ஒரு கண்ணீர் துளி
அ.அல்போன்ஸ்-திருச்சி
ஜெத்சமேனி தோட்டத்தில் தொடங்கிய மீட்பின் வரலாறு இது
அன்று வியாழன் கறுப்பு குளத்தில் சூரியனை கழுவுக் கொண்டிருந்தது இரவு
கைப்பாஸ் தலைமைகுரு பழைய கூட்டத்தின் பரிமாணங்கள்
இயேசு பாவஇருளை சலவை செய்யவந்த உலகின் ஒளியை யூத இருட்டினால் உள் வாங்க இயலவில்லை
ஊர்வலமாய் ஜெருசலேம் உள்ளே வந்தபின் இயேசு தன் அன்பை விசுவாசமாய் விரித்தபோது யூத சங்கம் தன் கோடரிகளை கூர்செய்தது
வானத்து வல்லூறுகள் சூரியனை நசுக்கும் சூழ்ச்சி தயாரானது
பாவம் போக்கும் செம்மறியை யூதாஸ் ஓநாய்களுக்கு விற்றுவிட்டான்
சிவந்த கண்களோடு சிந்தித்தான் கைப்பாஸ் ஆயனை கூண்டேற்ற அறநூறு வீரர்களை அனுப்பிவைத்தான்
இரவில் விரித்தனர் ரகசிய வலை. யூதாஸ் உயிர் விருட்சத்தின் விதை காட்டி கொடுக்க வந்தான் காற்றை விட வேகமாய் முத்தம் தந்தான் முட்களாய் குத்தின ரத்தம் கசிந்தது இயேசுவை சுற்றிலும் யூத வீரர்கள்
அவர்கள் கண்ணில் சிங்கத்தை கைது செய்யும் கர்வம் கூச்சல் குழப்பம் கர்ஜனை கைகலப்பு சீமோனின் வாள் தளபதியின் காதை வெட்டியது
பகைவனுக்கும் அருளும் இயேசு காதை குணமாக்கினார்
குணமாக்கிய கைகளை கட்டி இழுத்து போனார்கள்
முத்ததின் கறையோடு வரலாறு சொல்லும் நற்செய்தி பக்கங்களில் இரக்கமும் கருணையும் புதையுண்டு போயின
ஆயனின் ஆடுகள் சிதறிஓடியது. ஆனால் நிவவு அழுதது. இரவு அழுதது. மற்றும் லீலி மலர்களும் வானத்து பறவைகளும் பாடுகளை கண்டு மனதில் இடி இடித்தது. கண்களில் மழைவருகிறது. இதயம் கசிகிறது.
விழிகளில் - ஒரு கண்ணீர் துளி