அருள்வாக்கு இன்று
நவம்பர் 30-சனி
இன்றைய நற்செய்தி
மத்தேயு 4: 18-22
இன்றைய புனிதர்
திருத்தூதர் அந்திரேயா
மத்தேயு 4: 18-22
திருத்தூதர் அந்திரேயா
இயேசு அவர்களைப் பார்த்து,' என் பின்னே வாருங்கள்: நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் " என்றார். மத்தேயு 4:19
இன்றைய நற்செய்தியில் இயேசு தன் இவ்வுலகப் பயணத்தின் தொடக்கத்தைத் தன் சீடர்களின் தேர்வு வழியாகத் தொடர்கின்றார். இன்று நாம் எப்படிப்பட்ட அழைப்பில் வாழ்கின்றோம். இவ்வுலக உறவுகள், சொத்துகள் இவை தான் முக்கியம் என்று வாழ்கின்றோமா? அல்லது திருமுழுக்கு பெற்ற நாம் இயேசுவின் சீடர் என்பதை உணர்ந்து நமது அழைப்பேற்ற வாழ்க்கை வாழ்கின்றோமா? சற்றுச் சிந்தித்துப் பார்ப்போம். இறைமகன் தன் மறைவுடலாகியநம் அனைவருக்கும் ஒவ்வொரு பணியைக் கொடுத்திருக்கின்றார் என்பதை நாம் முதலில் உணர வேண்டும் அழைப்பு என்பது பல கருத்துகளை வழங்கினாலும் இங்கே இறைமகனின் அழைப்புச் சமுதாயத்தில் நலிந்தவருக்காக அளிக்கப்படும் ஓர் உண்மையான பொறுப்பு மிக்க அழைப்பாகும்.
அன்பு தந்தையே! இறைவா! என் அழைப்பு மகத்தானது என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ற வாழ்வு வாழ வரம் தாரும். ஆமென்