அருள்வாக்கு இன்று

நவம்பர் 19-செவ்வாய்

இன்றைய நற்செய்தி

லூக்கா 19:1-10

இன்றைய புனிதர்


புனித அசிசி நகர் ஆக்னேஸ்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அவரோ, “உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்" என உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். லூக்கா: 11-26

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, நமக்கு அனைத்து வரங்களையும் வழங்கி நம்மை வழி நடத்துகின்றார். இச்சமுதாயத்தில் தடம் புரண்டுப் போய் உள்ள மக்களைக் கரைச் சேர்க்க நமக்குக் கட்டளையிடுகின்றார். அதற்கான அனைத்து வரங்களையும் வழங்கியுள்ளார். இதனைக் கொண்டு நாம் அடுத்தவரையும் இறையகத்திற்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டிகளாகவும் அடுத்தவர் நலனில் அக்கரைக் கொள்பவர்களாகவும் இருக்கவே நம்மை அழைக்கின்றார். ஆனால் நாம் சுய நலம் உள்ளவர்களாக மாறாமல் அடுத்தவர் நலனிலும் நமது கவனம் தேவை என்பதை வலியுறுத்துகின்றார் நாம் இறைபணியாற்றும் நம்பிக்கைக்குரியவர்களாக வாழ அழைக்கின்றார்.

சுயஆய்வு

  1. நான் இறைத்திட்டத்தில் எவ்வாறு உள்ளேன்?
  2. என்னை நானே தகுதியுடைமைப் பெற்றவனாக மாற்ற என் நிலை என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் உமது களப்பணியை ஆற்ற என்னைத் திறம்பட வளர்க்கும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு