அருள்வாக்கு இன்று
நவம்பர் 23-சனி
இன்றைய நற்செய்தி
லூக்கா 20:27-40
இன்றைய புனிதர்
புனித முதலாம் கிளமேனட்
லூக்கா 20:27-40
புனித முதலாம் கிளமேனட்
“இனி அவர்கள் சாக முடியாது. அவர்கள் வானத்தூதரைப் போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மககளாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே" லூக்கா 20:
இன்றைய நற்செய்தியில் இயேசு அன்றைய சதுசேயரின் கேள்விக்குப் பதில் கொடுக்கின்றார். இவ்வுலக வாழ்வில் உறவுகள் உண்டு. ஒருவரை ஒருவர் அன்பு செய்யவும் மதித்து வாழவும் அன்பு கட்டளையிடுகின்றார். ஏனென்றால் இங்கே கொடுக்கல் வாங்கல் உண்டு, உறவுப் பரிமாற்றமும் உண்டு. இவ்வுலகில் எப்படி வாழ்கின்றோமோ அதன்படி மறுவாழ்வில் அதன் பயனைப் பெற முடியும். ஆனால் அங்கு அனைவரும் சமம். அங்கே உறவுகள் கிடையாது. எனவே தான் இறைவன் நாம் வழ்கின்ற இந்த உலகில் சிறப்பாக வாழ நமக்கு அழைப்பும் இரண்டு கட்டளைகளும் கொடுத்துள்ளார். அதனை வாழ்வாக்குமோம்.
அன்பு இயேசுவே! நான் வாழும் உலகம் பல பிரச்சனைகளைக் கொண்டுள்ளது. அதனை வென்று வாழும் பலம் தாரும். ஆமென்.