அருள்வாக்கு இன்று

நவம்பர் 26-செவ்வாய்

இன்றைய நற்செய்தி

லூக்கா 21:5-11

இன்றைய புனிதர்


புனித ஜான் பெர்க்மான்ஸ்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அதற்கு அவர், “நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்: ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நானே அவர்’ என்றும், ‘காலம் நெருங்கி வந்துவிட்டது’ என்றும் கூறுவார்கள்: அவர்கள் பின்னே போகாதீர்கள்." லூக்கா 21:8

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு என் பெயரைச் சொல்லிப் பொய் போதனைச் செய்பவர்களைக் கண்டு ஏமாறாதீர்கள் என்று அறிவுறுத்துகின்றார். அவர்கள் யார்? கிபி 15 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தோன்றியது பிரிவினைச் சபை.அதனின்று பிரிந்துப் பல ஆயிரம் சபைகள் தோன்றி வறுமை கோட்டின் கீழ் அவதியுறும் மக்களைக் கொண்டும் அவர்களின் இயலாமையைப் பயன்படுத்திப் பணம் குவிக்கும் கும்பல் இயேசுவின் பெயரால் அனேகர் தோன்றியுள்ளது. அப்படிப்பட்டவர்களைக் கண்டு சற்று விலகி நில்லுங்கள். நானோ புனித பேதுருவின் கட்டபட்டத் திருச்சபையின் தலைவனட எனக்கு அடுத்து பேதுரு- பின்பு திருதந்தையர்- இதுவே கத்தேலிக்கச் சபையாகும். இதனைச் சார்ந்து வாழுங்கள். அநீதி எங்கிருந்தாலும் தட்டிக் கேளுங்கள் என்கிறார்.

சுயஆய்வு

  1. மனசோர்வுறும்; போது எங்கும் இயேசு என்றும் உரைப்பேனா?
  2. உண்மையில் இயேசுவின் வார்த்தையின் படி வாழ்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! தெளிவானச் சிந்தனையோடு மறைநூலைப் படித்து, அதற்கான உட்கருத்தின் படி வாழ வரமருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு