அருள்வாக்கு இன்று

டிசம்பர் 9-வெள்ளி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 11:16-19

இன்றைய புனிதர்

புனித ஜூவான் டிகோ

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ "அவன் பேய்பிடித்தவன் "என்கிறார்கள். மத்தேயு 11:18

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் யோவானை புரிந்து கொள்ளாதவர்களை சாடுகின்றார். எப்படிஎனில் இயேசுவுக்கு முன் தோன்றி இறைமகனின் பணியை இச்சமுதகயத்தில் திருமுழுக்கின் வழியாக நிலை நாட்டவே இறைமகனின் முன்னோடியாக இறைமகனால் தேர்ந்து கொள்ளப்பட்ட இறைவாக்கினர். இறைமகனின் வருகையை முன் அறிவித்து அனைத்து மானிடரையும் விழிப்படைய செய்தவர். எனவே யோவான் உண்ணாமலும் குடியாமலும் மேடுபள்ளங்ளை சீர்த்தூக்கி பார்த்தார். அதன் மேன்மையை உணராத யூதைனம் அவரைப் பேய்பிடித்தவன் எனத் தூற்றியது. அவர்கள் கண்கள் பாவச்சுமையால் மூடியிருந்தது. எனவே அவரின் மேன்மை அவர்களுக்குப் புரியவில்லை. நாமும் பாவச்சூழலில் வாழும்போது இறையன்பை மறந்து விடுகின்றோம். இதிலிருந்து விடுபடுவோமா?

சுயஆய்வு

  1. இந்த உலகின் மாயைகளிலிருந்து விடுபடுகின்றேனா?
  2. எனக்கு அடுத்திருப்பவருக்கும் உணர்த்துகின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உம் வார்த்தைகள்படி வாழ எனக்கு வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு