அருள்வாக்கு இன்று

டிசம்பர் 25-ஞாயிறு

இன்றைய நற்செய்தி

யோவான். 1:1-18

அன்பின் விழா

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

கிறிஸ்து பிறப்பு விழா நல்வாழ்த்துக்கள்
அருள்மொழி:

வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். யோவான் 1:2

வார்த்தை வாழ்வாக:

இன்று நாம் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை உலகெங்கும் கொண்டாடி மகிழ்கின்றோம். இன்றைய நற்செய்தி "வாக்கு" கடவுளாய் இருந்தது. அந்தக் கடவுளே ஆவியாக நீரில் அசைவாடிக் கொண்டிருந்தார். "படைப்பு" அனைத்தும் அவரின் வார்த்தையால் மட்டுமே உண்டாயின. அனைத்தையும் நல்லதெனக் கண்டார். அனைத்தையும் ஆண்டு அனுபவிக்க தன் உருவமற்ற ஆதி அந்தமுமில்லா சாயலை ஒரு பிடி களிமண்ணால் உருவம் செய்து தன் ஆவியானவரை அதனுள் ஊதி பதிவு செய்தார். அதுவே இவ்வுலகம் இயங்கவும் அதனை அனுபவிக்கவும் பிதா உண்டாக்கிய படைப்பின் சிகரமாக இன்று மனிதன் திகழ்கின்றான். அவன் தடம் புரளும்போதெல்லாம் அவனைப் பல குல முதியவர்கள் முதல் இறைமகன் இயேசு வரை தன் அன்பின் வெளிப்பாடான மனித குலத்தை காக்கின்றார். அவர் வானதூதர் வாக்கை ஏற்றுக் கொண்டதின் வெளிபாடே மரியின் வழியில் இயேசு பிறப்பு விழா. இதனை நாம் ஏழை எளியவர் - ஊனமுற்றோர், அனாதைகள் மகிழ்வுறும் பொருட்டு கொண்டாடி மகிழவே கிறிஸ்துமஸ் அழைப்பு விடுக்கின்றது. இம்மண்ணகம் அமைதி பெரும் பொருட்டு விண்ணிலிருந்து இறங்கி வந்த குழந்தை இயேசுவே! உமக்குப் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

சுயஆய்வு

  1. கிறிஸ்து பிறப்பு எத்தகையோருக்கு என்பதை உணர்ந்துள்ளேனா?
  2. இந்நாளை கொண்டாட என் மனம் தேடும் நபர் யார்?

இறைவேண்டல்

அன்பு குழந்தை இயேசுவே! உமக்குப் பிறந்த நாள் மண்ணில் நலிவுற்றோரின் துயர் துடைக்கும் நாள் என்பதை நான் உணரவும் உதவும் மனம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு