அருள்வாக்கு இன்று

நவம்பர் 25-திங்கள்

இன்றைய நற்செய்தி

லூக்கா 21: 1-4

இன்றைய புனிதர்


அலெக்சாந்திலியாவின் புனித கேத்தரீன்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அவர் “இந்த ஏழைக் கைம்பெண் எல்லாரையும்விட மிகுதியான காணிக்கை போட்டிருக்கிறாரென உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்”. லூக்கா 21-3

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு ஏழைக் கைம்பெண் காணிக்கையை மகிழ்வோடு ஏற்கின்றார். இன்றைய காலச்சூழலில் அனேகர் தவறான முறையி;ல் சம்பாதித்த பணத்தில் ஒரு சிறு பகுதியை அனைவரும் காணும் வண்ணம் பெருமையாகச் செய்வார். இதை மறைவக இறைன் ஏற்பதில்லை. ஏனெனில் அவர் அனைத்தையும் காண்கின்ற தேவன். எவ்வழியில் பணம் சேர்த்தார் என்ற நன்கு அறிவார். ஆனால் நேர்மையான பாதையில் தன் உடலுழைப்பை வைத்துச் சம்பாதித்து அதைத் தனக்கென்று ஓதுக்காமல், தன்னையே அர்ப்பணிப்பது முழுமையான காணிக்கை. இதையே இயேசு விரும்புகின்றார். வலக்கைச் செய்வதை இடக்கை அறியாமல் இருக்கட்டும். என்கின்றார் இயேசு. தானதர்மங்களாக இருந்தாலும் இப்படிதான் விரும்புகிறார்.

சுயஆய்வு

  1. நான் செய்யும் உதவி அடுத்தவர் அறியச் செய்கின்றேனா?
  2. என்னையே நான் இறைவனுக்கு அர்ப்பணிக்க் தயாராக உள்ளேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! எனக்குள் தூய உள்ளதையும், நான் மற்றவருக்குச் செய்யும் உதவியையும் ஒருவரும் அறியா வண்ணம் செய்ய வரமருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு