வெற்றிக்கு முன்னுரை

அருட்தந்தை ஜேம்ஸ் பீட்டர்-தூத்துக்குடி மறைமாவட்டம்

வெற்றி பெறுவேன்
தூய்மையில் நிலைத்திருப்பேன்
செழுமையோடு வாழ்ந்திடுவேன்

என்று அறிக்கையிடுகிற பொழுது உள்ளத்தை கலங்கச் செய்த தோல்வி, பாவம், வறுமையாவும் மேகம் போல கலைந்து போவதை உணர்வில் காண முடிகிறது.

பாடுகளில்லாத மனிதர் இல்லை. துன்பமில்லாத நாட்களும் இல்லை. அதற்காக பாடுகளைக் கண்டு பயந்து கொண்டிருக்க முடியுமா? இல்லை. நாம் வெற்றியுடன் வாழ்ந்திடவே அருள்வாக்குகளைத் தந்திருக்கிறார் நம் அருள்நாதர்.

கண்கள் காண்பது தோல்வி தான். ஆனால் நமக்குள் நம்பிக்கை உள்ளதே- இந்தத் தோல்வி தொலைந்து போகும் - நம்பிக்கை மொழிகளை அறிக்கை செய்துவிட்டால்!

சிலவேளை நடப்பதென்ன?

நமக்குத் தெரியாமல் நமது ஆடையில் ஒரு ஒலிப்பேழையைப் பொறுத்தி நாம் ஒருநாள் முழுவதும் பேசுவதையெல்லாம் பதிவு செய்து - கேட்கும் போது தெரியும். நாம் எவ்வளவாய் திருந்த வேண்டியவர்கள் என்று!
அவநம்பிக்கை, பயம். சந்தேகம், கோள், முறுமுறுப்பு, எதிர்மறையான வார்த்தைகள் எவ்வளவாய் சொல்லியிருக்கிறோம் என்று தெரியவரும்.

சே இந்தப் பிள்ளைகளோட .. இது பிள்ளைகளா - பிசாசுகள் - இவைகளால் தான் நான் தளர்ந்து போகிறேன் என்று ஒரு நாளைக்கு 10 முறை சொல்கிற தாய்க்கு நரம்புத்தளர்ச்சி நோய் வரத்தான் செய்யும்? ' வரவர எல்லாம் மறந்தே போகிறது" என்று சொல்லிக் கொண்டிருந்தால் மறதி கூடத்தானே செய்யும். 'மனசே நல்லாயில்ல" என்று சொல்லிக் கொண்டுருந்தால் மனசு எப்படி நல்லாயிருக்கும்? அப்படின்னா மனசல உள்ளதை சொல்லக் கூடாதா?

மருத்துவரிடம் சென்று நம் நோயின் நிலையை சொல்லத்தான் வேண்டும். ஆனால் நம் நம்பிக்கை வரம் வெளியிப்பட வேண்டும். ஆத்மார்த்தமாக நண்பரிடம் பகிரத்தான் வேண்டும் - ஆனால் அங்கு நேர்மை நிலவிட வேண்டும்.

வெற்றி எங்கு உள்ளது?

வெற்றி நம் மூக்குக்கு கீழே உள்ளது. ஆம் நம் வாயில் உள்ளது. நாம் என்ன சொல்கிறோமோ, அது நடக்கிறது. மின்சக்தியின் விதிகளை சரியாகக் கடைப்பிடித்தால் ஒளி கிடைக்கிறது. விதிகளை மீறினால் - அழிவு!

எதிர்மறையான எண்ணங்கள் - வார்த்தைகளாகி - நமது பிறரது மகிழ்ச்சியைக் கெடுக்கின்றன. குறைகூறித் திரியும் இழிவான உரையாடல் எத்தனையோ பிரச்சனைகளை உண்டாக்குகின்றன.
சீரான வார்ததைகள் - நம்மை உணர்த்துகின்றன. (நீமொ 10:21:24,13:3,18-20)
தவறான வார்த்தை, நம்மை அடிமையாக்குகிறது. (யோபு 3:25; மத் 15:11,18,19)
இதனை நாம் அறிந்திருந்தாலும் வருங்காலத்தைச் சபிக்கிறோம். - வளமை பெறுவது எப்படி?

பொறுமையிழந்து கொட்டி விடுகிறோம் - பெருமை பெறுவது எப்படி?
பேசும் வார்த்தைகளால் பிடிபட்டு விடுகிறோம் - விடுதலை வாழ்வு எப்படி?
நம் வாயினின்று புறப்படும் வார்த்தைக்கு வல்லமை நிரம்ப இருக்கிறது என்ற அலவை அறிந்திருக்கிறான் - ஆகவே தான் பயத்தை உண்டாக்கி, எதிர்மறை வார்த்தைகளைப் பேச வைத்து விடுகிறான்.
புனித பேதுரு நல்ல உதாரணம். (மத் 26:69-75)

நமது நம்பிக்கையான வார்த்தை ஆண்டவரை செயல்படச் செய்கிறது. அவநம்பிக்கையான வார்த்தை சாத்தனை செயல்படச் செய்கிறது. நினைத்ததைச் சொல்வதற்கு முன்பாக அது எங்கிருந்து வருகிறது என்று உற்றுப் பார்க்கலாம் - அது அலகையிடமிருந்து வந்தால் சொல்லக்கூடாது. சொன்னால் நாம் வஞ்சிக்கப்படுவோம். என் பரமவிரோதி சொல்வதை நான் சொல்லிக் கொண்டிருப்பது அறிவீனம் தானே! மாறாக என் பாச நண்பர் இயேசு சொல்வதை சொல்லிக் கொண்டிருந்தால் வாழ்வு பெறுவேன். அலகையைத் தோற்கடிப்பேன்.(திவெ 12:11)

சூறாவளியிலும் தென்றலாக

மனம் அதிகமாகச் சஞ்சலமடைகிறது - அந்நேரத்தில் வாயைத் திறவாதிருப்பதே ஞானம். அற்புத வாக்குகளை அறிக்கையிடுவதே ஆசீர்வாதம். உண்மைதான். ஆனாலும் முடிவதில்லையே! நாம் நினைப்பதற்குள், படபடவென்று பொழிந்து விடுகிறோம். மாற்றம் தேவை என பிறகு உணர்கிறோம். தவறான எண்ணங்களைக் கீழ்ப்படுத்த விழைகிறோம்.(2கொரி 10:5)

jesus சூழ்ந்து நின்ற எல்லாருமே, தன்னைக் கல்லெறிந்து கொல்ல முற்பட்ட வேளையிலும் தாவீது ஆண்டவருக்குள் தன்னைத் திடப்படுத்திக் கொண்டார். எப்படி? மனதிற்குள் வாக்குறுதிகளை திரும்பத் திரும்ப அறிக்கையிட்டிருக்க வேண்டும் (சாமு 30:6) அக்கரைக்குப் போகிறோம். ஆசீர்வாதங்களைப் பெறப்போகிறோம் என்பது உண்மை சொன்னவர் கூடவே இருக்கினார். ஆனாலும் பயணத்தின் நடுவில் சூறாவளி! சொன்னவர் அதையும் பார்க்கிறார். ஆகவே போர்க்கள மனதைக் கட்டுப்படுத்துவோம்.
வாயின் வார்த்தைகள் சீராக இருக்கும். (மாற் 4:35-41)

ஆன்மீக பலம் இல்லாதவர்கள் தான் அதிகமாகப் பேசுவார்கள். எதிர்மறையாக உச்சரிப்பர்கள். நாமோ அளவோடு அர்த்தத்தோடு பேசவோம். நம் வாழ்க்கையில் எது நடைபெறவேண்டுமென்று விரும்புகிறோமோ - எதிர்பார்க்கிறோமோ - அதை இறைவாக்காக அறிக்கையிட வேண்டுமென்று ஆண்டவர் எதிர்பார்க்கிறார்.
நன்றியோடு அறிவிப்பதால் நம் ஆன்மீகப் பக்குவத்தை வெளிப்படுத்துகிறோம். நம்மிடமுள்ள குறைகளைச் சொல்லிக் கொண்டிராமல் பெற்றுக் கொள்ளப் போகும் ஆசீர்வாதங்களையே சொல்ல வேண்டும். என்ன விதைக்கிறோமோ அதைத்தானே அறுவடை செய்வோம். அதுதானே இயற்கை நியதி.

வியாதி, வறுமை, தோல்வி, என்றே பேசிக் கொண்டிராமல் சுகம் வளமை வெற்றி வார்த்தைகனையே பேசுவோம். பெறப்போகிறோமல்லவா. ஒவ்வொரு சூழ்நிலைக்கும் பொருத்தமான வாக்குறுதிகளைக் காண்கிறோம். ஒவ்வொரு நாளும் சப்தமாக அறிக்கையிடுவோம். அந்த வாக்குறுதிகள், இதயத்தில் பதிந்து, உயர்ந்த சிந்தனையாக - உயர்ந்த சொல்லாக - உயர்ந்த செயல்பாடாக மாறும். நிச்சயம் நடக்கும்.
நாம் சொன்ன வார்த்தை நமக்குள் பதியும்வரை சொல்லிக் கொண்டேயிருப்போம். அது அப்படியே நடக்கும்.

அறிக்கை செய்ததும் ஆசீர்வாதமா?

சுகத்திற்காக அறிக்கை செய்த பின்பும் வேதனை இருக்கிறதே என்று கலங்கத் தேவையில்லை. நமது நம்பிக்கை உணர்ச்சியின்மேல் கட்டபட்டது.
செபித்த(அறிக்கையிட்ட) பின், வேதனையில்லாவிட்டால் சுகமாகிவிடுவாய் என்றல்ல 'நம்பிக்கையுள்ள மன்றாட்டு பிணியாளியை மீட்கும்" என்பதே இறைவாக்கு. (யாக் 5:16) தொடர்ந்து அறிக்கையிட வேதனை உணர்வுகளும் குறையும்.

ஒரு கல்லை 100முறை அடித்தும், உடைவதற்கான எந்த அறிகுறியும் இல்லாதிருக்கலாம். ஆனால் 101 வது அடியில் பிளக்கிறது. 101வது அடியினால் அல்ல, 101அடிகளால் என்பது நாம் அறிந்ததே.
வார்த்தையே வல்லமை மிகுந்தது. உண்மையானது. திரும்பத் திரும்ப அறிக்கையிட அற்புதம் நடந்து தான் ஆகவேண்டும். தோல்வி வருவதைப்போல் தெரிகிறதா - வெற்றி வாக்குறுதிகைளை சப்தமாக அறிக்கையிட வேண்டும்.
விடாப்பிடியான உறுதி, வெற்றிக்குப் பாதை அமைக்கிறது.

12 வருடமாக பெரும்பாட்டினால் வருந்திய பெண் 'நான் சுகமாவோன்" என்று தனக்குள் சொல்லிக் கொண்டேயிருந்தாள். சுகம் பெற்றுக் கொண்டாள்.

நலமானதைப் பேசாதவர்கள் மட்டும் வாசிக்கவும்.

நலமானதைப் பேசவதில்லையே ஏன்? பொல்லாதவராயிருக்க எப்படி நல்லவை பேசுவீர்கள்? உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும். (மத் 12:33-34) ஆமாம். இதயத்தில் நிறைந்திருப்பது பேச்சாக வெளிப்படுகிறது - தவறான சிந்திப்பதால் தவறான பேச்சு - தவறான செயல்பாடு.
தரையின் மேலுள்ள களையை மட்டும் பிடுங்கினால் போதாது. வேரோடு பிடுங்க வேண்டும். நம் வாயைக் கட்டுப்படுத்துவது மடடும்போதாது. நம் தவறான எண்ணங்களை அப்புறப்படுத்த வேண்டும்.
இதயத்தில் உருவானதால் நாவில் உருப்பெற்று வார்த்தை வெளிப்படுகிறது. ஆகவே இதயம் பரிசுத்தமாக வேண்டும். புதியதோர் இதயம் நல்கும் ஆண்டவரிடமே அமுதமொழி கேட்போம்.

எதிர்மறைச் சொற்கள் வேண்டாம்.

' நீ சிறுபிள்ளை என்று சொல்லாதே - காரணம். நீ பிறக்குமுன்பே, உன்னைத் திருநிலைப்படுத்தியுள்ளேன்." (எரே1:5-7)
நீ திக்குவாயன், மந்த நாவுள்ளவன் என்று சொல்லிக் கொண்டிராதே - நானல்லவா உன் நாவிலிருந்து கற்பிக்கப் போகிறேன். (விப 4:12)
நாசரேத்திலிருந்து நல்லது வரக் கூடுமோ என்று சந்தேகக் கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது.(யோவான் 1:46)

'உதவி எனக்கு எங்கிருந்து வரும்? என்ற கேள்வி எழுந்துவிட்டால் 'உதவி எனக்கு ஆண்டவரிடமிருந்தே வரும்" என்று அருள்மொழி கூற வேண்டும். (திபா 121:1)
உம் பாதுகாப்பில் வாழ்கிறேன். உம் நிழலில் தங்கியிருக்கிறேன் - ஆகவே நீரே என் புகலிடம் . என் அரண், நான் நம்பியிருக்கும் இறைவன் என்று உரைத்திட வேண்டும். (திபா 91:1,2)

அவநம்பிக்கையான வார்த்தைகளை உச்சரித்து ஆசீரை இழந்தது போதும். இனிமேலும் அருள்மொழிகளை உரக்கச் சொல்வோம். சிறுவன் தாவீதைப் போல் முழுக்கமிடுவோம். கோலியாத் போன்ற - நமக்கு எதிராள ராட்சதங்கள் யாவும் நம்முன் வீழ்ந்து கிடக்கும். (1 சாமு 17:49)
'நீ என் சொந்த பிள்ளை - இளவரசன்-இளவரசி என்னோடு வெற்றிப் பவனியில் பங்குபெற வேண்டும்" என்கிறார் நம் தெய்வம்.

ஒளி தோன்றுக என்றுரைத்தார் - ஒளி உண்டாயிற்று. (தொநூ1:3)உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்றார். நாமும் அப்படியே வாழ்த்துவோம் (யோ 20:19 லூக் 10:5)
கடவுளின் சாயலும் பாவனையும் கொண்ட பிரதிபலிப்புகள் நாம். தீமைக்கல்ல.
சமாதானத்திற்கேதுவான நினைவுகளைக் கொண்டிருப்போம். நமக்கு வளமான எதிர்காலம் இருக்கும் (எரே 29:11 நீ மொ 23:18)


மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது