அருள்வாக்கு இன்று

நவம்பர் 24-ஞாயிறு

இன்றைய நற்செய்தி

யோவான் 18:33-37

இன்றைய புனிதர்


இயேசு கிறிஸ்து அரசர்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

பிலாத்து அவரிடம், "அப்படியானால் நீ அரசன்தானோ?" என்று கேட்டான். அதற்கு இயேசு, "அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்" என்றார். யோவான் 18:37

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு கிறிஸ்து அரசர் என்னும் உண்மையை எடுத்துரைக்கும் விழாவைத் தாய் திருச்சபை கொண்டாடி மகிழ்கின்றது. பிலாத்துவின் கேள்விக்குஅதாவது " நீ யூதர்களின் அரசனா?" என்று கேட்டபோது "என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று. இவ்வுலகைச் சார்ந்திருந்தால் உன் காவலர்கள் என்னைப் பிடித்து இந்நேரம் ஒப்பித்து இருப்பார்களோ? நீரேஅரசன் என்று சொல்கிறீர்! ஆனால் உண்மையை எடுத்துரைப்பதே என் பணி" என்று தன் இறையரசின் மேன்மையைப் பதிவு செய்கின்றார். "உண்மையே என் வருகையின் அடித்தளம்! இதற்காகவே பிறந்தேன்! இதற்காகவே வந்தேன். உண்மையைச் சார்ந்தவர்களே என் குரலை எடுத்துரைக்கின்றார்" என்ற புனித யோவான் நற்செய்தியாளர் இன்றைய கிறிஸ்து அரசர் பெருவிழாவில் அறிக்கையிடுகின்றார். எப்படிஎனில் புனித யோவான் மட்டுமே கிறிஸ்துவோடு பாடுகளிலிருந்து இறப்பு வரை இருந்தால் சான்று பகர்கின்றார்.

சுயஆய்வு

  1. கிறிஸ்து அரசர் பெருவிழா உணர்த்தும் செய்தி யாது?
  2. அரசர் என்பவரை அறிகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இறைவா! கிறிஸ்து அரசர் பெருவிழாவின் மேன்மையை உணர்ந்து வாழும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு