அருள்வாக்கு இன்று

டிசம்பர் 26-திங்கள்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 10:17-22

இன்றைய புனிதர்

புனித ஸ்தேவான்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார். மத்தேயு 10:20

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு நம்மை விழிப்போடு இருக்க எச்சரிக்கை விடுக்கின்றார். ஏனெனில் யூதவர்க்கத்தை போல் பல மடங்கு இன்றும் மக்கள் அடுத்தவரை எவ்வாறு மடக்கலாம் என்று வேதம் என்ற அடிப்படையில் உலா வருகின்றார்கள். அவர்களிடம் சிக்கும்போது நாம் என்ன செய்வது எப்படி பேசுவது என்று தெரியாமல் திக்குமுக்காடி போவோம். நாம் இறையாட்சியின் விழுமியங்களை மக்களிடையே நேர்வழியில் விதைக்கும்போது தூய ஆவியார் நம்மில் ஆற்றலோடு நாம் என்ன அடுத்தவருக்கு நமது வழியாகச் சொல்ல விரும்புகின்றோமா அதனைத் தங்கு தடையின்றி தூய ஆவியார் பேசுவார் என்பதே இதன் மையக் கருத்து.

சுயஆய்வு

  1. நான் என்னை எப்படி தயாரித்துள்ளேன்?
  2. அதற்கான தெளிவுகளை பெற்றுள்ளேனா?

இறைவேண்டல்

அன்பு குழந்தை இயேசுவே! நான் உமது பணியை ஆற்ற எனக்குத் தேவையான ஆவியின் ஆற்றலை என்னுள் பதிவு செய்யும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு