அருள்வாக்கு இன்று

நவம்பர் 27-புதன்

இன்றைய நற்செய்தி

லூக்கா 21: 12-19

இன்றைய புனிதர்


புனித விர்ஜியஸ் ஆஃப் பால்ஸ்பர்க்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். லூக்கா 21:13

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு சான்று பகிர்வீர்கள் என்று கூறுகிறார். எவ்வாறு? இன்றைய உலகில் பலர் பலவிதச் சுயநலப் போக்கினால் வாழ்கின்றார்கள். எப்படியும் சுக போகம் தான் வாழ்வு என்று இந்த உலகம் நிலை என்று வாழ்கின்றார்கள். மறுவுலக வாழ்வை மறக்கின்றார்கள. ஆனால் நம் நிலையைச் சற்று சிந்திப்போம். இயேசு நம்மைச் சான்றுப் பகரும் வாழ்வை வாழ அழைக்கின்றார். அவர் இவ்வுலகில் வாழந்தக் காலங்களில் எதையெல்லாம் செய்தோனோ அதையெல்லாம் நீங்களும் செய்யுங்கள் என்றார். 'பணிவிடைப் பெற அன்று. பணிவிடைப் புரியவே வந்தேன்" என்று நமக்குச் சுட்டிக் காட்டுகின்றார். எனவே இறைமகனின் வார்த்தையின்படி நாம் வாழும்போது சான்றுப் பகரும் வாழ்க்கை வாழ்கின்றோம்.

சுயஆய்வு

  1. நான் சமுதாயத்தில் என்ன நிலையில் உள்ளேன்?
  2. இயேசுவின் சான்று வாழ்வு வாழ்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நீர் விட்டுச் சென்ற மதிப்பீடுகளைச் சமூகத்தில் பதித்து வாழ வரமருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு