அருள்வாக்கு இன்று
நவம்பர் 22-வெள்ளி
இன்றைய நற்செய்தி
லூக்கா 19:45-48
இன்றைய புனிதர்
புனித செசிலியா
லூக்கா 19:45-48
புனித செசிலியா
அவர்களிடம், “என் இல்லம் இறைவேண்டலின் வீடு என்று மறைநூலில் எழுதியுள்ளதே, ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்" என்று கூறினார்.லூக்கா 19:46
இன்றைய நற்செய்தியில் இயேசு எருசலேம் தேவாலயத்தைக் கண்டு திடுக்கிட்டவராய் இது என் வீடு. இங்கே இறைவனோடு உரையாடும் இடம். இதைக் கள்வர்களின் குகையாக மாற்றிவிட்டீர்களே என்று சாடுகின்றார். ஆம் அன்பர்களே, ஆலயம் மட்டுமன்று, நமது இதயம் இறைவனின் ஆலயம். இங்கே இறைவன் வாசம் செய்யும் ஆலயமாக உள்ளது. ஆனால் நாமோ உலக ஆசைகளின் பொருட்டுப் பொன் - பொருள் - பணம் போன்ற பேராசையினால் அனைத்தையும் கொள்ளையர்களின் கோயிலாக மாற்றி விடுகின்றோம். இந்த நிலை மாறினால் தான் நாம் தூய ஆவியாரின் ஆலயமாகத் திகழ்வோம்.
அன்பு இயேசுவே! நான் புற உலகின் ஆசைகளை மறுத்து இறைவன் வாழும் ஆலயமாக மாற்ற வரம் தாரும். ஆமென்.