தவக்காலமா? மனமாற்றத்தின் காலமா?

தூய ஆவியின் ஆலயமாக உள்ளத்தை இல்லத்தை தூய்மைபடுத்தி பிறந்த பாலகனையும் புதிய ஆண்டையும் வரவேற்ற நாம் அடுத்ததாக வரவேற்க ஆயத்தமாக உள்ளது தவக் காலத்தை.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டிட சொன்னவர் நம் பிதா. தாழ்ந்து போனவர் கெட்டு போவது இல்லை என்பதும் பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதும் ஆன்றோரின் அமுத மொழி.. பிரசங்கம் கேட்கும் போதெல்லாம் அருட்பணியாளர்கள் சொல்வதனை கேட்டும், மனம் வருந்தி மனமாற்றத்தை விதைக்க விட்டு முளைத்து உலகத்து முட்செடிகள் கொத்தி குதறிட மனம் மாற்றம் மறந்துபோய்விட மீண்டும் பழைய அணிநலன்களை அணிந்து கொண்டு வாழ்க்கை நகர்த்துவதே நம் வாடிக்கையாக மாறிவிட்டது.

"மாற்றம் உள்ளத்தை மாற்றனும்
மாற்றம் உதட்டினை திருத்தணும்
மாற்றம் நெஞ்சினில் மலரணும்
மாற்றம் வாழ்வில் மிளிரணும்"
என்று எத்தனை கவிர்கள் கூறினாலும் மனித மனம் குரங்காக மாறி பழைய வாழ்க்கையைத் தான் தேடி செல்கிறது.

" என்ன செய்ய? பெரியவுங்க... அவுக சொன்னதை, செய்ததை மறந்துடணும்" என்று கணவனின் தாய் என்னிடம் புலம்பிய பெண்மணியை 3 மாதம் கழித்து பார்த்தபோது புலம்பி தள்ளிவிட்டார்கள் எதுவும் அதிகாரத் தோரணையாம். னோ-உனா-னா ஆடு, மாடு மாதிரிகண்ட இடத்துல மேயுறானு சாடை பேச்சாம், முத்த மருமகளை தூக்கி வச்சிட்டு இளையவளை ஒரு மாதிரி பேசுறதாம். இளைய மருமகள் மேல் உள்ள கோவத்தால் மகன் பிள்ளையான பேத்தியை எடுத்து கொஞ்ச மதட்டார்களாம்? ஒரு மிட்டாய் துண்டு கூட வாங்கி கொடுக்க மாட்டார்களாம்! இவர்களை நான் எப்படி மன்னிப்பது? இவர்களை எப்படி கவனிப்பது என்று புலம்பும் அந்த மனதுக்கு ஆறுதல் ஜெபம் ஒன்று தான்....

தவக்காலம் என்பது சோதனையின் காலம். சோதனை எல்லாம் வல்லவருக்கு மட்டுமல்ல நாம் ஒவ்வொருவரும் அதனை எதிர் கொண்டே ஆக வேண்டும் பட்டினி கிடப்பதனால், வழிபாடுகளில் தவறாது கலந்து கொள்வதினால் மட்டும் நாம் தவக் காலத்தினை சிறப்பித்திட முடியாது. ஒவ்வொரு ஆண்டும் தவக் காலம் நம்மை கடந்து செல்லும்போது மாற்றதை விட்டு செல்ல வேண்டும். உபவாசம் செய்வதினாலோ, தியானம் செய்வதினாலோ தவக்காலத்தை சிறப்பித்திடலாம் என்று எண்ணி விட முடியாது.

தலைக்கு எண்ணெய் தடவி மறைவாக உள்ள தந்தையாகிய கடவுளை நோக்கம் போது வலதுகை கொடுப்பதை இடது கை அறியாமல் கொடுத்து மாற்றி எழுதிட வேண்டும். விழி நீர் மானிட சமூகத்தின் சொந்தம். விழிநீரை ஆனந்தமாக வெளிக் கொணர வைப்பதும் சோகமாக வெளிக் கொணர வைப்பதும் அவரவர் வாழ்க்கையை பொறுத்தே அமைந்திடும்.

புனிதர்களின் வாழ்வை புரட்டி பார்த்து மட்டும் அல்ல படித்து பார்த்தும் அதனை பின்பற்றிடல் வேண்டும் . தாய் மரியின் தாழ்மை தரணியிலே அவளுக்கு இரட்சரின் அன்னை என்ற மணிமகுடத்தை பெற்று தந்தது விண்ணக, மண்ணக ராக்கினியாக அவளை உயர்த்தியது. அவளது பிள்ளைகள் நாம் என்பத னை அவளது வாழ்வினை பிரதி பலிப்பதன் மூலம் எண்பித்து காட்டுவோம்.

தவக்காலம் மனமாற்றத்தின் காலம் என்பதனை உணர்ந்திடுவூம். மன்னிப்பை இதயத்தில் நிறுத்தி நல்ல பண்பாட்டினை கரத்தில் ஏந்தி சமூகத்தில் வீறு நடைபயிலும்போது இறை ஆசிரும். இறை அன்னையின் வழி நடத்தலும் நமக்கு துணை இருந்திடும்.காட்டுவோம்.


அருள்வாழ்வு -பெப்ரவரி 2012

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  தவக்காலச் சிந்தனைகள்