அருள்வாக்கு இன்று

டிசம்பர் 16-வெள்ளி

இன்றைய நற்செய்தி

யோவான் 5:33-36

இன்றைய புனிதர்

புனித ஒலிம்பியாஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு. நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள். யோவான் 5:35

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் யோவான் ஒரு சிறப்பான இடத்தைப் பெறுகிறார். திருமுழுக்கு யோவான் பல அற்புதங்களையும், ஆச்சரியங்களையும் செய்தார் என்பதை விட, அவருடைய வலிமையான போதனை தான், மக்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. அந்த அளவுக்கு அவருடைய வார்த்தைகள் மக்களின் மனதை துளைத்து, அவர்களை மனமாற்றத்திற்கு அழைத்துச் சென்றது. யூத முறைப்படி ஒருவருக்கு இரண்டு சாட்சிகள் போதும். ஆனால், இயேசு தனது பணியின் உண்மைத் தன்மையை மெய்ப்பிக்க மறுக்க இயலாத வகையில் நான்கு சான்றுகளை வழங்குகிறார் திருமுழுக்கு யோவான்.

சுயஆய்வு

  1. இறைவனின் விருப்பப்படியே வாழ என் முயற்சி யாது?
  2. திருவருகைக்காலத்தில் இயேசுவின் சாட்சியாக மாற என் முயற்சி என்ன?

இறைவேண்டல்

அன்பு இறைவா! திருமுழுக்கு யோவானைப் போல நாங்களும் இறைவார்த்தையின்படி வாழ, சாட்சிகளாய் மாற அருள்தாரும்.

அன்பின்மடல் முகப்பு