அருள்வாக்கு இன்று

நவம்பர் 18-திங்கள்

இன்றைய நற்செய்தி

லூக்கா 18:35-43

இன்றைய புனிதர்


புனித பேதுரு - பவுல் பேராலய அர்ச்சிப்பு விழா

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

“இயேசு அவரிடம் பார்வை பெறும், உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று" என்றார்.லூக்கா 18:42

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் பணிவாழ்வின் முத்தாய்ப்பாகப் பார்வையற்று இருந்த ஒருவருக்குப் பார்வை தருகின்றார். அவனை இந்த உலகின் மிக உயர்ந்தப் படைப்பாக உயர்த்துகின்றார். காரணம் அன்று நோயுற்றோர், பார்வை இழந்தோர், ஊனமுற்றோர், தாழ்ந்தச் சாதியினர், புற இனத்தினர், பெண்கள் இவர்களெல்லாம் நீங்கள் பாவம் செய்தீர்கள். அதனால் தான் இப்படிக் கடவுள் உங்களைத் தண்டித்து விட்டார் என்று யூதவர்க்கத்தால் முத்திரைப் பதிக்கப் பெற்றிருந்தனர். அப்படிப்பட்டவர்களின் முகத்திரயைக் கிழித்தெறியவே இயேசு அந்தப் பார்வையற்றவனின் கூக்குரலுக்குச் செவிசாய்த்துக் குணப்படுத்துகின்றார். அவனது நம்பிக்கையை இவ்வுலகறியச் செய்கின்றார்.

சுயஆய்வு

  1. எனது விசுவாசம் எப்படிபட்டதாக உள்ளது?
  2. நம்பிக்கைக்குரியவனாக நான் மாற என் முயற்சி என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது பணியை நான் ஆற்ற எனக்குப் போதுமான வல்லமை தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு