அருள்வாக்கு இன்று
டிசம்பர் 14-புதன்
இன்றைய நற்செய்தி
லூக்கா 7:19-23
இன்றைய புனிதர்

புனித சிலுவை யோவான்
லூக்கா 7:19-23
புனித சிலுவை யோவான்
"என்னைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்" லூக்கா 7:23
இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் தன் சீடர்களை இயேசுவிடம் அனுப்பினார். “வர இருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” எனக் கேட்கத் திருமுழுக்கு யோவான் எங்களை உம்மிடம் அனுப்பினார்” என்று சொன்னார்கள். ஏனெனில் யூதேயா நாடு முழுவதும் இயேசு செய்து வந்த அற்புதங்களைப் பற்றிச் செய்திப் பரவியிருந்தது. ஆகவே யோவான் அவர் இறைமகன் இயேசு தான் அவர் என்பதை உறுதிச் செய்ய விரும்பினார். இயேசு தான் செய்து வந்த அருள் அடையாளங்களை எடுத்துக்கூறி ”என்னைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்” என்றார். இவ்வாறு திருமுழுக்கு யோவானுக்கு மறுமொழிக் கூறி அனுப்பினார். நாமும் இயேசுவைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வோம்.
அன்பு இயேசுவே! திருமுழுக்கு யோவானைப் போல் உம்மைத் தயக்கமின்றி ஏற்றுக் கொள்ள வரம் தாரும். ஆமென்.