என்று என் ஆசீரை உமக்கு வழங்குகிறேன். சென்று சமுதாயத்தின் கடைஎல்லை வரை எனது விழுமியங்களை இறையாட்சியின் களஞ்சியத்தில் சேர்த்திடுவீர் ....மனுக்குலமே...

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  தவக்காலச் சிந்தனைகள்