பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி

அருள்மேரி செல்வி
goodnews

எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி நமக்கு அறிவிக்கப்பட்டது. (லூக்கா 2:10) மகிழ்ச்சி எந்த விதமான பிறப்பினால் வரும் மகிழ்ச்சி? அவர் தரும் ஆசீர்வாதத்தினால் மகிழ்ச்சியா! அல்லது அவர் தரும் மீட்பினால் வரும் மகிழ்ச்சியா! "எப்படி இருந்த என்னங்க, எல்லா மகிழ்ச்சி தானே!" இது மற்றவர்கள் சொல்வது. ஆனால் நமக்கோ "நமக்காக நம் பாவங்களிலிருந்து மீட்க நமக்கு ஒரு மீட்பர் பிறந்துள்ளார்" என்ற மகிழ்ச்சியே மிக அவசியம்.

நம்மிடம் பாவம் இருந்தால் நமக்கு மகிழ்ச்சி வராது. நம்மிடம் பாவம் இல்லை என்று சொன்னால் நாம் பொய்யர் என்கிறது திருவிவிலியம்(1யோவான் 1:70.)

எப்படிபட்டப் பாவம்:-
கொலை :- மனதளவில் பலரை கொலை செய்கிறோம். வாய் வார்த்தையால் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் கணக்கு கொடுத்தாக வேண்டும் என்று அறிகிறோம் (மத்தேயு 12:36)
கொள்ளை :- பிறரைப் பார்த்து பொறாமை பாடுகிறோம். நாமே பிறர் திரும்பி பார்க்கும் அளவுக்கு விவகாரமான உடைகளை அணிகிறோம். இப்படியாக பலவழிகளில் மனதை கொள்ளையடிக்கிறோம் தீமையான வழியில். அதையெல்லாம் விட்டு மனம் திரும்புவோம்.

கடவுள் அளித்த அந்த மகிழ்ச்சியை நம்மால் நம் உள்ளத்தில், பிறரில், சந்திப்பவர்களிடத்தில் கூறுவது தான் நம் கடவுளின் தூதர் அறிவித்த பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி. நற்செய்தி அறிவிக்க முடிவு எடுப்போம்.. அன்று பிலிப்பு சொன்னவற்றை கேட்டும் செய்த அரும் அடையாளங்களை கண்டும் அவர் நகரில் (சமாரியாவில்) பெருமகிழ்ச்சி உண்டாயிற்று. அது இன்றும் முடியும் (அப்பணி 8:5-8) "ஆண்டவர் உனக்கும் மட்டும், எனக்கு மட்டும் என்று தரவில்லை" எல்லோருக்கும், அவரை தேடி கண்டடைகிற ஒவ்வொருவருக்கும் தருகிறார்.

இந்த கிறிஸ்துமஸ் பெருவிழாவில் நாம் ஒரு முடிவு எடுப்போம். பிறரை கண்டுக் கொள்வோம். துன்பத்தில், துயரத்தில், வேதனையில் இருப்பவர்களை அறிந்து, அவர்களுக்கு இறைவார்த்தையின் மூலமாக ஆறுதல் அறிவிப்போம். மகிழ்ச்சியூட்டுவோம். அப்பொமுது ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழ்ந்திருக்க முடியும். இது நிச்சயம். இதுவே உண்மை (பிலி4:4)

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்..

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது