அருள்வாக்கு இன்று

நவம்பர் 21-வியாழன்

இன்றைய நற்செய்தி

லூக்கா 19:41-44

இன்றைய புனிதர்


புனித மரியாள் காணிக்கையாக அர்ப்பணித்தல்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்தது அதைப் பார்த்து அழுதார்.

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு எருசலேம் நகரைப் பார்த்து அழுதார். காரணம் இறைமகன் என்பதை அந்த நாளில் யூத மக்களின் கண்களை மறைத்திருந்ததை நினைத்து அழுதார். இறைமகனைத் துன்புறுத்தியும், பாடுகள் படவும் காரணமாயிருந்த அந்தச் சூழலையும் கண்டு அழுதார். ஆம் அன்பர்களே! இன்றும் நமக்கு நல்லவைகளை அறிந்து கொள்ளும் மனநிலை இல்லாமல் இருக்கின்றோம். காரணம் இந்த உலக ஆசை நமது கண்களை மறைக்கின்றது. நாம் வாழும் உலகம் நிலையென எண்ணிச் சுயநலவாதிகளாக மாறிவிடுகின்றோம். அனைவரும் இறைவனில் ஒன்றே என்ற நிலை என்று மாறுமோ அன்றே இறையரசை நாம் கட்டி எழுப்ப முடியும் என்று இயேசுவின் அழுகைக்குப் பொருள் காண முடியும்.

சுயஆய்வு

  1. இன்று நான் காணும் இடமெல்லாம் இறைவனைத் தரிசிக்கின்றேனா?
  2. அல்லது உலக ஆசைகளில் மிதக்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமை போல் அடுத்தவருக்காக வாழும் பேற்றினை வழங்கிட வரம் அருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு